Friday, January 7, 2011

பெல்பெப்பர் ஃப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்;
பாசுமதி ரைஸ்-400கிராம்
கொடைமிளகாய்-4சிறியது
(பச்சை,மஞ்சள்,சிவப்பு,ஆரஞ்சு கலர்)
ஸ்பிரிங் ஆனியன் -1பன்ச்
தக்காளி-1
பூண்டு -4பல்
சோயாசாஸ் -1டேபிள்ஸ்பூன்
சூப் கியூப் -1
மிளகுத்தூள்- அரைஸ்பூன்
எண்ணெய்- 3டேபிள்ஸ்பூன்
பட்டர் அல்லது நெய்- 1டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொடைமிளகாயை நன்கு அலசி பின்பு இப்படி நறுக்கி கொள்ளவும்.

ஸ்பிரிங் ஆனியன்,பூண்டு,தக்காளி விதை பகுதி நீக்கி நறுக்கவும்.

அரிசியை அரைமணி நேரம் ஊறவைத்து இப்படி உதிரியாக சாதத்திற்கு உப்பு போட்டு வடித்து வைக்கவும்.
கடாயில் 3டேபிள்ஸ்பூன் எண்ணெய்,1டேபிள்ஸ்பூன் பட்டர் அல்லது நெய் சேர்த்து காயவும்,நறுக்கிய பூண்டு,ஸ்பிரிங் ஆனியனில் உள்ள குமிழை கட் செய்து போடவும்.நன்கு வதக்கவும்.
ஆனியன் பூண்டு வதங்கியதும் நறுக்கிய கொடைமிளகாய் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.விதை நீக்கிய நறுக்கிய தக்காளி சேர்க்கவும்,சூப் கியுப் (knorr)பொடித்து போடவும்.

வடித்து வைத்த ஆறிய ரைஸை தட்டி கிளறவும்.சோயாசாஸ் சேர்க்கவும்
நன்கு ஒரு சேர பிரட்டி உப்பு சரி பார்க்கவும்.சூப் கியூபில் உள்ள உப்பே போதும்.ஃப்ரெஷ் மிளகை பொடித்து சிறிது தூவவும்.பிரட்டி விடவும்.ஸ்பிரிங் ஆனியன் கட் செய்து சிறிது அலங்கரித்து பரிமாறவும்.

சுவையான பெல்பெப்பர் ஃப்ரைடு ரைஸ் ரெடி.
பார்க்க கலர்ஃபுல் ஆக அருமையாக இருக்கும், பூண்டு,தக்காளி,கொடைமிளகாய் சேர்த்து அருமையான மணம் மற்றும் ருசியை தரும். உங்கள் ருசிக்கு தகுந்தபடி கொடைமிளகாய் கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்.செய்து பாருங்க அருமையாக இருக்கும்.சரியான பதத்தில் வெந்த ஜுஸியான கொடைமிளகாய் சாப்பிடனும்னா கொண்டாட்டம் தான்.
--ஆசியா உமர்

31 comments:

மகி said...

ஃப்ரைட்ரைஸில் தக்காளி-யா? புதுசா இருக்கு ஆசியாக்கா! இந்த சூப் கியூப்தான் எங்கே கிடைக்கும்னுதெரில.

சூப்பர் கலர்புல் சாதம்!

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..
வாவ்வ்..கலர் ஃபுல்....பாக்கவே சூப்பரா இருக்கு சகோ...

சமையல் குறிப்பும் படங்களும் வழக்கம் போல் அருமை..
வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரஜின்

asiya omar said...

மகி,ஒரே தக்காளி உள்ளே உள்ள பல்ப்பை நீக்கி விட்டு கட் செய்து போட்டு பாருங்க,அந்த டேஸ்ட் வித்தியாசமாய் இருக்கும்,அந்த ஃப்லேவர் ஜூஸை ரைஸ் அப்சார்ப் செய்து அருமையாக இருக்கும்.

asiya omar said...

மிக்க நன்றி ரஜின் ,கருத்திற்கு மகிழ்ச்சி.

mahavijay said...

color full rice asiya

அமைதிச்சாரல் said...

கலர்ஃபுல் ரைஸ்.. சூப்பருங்கோ.

Jaleela Kamal said...

