Sunday, January 16, 2011

தமிழ்மணத்தின் பதக்க விருது.

நானும் சென்ற வருடம் ப்ளாக் ஆரம்பித்து ஏதோ பொழுது போக்கிற்காக சமையல் குறிப்பு கொடுத்து கொண்டிருந்தேன்.எனக்கு கதை,கவிதைன்னு கொஞ்சம் ஆர்வம் உண்டு. தமிழ்மணம் வலைப்பூக்களிடையே நடத்திய போட்டியில் பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவை இந்த வருடம் அறிமுகப்படுத்தி இருந்தாங்க.
நானும் என்னுடைய இரண்டாவது கதையான எம்மா கதையை பரிந்துரைத்தேன். கதை முதல் இரண்டு சுற்றிலும் வெற்றி பெற்றது அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது, மூன்றாவது சுற்றில் தேர்வாகி பொங்கலன்று பதக்க விருது பெறும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை . பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் பங்கு பெற்றதில் என்னுடைய கதைக்கு அங்கீகாரம் கிடைத்தது ஆச்சரியமே. என்னுடைய படைப்புக்களின் முதல் ரசிகர் என் கணவர் தான், மிகவும் உன்னதமானவர். நான் என்ன எழுதினாலும் குதூகலித்து தன் நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்வார்.எல்லோரிடமும் நான் ப்ளாக் எழுதுவதாக சொல்வார்,அய்யோ இவர் இப்படி சொல்கிறாரே, நாம என்ன அப்படியா நல்லா எழுதறோம்னு சங்கடமாக இருக்கும்.

முதல் பரிசு பதக்கம்


இந்த விருதினை என் கணவருக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்.
எனக்கு வாக்களித்து பரிந்துரைத்த அனைத்து பதிவுலக நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விருதுகள் வழங்கிய தமிழ்மணத்திற்கும்,தேர்வு செய்த நடுவர் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறேன்.

ஆஹா! நான் இங்கு நிச்சயமாக ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன், அலைவரிசை அஹமது இர்ஷாத் எனக்கு நான் கதை எழுத ஆரம்பிக்கும் முன்பே சிறந்த எழுத்தாளர் விருது வழங்கியிருந்தார், நம்ம சும்மா சமையல் குறிப்பு தானே கொடுக்கிறோம், இவர் எழுத்தாளர் விருது தந்து விட்டாரேன்னு தான் கதை எழுத ஆரம்பித்தேன். தோழி ஸாதிகாவும் நான் கதை எழுத ஊக்கம் கொடுத்தவர், அவர்கள் இருவருக்கும் மற்றும் என் மொழி நடையை ரசித்து தேர்வு செய்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றியினை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.

-ஆசியா உமர்.

53 comments:

கக்கு - மாணிக்கம் said...

தமிழ் மணம் - கதை பிரிவில் முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

எல் கே said...

vaalthukkal

ஜெய்லானி said...

தமிழ் மணத்தில் பரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள்..!! :-)

asiya omar said...

கக்கு மாணிக்கம் வருகைக்கு மிக்க நன்றி.வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சகோ எல்.கே.வாங்க,முதலில் விருது பெற்ற செய்தியினை தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி.

asiya omar said...

சகோ.ஜெய்லானி வாங்க,நலமா?ரொம்ப நாளாக பார்க்க முடியலை,வருகைக்கு மிக்க மகிழ்ச்சி,வாழ்த்திற்கு மிக்க நன்றி.

Aruna Manikandan said...

congratulations and wishing u many more success.....

Gopi Ramamoorthy said...

ட்ரீட் குடுங்க சிஸ்டர். அமீரகம் வந்தால் உங்க வீட்டில்தான் சாப்பாடு:)

yeskha said...

ஆஹா......... அருமை... தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்......

ஸாதிகா said...

தோழி ரொம்ப சந்தோஷமாக இருக்கு.ஒவ்வொரு சுற்றிலும் தேர்வானதுமே என்னிடம் உடனுக்குடன் பகிர்ந்து உங்கள் மகிழ்ச்சியை பறிமாறி என்னையும் மகிழ்வித்தீர்கள்.இன்னும் இது போல் பரிசுகளும்,விருதுகளும் கிடைத்து சிறப்புற இந்த ஸாதிகாவின் வாழ்த்துக்களும்,துஆக்களும்.

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள் ஆசியா. தொடர்ந்து பல சிறுகதைகள் படைத்திடுங்கள்!

அம்பிகா said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்.

revathi said...

vaazhthukkal...nalla naal athuvumaa nalla seithi soli irukeenga...ungal kanavarukkum snaegithikkum en vaazhthukkal...
Reva

asiya omar said...

அருணா வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

சகோ.கோபி நீங்க அமீரகம் வரும்பொழுது நிச்சயம் தெரிவியுங்க,ட்ரீட் தானே கொடுத்திட்டா போச்சு.

asiya omar said...

யெஸ்கா உங்கள் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்திற்கு நன்றி.

asiya omar said...

ஸாதிகா வாங்க தோழி,கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

ராமலஷ்மி உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

அம்பிகா வாழ்த்திற்கு மிக்க நன்றி.

பதிவுலகில் பாபு said...

முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்ங்க..

mahavijay said...

வெற்றிகள் தொடர வாழ்த்துகள்....

இளம் தூயவன் said...

முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

ஆமினா said...

பரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள் ஆசியா!!!


நீங்க விருது வாங்குனதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம்,,,, நமக்கு தெரிஞ்ச தோழி,பழக்கமானவர் வாங்கியதில் நானும் பெருமிதம் அடைகிறேன்

asiya omar said...

