Thursday, January 13, 2011

என் பொங்கல் சிறப்பு நினைவுகள் / My Special thoughts of Celebrating Pongal


கிட்ட தட்ட 30- 35 வருடங்கள் முன்பு கொண்டாடிய என் பொங்கல் நினைவுகள், என்றும் சர்க்கரைப் பொங்கலாய் கட்டிக்கரும்பாய் இனித்து கொண்டு தான் இருக்கிறது.
எங்கள் குடும்பங்கள் சொந்தம் என்று சேர்ந்து முக்கால்வாசி பேர் ஒரே தெருவில் வசித்து வருவது வழக்கம்,எங்களுடைய முன்னோர்கள், தகப்பனார் உட்பட அனைவரும் நிலக்கிழார்கள் தான், சொந்த வியாபாரமும் இருக்கும். அதனால் வீட்டிற்கு உழவன்,உழவி இருப்பதுண்டு.

ஒவ்வொரு வருடமும் எங்கள் உழவன்,உழவிக்கு பொங்கப் படி கொடுப்பது வழக்கம்.வருடம் முழுவதும் உழைத்து உழுது களைத்த அவர்கள் கொண்டாடும் அந்தப் பொங்கல் அவர்களுக்கும் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சியை தரும். பொங்கலுக்கு முதல் நாளே நாங்கள் தயாராவது வழக்கம்,முதல் நாள் சந்தைக்கு வண்டியில் சென்று கரும்பு,பனங்கிழங்கு,மற்ற கிழங்கு வகைகள்,அவர்களுக்கு புதுத்துணிகள்,மஞ்சள்,தேங்காய்,பழம்,வெற்றிலை பாக்கு, சந்தனம் போன்ற பொருட்கள் வாங்கி வந்து அதனை தயார் செய்து என் தகப்பனார் அவர்கள் வைக்கும் அழகே தனி.பொங்கப் படி கொடுக்கும் பொழுது அந்த சந்தனத்தை மணக்க மணக்க அவர்கள் உடல் முழுவதும் பூசிக்கொள்வதும் நானும் அவர்களுடன் சேர்ந்து ஆசையாக கையில் கழுத்தில் பூசிய நினைவு.அதன் பின்பு பெரிய நார் பெட்டியில் நெல்லு,தேங்காய்,பழம்,வெற்றிலை,பாக்கு,பணம் அடங்கியதை வாப்பா தூக்கி கொடுக்கும் பொழுது பொங்கலோ பொங்கல் என்று கூவி அவர்கள் பெற்று கொள்ளும் அழகே அழகு..

அப்புறம் நாங்க குட்டீஸ் எல்லாம் சேர்ந்து கரும்பு கட்டை தூக்கி கொடுப்போம் .அவர்கள் விடாப்பிடியாக அனைவர் காலையும் தொட்டு வணங்குவது சங்கடமாக இருக்கும். அவர்கள் பதிலுக்கு கிழங்கு வகைகளை கொண்டு தருவார்கள். அன்று அவர்களுடன் நாங்களும் (சின்ன பிள்ளைங்க மட்டும்) உடன் சென்று விடுவோம்.போற வழியெல்லாம் ஒருவருக்கொருவர் பொங்க பொங்கியாச்சா? நல்லா பொங்குச்சா? என்று விசாரித்து கொள்வார்கள்.


ஆக நாங்கள் அவர்கள் வீடு போய் சேர காலை பதினொரு மணியாகிடும்.போனவுடன் பச்சை பசேல் வாழையிலையில் நீர் தெளித்து பழம்,தேங்காய்,சர்க்கரைப் பொங்கல்,வெண் பொங்கல், பொங்கல் கூட்டு வைத்து ஒரு பிடி பிடித்து விட்டு அவர்களின் குழந்தைகளோடு விளையாடுவது,கரும்பு பனங்கிழங்கு சாப்பிடுவதும் நடக்கும். .அதன் பின்பு அப்ப எங்கள் ஊரில் இருந்த கண்ணகி தியேட்டரில் எம்.ஜி.ஆர் அல்லது சிவாஜி படம் பொங்கல் ரிலீஸ் பார்த்து விட்டு வீடு வர ஆறுமணியாகிடும்.இப்படி பொங்கல் கொண்டாடுவது என்னோட எட்டாம் வகுப்பு படிக்கும் வரை நடந்தது.

