Tuesday, January 18, 2011

மேலப்பாளையம் மருந்து சோறு / Melapalaiyam Marunthu Choru

தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி அல்லது பச்சரிசி -அரைகிலோ
மருந்து பொடி -2டேபிள்ஸ்பூன் குவியலாக
இஞ்சி பூண்டு பேஸ்ட் -  4 டீஸ்பூன்
கரம்மசாலா - அரைஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்பு தூள்)
பூண்டு- 15 சிறிய பல்(நாட்டு பூண்டு பல்)
மல்லி,புதினா,கருவேப்பிலை- சிறிது
நல்லெண்ணய் - 100 மில்லி
நெய்- 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம்- 100 கிராம்
பச்சை மிளகாய் -3
தேங்காய்பால் - பாதி பெரிய காயில் எடுத்தது
அல்லது கோகனட் மில்க் பவுடர்-3 டேபிள்ஸ்பூன்
கருப்பட்டி - 50கிராம் அல்லது 2 டேபிள்ஸ்பூன் சீனி
உளுந்து - ஒரு கைபிடியளவு
முட்டை-1
உப்பு-தேவைக்கு

மேலப்பாளையம் பஜாரில் நிறைய கடையில் இந்த மருந்து பொடி கிடைக்கும்,முகைதீன் ஸ்டோரில் தரமாய் இருப்பதால் அங்கு அவசரத்திற்கு வாங்கி கொள்வது வழக்கம்.மற்றபடி வீட்டில் திரித்து வைத்து கொள்வார்கள்.
முதலில் தயார் செய்ய வேண்டியது,வெங்காயம்,மல்லி,புதினா நறுக்கி வைக்கவும்,இஞ்சி பூண்டு,கரம் மசாலா ரெடி செய்யவும். புழுங்கல் அரிசியில் தான் பாரம்பரியமாக மருந்து சோய் செய்வது வழக்கம். நன்கு அலசி ஊற வைக்கவும்.ஒரு கைபிடியளவு உளுந்தை ஊறவைத்து வேக வைத்து தனியாகவும் வைக்கலாம்.ஒரு முட்டையை அடித்து வைக்கவும்.கருப்பட்டியை பாகு எடுத்து கொள்ளவும்.மருந்து பொடியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும்.தேங்காய்பால் நல்ல திக்காக வேண்டுமானால் தேங்காய் அளவை கூட்டி கொள்ளவும்.கோகனெட் மில்க் பவுடர் என்றால் வெது வெதுப்பான நீரில் கரைத்து வைக்கவும்.ஒரு சிலர் முந்திரி பருப்பும் தேங்காயுடன் அரைத்து விடுவது உண்டு.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் இரண்டும் விட்டு காய விடவும்,நறுக்கிய வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு, கரம் மசாலா வதக்கவும்,அத்துடன் உரித்த பூண்டு பல்லை சேர்க்கவும்,மல்லி,கருவேப்பிலை,புதினா சேர்த்து வதக்கவும்.

பின்பு கரைத்து வைத்த மருந்து பொடியை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி 10நிமிடம் வேக வைக்கவும்.
வெந்த பின்பு இப்படி இருக்கும்.பச்சை மிளகாய் சேர்க்கவும்.

தேங்காய்பாலை அரிசியின் அளவிற்கு இரண்டு அளவு எடுத்து விடவும்.
அரிசியின் தரம்,அளவு பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.
உளுந்தை இப்படி தனியாக வேக வைத்தும் எடுத்து வைக்கலாம்.அல்லது அரிசியுடனும் வேக வைக்கலாம்
தேங்காய்ப்பால் நுரை கூடி வரும் பொழுது அரிசியை தட்டவும்,உப்பு போடவும்.மீடியம் தீயில் வைத்து மூடவும்.பின்பு அடுப்பை குறைத்து விடவும்.
சோறு பாதி வெந்ததும் வேக வைத்த உளுந்தை சேர்க்கவும்.
கருப்பட்டி பாகு எடுத்து வைக்கவும்.
சோறு வெந்து மேல் வரும் பொழுது அடித்த முட்டை, வடிகட்டிய கருப்பட்டி பாகு தேவைக்கு விட்டு ஒரு போல் சோறு குழையாதவாறு பிரட்டவும்.கருப்பட்டி கிடைக்கவில்லை என்றால் சீனி சிறிது சேர்த்து கொள்ளலாம்.மூடி போட்டு 10 நிமிடம் சிம்மில் தம் போடவும்,அடி பிடிக்காதபடி பார்த்து கொள்ளவும்.திறந்து பிரட்டி விட்டு பரிமாறவும்.
சுவையான சத்தான மருந்து சோறு ரெடி.இதனை மட்டன் முட்டானம்,மீன் ஆனம்,தால்ச்சா,மட்டன் அல்லது சிக்கன் சுருட்டு கறியுடன் பரிமாற அருமையாக இருக்கும்.ஆனால் விரால் மீன் மருந்து சோறு தான் சூப்பர் காம்பினேஷன்.

