Thursday, January 20, 2011

ஏலேலோ ஐலசா ....என் பெயரை கேட்டால் பள்ளிகளில் ஆகட்டும்,கல்லூரியில் ஆகட்டும் கிண்டல் அடிக்காதவங்களே கிடையாது.எந்த டீச்சரும் என்னை மறக்கவும் மாட்டாங்க,அப்படிப்பட்ட பெயரை வைத்த எங்க வாப்பாவிடம் தினமும் என் பெயரை மாற்ற முடியுமான்னு அடிக்கடி சின்ன வயதில் கேட்பது வழக்கம்.

வாப்பாவும் அதற்கு பதிலாக உனக்கு நம்ம குடும்பத்தில் உள்ள நாலு பெத்தும்மாவின் பெயரையாக்கும் வைத்துள்ளேன், இந்த பேருக்கு என்னம்மா குறைன்னு சமாதானம் சொல்வதுண்டு, ஏன் ? வாப்பா எனக்கு பாட்டி பெயரை வச்சீங்க, ஒரு புதுப்பெயராக வைக்கக்கூடாதா? ன்னு வாதம் செய்வேன்.யாராவது அழகான பெயர் வச்சாங்கன்னா இந்த பெயரையவது எனக்கு வச்சிருக்கலாம் என்று வாப்பாவிடம் சொல்வதுண்டு..

இப்படியாய் பள்ளிவாழ்க்கை முடிந்து கல்லூரிக்குள் அடி எடுத்து வைக்கும் காலமும் வந்தது.திரும்பவும் இந்த பெயர் கவலை என்னை தொற்றி கொண்டது.முஸ்லிம்களுக்கு என் பெயரும் அதன் சிறப்பும் தெரியும்.ஆனால் மற்றவர்கள் பெயர் கேட்கும் பொழுது பதில் சொன்னால், ஆசியா.. ஆசியா.. காண்டினெண்ட் நேம் அப்படிம்பாங்க, ஒரு சில பேர் ஏசியான்னு சொல்வாங்க, எனக்கு பழகி போச்சு.பேசாமல் இருந்து விடுவேன்.

முதல் நாள் கல்லூரிக்குள் நுழைந்தேன், அப்பவே ரேகிங்கும் இருந்தது, சீனியர்ஸ் என்ன கூப்பிட்டு பெயரென்ன என கேட்கவும் தயங்கி தயங்கி தான் சொன்னேன்.ஒன்றும் சொல்லலை,தப்பித்தேன் என்று சந்தோஷமாக வகுப்பு சென்று விட்டேன்,எங்களுக்கு எல்லாருக்கும் ஐ.டி நம்பர் உண்டு என்பதால் அட்டெண்டன்ஸ் எடுக்கும் பொழுது நம்பர் தான் கூப்பிடுவாங்கன்னு என் தோழி சொன்னாள். அப்பாடான்னு இருந்தது,
யாருக்கும் பேர் விளக்கம் சொல்ல தேவையில்லைன்னு நிம்மதியாக இருந்தேன்.

எல்லாரும் உங்க கோர்டினேட்டரை பார்த்து விட்டு வாங்கன்னு பியூன் வந்து சொல்லவும், வகுப்பை விட்டு வெளியே வந்தால், அதே சீனியர்ஸ் கூட்டம்
கிளாப் செய்து ஆசியா மைனர்,ஆசியா மைனர் ந்னு சத்தம் எனக்கு அழுகையே வந்து விட்டது. ஒரளவு சமாளித்து விட்டு சாரை பார்க்க சென்றால், அவர் அட்டெண்டன்ஸ் எடுத்தார், என் பெயர் வரவும்,சிறிது தயங்கி ஆர்யா என்றார். சார் ஐ யம் ஆசியா, ஓ சாரி என்றார். ரிஜிஸ்டரில் யார் என் பெயரை எழுதினார்களோ !


அடுத்து என் வகுப்பிற்கு எங்க Agronomy Prof பாலசுப்ரமணியன் சார் வந்தார்,அவராவது பேரை ஒழுங்கா கூப்பிடுவார் என்று நினைத்தேன்,அதிலும் மண் விழுந்தது, அலியா என்றார்.சார் ஐ யம் ஆசியா என்று சலிக்காமல் பதில் சொன்னேன், ஓ ஆசியா என்று அவரும் சொன்னார்.
எல்லோரும் என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க, வாழ்க்கைக்கும் மறக்க முடியாது.