பாபு வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

மஹாவிஜய் மிக்க நன்றி.

இளம்தூயவன் வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

ஆமினா உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ஆசியா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துகக்ள்

மேலும் மேலும் நல்ல நல்லசிறுகதைகள் படைத்திட வாழ்த்துகக்ள்.
/ எம்மா/அத படிக்கும் போது என் கிராம்மா ஞாபகம் தான் வரும், அவர்களும் என்னை எம்மா எம்மா என்று தான் கூப்பிடுவாங்க.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பர். வாழ்த்துக்கள் ஆசியாம்மா.

Gayathri's Cook Spot said...

Congrats Asiya!

Akila said...

congrats dear...

Event: Dish Name Starts with E
Learning-to-cook
Regards,
Akila

Kurinji said...

vaalththukkal...

S.Menaga said...

வாழ்த்துக்கள் அக்கா!!

Kanchana Radhakrishnan said...

தமிழ் மணத்தில் பரிசு பெற்றதுக்கு வாழ்த்துகள்.

அமைதிச்சாரல் said...

முதல்பரிசுக்கு வாழ்த்துகள் ஆசியா..

vanathy said...

Akka, good job. Keep it up.

asiya omar said...

ஜலீலா உங்கள் வாழ்த்திற்கு மகிழ்ச்சி,மகிழ்ச்சி,மகிழ்ச்சி.

புவனா மிக்க நன்றிமா.

asiya omar said...

காயத்ரி

அகிலா

குறிஞ்சி

மேனகா

காஞ்சனா

அமைத்திச்சாரல்

வானதி

தோழிகள் அனைவரின் வாழ்த்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

மாதேவி said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் ஆசியா.

R.Gopi said...

வாவ்......

காலையில் வந்தவுடன் ஒரு நல்ல செய்தி, கூடவே மனதிற்கு மகிழ்ச்சி ஊட்டுவதாகவும் இருந்தது...

தமிழ் மணம் கதை பிரிவில் முதல் பரிசு வென்றமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் மேடம்...

இதுவே ஆரம்பம்... இன்னும் பலப்பல சாதனைகளை தொடர்ந்து புரிந்திட வாழ்த்துகிறேன்....

அதெல்லாம் சரி, ட்ரீட் எப்போன்னு சொல்லுங்க!!?

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் (பகுதி-1) http://edakumadaku.blogspot.com/2011/01/1.html

வெட்டி வேரு வாசம்.. வெடலை புள்ள நேசம் http://jokkiri.blogspot.com/2011/01/blog-post.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் ஆசியா.. :)

தொடர்ந்து அசத்துங்கள்..

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் சகோ..

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துக்கள் ஆசியா!

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரி அவர்களுக்கு,

சக சகோதரன் என்ற முறையில் கீழ்காணும் பதிவில் முஸ்லிம் பதிவர்களுக்கு ஒரு ஆலோசனையை சொல்ல முயற்சித்திருக்கின்றேன். அது சரியென்னும் பட்சத்தில் செயல்படுத்த ஆவணச் செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...அல்லாஹ் நம் முயற்சிகளை இலேசாக்கி வைப்பானாக...ஆமீன்.

முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

ஆனந்தி.. said...

இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் சகோதரி...

சே.குமார் said...

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள் அக்கா.

asiya omar said...

மாதேவி

கோபி

முத்துலெட்சுமி

அமுதா

வெங்கட் நாகராஜ்

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

சகோ.ஆஷிக் அவர்களுக்கு,
வஅலைக்கும் ஸலாம்.உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

ஆனந்தி மிக்க நன்றி.


சகோ.குமார் மிக்க நன்றி.

கோமதி அரசு said...

தமிழ்மண முதல் பரிசுக்கு வாழ்த்துக்கள்.

தொடர்ந்து கதை எழுதுங்கள்.

உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள், அவர் உங்களை உற்சாகப் படுத்துவதால் அவருக்கும் வாழ்த்துக்கள்.

கோவை2தில்லி said...

வாழ்த்துகள்.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}


தமிழ் மணத்தில் பரிசு பெற்றதுக்கு

வாழ்த்துக்கள் தோழி.

ஹாஜி முஹம்மது மஸ்தான் said...

சமைப்பதில் மட்டும் அல்ல...
கவிதைகள் வரைவதில் மட்டும் அல்ல...
கருத்துகளை சக மக்களிடமிருந்து பெறுவதிலும்
விருதுகள் பெறுவதிலும் என்றும் என்றென்றும் ஆசியா-ம்மா அவர்களே...

மனோ சாமிநாதன் said...

தமிழ்மண விருது- அதுவும் முதல் பரிசு பதக்கம் கிடைத்ததற்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் ஆசியா! இனியும் தொடர்ந்து விருதுகள் பெற்றுக் குவிக்க இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்களும்கூட!!

அஹமது இர்ஷாத் said...

தமிழ் மணம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..

asiya omar said...

கோமதி அரசு
கோவை2தில்லி
ஆயிஷா
ஹாஜி

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

மனோ அக்கா வாங்க,கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.

அஹமது இர்ஷாத் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

Mahi said...

முதல் பரிசுக்கு வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

asiya omar said...

வாழ்த்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி மகி.

apsara-illam said...

ஆசியா அக்கா,முதலில் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.லேட்டாக சொன்னதற்க்கு மன்னிக்கவும்.நம்ம ஆசியா அக்கா வாங்கியது எனக்கும் பெருமைதானே....
இன்னும் உங்கள் சிறுகதை பக்கம் போகவில்லை.அதையும் படித்துவிட்டு பதிவிடுகிறேன் சரியா அக்கா.

அன்புடன்,
அப்சரா.