பின் குறிப்பு:
எங்க ஊர் மருந்து சோறு நல்ல ருசியாக மைல்டாக இருக்கும்.பிள்ளை பெற்றவர்களுக்கு இந்த மருந்தை காயம் காய்ச்சியும்,முறுக்கெண்ணெய் கிண்டியும்.சோறு ஆக்கியும் கொடுத்தால் நல்லது.எங்கள் ஊரில் முதல் குழந்தை பிறந்தால்,முழுக்கு போட்டவுடன் பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு மருந்து சோறு ஆக்கி கொடுப்பது,மட்டன் முட்டானம்,(மட்டன் குழம்பில் முட்டை அவித்து போடுவது)காயம் காய்ச்சியும் சீராக கொடுப்பது வழக்கம்.இந்த பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. சீர் செய்வது கட்டாயம் இல்லை. அவரவர் விருப்பப்பட்டு சந்தோஷமாக செய்வது. எல்லோரும் மாதம் ஒரிரு முறை இந்த சோறு ஆக்கியும் சாப்பிடலாம்.உடம்புக்கு மிக நல்லது.

--ஆசியா உமர்.

41 comments:

ஸாதிகா said...

மருந்து சோறு..நான் ஓடிக்கறேன்.

Chitra said...

மருத்துவ குறிப்புடன் ஒரு சமையல் ஐட்டம். நன்றிங்க.... தமிழ்மணத்தில வோட்டு போட முடியல. There is a problem in their site. :-(

எல் கே said...

வித்யாசமாய் இருக்கு . நன்றி

சே.குமார் said...

Pudhumaiyana samaiyal...
muthal murai kelvip padukirean...

asiya omar said...

தோழி ஸாதிகா ஒரு நாள் நாங்க சமைச்சு நீங்க சாப்பிட்டீங்கன்னா ஓடி வருவீங்க.

asiya omar said...

சித்ரா வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி கருத்து சொல்வதே பெரிய மகிழ்ச்சி தான்..

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ,
மருந்து சோறுன்னு எங்க ஊர்ல சாலியல்,சதகுப்பை வைத்து இதே மாதிரித்தான்,மஞ்சள் கலர்ல செய்வாங்க,.அதுக்கு மீன் ஆனம் வெய்ட்டு கொடுக்கும்..நல்லாவும் இருக்கும்..
இந்த மருந்து சோறு வித்யாசமா இருக்கு..க்ளைமாக்ஸ்ல..சக்கரை வேர சேக்குரதா சொல்லீர்க்கீங்க..அப்ரம் ஆனம் எல்லா மிக்ஸ் ஆனா டேஸ்ட் எப்டி இருக்கும்...

நல்லாத்தா இருக்கும்னு நெனைக்கிறேன்..

படங்களும்,குறிப்பும்,பின் மருத்துவ நலன்களும்,ஊர் பழக்கமும் ஒரு சேர கொடுத்ததற்கு நன்றிகள் பல...
அன்புடன்
ரஜின்

asiya omar said...

எல்.கே.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

குமார் கருத்திற்கு மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

வித்தியாசமாய் இருக்கு.. எனக்கு மருந்துன்னாலே அலர்ஜி. நானும் ஓடிட்டேன் :-)))

சாருஸ்ரீராஜ் said...

vithyasama irukku akka

ஆயிஷா அபுல் said...

