Tuesday, January 4, 2011

பொங்கல் காய்கறி கூட்டு

பொங்கல் சமயம் இந்த கூட்டை செய்து வெண் பொங்கலுடன் பரிமாறிப்பாருங்க.அசத்தலாக இருக்கும்.

இங்கு ஹைப்பர் மார்க்கெட்டில் இப்படி மிக்ஸ்ட் வெஜ் பாக்ஸில் இருக்கும்.எல்லாக்காய்கறிகளும் இருக்கும்,அதனை வாங்கினால் சாம்பார்,ஒரு பொரியல்,ஒரு கூட்டு,அவியல்,மோர்க்குழம்பு,புளிக்குழம்பு என்று அனைத்தும் வைத்து விடலாம்.

பாருங்க அத்தனையும் உங்க பார்வைக்காக.பொங்கல் காய்கறி கூட்டு செய்ய இதிலிருந்து சிலகாய்கள் எடுத்து சமைத்தேன்.
தேவையான பொருட்கள்:
இதிலிருந்து பிடித்தமான காய்கறிகள்,கிழங்குகள் - 400கிராம்
மஞ்சள் தூள்-அரைஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பாசிப்பருப்பு- 75 -100 கிராம் அல்லது துவரம் பருப்பு.
புளி-எலுமிச்சையளவு
வறுத்து அரைக்க:
மிளகாய்வற்றல்-4
மல்லி-3டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
மிளகு-அரைடீஸ்பூன்
கடலைபருப்பு-1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1டீஸ்பூன்
அரிசி-1டீஸ்பூன்
தேங்காய் துருவல்-3டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு-தலா 1டீஸ்பூன்
மிளகாய்வற்றல்-2
கருவேப்பிலை-3இணுக்கு
பெருங்காயம்-2பின்ச்
காய்கறி,கிழங்கு வகைகளை அலசி நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கியவற்றை போட்டு மஞ்சள் பொடி,உப்பு தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.பாசிப்பருப்பை லேசாக வெதுப்பி தண்ணீர் விட்டு வேக வைத்து வைக்கவும்.


வறுக்க சொன்னவற்றை சிவற வறுத்து எடுக்கவும்.

வறுத்தவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.

காய் வெந்து வரும்பொழுது அரைத்த மசால் சேர்க்கவும்.


புளி கரைத்து விட்டு கொதிக்கவிட்டு வேக வைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கொதி வந்து கெட்டியாகி வரும்,உப்பு சரி பார்க்கவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,
கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை,பெருங்காயம் தாளித்து கொட்டவும்.
சுவையான பொங்கல் காய்கறி கூட்டு ரெடி.
இதனை பொங்கப் பானையில் பொங்கும் வெண் பொங்கலுக்கு விட்டுக்கொண்டும்,தொட்டும் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.இது மீதியானால் சுண்டவைத்து மறுநாள் சாப்பிடலாம்.இது கிராமத்து கைமணம்,எங்க வீட்டு உழவி எப்பவோ சொன்ன பக்குவம்,
செய்து பார்த்தேன் அருமையாக வந்தது.நீங்களும் பொங்கலுக்கு செய்து பாருங்க.இங்கு பாசிப்பருப்பு உபயோகிப்ப்தால் வாயுத்தொந்திரவு இருக்காது.

--ஆசியா உமர்.

49 comments:

angelin said...

vegetarian endraal oru pidi pidipeen.
naalaike seyyanum.
thanks for sharing asiya.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பார்க்கும்போது அருமையா இருக்கு

இளம் தூயவன் said...

சைவம் சமைப்பதிலும் உங்கள் திறமையை காட்டியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.

Kitchen Boffin said...

first time in your space.. I like it... you have many recipes... following you

Mahi said...

சூப்பர் கூட்டு ஆசியாக்கா! சீக்கிரம் செய்து பார்க்கிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நீங்க சொன்ன மாதிரி காய்கறிகள் நிறைய போட்டு சுண்டவைத்து சாப்பிட்டால் சூப்பராத்தான் இருக்கும்.

vanathy said...

super pongal, akka. Very nice photos.

எல் கே said...

பொங்கலுக்காக இப்பவே ஸ்பெசலா

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்லாருக்குப்பா கறி..

சசிகுமார் said...

அருமை

வெங்கட் நாகராஜ் said...

”பொங்கல் காய்கறி கூட்டு” - பார்க்கவே நல்லா இருக்கு சகோ... அம்மணி கிட்ட படிக்க சொல்லிடறேன்....

Kurinji said...

kootu parkave supera erukku....

Pongal Feast Event

Kurinji

ஆயிஷா said...

பொங்கல் காய்கறி கூட்டு சூப்பர்.

வாழ்த்துக்கள்.

puthiyavasantham.blogspot.com

கொஞ்சம் எட்டி பார்க்கவும்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

கலர்ஃபுல் கூட்டு.. புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் ஆசியா..

Kurinji said...

Thanks for participate with my event....

Kurinji

Chitra said...

HAPPY NEW YEAR!!!

HAPPY PONGAL!!!

Priya Sreeram said...

lovely--suvaiyum, manamum inga varudhu !!

சே.குமார் said...

பார்க்கும்போது அருமையா இருக்கு.

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு,
ஆசியா,காய் பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு.

இப்படி கிராசரி ஷாப்பிலும் தருவாரக்ள், அடிகக்டி,
சாம்பார் இத்தனை காயும் போட்டு தான் வைபப்து.

ஸாதிகா said...

அருமையா இருக்கு ஆசியா.கூடவே பருப்பும் சேர்த்து இருக்கின்றிர்கள்.

சாருஸ்ரீராஜ் said...

