Monday, January 10, 2011

மீன் சினைப்புட்டு


மீன் சினைப்புட்டு, இந்த மீனின் சினையில் இருந்து தான் செய்தேன்,மீன் பெயர் தெரியலை,கிழங்கான் மீன் ருசியில் இருந்தது, பூ மாதிரி இருந்ததால் பூ மீன் என்று நான் பேர் வச்சிட்டேன்.யாருக்காவது பெயர் தெரிஞ்சா சொல்லுங்க.


சனிக்கிழமை அவரின் நண்பர் மீன் மார்க்கெட்டில் இருப்பதாகவும் மீன் வாங்கவா? என்று என் கணவரிடம் கேட்க அவரும் நல்ல மீனாக வாங்கி வாங்கன்னு போனை வச்சிட்டார்.ஆனால் மீன் வந்தது கட் பண்ணாமல்,என்ன செய்ய அதுவும் ஒரு மன் மீன்,இங்கே ஒரு மன் என்றால் 4கிலோ,ஆய்ந்து கழுவதற்குள் பெண்டு கழண்டுவிட்டது, இந்த வாரம் முழுவதும் மீனோ மீன் தான்.

ஆஹா இனிமே பிரிச்சு வைக்கனும். மாங்காய் மீன் குழம்பு வைக்க இங்கே பாருங்க.


மீன் தலை மிளகானம் வைக்க எடுத்து வச்சாச்சு.சத்தான இந்த சினையை வேஸ்ட் செய்ய மனசு வரலை,ஊரில் விறால் மீன் வாங்கினால் அதில் உள்ள இரண்டு சினைக்கு எனக்கு உனக்கு அடிச்சிகிட்டது நினைவு வந்தது.அதனால இதையும் சமைத்து அசத்தி விடுவோம்னு களத்தில் இறங்கிட்டேன்.

மீன் சினைப்புட்டு செய்ய

தேவையான பொருட்கள் ;

மீன் சினை - ஒரு சாசர் அளவு (கப் அளவு தான் சொல்லனுமா என்ன?)

முட்டை - ஒன்று

வெங்காயம் - பெரியது ஒன்று

தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் -2

இஞ்சி -2 இஞ்ச் துண்டு

தேங்காய் எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள்-1 டீஸ்பூன்

மஞ்சள்தூள்- அரைடீஸ்பூன்

கடுகு ,உளுத்தம்பருப்பு- 1டீஸ்பூன்

கருவேப்பிலை-2இணுக்கு

உப்பு- தேவைக்கு


முதலில் முட்டை மற்றும் சினையை மிக்ஸியில் கவனமாக லேசாக அடித்து கொள்ளவும்.அதனை தனியாக பவுலில் எடுத்து வைக்கவும்.


பின்பு அதே மிக்ஸியில் தேங்காய் துருவல்,நறுக்கிய இஞ்சி,வெங்காயம் போட்டு பரபரவென்று அரைத்து எடுக்கவும்.

அரைத்த பின்பு இப்படி இருக்கணும்.


கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய்,கருவேப்பிலை போட்டு தளிக்கவும்.

அரைத்த தேங்காய் இஞ்சி,வெங்காயம் விழுதை போட்டு ஓரளவு நன்கு வதக்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.

வதங்கிய பின்பு சினை,முட்டை கலவையை விடவும்.

மீன் சினைக்கலவை நன்கு வெந்து வரும்.வெந்த பின்பு மஞ்சள் தூள்,மிளகுத்தூள் சேர்த்து பிரட்டவும்.உப்பு சரி பார்க்கவும்.


கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் இப்படி உதிரியாக வரும்,பார்க்க கசகசா வறுத்தது போல் அழகாக அருமையாக இருக்கும்.ருசி மீன் புட்டு போல் தான் இருக்கும் அந்த தேங்காய் எண்ணை மணம் செமையாக இருக்கும்.


இப்ப சுவையான சத்தான மீன் சினைப்புட்டு ரெடி.சும்மாவே ஸ்பூன் போட்டு சாப்பிடலாம்.


குறிப்பு :

ஊரில் பெரிய கண்ணாடி கெண்டை,கட்லா கெண்டை,டேம் கெண்டையிலும் இது மாதிரி சினை இருக்கும்,கிடைத்தால் செய்து பாருங்க.ஆனால் வாயு,அளவாக சாப்பிடனும்.ஊரில் இருக்கும் பொழுது அந்த சினையை வேறொரு முறையில் செய்தேன்.வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் மிள்காய்ப்பொடி,பெருஞ்சீரகப்பொடி போட்டு அதுவும் அருமையாக வந்தது.இது கேரள தோழி ஒருவர் சொல்லி தந்தது.--ஆசியா உமர்.

48 comments:

THOPPITHOPPI said...

ஒரு பதிவுக்காக புகைப்படம்,விளக்கம் என அதிக சிரமம் பட்டு எழுதும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்

asiya omar said...

