Sunday, January 9, 2011

சமையல் தொடரும் சமையல் ராணியின் விருதும்

புவனேஸ்வரி ராமநாதன் - மரகதம் தொடரை தொடர அழைச்சிருந்தாங்க,மிக்க நன்றி புவனா.
இயற்கை உணவுகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதுண்டா? இயற்கை உணவுப் பழக்கம் எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தருகிறது?
இயற்கை உணவு (organic food)என்றால் நிறைய பேர் பச்சைக் காய்கறியை சமைக்காமல் சாப்பிடுவதுன்னு நினைக்கிறாங்க,அப்படியில்லை,இயற்கையாக நம்முடைய நேரடி கண்காணிப்பில் உரங்கள்,பூச்சிக்கொல்லிகள் சேர்க்காமல் வெறும் தண்ணீர் விட்டு வளர்த்தவற்றை அறுவடை செய்து பச்சையாகவோ சமைத்தோ.சாப்பிடுவதை குறிப்பது,

காய்கறின்னு இல்லை,வீட்டில் நாமே வளர்க்கும் நாட்டுக்கோழி,அதன் முட்டை,இறைச்சி,மாடு,ஆடு,ஒட்டகம் போன்றவற்றின் கறந்த பால் போன்ற பொருட்களும் இதில் அடங்கும். இயற்கை உணவுகளை அதிகம் இந்தியாவில் இருக்கும் பொழுது சேர்த்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது.இப்ப மாட்டுத்தொழுவம் இருக்கு ஆனால் பசுமாடுகள் இல்லை.இன்னமும் கறந்த பால் வெளியில் வாங்கி கொண்டு தான் உள்ளோம்.தெருவில் வழக்கமாய் நாட்டுக்கோழி முட்டை சொல்லி வைத்து வாங்கி பிள்ளைகளுக்கு கொடுத்ததுண்டு.இன்னமும் எங்க வீட்டு தோட்டத்து பப்பாளி,முருங்கை,,கீரைவகைகள்,காய்கறிகள் சாப்பிட்டுவிட்டு வெளியே வாங்கி சாப்பிடும் பொழுது இயற்கை உணவின் ருசி தனியாக தெரிவதுண்டு. அந்த சத்து அப்படியே நமக்கு முழுமையாக கிடைப்பதுண்டு,

எங்க வயலில் நெல் போட்டு விட்டு அறுவடை செய்த பின்பு விளைவிக்கும்,உளுந்து,பச்சைபயறு போன்றவை வீட்டிற்கு வரும்,அதனை லேசாக வெதுப்பி உப்பு மட்டும் போட்டு அவித்து சாப்பிடும் பொழுது என்ன ருசி,என்ன சத்து,அதுக்கு ஈடு இணையே கிடையாது.நாங்களும் விளையாட்டாக காய்பறிக்க சிறுவயதில் சென்று பறித்து விளந்தவற்றை அங்கேயே பச்சையாக சாப்பிடும் பொழுது அதன் ருசியே தனி தான்.ஆற்றுக்கு குளிக்கப்போகும் பொழுது வீட்டுத்தோட்டத்தில் விளந்த வெள்ளரி,மாங்காய்,இயற்கையாக கிடைக்கும் நுங்கு,பதனி,பனங்கிழங்கு வாங்கி சாப்பிடுவதும் வழக்கம். இவை எல்லாம் ஊருக்கு சென்றால் சாப்பிடும் வாய்ப்பு அதிகம்,இங்கு கிடைப்பது சிரமம்.இதைப்பற்றி பேசனும் என்றால் ஒரு புத்தகமே எழுதலாம்.

எங்க வீட்டில் சாலட் சாப்பிடும் பழக்கத்தை தினமும் கடைபிடிக்கிறோம்,ஆனால் அனைத்தும் இயற்கையாக விளைந்ததாக இருந்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும்

அன்றாடம் சரியான நேரத்தில் சாப்பிடுவீர்களா? அல்லது பசிக்கும் நேரத்தில் உண்பீர்களா?
உணவை சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கம்,எங்க வீட்டிலும் சரி,மாமா வீட்டிலும் சரி,இங்கும் சரி மாறாமல் கடை பிடித்து வருகிறோம்.நான் கொஞ்சம் அசந்து இருந்தால் கூட என் குழந்தைங்க நேரத்திற்கு கேட்டு விடுவதால் நானும்,அவரும் அப்படியே சாப்பிடும் வழக்கம்.வீட்டில் அனைவரும் இருக்கும் பொழுது ஒரே நேரத்தில் சாப்பிடுவது தான் வழக்கம்.