அஸ்ஸலாமு அழைக்கும்.

மேலப்பாளையம் மருந்து சோறு
நல்லா இருக்கு.நாங்கள் வேற மாதிரி
செய்வோம்.தோழிக்கு மேலப்பாளையமா?

எங்க சொந்தகாரங்கோ அங்கே இருக்காங்கோ.


//RAZIN ABDUL RAHMAN said...

மருந்து சோறுன்னு எங்க ஊர்ல சாலியல்,சதகுப்பை வைத்து இதே மாதிரித்தான்,மஞ்சள் கலர்ல செய்வாங்க,.அதுக்கு மீன் ஆனம் வெய்ட்டு கொடுக்கும்..நல்லாவும் இருக்கும்..//


சகோ,நீங்க சொல்றது தேங்காய்பால் சோற்றில் அந்த மருந்து கலப்பார்கள்.அதை எல்லோரும்
சாப்பிடலாம்.தோழி சொல்வது குழந்தை பெற்றவர்களுக்கு
கொடுப்பது. அப்படிதானே தோழி.

asiya omar said...

ரஜின் கருத்திற்கு மிக்க நன்றி.

அமைதிச்சாரல் பெயர் தான் மருந்து சோறு டேஸ்ட் சாப்பிடுகிற மாதிரி இருக்கும்.

சாருஸ்ரீ மிக்க நன்றி.

asiya omar said...

ஆயிஷா அபுல் வஅலைக்கும்ஸலாம்.இதுவும் எல்லாரும் சாப்பிடலாம்,பிள்ளை பெற்ற சமயம் விஷேசமாக சமைப்பதுண்டு.இதுவும் நீங்கள் குறிப்பிட்ட பொருட்கள் சேர்த்து தயாரிச்சது தான்.

Aruna Manikandan said...

sounds new to me....
Thx. for sharing :)

S.Menaga said...

வித்தியாசமா இருக்குக்கா,இதுவரை செய்து சாப்பிட்டதில்லை;..நீங்க சமைச்சு கொடுங்க உங்க கையால சாப்பிடுறேன்....

சசிகுமார் said...

அருமைக்கா தமிழ்மணத்தில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்

hamed said...

அப்படியே நாம் ஊரு ஸ்பெஷல் ஆன தக்கடி மற்றும் அதிசயமே அசந்து போகும் வான் கோழி பிரியாணி ஸ்பெஷல் அப்டேட் பண்ணவும்

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியாக்கா! ஒவ்வொரு சமையலும் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவதுபோல் இந்த மருந்து சோறிலும் நிறைய வித்தியாசங்கள். முட்டை கடைசியாக சேர்ப்பதால் பிசுபிசுப்பாக இருக்காதா, ஆசியாக்கா? ஒரு நாள் இந்த முறையிலும் செய்து பார்க்கணும்.

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள். உங்களின் பழங்கால‌ பொங்கல் கொண்டாட்டமும் நன்றாக இருந்தது. உங்களின் தொடர் அழைப்பை ஏற்றுக் கொண்டேன். நன்றி ஆசியாக்கா! விரைவில் இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன். அப்போது டைப் பண்ணுகிற அளவு கூட உடல்நிலை இல்லாததால் எல்லாவற்றையும் இப்போது வந்து சொல்கிறேன் :)

asiya omar said...

அருணா மிக்க நன்றி.

மேனகா செய்து தந்திட்டா போச்சு.

சசிகுமார் மிக்க நன்றி.

ஹமீது மட்ட்ன் பிரிவில் மட்டன் தக்கடி ஏற்கனவே கொடுத்தாச்சு.வருகைக்கு நன்றி.

asiya omar said...

அஸ்மா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.நீங்க ஊருக்கு போய் இருக்கீங்கன்னு நினைச்சேன்.
வாழ்த்திற்கு மகிழ்ச்சி.எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப தொடர் எழுதுங்க.
முட்டை வெந்து பஞ்சு மாதிரி இருக்கும்.சோறு புழுங்கும் பொழுது சரியாக இருக்கும்.செய்து பாருங்க.

GEETHA ACHAL said...

வித்தியசமாக இருக்கு...நானும் இதுவரை மருந்து சோறு சாப்பிட்டது இல்லை...