தொப்பி உங்கள் வருகைக்கும் உடனடி கருத்திற்கும் மிக்க நன்றி.ஃப்ரீயாக இருக்கும் சமயம் பதிவை ரெடி செய்து வைப்பதுண்டு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப அருமையா செய்திருக்கீங்க ஆசியாக்கா.. பார்க்கும்போதே ரொம்ப சூப்பரா இருக்கு..இப்பவே சாப்பிடணும்போல தோணுது.

நெய் மீன் சினையிலும் செய்யலாமோ.. நெய்மீன் சினையும் கிடைக்கும். டேஸ்ட் நல்லாருக்கும் போல..

asiya omar said...

சகோ.ஸ்டார்ஜன் வாங்க,உங்க கருத்து எனக்கு மிக்க மகிழவை தருகிறது.தாராளமாக செய்யலாம்.பயண ஏறபாடு எப்படி போகுது?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நெய் மீன் சினையை வைத்து நண்பர் ஒருவர் செய்து தந்தார். சாப்பிட நல்லாருந்தது. ஆனா நீங்க செய்திருக்கிற புட்டுவடிவில் இல்லை. ஆசியாக்கா ரொம்ப சந்தோசம்.

ஊருக்கு செல்ல ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. விரைவில் சனி, ஞாயிறுக்குள் டிக்கெட் கைக்கு வந்துவிடும்.

சிநேகிதி said...

மீனில் புட்டு செய்து சாப்பிடனும் என்று நீண்ட நாள் ஆசை.. தெளிவான விளங்க படங்கள்.. செய்து பார்க்கிறேன்

asiya omar said...

வாங்க சிநேகிதி,நலமா?கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.ரொம்ப நாளாய் பார்க்க முடியலை,என்னோட சுறா மீன் புட்டு ரெசிப்பியையும் பாருங்க.

ஆமினா said...

நேத்து கூட சினையை கீழே தூக்கி போட்டுட்டேன் ;(

சண்டே வரட்டும். இதே முறையில் செய்து அசத்திடுறேன்

asiya omar said...

ஆமினா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.செய்து பாருங்க.உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்.

Chitra said...

படங்களே பார்த்ததுமே, மூக்கில் வாசனை தூக்குதே! Super!

இளம் தூயவன் said...

மீன் சினையில் ஒரு வித்தியாசமான கறியை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

savitha ramesh said...

miga arumai..naan idhu varai sappidadhadhu......viraivil seyven....nandri

Krishnaveni said...

completely new to me, looks great

revathi said...

ithu thaan mudal murai....intha kurippai padipathu paarpathu...romba nallaa irukku..
Reva

எல் கே said...

present

asiya omar said...

சித்ரா அருமையாக இருந்தது,என் மகன் தான் குழம்பில் முழுசாக கொஞ்சம் போட்டிருக்கலாம்னு சொன்னான்.

asiya omar said...

இளம் தூயவன்,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

சவீதா நிச்சயம் செய்து பாருங்க,பிடிக்கும் ஒன்று இரண்டு இருந்தால் குழம்பிலும் போடலாம்.ஆன் மீனில் பாலை அது இருந்தால் தூர போட்டு விடுங்க,அது அரைத்தால் பேஸ்ட் மாதிரி ஆகிடும்.

ஸாதிகா said...

கொடுவாமீனில் சினை ஒரு கிலோ அளவுக்கு கிடைக்கும்.ஒரு முறை டிரை பண்ணுகின்றேன் தோழி.

asiya omar said...

கிருஷ்ணவேணி கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ரேவா பொதுவாக இதனை யாரும் சமைப்பதில்லை,நிறைய இருந்ததால் செய்து பார்த்தேன்.

asiya omar said...

எல்.கே. வருகைக்கு மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

ஸாதிகா கொடுவா மீனே மிக ருசி,அதன் சினையில் செய்து பாருங்க,நல்லாவரும்.எங்க ஊர் பக்கம் அந்த மீன் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்.

GEETHA ACHAL said...

வித்தியசமாக குறிப்பு...

அமைதிச்சாரல் said...

உள்ளேன் அம்மா :-)

myth-buster said...

எனக்கு பிடித்த டேசெர்ட் இது. ரெசிபிக்கு ரொம்ப நன்றிகள். படங்கள், விளக்கம் சகிதம் கலக்கல் பதிவு.

ஆயிஷா அபுல் said...

மீனில் சினை புட்டு அழகாக சொல்லி

இருக்கீர்கள். படங்கள் அருமை.

வாழ்த்துக்கள்.

//Starjan ( ஸ்டார்ஜன்

இப்பவே சாப்பிடணும்போல தோணுது.//

கொழுந்தனாருக்கு பார்சல் அனுப்பிவிடவும்

சிநேகிதன் அக்பர் said...

இதுவரை சாப்பிட்டதில்லை. உங்கள் பதிவு சாப்பிட தூண்டுகிறது.

asiya omar said...

கீதா ஆச்சல் கருத்திற்கு மிக்க நன்றி.

வாங்க அமைதிச்சாரல்.

asiya omar said...