வலைப் பதிவில் சமையல் சம்பந்தமாக எழுதுவதற்கு யார் உங்களுக்கு தூண்டுகோலாக இருந்தார்கள்?
அறுசுவை,தமிழ்குடும்பம் சமையற்தளத்தில் ரொம்ப நாளாக பின்னூட்டம் மட்டும் இட்டு வந்தேன்,அங்குள்ள தோழிகள் நிறைய பேர் குறிப்பு கொடுக்கும் படி சொன்னதால் கொடுக்க ஆரம்பித்தேன்.அதன் பின்பு சுமஜ்லா மூலமாய் தான் ப்ளாக் பற்றி தெரிய வந்தது.பின்பு நானும் தட்டித் தடுமாறி ப்ளாக் ஆரம்பித்து குறிப்புக்கள் கொடுத்து வருகிறேன்..

புதியதாக ஏதாவது உணவு வகை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? அது சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
அது தான் என் பொழுதுபோக்கே, எப்படியாவது சாப்பிடும் வகையில் எங்க டேஸ்டுக்கு சமைத்து விடுவதுண்டு,அதிகம் எதுவும் வேஸ்ட் செய்ததில்லை.

உங்களது அன்றாட சமையலில் நீங்கள் கட்டாயம் தவிர்க்கும் சமையல் சம்பந்தமான பொருட்கள் ஏதாவது மூன்று?
ஹலாலான எந்த உணவையும் சாப்பிட்டு பார்த்து விடுவது வழக்கம்.தேவைன்னு வரும் பொழுது உடல் நலனை பாதிக்காத வகையில் எல்லாப் பொருளையும் அளவாய் சேர்த்து கொள்வது என் வழக்கம்.

தினப்படி சமையலில் நீங்கள் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் சமையல் பொருட்கள் சில?
ஒவ்வொரு நாளும் சமையல் வித்தியாசப்படும், என்றாலும் வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,வீட்டு மசாலாத்தூள்,சிக்கன் அல்லது மீன் மற்றபடி நம்ம தமிழ் நாட்டு வழக்கப்படி சாப்பாட்டிற்கு தேவையான் அனைத்து பொருளும் உபயோகிப்பது உண்டு.


குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உண்டாகிறது?
குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவதால் குடும்பத்தலைவிக்கு வேலை பழு முதலில் குறைகிறது.சாப்பாடு வேலை ஒரே நேரத்தில் முடிந்து விடுகிறது.இருப்பதை பகிர்ந்து சாப்பிடுவதால் வேஸ்ட் ஆவது குறைவு.யாருக்கு என்ன பிடிக்கும் என்று அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்,ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பொழுது பிள்ளைகளுக்கு பிடிக்காததை எப்படியாவது சாப்பிட வைத்து விடுவது வழக்கம்.ஊட்டியாவது விட்டு விடுவேன்.

உங்களுக்குப் பிடித்த உணவகத்தில் நீங்கள் விரும்பாத உணவு பரிமாறப்பட்டால் என்ன செய்வீர்கள்?
பொதுவாக பிடித்ததை தான் ஆர்டர் செய்வது வழக்கம்,எனக்கு இது வரை பிடிக்காதது என்று எதுவும் இருந்ததில்லை.யோசித்து பார்த்தால் எல்லாவற்றையும் ருசித்து சாப்பிட்ட மாதிரி தான் தெரியுது.வெரைட்டியாக டேஸ்ட் செய்ய பிடிக்கும்.பொதுவாக பார்க்க நல்லாயில்லைன்னால் சாப்பிட சிறிது தயக்கம் வரும்,ஆனால் சமையலின் நெளிவு சுளிவு தெரியும் என்பதால்,பார்சல் செய்து எடுத்து வந்து அதனை ரீமேக் செய்து அசத்தி விடுவதுண்டு.

நான் இந்த தொடரை தொடர அழைப்பது ஜலீலா, மாதேவி,அக்பர். விரைவில் எழுதும் படி அன்புடன் அழைக்கிறேன்.

சமையல் ராணி ஜலீலா தந்த அருமையான விருதுகள்.நன்றி ஜலீலா.


--ஆசியா உமர்.

39 comments:

THOPPITHOPPI said...

பதில் அருமை

சிநேகிதன் அக்பர் said...

கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யம்.

