Sunday, January 2, 2011

ப்லைன் பிரியாணி ரைஸ் & கிரில்டு சிக்கன், டிக்கா


ப்லைன் பிரியாணி ரைஸ்
வாவ் ! இதன் ருசி சொல்லி மாளாது. அதிக மசாலா பிரியப்படாத்வர்கள் இதனை செய்து சாப்பிடலாம்.செய்து பார்த்தால் தான் தெரியும்.

தேவையான பொருட்கள்;-
பாசுமதி அரிசி-500கிராம்
வெங்காயம் -200கிராம்
தக்காளி - 200கிராம்
பச்சை மிளகாய் -3
மல்லி,புதினா - சிறிதளவு
எலுமிச்சை- 1
தயிர்- 2டேபிள்ஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் -3 டீஸ்பூன்
கரம்மசாலா- அரைடீஸ்பூன்
பட்டை,கிராம்பு,ஏலம் - தலா-2
பிரியாணி இலை-2
எண்ணெய் - 100மில்லி
நெய் -50 மில்லி
ஆரஞ்ச் ரெட்,லெமன் எல்லோ கலர்-ஒரு பின்ச்
உப்பு - தேவைக்கு.

நான்கு நபர்களுக்கு.

கிரில்டு சிக்கன்
தேவையான பொருட்கள்;-
முழு சிக்கன்- 800கிராம்
சிக்கன் பார்பிகியூ மசாலா -3டீஸ்பூன்
சிக்கன் ஸ்டாக் கியூப் -1
தயிர் - 2டேபிள்ஸ்பூன்
கசூரி மேத்தி -1டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சிக்கனை விரும்பினால் தோலுடன் சுத்தம் செய்து கழுவி நன்கு தண்ணீர் வடித்து வைக்கவும்.நான்கு துண்டாக போடவும்.நான்கு பேருக்கு பரிமாற போதுமானதாய் இருக்கும்.
சிக்கனுடன் பார்பிகியூ மசாலா,பொடித்த சூப் கியூப்,தயிர்,உப்பு தேவைப்பட்டால் சேர்க்கவும்.சூப் கியூப்,மசாலாவில் உப்பு இருக்கும்.(ரெடிமேட் மசாலா இல்லையெனில் 1டீஸ்பூன் சில்லி பவுடர்,கால் டீஸ்பூன் கரம் மசாலா, 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,பின்ச் ரெட் கலர் சேர்க்கலாம்.).
அத்துடன் கசூரி மேத்தியும் பொடித்து சேர்த்து சிக்கனை நன்கு கலந்து ஊற வைக்கவும்.
எலெக்ட்ரிக் ஓவனில் 250டிகிரி வெப்பம் செட் செய்து,மேலும் கீழும் வெப்பம் வைத்து,40நிமிடம் செட் செய்யவும்.கீழே ட்ரேயில் அலுமினியம் ஃபாயிலும்,மேலே கிரில் ப்லேடில் சிக்கனையும் அடுக்கி சுட்டு எடுக்கவும்.
20நிமிடம் கழித்து சிக்கன் வெந்தவுடன் திருப்பி வைத்து சிவற கிரில் செய்து திரும்ப 20வைத்து எடுக்கவும்,சிக்கனில் உள்ள தண்ணீர்,கொழுப்பு கீழே தட்டில் வடிந்து ஆரோக்கியமான சுவையான கிரில்டு சிக்கன் ரெடி.