எங்கள் வீட்டில் திருநெல்வேலி டவுணில் ஜோதி டெக்ஸ் என்ற ஜவுளி கடை வாப்பா உள்ளவரை இருந்தது.அங்கு உள்ள கணக்கு பிள்ளை,வேலை செய்பவர்கள் வீட்டில் இருந்தெல்லாம் சர்க்கரை பொங்கல் வரும்.அந்த பொங்கலின் சுவை இன்னமும் நினைவில் இருக்கு.

பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடும் பொழுது அந்த மகிழ்ச்சியே தனி தான்.

எல்லா வளமும் நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ பதிவுலக நட்புள்ளங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.--ஆசியா உமர்.
படங்கள் உதவி - நன்றி கூகிள்.

56 comments:

vanathy said...

சூப்பரா இருக்கு. ஊரில் இருக்கும் வரை பொங்கல் வந்தால் ஜாலியோ ஜாலி. இங்கே பொங்கல் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. நல்ல பதிவு, அக்கா.

அமுதா கிருஷ்ணா said...

நினைவுகள் பொங்கலை போல் இனிக்கிறது.

asiya omar said...

ஆகா வானதி உடன் கருத்திற்கு மகிழ்ச்சி.உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

பொங்கல் நினைவுகள் அருமை! கோலம் போடும் புகைப்படம் அதையும் விட அருமை!

revathi said...

romba nalla pathivu...oorai romba miss panrein...aana ungal pugaipadangal athai pookiduchu...
Reva

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா கொண்டாடி இருக்கீங்க..

என்ன சொல்லுங்க ஊரு ஊரு தான்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோலமும் அந்த வீடும் ரொம்ப அழகா இருக்கு..

Kurinji said...

superb post...

Kurinji kathambam

குறிஞ்சி குடில்

அமைதிச்சாரல் said...

என்னதான் சொல்லுங்க, கிராமங்கள்லதான் பொங்கல் முழுமையா கொண்டாடப்படுது :-)

அம்பிகா said...

அருமையான நினைவலைகள்.
கோலமும் வீடும் அழகு.
அனைவர்க்கும் இனிய பொங்கல்வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

அருமையா இருக்கு!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான நினைவுகள்.

athira said...

மலரும் பொங்கல் நினைவுகள் இனிமையாக இருக்கு ஆசியா. எப்போது என்ன கொண்டாட்டம் வந்தாலும், உடனே மனம் ரக்கை கட்டிக்கொண்டு... ஊருக்குத்தானே பறக்கிறது.

asiya omar said...

அமுதா உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

மனோ அக்கா வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

ரேவதி ஊர் நினைவை நம்மால் எப்பவும் மறக்க முடிவதில்லை.கருத்திற்கு மகிழ்ச்சி.

சிநேகிதன் அக்பர் said...

உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

asiya omar said...

முத்துலெட்சுமி வாங்க,உங்க முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

asiya omar said...

குறிஞ்சி மிக்க நன்றி.மகிழ்ச்சி.

அமைத்திச்சாரல் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

அம்பிகா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் வருகைக்கு மகிழ்ச்சி.

புவனா மிக்க நன்றி.

asiya omar said...

அதிரா வாங்க,ஆமாம் ஊரின் நினைவுகள் எப்பவும் இனிமை தான்,ஊர் மண்ணில் நம் கால் படும் பொழுது அந்த உணர்வே தனி தான்.

மகி said...

பொருத்தமான படங்களுடன் அழகான பதிவு ஆசியாக்கா!