மித் பஸ்டர் என்ன டேசெர்ட்டா?சரி எதுவென்றாலும் பிடித்துப்போனதற்கு மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

ஆயிஷா அபுல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.யார் அந்த கொழுந்தனார்?ஸ்டார்ஜன் கவனிக்கவும்.

asiya omar said...

அக்பர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.செய்து பாருங்க.

சி. கருணாகரசு said...

மிக அழக செய்திருக்கிங்க அத அருமையா படம் பிடித்து பகிர்ந்துகொண்டது..... அந்த சினைப்புட்டையே பகிர்ந்து கொண்டதுபோல இருந்தது..... நன்றி.

angelin said...

naan idhuvarai seydhadhe illai.(seyya theriyaadhu enbadhu thaan unmai)
thanks for sharing this recipe asiya.

asiya omar said...

கருணாகரசு வருகைக்கு மிக்க நன்றி.உங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஏங்சலின் உங்க கருத்திற்கு மிக்க நன்றி.முடிந்தால் செய்து பாருங்க.அருமையாக இருக்கும்.

mahavijay said...

naa taste pannathu illai amma kitta solli panna sollrean.

athira said...

புதுவித ரெசிப்பியாக இருக்கு ஆசியா. நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.

மீன் முட்டை என்றால் எனக்கு சரியான விருப்பம், ஆனால் அதைப்பார்த்தாலே என் கணவர் ஓடுவார், தொடவே மாட்டார்:).

இப்படி மீன் படமெல்லாம் போட்டு ஆசையைத் தூண்டி விட்டிட்டீங்க, அங்கு சாதாரணமாக ஒரு கிலோ மீன் என்ன விலை போகும் ஆசியா?

என் கண்ணே பட்டு விட்டது உங்கள் மீன் பொரியலில்:).

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///asiya omar said...

ஆயிஷா அபுல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.யார் அந்த கொழுந்தனார்?ஸ்டார்ஜன் கவனிக்கவும்.///

எல்லாம் நம்ம பாசக்கார மச்சிதான்.

asiya omar said...

மஹா விஜய் வருகைக்கு நன்றி,அம்மாட்ட சொல்லி சினை கிடைச்சால் செய்திட்டா போச்சு.

asiya omar said...

அதிரா வாங்க வருகைக்கு மகிழ்ச்சி.இந்த மீன் சீப் தான்,கிலோ 5 திர்ஹம் தான்,ஃபிஷ் மார்க்கெட்டில்.மீனுக்கு மீன் விலை வித்தியாசப்படும்.இங்கு மீன் நல்ல வெரைட்டியாக கிடைக்கும்.

asiya omar said...

ஆயிஷா உங்க மச்சியா?ரொம்ப சந்தோஷம் ஸ்டார்ஜன்.

vanathy said...

super, akka. Very nice photos.

Jaleela Kamal said...

ஆசிய இந்த் மீனில் விலை 5 திர்ஹமா> என்ன மீனுன்னு கேளுங்க.,
மீன் சினை எபப்வாவது தான் சீலா வாங்கும் போது வரும் இப்ப சூப்பர் மார்கெட்டுகளிலேயே வாங்கி விடுவதால் அளவாக அப்ப அப்ப வாங்கி கொள்கிறோம்.
அப்படியே குட்டி குட்டியா கட் செய்து தான் செய்துள்ளேன்.
எப்பவாவது கிடைத்தால் இப்படி செய்து பார்க்கலாம்/

nafeesa said...

assalamu alaikum asiya akka,neenga yenaku akka thannu ninaikuren..unga blog nan daily parpen..mlp recipe yellam doubt iruntha unga blog than parpen.thanks for ur mouth watering recipes..

asiya omar said...

வானதி கருத்திற்கு மிக்க நன்றி.

ஜலீலா மீன் பெயர் கேட்டு சொல்றேன்,இங்கு ஃபிஷ் மார்க்கெட்டில் தான் போய் மீன் வாங்குவது வழக்கம் திர்ஹம் 25-30 க்கு ஒரு மன்(4 கிலோ) ஈசியாக கிடைக்கும்.

asiya omar said...

நஃபீஸா வருகைக்கு மகிழ்ச்சி.எனக்கு தெரிஞ்சி mlp -யில் pmh வீட்டில் ஹமீது பாத்திமா மகளா?,உன்னை உங்க பெரியம்மா வீட்டில் ஒரிரு முறை சந்தித்து இருக்கிறேன்,சரியா?நலமா?இப்ப எங்கு இருக்கீங்க.

nafeesa imthiyas said...

masha allah enna niyapagam vachirukeenga...alhamdulillah nalla iruken..ippo USA la than iruken.oru request yenaku namma oru marunthu soru seiyanumnu aasai.ana correct recipe illa..ungaluku time iruntha upload pannunga..remember me in ur duas..

asiya omar said...

நஃபீஸா நிச்சயம் மருந்து சோறு குறிப்பு கொடுக்கிறேன்..ஏற்கனவே குறிப்பு போட்டோ எடுத்து ஃபைலில் இருக்கு,தேடி எடுத்து போடுகிறேன்,நான் எப்படியும் மாதம் ஒரிரு முறை இந்த சோறு ஆக்குவேன்.