ப்லைன் பிரியாணி ரைஸ் செய்ய முதலில் பாசுமதி அரிசியை நன்கு அலசி தண்ணீரில் ஊறவைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு,காயவும் ஏலம்,பட்டை கிராம்பு,பிரியாணி இலை போட்டு வெடிக்கவும்,நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும்,மல்லி,புதினா,பச்சை மிளகாய்,தக்காளி,உப்பு சேர்த்து வதக்கவும்,வதங்கியதும் தயிர் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து கிரேவி போல் வரும்,எண்ணெய் தனியே பிரியும்.
அரிசியை பொருத்து ஒன்றுக்கு இரண்டு அளவு தண்ணீர் வைக்கவும்,உப்பு சரி பார்க்கவும்.கொதி வரவும்,அரிசியை தட்டி மூடவும்,சோறு வெந்து மேல் வரும் பொழுது எலுமிச்சை பிழிந்து.சிறிது தண்ணீரில் கலரை கரைத்து சாதம் மேல் தெளித்து விடவும்.
அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி,கீழே பழைய தோசைக்கல் வைத்து அடுப்பை சிம்மில் 15 நிமிடம் வைக்கவும்.
திறந்தால் சாதம் வெந்து இப்படி காணப்படும்.பிரட்டி பரிமாறவும்.
இப்பொழுது ப்லைன் பிரியாணி ரைஸ் ரெடி.
கிரில் செய்த சிக்கனை மேலே வைத்து எடுத்து பரிமாறவும்.
கிரில்டு சிக்கன் டிக்காவிற்கு சுத்தம் செய்து கட்செய்து தண்ணீர் வடிகட்டிய போன்லெஸ் சிக்கன் 1கிலோ,6-டீஸ்பூன் சிக்கன் டிக்காமசாலா,3டீஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட்,3டேபிள்ஸ்பூன் தயிர்,லைம் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்,கரம் மசாலா - அரைடீஸ்பூன்,கசூரி மேதி பவுடர் சிறிது ,உப்பு தேவைக்கு சேர்த்து கலந்து 3மணி நேரமாவது ஊறவைக்கவும்.முதல் நாள் ரெடி செய்து வைத்தும் மறுநாள் கிரில் செய்யலாம்.



பின்பு டிக்கா செய்ய உபயோகிக்கும் மரக்குச்சியில் ஒரு குச்சிக்கு 5துண்டாக வைத்து ரெடி செய்யவும்.


பின்பு அவனில் 250 டிகிரி வெப்பம் செட் செய்து கிரில் செய்து வெந்ததும் எடுக்கவும்.

சுவையான சிக்கன் டிக்கா ரெடி.இதனில் கசூரி மேத்தி சேர்ப்பது அவசியம்,அப்பொழுது தான் அந்த சுவை கிடைக்கும்.பார்ட்டியில் ஸ்டார்டர் ஆக சாலட்டுடன் பரிமாறலாம்.

ப்லைன் பிரியாணி ரைஸ், கிரில்டு சிக்கன், சாலட்டுடன் பரிமாற அதன் ருசி அருமையாக இருக்கும்.
ஒரு நாள் முழுவதும் ஃப்ரிட்ஜில் சிக்கன் மேரினேட் செய்து கிரில் செய்தால் சாப்பிட சிக்கன் வெண்ணெய் போல் வாயில் அப்படியே மெல்ட் ஆகும்.

ஜலீலாவின் பேச்சிலர்ஸ் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

--ஆசியா உமர்.

33 comments:

vanathy said...

பார்க்கவே ஆசையா இருக்கு. நல்ல பொறுமைதான் உங்களுக்கு. படங்கள் அழகா இருக்கு.

Gopi Ramamoorthy said...

வழக்கம் போல நல்லா இருக்கு:)ரொம்பப் பொறுமை உங்களுக்கு

சங்கவி said...

இதைப்பார்த்ததும் பசிக்குதுங்க...

சே.குமார் said...

அக்கா.... பார்க்கவே ஆசையா இருக்கு... படங்கள் எல்லாம் எங்க பசியை தூண்டிச் சிரிக்கின்றன.

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு அக்கா ,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

ஹலோ மேடம் இப்பத்தான் காலை டிபன் சாப்ட்டு வந்தேன் ............ உங்க பிளாக் பாத்தவுடன் மறுபடியும் பசிக்க ஆரம்பிச்சிருச்சு ............

asiya omar said...

வானதி ஆகா முதல் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.அந்த ப்லேட் இன்று உங்களுக்கு தான்.

asiya omar said...

கோபி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சங்கவி வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

சகோ.குமார் எல்லார் பசியையும் தூண்டிவிட்டுடேன் போல,கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

சாருஸ்ரீ வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

அமைச்சரே வருகைக்கு நன்றி.

ஸாதிகா said...

அசத்தல் பிரியாணி,பார்க்கவே சாப்பிடனும் போல் உள்ளது.கூடவே கிரில்ட் சிக்கன்,சிக்கன் டிக்காவும்..போங்க தோழி.படத்தைக்காட்டி நாவூறச்செய்து விட்டீர்கள்.

சிநேகிதன் அக்பர் said...

ஓவன் இல்லாதவங்க ஃப்ரை பண்ணலாமா.

நல்லாயிருக்கு.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ.
கிரில் சிக்கன் சூப்பர்..நேத்துதா ஒரு கோழி காணா போச்சு..திரும்பவும் கோழி புடிக்கவச்சுருவீங்க போல..