அக்‌ஷ்தா பிறந்த பொழுது எல்லாம் நாங்களே தனியாக பார்த்து கொண்டதால் லேகியமோ அல்லது வேறு எதுவுமே சாப்பிடது இல்லை...

ஆமினா said...

நல்ல குறிப்பு ஆசியா

வாழ்த்துக்கள்

asiya omar said...

கீதா ஆச்சல் சான்ஸ் கிடைச்சால் நிச்சயம் டேஸ்ட் செய்து பாருங்க,உங்களுக்கு பிடிக்கும்.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

ஆமினா வாங்க,கருத்திற்கு மகிழ்ச்சி.மிக்க நன்றி.

savitha ramesh said...

miga thevayana kurippu...healthy sappattai,nammil pala per marandhe poi vittanar....mikka magizhchi...everything is new to me

ஆனந்தி.. said...

ரொம்ப உபயோகமான குறிப்பு தோழி இது..நன்றி...

asiya omar said...

சவீதா

ஆனந்தி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் said...

மருந்து சோறு கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. ஊருக்கு ஊர் வித்தியாசமாக தான் உள்ளது.

Gopi Ramamoorthy said...

மேலப்பாளையம் எங்கே இருக்கிறது?

எம் அப்துல் காதர் said...

எங்க பாட்டிமா இருக்கும் போது இப்படி கைப் பக்குவமா செய்து கொடுப்பாங்க! ஆனா இப்ப தலைமுறை இடைவெளி யாருக்கும் இவைகளைப் பற்றி சொன்னாலும் புரிவதில்லை. நீங்க பொறுமையா நிதானமா அழகா சொல்லியிருக்கீங்க. டீச்சரல்லவா ம்ம்ம் :-))

Anonymous said...

இந்த மருந்து வேற இடத்தில் கிடைக்காதா?

asiya omar said...

சகோ.இளம்தூயவன் கருத்திற்கு மிக்க நன்றி.

சகோ.கோபி மேலப்பாளையம் நெல்லை ஜங்ஷனில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தான்.

சகோ.அப்துல் காதர் மிக்க நன்றிங்க.ஏதோ பொழுது போக்காக 2 வருஷம் டீச்சராக இருந்தேன்,A.O(அக்ரிகல்ச்சுரல் ஆஃபிசர்) வாக போக வேண்டியது.

asiya omar said...

இந்த மருந்து வேறு எங்கு கிடைக்கும்னு தெரியலை மஹா.வருகைக்கு மகிழ்ச்சி.

nafeesa imthiyas said...

thanks asiya akka..parthathum sapitanum pola iruku..insha allah kandipa intha weekendla try pannaporen..naalu peru sapitanumna rice yevalavu potanum?

vanathy said...

இப்பதான் கேள்விப்படுறேன். நிறைய வேலையா இருக்கும் போல இந்த ரெசிப்பி.

asiya omar said...

நஃபீஸா வருகைக்கு மகிழ்ச்சி.நாலு பேருக்கு அரைகிலோ போதுமானது,மருந்து சோறு பெருப்பமாக இருக்கும்.நான் இங்கே பாசுமதி அரிசியில் தான் செய்திருக்கேன்.வேண்டுமானால் 100 கிராம் அரிசிஅதிகம் ஆக்கி கொள்ளவும்,கூட்டினாலும் இதே அளவு சாமான் தான்.செய்து பார்க்கவும்.

asiya omar said...

வானதி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

தளபதி said...

அக்கா ஒரு சின்ன உதவி முகைதின் கடை
மேலப்பாளையத்தில் எந்த இடத்தில் இருக்கு . எனக்கு அம்பாசமுத்திரம் அதான் கேட்டேன்

Asiya Omar said...

@தளபதி முகைதீன் ஸ்டோர் மேலப்பாளையம் பஜாரில் இருக்கிறது.

Suchi Sm said...

healthy rice... want to taste it...

thibaharan pushparaja said...

ஆமாம் எல்லாம் சரி நான் மேலப்பாளையம் வந்துதான் இந்த மருந்த வாங்கனுமா?....அந்த மருந்த எப்படி தயார் செய்வது என்று சொன்னால் நல்லது தானே