தொடர் ப‌திவு எழுத அழைத்ததற்கு மிக்க நன்றி ஆசியா உமர். விரைவில் எழுதுகிறேன்.

ஸாதிகா said...

அருமையான பகிர்வு.

athira said...

ஆ... எல்லாமே போச்சா? நான் வடையைச் சொன்னேன்.

நல்ல பதில்கள்(மிகவும் அடக்கமாக பதில்கள் சொல்லியிருக்கிறீங்க).

இங்கும் சுப்பமார்கட்டுகளில் ஓகானிக் என அனைத்தும் கிடைக்குது..சைவம், அசைவம், பால், பழம் அனைத்துமே. கொஞ்சம் விலைதான் அதிகமாக இருக்கும்.

சே.குமார் said...

arumaiyana pathilkal akka...
viruthu petratharkku vazhththukkal akka.

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள்
ஆசியா
ஆஹா நிறைய பேர் தொடர் பதிவுக்கு கூப்பிட்டு விட்டீங்களே, எழுத தான் கொஞ்சம் நேரம் ஆகும்.

இது வரை விஜி, மகி, விக்கி, பிரியா, இப்ப நீங்க.

சமையல் குறிப்புன்னா யோசிக்காமாபட்டுன்னு 2 நிமிஷத்தில் போட்டுடுவேன்.
ஹோம் வொர்க் கொஞ்சம் சோம்பேறி தனம் + நேரமின்மை, ஆனால் எப்படியும் போடுரேன். அதற்குள் அடுத்த தொடர் பதிவே வ்ந்துடும் போல

asiya omar said...

தொப்பி,தொப்பி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

உடன் கருத்திற்கும் பதிலுக்கும் நன்றி அக்பர்.மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஸாதிகா கருத்திற்கு மிக்க நன்றி இந்த தொடர் எப்படியும் உங்களையும் வந்தடையுமே தோழி.

வாங்க அதிரா அட களத்தில் உங்களையும் இறக்கி விடிருக்கலாமோ!

asiya omar said...

சே.குமார் வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

ஜலீலா சுறுசுறுப்பான உங்களுக்கு இது பெரிய வேலை இல்லை.விரைவில் எழுதுங்க.

Kousalya said...

கேள்வி பதில்களுக்கு ஏற்றார்போல அழகான விசயங்களை அருமையா சொல்லி இருக்கிற விதம் ரசிக்க வைத்தது தோழி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான பதில்கள். பதிவை தொடர்ந்தமைக்கு ரொம்ப நன்றி ஆசியம்மா. விருதுக்கும் வாழ்த்துக்கள்.

Priya Sreeram said...

lovely answers ! congrats on your award

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

//தோட்டத்து பப்பாளி,முருங்கை,,கீரைவகைகள்,காய்கறிகள் சாப்பிட்டுவிட்டு வெளியே வாங்கி சாப்பிடும் பொழுது இயற்கை உணவின் ருசி தனியாக தெரிவதுண்டு. //

உண்மைதான். சிறுவயதில் காற்கறி, பழவகை, அரிசி எல்லாம் வீட்டு தோட்ட வயல்களிலிருந்துதான். பட்டண வாழ்வில் முடியவில்லை.

விருதுக்கு வாழ்த்துக்கள் ஆசியா!

asiya omar said...

கௌசல்யா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

புவனா வாங்க,கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

ப்ரியா ஸ்ரீராம் மிக்க நன்றி.

asiya omar said...

ராமலஷ்மி வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.இன்னமும் வயலில் விளைந்த அரிசியும் அதன் ருசியும் அதன் போதுமையும் தனி தான்.அதுவும் நம்ம பக்கம் சம்பா அரிசி விளைச்சல் சொல்வதற்கு அது ஒன்றே போதும்.

Anonymous said...

நீங்க class first போல அதுதான் பதில்கள் எல்லாம் அருமையா எழுதி இருக்கீங்க.

வீட்டு தோட்டத்து காய்கறிகளுக்கு ருசி அதிகம் தான்.

Anonymous said...

அய்யோ வாழ்த்து சொல்ல மறந்துவிட்டேன்.
AWARD கிடைத்தற்கு வாழ்த்துகள்..

இலா said...

ஆசியா அக்கா! நல்லதொரு பதிவு.. இப்படியான பதில்கள் மூலம் பதிவர்களின் சில குணாதிசயங்களை கண்டு பிடிச்சிக்கலாம்.. உங்களின் சமையல் திறனுக்கு எனக்கு வரும் பாரட்டுக்கள் மூலமே தெரியுமே ... எப்படி சொல்வது.. அதாவது இதுவும் ஒரு பர்சனாலிட்டி ட்ரெயிட் தானே ... உங்க பிலாசபி என்ன என தெரிய ஒரு வாய்ப்பு ... Thanks for Sharing !