கிரில் சிக்கன் ஆயில் ஃப்ரீங்ரதால,உடம்புக்கு ரொம்ப நல்லது,ஆனா பலபேர் அத விரும்புரதில்ல..என்னை டெய்லி சாப்ட சொன்னாலும் சாப்பிடுவேன்..

நல்லாவே செஞ்சுருக்கீங்க..

டிக்கா படம் ஓப்பன் ஆகல..அதுவும் என் ஃபேவரேட் தான்..
பாக்கிஸ்தானி டிக்கா நல்லா இருக்கும்...

பிரியாணிதா ப்ளைனா போட்டுடீங்க...

வாழ்த்துக்கள்..
அன்புடன்
ரஜின்

Kurinji said...

இப்போ இங்கே லஞ்ச் டைம், பார்த்ததுமே ரொம்ப பசிக்குது. கொஞ்சம் இங்கேயும் அனுப்பி வையுங்க ஆசியா !

Pongal Feast Event

Kurinji

mahavijay said...

உங்க presentation வழக்கம் போல ரொம்ப நல்ல இருக்கு. அற்புதமான 3 dish.ரொம்ப நன்றி

revathi said...

Ethai parpathu enru thaeriyavillai...ellamae supera irukku..kalakureenga..
Reva

asiya omar said...

ஸாதிகா மிக்க நன்றி.

அகபர் ஓவன் இல்லாமல் நான்ஸ்டிக் ஃப்ரை பேனில் கொஞ்சம் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு பிரட்டியது போல் சுட்டும் எடுக்கலாம்,பேசாமல் ஒரு ஓவன் வாங்குங்க,ரொம்ப வசதியாக இருக்கும்.எங்க வீட்டில் இந்த ஓவனுக்கு வாய் இருந்தால் கூட அழும்,5 வருடமாக உபயோகமாகுது.விலையும் குறைவு தான்.

asiya omar said...

ரஜின் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.கொஞ்சம் வெயிட் செய்தால் ஓப்பன் ஆகும்.

asiya omar said...

குறிஞ்சி

மஹாவிஜய்

ரேவதி

கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி.

ஆயிஷா அபுல் said...

அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ்}
ஆசிய உமர்
எல்லாமே சூப்பர்.வாழ்த்துக்கள்.






Dr.Sameena Prathap
said...

ennakku konjam annupi vainga please...:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com/

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கிரில் சிக்கன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ...சூப்பரா விலக்கி இருக்கீங்க படங்கள் தூள்..வாசனை இங்க அடிக்குதப்பா

ஆமினா said...

ஆஹா...

ஓவரா பசிக்குதே....

சௌந்தர் said...

மதியம் தான் பிரியாணி சாப்பிட்டேன்...இப்போ மீண்டும் சாபிடுறேன் :)

savitha ramesh said...

wonderful chk tikka and mesmerized by ur recipes....following u

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஊருக்கு போனதும் மனைவிட்ட சொல்லி எல்லாத்தையும் செய்து பார்த்திட வேண்டியது..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கசூரி மேத்தி அப்படின்னா.. என்ன.. எப்படி செய்யணும் ஆசியாக்கா

asiya omar said...

ஆயிஷா அபுல்
சமீனா
சதீஷ்குமார்
ஆமினா
சௌந்தர்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

சவிதா ரமேஷ் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஸ்டார்ஜன் கசூரி மேத்தின்னா காய்ந்த வெந்தயக்கீரை. டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பாக்கெட்டில் கிடைக்கும்,நான் வாங்கியது பாகிஸ்தான் ப்ராடக்ட்.

இளம் தூயவன் said...

ஏமன் நாட்டு மந்தி சாப்பாடு போல் உள்ளது அருமை. இவை சவுதி அரேபியாவில் ரொம்ப பேமஸ்.

Jaleela Kamal said...

இந்த ஐட்டம் எல்லாம் என் பெரிய ப்பையனுக்கு தான் ரொம்ப பிடிக்கும்,
அவன் இல்லாமல் எதுவும் செய்ய மூட் இல்லை

நான் செய்வது போல் தான் செய்து இருக்கீங்க.
இப்ப ஓவனும் ரிப்ப்பேர், செய்ய நேரமும் இல்லை.

Jaleela Kamal said...

அவன் இல்லாமல் செய்தால் என்னால் சாப்பிட முடியாது, ஆகையால் இப்ப எல்லாம் செய்வதிலலை.கிரில் ஐயிட்டம்

smilzz said...

அருமையான சமையல், படங்களே பசிக்க வஜ்ருசுங்க !