/இங்கே பொங்கல் வருவதும் தெரியாது போவதும் தெரியாது./கரெக்ட்டா சொன்னீங்க வானதி!

Chitra said...

உங்கள் பதிவே, ஒரு பொங்கல் சிறப்பு விருந்துதான்!

savitha ramesh said...

Jaadhi ,inam ,madham thaandiya oru uthama mana Ulagam nammudayadhu.
Neengal Pongal - in sirappai koorum bodhu,en kangal panikkindrana.....
Vaazhga tamizh...
Velga nam Bharadham.....
Wonderful post

S.Menaga said...

இனிமையான நினைவலைகள்!!

ஆமினா said...

நல்ல நினைவுகள் ஆசியா

THOPPITHOPPI said...

//கிட்டத்தட்ட 30-35 வருடங்கள் முன்பு //

ரொம்ப பேக் போய்ட்டிங்க.

பொங்கல் வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

கிராமத்தில் பொங்கல் கொண்டாடும் அழகே தனி. அந்த இனிமையான நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோ..

Jaleela Kamal said...

ஊரில் நடக்கும் இபப்டி பட்ட காட்சியை இங்கு பார்பது அரிதே

ஸாதிகா said...

பொங்கல் நினைவுகள் அருமை.இதை படீகும் பொழுது பொங்கல் காலங்களில் நான் நெற்பயிற் விளைவிக்கும் கிராமத்திற்கு சென்று பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது நினைவு வருகின்றது.

mahavijay said...

உங்கள் ஊர் பொங்கல் நினைவுகளை அழகா இருக்கு.

கோவை2தில்லி said...

பொங்கல் நினைவுகள் அருமை. படங்களும் நல்லா இருந்தது. வாழ்த்துகள்.

angelin said...

sweet pongal memories asiya
thanks for sharing it with us.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உங்களுடைய பால்ய கால நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டது சந்தோசமா இருக்கு ஆசியாக்கா..

உங்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Krishnaveni said...

very nice write up, beautiful pictures, happy pongal

jagadeesh said...

Happy pongal akka...

ரஹீம் கஸாலி said...

தமிழ்மணம் விருதுகள்2010 -இல் 1-ஆம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

தமிழ்மண விருதில் முதல்பரிசு பெற்றதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ஆசியாக்கா..

Jaleela Kamal said...

இதுல நிறைய விஷியம் என்னோடு ஒத்து போகுது,.ஜோதி டெக்ஸ்டைல்ஸ்

எங்க வீட்டில் எங்க சொந்த கடை பானு சில்க் பேலஸ், அதே கணக்கு பிள்லை விட்டுகாரம்மா வீட்டில் கினத்தடியில் பொங்க்ல் பொங்குவது, எங்களுக்கும் விருந்து,
எல்லாமா பசுமரத்தானிபோல் பதிந்துள்லது.

பனங்கிழங்கு, கரும்பு ஞாபகப்படுத்திட்டீஙக் இப்ப இங்கு எங்கே கிடைக்கும்

அமைதி அப்பா said...

மற்றவர்களுக்கு கொடுத்து, அவர்கள் மகிழ்ச்சியில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும் என்கிற செய்தியை, நம் முன்னோர்கள் நமக்கு கற்று தந்திருக்கிறார்கள். உழவன்,உழவி, இந்த வார்த்தை வழக்கு அங்கே இருக்குதா?

அப்படியே நேரமிருந்தால், என்னுடைய பொங்கல் நினைவையும் பார்க்கவும்.

http://amaithiappa.blogspot.com/2011/01/blog-post_15.html

நன்றி.

asiya omar said...