Kurinji said...

Congrats Asiya!

அமைதிச்சாரல் said...

இயற்கை உணவுகளின் ருசியே தனிதான். அதனால்தான் இங்கேயும் முடிந்தவரை கீரை,ஏதாவது ஒரு காய்ன்னு கிச்சன் கார்டனில் வளர்க்கிறேன். ஃப்ரெஷ்ஷா சாப்பிடும்போது என்ன ருசியா இருக்குது!!!

ராஜவம்சம் said...

எதார்த்தமான பதில் வாழ்த்துக்கள்.

ஆனந்தி.. said...

பதில்கள் எல்லாம் சூப்பர்...பதில்களில் இருந்து நான் நிறைய நல்ல விஷயம் தெரிஞ்சுகிட்டேன்...விருதுகள் அனைத்திற்கும் என் வாழ்த்துக்கள் ஆஸியா!

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ,
முதலில் தாங்கள் பெற்ற விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.
இயற்கை உனவு குறித்தும் ஊரில் நாமே விளைவித்து சாப்பிடும் உணவுகள் குறித்த விளக்கங்கள் அருமை.அத்தோடு,எனது சிறுபருவ நாட்களையும் சிந்தனைக்கு கொண்டுவந்ததற்கு நன்றிகள்..
எனது அத்தம்மா,அதாவது அத்தாவுடைய அம்மா,தெரிந்திருக்கும்,வேறு ஊர்களில் வேறு பெயர் இருக்கலாம்..
அவர்கள் காலத்தில் விவசாய நிலமும்,ஒப்படை காலத்தில் வைக்கோலில் விளையாண்ட நாட்களும்,கொல்லைப்புறத்தில் காய்கறிகள்,கோழி என பலவும் வளர்த்த நாட்கள் நினைவுகளாக நெஞ்சில் மட்டுமே இப்போது...

RAZIN ABDUL RAHMAN said...

உணவுப்பொருள்களில் எதுவும் எனக்கு பிடிக்காதது அல்லதான்..என் அம்மா என்னை அப்படி பழக்கிவிட்டார்..சிலர் அது பிடிக்காது இது பிடிக்காது என வகைப்படுத்துவதை ஃபேஷனாக்கி கொள்கிறார்கள்.நானும் ஹலால் உணவை சுவைத்து பார்த்துவிடுவேன்..

அருமையான பகிர்வு...
வாழ்த்துக்கள்

அன்புடன்
ரஜின்

RAZIN ABDUL RAHMAN said...

ஆ அப்ரம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்..

இந்த ஆரஞ்சு பழத்தை எல்லா உங்க தளத்தோட மேல்பகுதில இருந்து யாரோ உதுத்தி உட்டுக்கிட்டே இருக்காங்க..

பதிவுகள படிக்க சற்றே சிரமமாக இருக்கு..

முடிந்தால் அதை நீக்கிவிடவும்..

அன்புடன்
ரஜின்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சகோ. விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துகள்.

savitha ramesh said...

Congrats on ur award and interesting to know the answers

சசிகுமார் said...

அருமையான பகிர்வு

asiya omar said...

மஹா விஜய் ,அப்படியெல்லாம் இல்லை,கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

இலா வந்து கருத்து சொல்லனும்னு நினைச்சேன்.மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

குறிஞ்சி மிக்க நன்றி.

அமைத்திச்சாரல் வருகைக்கு மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

ராஜவம்சம் வாங்க,மிக்க நன்றி.

ஆனந்தி கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

ரஜின் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
அந்த பலூன் பறப்பது அழகாக இருப்பதாக தான் அனைவரும் சொல்கிறார்கள்.

asiya omar said...

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

சவிதா மிக்க நன்றி.

சசிகுமார் மிக்க நன்றி.

கோவை2தில்லி said...

நல்ல கேள்விகள். நல்ல பதில்கள். விருதுக்கு வாழ்த்துக்கள்.

Priya said...

இயல்பான பதில்கள்!!வாழ்த்துக்கள்!!!

Mahi said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ஆசியாக்கா! இயல்பான பதில்கள்! உங்க தோட்டத்துக்கே போயிட்டு வந்துட்டேன். :)