Wednesday, January 12, 2011

ஏற்பும் தவிப்பும்


தவமாய் தவமிருந்து
பிள்ளை இல்லையென்று
பித்து பிடித்து
உன்னை
தத்து எடுத்து

கட்டி அணைத்து
கொஞ்சி விளையாடி
நல்லமுது கொடுத்து
தள்ளாத வயதில்
வளர்த்தேன்
அம்மா என்ற சொல்லிற்காக.

அந்நிறைவு நீட்டிக்குமா?
சமுதாயம் காட்டிடுமா?
உன்னை ஈன்றவளை தேடி
போய் விடுவாயோ ஓடி
என் தங்கமே !
அச்சத்தின் உச்சத்தில்
நான்....

--ஆசியா உமர்.
தமிழ்மணத்தில் பெண்பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவில் என்னுடைய எம்மா சிறுகதைக்கு ஓட்டு போட்டு இரண்டாம் சுற்றிலும் தேர்வு செய்த சக பதிவுலக அன்புள்ளங்களுக்கு மிக்க நன்றி.

56 comments:

GEETHA ACHAL said...

அருமையாக அழகாக எழுதி இருக்கின்றிங்க...வாழ்த்துகள் அக்கா...

சசிகுமார் said...

அருமை வாழ்த்துக்கள் அக்கா

asiya omar said...

கீதா ஆச்சல் ,இது நான் கண்ட ஒரு தாயின் உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறேன்,கருத்திற்கு நன்றி.

asiya omar said...

சசிகுமார்,வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.உணர்வுகள் சிறு கவிதைகளாக சில சமயம் வெளிவரும்.

jagadeesh said...

Good..

THOPPITHOPPI said...

சூப்பர்

நான் இப்போது தான் ஒருவர் குழந்தை தத்தெடுத்து சிரமம் படுவதை பற்றி வீட்டில் பேசிக்கொண்டு இருந்தேன்

asiya omar said...

வருகைக்கும் ,கருத்திற்கும் மிக்க நன்றி ஜெகதீஸ்.

Gayathri's Cook Spot said...

Very touching..

அமைதிச்சாரல் said...

அவங்களோட உணர்வை ரொம்ப அழகா வெளிப்படுத்தியிருக்கீங்க.. நல்லாருக்கு.

ஆமினா said...

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க

அருமை

வாழ்த்துக்கள்

asiya omar said...

தொப்பி கருத்திற்கு மிக்க நன்றி.

மிக்க நன்றி காயத்ரி.

asiya omar said...

அமைதிச்சாரல் பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சிங்க,நன்றி.


ஆமினா வாங்க,கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி.

Jaleela Kamal said...

கவிதையும் அதற்கேற்ற கவிதையும் அருமை

Kurinji said...

இது கவிதை அல்ல நிஜம். வாழ்த்துக்கள்!!!

Kurinji kathambam

குறிஞ்சி குடில்

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப அருமையாயிருக்கு.

Chitra said...

வாவ்! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

மனோ சாமிநாதன் said...

தத்தெடுத்த ஒரு தாயின் பரிதவிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீகள் ஆசியா!

ஸாதிகா said...

மனதினை தொட்டு விட்டது கவிதை.ஊரில் எங்கள் தெருவிலேயே குழந்த இல்லாத ஒரு சகோதரி முன் பின் அறியாத குழந்தையை தத்து எடுத்து அவ்வளவு பாசம் காட்டி வளர்த்து வருகின்றார்.ஆனால் சமூகத்தில் பெற்ற குழந்தைக்குறிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனும் பொழுது மனது வலிக்கத்தான் செய்கின்றது.அது போல் இன்னும் ஒருவர் தன் சொந்த சகோதரி மகளை தத்து எடுத்து ஓராண்டு காலம் வளர்த்து பிறகு அந்த சகோதரி குழந்தையை திரும்ப வாங்கிக்கொண்ட விபரீதமும் நடந்துள்ளது.

தோழி தமிழ்மணம் இரண்டாம் சுற்றில் தேர்வானதற்கு,மேலும் வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்1

சே.குமார் said...

அருமையான கவிதை அக்கா.
தமிழ்மணத்தில் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்.

அரபுத்தமிழன் said...

நந்தலாலா கவிதை நல்லாயிருக்கே

dharshini said...

வாழ்த்துக்கள்.... கவிதை அருமைங்க...

வெங்கட் நாகராஜ் said...

நிதர்சனமான கவிதை.... வாழ்த்துகள்.

asiya omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

குறிஞ்சி கவிதை நிஜம் தான்.மிக்க நன்றி.

புவனா மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

asiya omar said...

சகோ.குமார் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

அரபுத்தமிழன் வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.

தர்ஷினி மிக்க நன்றி.

எம் அப்துல் காதர் said...

பின்னீட்டீங்க போங்க என்று பின்னூட்டமிடலாம்னு நெனச்சேன். ஆனா அதையும் புரிந்து கொண்டு ஸ்வெட்டர் பின்னுவது எப்படின்னு அடுத்தப் பதிவ போட்டுடீங்கன்னா, சரி சரி அதையும் தான் போடுங்களேன்!! ஹா.. ஹா.. அருமை டீச்சர்

பதிவுலகில் பாபு said...

ரொம்ப அருமையான கவிதைங்க.. செம ஃபீல் இருக்கு வரிகள்ல..