கூட்டு சூப்பரா இருக்கு பார்கும் போதே சுவைக்க தோணுது. நான் துவரம் பருப்பு சேர்ப்பேன் , பாசி பருப்பும் நல்லா இருக்கும் செய்து பார்கிறேன்.

சிநேகிதன் அக்பர் said...

செய்து பார்த்துட வேண்டியதுதான் :)

jagadeesh said...

அக்கா, அசத்தீடீங்க. உங்களைப் போன்றோர் வாழ்வில் அமைந்தால், இல்லறம் நல்லறம் தான்.

Akila said...

wow thats really delicious looking dear....

Event: Dish Name Starts with E
Learning-to-cook
Regards,
Akila

RAZIN ABDUL RAHMAN said...

சகோ..முதலில் தங்களின் எம்மா சிறுகதை தமிழ்மணத்தில் இரண்டாம் சுற்றுக்கு தேர்வானதற்கு வாழ்த்துக்கள்...

பொங்கல் காய்கறி கூட்டு வழக்கம் போல அசத்தலான சமையல்தான்...சமைத்து அசத்தலாம்....

அன்புடன்
ரஜின்

புவனேஸ்வரி ராமநாதன் said...

தொடர்பதிவு ஒன்றுக்கு உங்களை அழைத்துள்ளேன்.
http://maragadham.blogspot.com/2011/01/blog-post_05.html

revathi said...

asathureenga...kalakkalaa irukku..
Reva

asiya omar said...

ஏஞ்சலின் முதல் கருத்தே அருமை.நன்றி.

ஸ்டார்ஜன் வாங்க,மிக்க நன்றி.

இளம் தூயவன் மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமான பொங்கல் குழம்பு! வழக்கம்போல் விள‌க்கப்படங்கள் அருமை!

asiya omar said...

kitchen boffin,thanks for your first visit and comments.

asiya omar said...

மகி
புவனேஸ்வரி
வானதி
எல்.கே
அமைதிச்சாரல்
சசிகுமார்
வெங்கட் நாகராஜ்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

குறிஞ்சி
சித்ரா மிக்க நன்றி.

ஆயிஷா வாங்க,மகிழ்ச்சி.

தேனக்கா மிக்க நன்றி.

ப்ரியா மிக்க நன்றி.

சே.குமார் மிக்க மகிழ்ச்சி.

ஜலீலா கருத்திற்கு நன்றி.

ஸாதிகா நன்றி தோழி.துவரம் பருப்பு சேர்த்தால் அருமை.

சாருஸ்ரீ மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

அக்பர் செய்து பாருங்க.

சகோ.ஜெகதீஸ் அருமையான வாழ்க்கை அமைய அக்காவின் வாழ்த்துக்கள்.

அகிலா வருகைக்கு மகிழ்ச்சி.

ரஜின் தகவலிற்கு மிக்க மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

புவனா தொடர் அழைப்பிற்கு மகிழ்ச்சி.

ரேவதி மிக்க நன்றி,மகிழ்ச்சி.

asiya omar said...

மனோ அக்கா வாங்க,கருத்திற்கு நன்றி.

Krishnaveni said...

my fav curry, looks super yummy

Kanchana Radhakrishnan said...

சூப்பர் கூட்டு

ஆமினா said...

ஆசியா கண்டிப்பா செய்து பாக்குறேன்!!!

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது...இப்படி காய்கள் கிடைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்...சூப்பராக இருக்கின்றது....

எம் அப்துல் காதர் said...

ஆஹா நாஊருதே!!

கோவை2தில்லி said...

”பொங்கல் காய்கறிகூட்டு” பார்க்கவே நல்லா இருக்கு. செய்து விடுகிறேன்.

ஆனந்தி.. said...

ஆமாம்...இங்கே மதுரை பக்கம் கண்டிப்பா பொங்கல் அன்னைக்கு பொங்கல் கூட்டு உண்டு..அதுவும் சிவப்பு பூசணி,வாழக்காய் சேர்த்து கட்டாயம் பண்ணுவாங்க..படத்தை பார்க்கும்போதே எடுத்து சாப்டனும் ஆசை வந்திருச்சு...:)))

சங்கவி said...

பொங்கல் ஸ்பெசல்....

சூப்பர்...

asiya omar said...

கிருஷ்ணவேணி
காஞ்சனா
ஆமினா
கீதா ஆச்சல்
சகோ.அப்துல் காதர்
கோவை2தில்லி
ஆனந்தி
சங்கவி

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

Anonymous said...

இந்த கூட்டை மறுநாள் சாப்பிட்ட ரொம்ப
ருசியா இருக்கும். நீங்க "KITCHEN QUEEN"

Lakshmi said...

செய்முறை விளக்கமும் படங்களும் சூப்பரா இருக்கு. இவ்வளவுதெளிவா எப்படி படம் போடுரீங்க?

dharshini said...

ungka pongal receipe super...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா... பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்குங்க...
நீங்க காய்கறி வெட்டி வைக்கரதில இருந்ந்து, செஞ்சு காட்டின வரைக்கும்....
எல்லாமே தூள் போங்க.. புக் மார்க் பண்ணி வச்சிட்டேன்...
நாளைக்கு அது தான் ட்ரை பண்ண போறேன்...
இதில் இருக்கிற காய் எல்லாம் இருக்கு வீட்டில்.. ;-)
செஞ்சுட்டு வந்து சொல்றேன்... தேங்க்ஸ்

asiya omar said...

வாங்க,
மஹாவிஜய் மிக்க நன்றி.

லஷ்மிமா, மொபைல் எப்பவும் கிச்சனில் தான் இருக்கும்.சமைக்கும் பொழுது படம் எடுப்பது பழகிவிட்டது.

தர்ஷினி மிக்க நன்றி.

அன்புடன் ஆனந்தி நிச்சயம் செய்து பாருங்க.
கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.