முத்துலெட்சுமி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

மகி
சித்ரா
சவிதா
மேனகா
ஆமினா
தொப்பி தொப்பி
வெங்கட் நாகராஜ்

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஜலீலா
ஸாதிகா
மஹாவிஜய்
கோவை2தில்லி
ஏஞ்சலின்
கிருஷ்ணவேணி
ஜெகதீஸ்

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஸ்டார்ஜன்
ரஹீம் கஸ்ஸாலி

வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி, மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்,என்னால் இன்னும் நம்ப முடியலை.எல்லாப்புகழும் இறைவனுக்கு தான்.

asiya omar said...

ஆமாம் ஜலீலா நிறைய விஷயம் ஒத்து போகிறது,மிக்க மகிழ்ச்சி.இங்கு கரும்பு,பனங்கிழங்கு எங்கு பார்த்த மாதிரி நினைவில்லை.

asiya omar said...

அமைதி அப்பா, எங்க வீட்டில் இன்னமும் உழவனும்,உழவியும் வந்து தினப்படி வேலை செய்து விட்டு வயலுக்கு சென்று வருவது வாடிக்கையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.வயல் வேலை செய்பவர்களை உழவன் உழவி என்று தான் எங்க பக்கம் அழைப்போம்.அந்த சொல் ஏன் இப்பமும் பழக்கத்தில் தான் உள்ளது.
வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

சிநேகிதன் அக்பர் said...

தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

தமிழ்மணப்போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கும் வாழ்த்துகள்.

Gopi Ramamoorthy said...

பொங்கல் வாழ்த்துகள் சிஸ்டர்.

கோலம் போடும் படம் சூப்பர்

asiya omar said...

அக்பர் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

கோபி வாங்க,வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி.

ஜிஜி said...

ஊரில பொங்கல் கொண்டாடறதே ரொம்ப சந்தோஷமான அனுபவம்ங்க.உங்கள் நினைவுகள் அருமை.பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

R.Gopi said...

உங்களின் பழைய நினைவுகளில் மலர்ந்து, விரிந்த பொங்கல் பலே ரகம்..

அழகாக தொகுத்து எழுதி இருக்கிறீர்கள்..

ஃபோட்டோஸ் கூட ரொம்பவே அழகு..

தோழமைகள், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

பொங்கலோ பொங்கல் http://edakumadaku.blogspot.com/2011/01/blog-post.html

வெட்டி வேரு வாசம்.. வெடலை புள்ள நேசம் http://jokkiri.blogspot.com/2011/01/blog-post.html

Rathnavel said...

Heartiest Pongal Greetings.

சே.குமார் said...

பொங்கலைப் போல் இனிக்கும் நினைவுகள் அக்கா.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா...மேடம்,எப்படி இருக்கீங்க...?
உங்களுடைய இந்த *** சமைத்து அசத்தலாம் *** பகுதி நிஜமாவே அசத்தாலாக இருக்கு.சென்ற வாரம் தான் கண்டுபிடித்தேன்....ஒன்று ஒன்றாக பார்த்து கொண்டிருக்கின்றேன்.உங்கள் பொங்கல் நினைவலைகள் மிக அருமை....பண்டிகை,விஷேசம்ன்னா அது நம்ம ஊருதான்.... நீங்கள் நினைத்து பார்த்ததோடு அனைவருக்கும் நினைவுபடுத்திட்டீங்க....
வாழ்த்துக்கள் ஆசியா மேடம்.இன்னும் உங்களின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிவிட வருவேன்...

அன்புடன்,
அப்சரா.

asiya omar said...

ஜிஜி மிக்க நன்றி.

கோபி மிக்க நன்றி,

ரத்னவேல் ம்தல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

சகோ.குமார் மிக்க நன்றி.

asiya omar said...

வஅலைக்கும் ஸலாம்,அப்சரா.மிக்க நலம்,நீங்களும் நலம் தானே?வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

அப்பாவின் நினைவுகளும், பொங்கல் விழாவும் அருமையான நினைவுகள்.
வீடும் பொங்கல் கோலமும் அழகு.
என் சொந்த ஊரும் திருநெல்வேலிதான்.