இறுதிச்சுற்றுக்கு தேர்வாயிருப்பதற்கும்.. வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்..

எல் கே said...

உணர்வுகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்

Anonymous said...

கவிதையும் அருமையா இருக்கு அந்த படமும் அருமையா இருக்கு...

வெற்றி பெற வாழ்த்துகள்...

Satya said...

I wish I could read this in english..

revathi said...

asathalaa ezhuthureenga ...vaazhthukkal
Reva

கோவை2தில்லி said...

ரொம்ப உணர்வுப்பூர்வமா உருக்கமான கவிதை.

ஆயிஷா said...

கவிதை அருமை.வாழ்த்துகள்.

இளம் தூயவன் said...

ஒரு வளர்ப்பு தாயின் ,உள்ள உணர்வுகளை கவிதையாக வடித்துள்ளிர்கள்.

asiya omar said...

வெங்கட் நாகராஜ்

அப்துல் காதர்

பதிவுலகில் பாபு

எல்.கே.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சி. கருணாகரசு said...

கவிதை மிக தவிப்பு....

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

S.Menaga said...

ஆஹா கலக்கல்,வாழ்த்துக்கள் அக்கா!! நலமா ஆசியாக்கா??

asiya omar said...

மஹா விஜய்
சத்யா
ரேவதி
கோவை2தில்லி
இளம் தூயவன்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஆயிஷா வாங்க ,மிக்க நன்றி.

மேனகா நலம்,என்னாச்சு பார்க்கவே முடியலை,வருகைக்கு மகிழ்ச்சி.


கருணாகரசு வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

கலங்கும் தாய்மை தவிப்பாய் வரிகளில்.
அருமை ஆசியா.

’எம்மா’ இறுதிச் சுற்றிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கவிதை ரொம்ப பீலிங்கா இருந்தது. குழந்தை இல்லாதவங்க மன்சை அப்படியே படம்பிடித்து காட்டியிருக்கீங்க அக்கா. குழந்தை இல்லாதவங்களுக்கு எதோ தெய்வக்குத்தம் இருக்கிறமாதிரி அக்கம்பக்கத்துல உள்ளவங்க பேசியே மனதை நோகடிப்பாங்க.. அப்படியே தத்து எடுத்தாலும் அக்குழந்தையை தேடி தத்துகொடுத்தவங்க வரும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்.

நல்ல கவிதை ஆசியாக்கா. தமிழ்மணம் இறுதி சுற்றில் விருது கிடைக்க வாழ்த்துகள்.

asiya omar said...

ஸ்டார்ஜன் வருகைக்கும்,வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

மனோ அக்கா வாங்க,உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.


ஸாதிகா நான் கண் கூடாக கண்டு அடிக்கடி வருந்தும் விஷயத்தில் இதுவும் ஒன்று.நன்றி தோழி.

asiya omar said...

ராமலஷ்மி வருகைக்கு மகிழ்ச்சி.உங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.ஏதோ நான் இப்ப தான் முயற்சி செய்து கதை,கவிதைன்னு எழுத ஆரம்பிச்சிருக்கேன்,பார்ப்போம்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப அழகான கவிதை..

"எண்ணிலடங்கா ஆசையுடன்
எதிர்பார்ப்பின்றி காட்டும் அன்பை விட்டு
எப்படியம்மா நான் செல்வேன்..???"

தவமிருந்த அந்த தாய் கிட்ட, இப்படி அந்த குழந்தை சொல்லுங்க.. :-))

Kanchana Radhakrishnan said...

அருமை.வெற்றி பெற வாழ்த்துகள்...

asiya omar said...

ஆனந்தி அருமை,இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்,இப்ப தான் கவிதை எழுதிய என் மனதிற்கும் அந்த தாயின் மனதிற்கும் நிம்மதி.மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

காஞ்சனா,வாழ்த்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்களுக்குப் பிடித்ததில், எனக்கும் ரொம்ப சந்தோசங்க...! :-))

RAZIN ABDUL RAHMAN said...

மிகவும் குறுகிய வரிகளில்,ஆழமான தாய்மையை அருமையாக வெளிப்படுத்தும் கவிதை..

வாழ்த்துக்கள் சகொ;;

என்னைலா, எழுதச்சொன்னா கவிதையே கட்டுரை மாதிரி வரும்..அதத்தா நான் கவிதைன்னு சொல்லிட்டு திரியிறேன்.என்ன பண்ரது,.சட்டில உள்ளது அகப்பைல..

அன்புடன்
ரஜின்

R.Gopi said...

வாவ்......

அந்த தாயின் ஏக்கம் மிக அழகாக பதிவிடப்பட்டு இருக்கிறது...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...

தமிழ்மணத்தில் தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

asiya omar said...

ரஜின் உங்கள் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

கோபி வாங்க,வாழ்த்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

vanathy said...

super! very touching.

ஹாஜி முஹம்மது மஸ்தான் said...

அருமையான கவிதை,
படிக்க படிக்க பரவசம்,
படித்த பின்பு நினைவாசம்,
சமையலை விட கவிதைகளை அதிகமாக எதிர்பார்கின்றேன்...

ஜிஜி said...

கவிதை அருமை.வாழ்த்துக்கள்

Gopi Ramamoorthy said...

சூப்பரா எழுதி இருக்கீங்க

asiya omar said...

வானதி

ஹாஜி

ஜிஜி

கோபி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.