தக்காளி சேர்த்தாலும் நல்ல தான் இருக்கும்.
இந்த ஃப்ரைட் ரைஸ், நான்கு வகை கேப்சிகம் சேருவதால் நலல் மனமாக இருக்கும்
நானும் முன்பே பிலாக்கில் கொடுத்து இருகேன் ஆசியா

Priya Sreeram said...

liked the vibrant colours of the rice ! very inviting !!

Kurinji said...

எதையுமே விட்டு வைக்கறது இல்லையா ஆசியா ? ரொம்ப புதுசா இருக்கு. எங்க வீட்டுல பெல் பெப்பெர்னாலே ஓடுவாங்க.பட் இது நல்ல ஐடியா!

Kurinji kathambam

குறிஞ்சி குடில்

athira said...

பார்க்கவே சூப்பராக கலஃபுல்லாக இருக்கு ஆசியா.

மிக்ஸ்ட் வெஜிடபிளில், பெப்பர் போட்டுச் செய்தேன் வழு வழுப்புத்தன்மையாக இருந்தது. இனி இம்முறையில் செய்து பார்ப்போம்.

Umm Mymoonah said...

Yummy fried rice.

கோவை2தில்லி said...

பார்க்கவே கலர்புல்லா அழகா இருக்கு. குட மிளகாயோட சுவையே நல்லா இருக்கும். இப்படி செய்தா!!!! வாவ்.

asiya omar said...

மகாவிஜய் மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

ஜலீலா,நான் வீட்டில் பிள்ளைகள் விரும்பி கேட்பதை அப்ப அப்ப சமைப்பதும் அது பிடித்திருந்தால் ப்ளாக்கில் போடுவதும் வழக்கம்.கருத்திற்கு நன்றி ஜலீலா.

asiya omar said...

ப்ரியா ஸ்ரீராம் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

குறிஞ்சி எல்லாம் செய்து பார்ப்பது வழக்கம்,கருத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

asiya omar said...

வாங்க அதிரா .நலமா?எத்தனை மாதங்களாகிறது?வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து உங்க ப்ளாக்கில் எழுதுங்க.

இளம் தூயவன் said...

புதுமையாக உள்ளது அருமை.

asiya omar said...

மிக்க நன்றி உம்மைமூனா.

கோவை2டில்லி கொடைமிளகாயை எங்கள் வீட்டில் சமையலில் அதிகம் பயன்படுத்துவது வழக்கம்.ரொம்ப பிடிக்கும்.கருத்திற்கு நன்றி.

ஸாதிகா said...

வித்தியாசமான கலர் ஃபுல் பிரைட்ர்ரைஸ்.பார்க்கவே கண்ணைக்கட்டுதே!

புவனேஸ்வரி ராமநாதன் said...

பார்க்கவே சூப்பர் இருக்கு. அருமை.

angelin said...

ah ha ! colourful rice .
thanks for sharing this yummy recipe asiya.

asiya omar said...

இளம் தூயவன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா தோழி,வருகைக்கு மகிழ்ச்சி.

புவனா கருத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

ஏஞ்சலின் செய்து பாருங்க,கருத்திற்கு நன்றி.

coolblogger said...

Nutritionist say that eating colorful food is good for health rather than standard badge ones. Not artifical colored food,but these kind of food.
treat for eye as well as tummy.

savitha ramesh said...

Miga arumai ,.Color ful a irukku....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வண்ணமிக்க
வாசனை மிக்க
சூப்பர்...குடைமிளகாய் ரைஸ்.. ;-)

ஆமினா said...

பச்ச கலர் தவிர எங்க ஊர்ல எல்லாமே காஸ்ட்லி!!

சென்னை போனதும் செய்து பார்க்கிறேன்!!

Padhu said...

Bell pepper fried rice looks so delicious and colorful.
Padhuskitchen

எல் கே said...

பகிர்வுக்கு நன்றி

asiya omar said...

coolblogger
savitha
ananthi
amina
padhuskitchen
l.k

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

vanathy said...

ஆசியா அக்கா, நல்ல கலர் ஃபுல்லா, ஆசையா இருக்கு. சூப்பர். நானும் செய்து பார்க்க வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

கலர் கலரா ஃப்ரைடு ரைஸ்.. சாப்பிடணும் போல இருக்கு சகோ.
மிக்க நன்றி.

asiya omar said...

வானதி கருத்திற்கு மகிழ்ச்சி.செய்து பாருங்க.

வெங்கட் நாகராஜ் வருகைக்கும் கரூத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.