அடுத்து Entomology Prof. பழனிச்சாமி வந்தார். இவர் என்ன சொல்லபோறாரோன்னு கவலை, அப்பாடா அவர் 3047 என்று ஐடி நம்பரை கூப்பிட்டார். பிழைத்தேன்,எஸ் சார் என்று அமர்ந்து விட்டேன்.
மதியம் மெஸ் வந்து சாப்பிட்டு விட்டு ரூமிற்கு வந்தாலும் இந்த பெயர் கவலை பெரிதாக இருந்தது, சீனியர்ஸ் திரும்பவும் கிண்டல் அடித்தால் என்ன செய்வதுன்னு தான்.


மதியம் Soil Science Lab போனோம், Prof  ரிஜிஸ்டரை எடுத்தார்,அய்யோ அய்யோ என்று தலையில் அடித்து கொள்ளாத குறை தான், என் பெயர் வந்ததும் வகுப்பே வேடிக்கை பார்க்க ரெடியானது.ஆசையா என்றாரே பார்க்கணும்.கொல்லுன்னு சிரிப்பு, மறுபடியும் நான் சார் ஐ யம் ஆசியா, ஓ ஆசியா .. சாரிமா என்றார்.

இன்னும் இரண்டு வகுப்பு இருக்கே என்னவெல்லாம் பெயர் சொல்லப் போறாங்களோன்னு என் கவலை எனக்கு, என்னடா இந்த சின்ன பெயரை கூட கூப்பிட தெரியலையேன்னு நினைச்சேன், எல்லாம் என் நேரம் தான் சொல்லனும்.

அடுத்த நாள்  தொடர்ந்து வந்த வகுப்பில், எல்லாரும் ரெஜிஸ்டரை எடுத்தவுடன் என்னை திரும்பி பார்த்தாங்க,நான் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன்,எப்படி வேண்டுமானாலும் கூப்பிடட்டும் என்று தைரியம் வந்தவளாக, எல்லார் பெயரையும் கூப்பிட்டு வந்த சார் என் பெயர் வரவும்,வாட் நேம்? ஐலசா என்றாரே பார்க்கணும், பையனில் ஒருத்தன் ஏலேலோ ஐலசா ந்னு சொன்னானோ இல்லையோ அவ்வளவு தான், திரும்பவும் சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆனது,சார் ஐ ம் ஆசியா என்று வழக்கம் போல் சொன்னேன்., அவரும் ஓஓ ஆசியா, ஐ யம் சாரி என்றார்.
இப்படி தான் என்னோட கல்லூரி வாழ்க்கை ஆரம்பித்தது.
எல்லாரும் இப்படி ஓ போட்டு ஓ போட்டு என் இன்ஷியலே O ஆகிவிட்டது. ஆக இப்படி என் பேரும் புகழும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் கொடி கட்டி பறந்தது.


1990பட்டமளிப்பு விழாவும் வந்தது, அப்பவும் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் கவர்னர் நம்ம சுர்ஜித் சிங் பர்னாலா தான் அவர் கையால ஒழுங்கா வாசித்த பெயரோடு பட்டம் வாங்கினேன்.அதன் பின்பு கல்லூரி பக்கமே ஏன் கோவை பக்கமே போகலை, இப்ப என் மகனை கல்லூரி அனுப்பும் வருடமும் வந்து விட்டது, என் கல்லூரி மலரும் நினைவுகள் தான், இந்த வருடம் விடுமுறைக்காவது எங்க பல்கலைக்கழகம் சென்று வரவேண்டும், இன்ஷா அல்லாஹ்!
இனி அடிக்கடி கல்லூரி காமெடி நினைவுகள் தொடரும்.

என்னை வா வா என்று அழைக்கும் பல்கலைக்கழகம், எப்ப சென்று வர சந்தர்ப்பம் கிடைக்குமோ? என்னுடன் பயின்றவர்கள் இப்ப ஒரு சிலர் அங்கே வேலை செய்யலாம், என்னோட ஆசிரியர்கள் யாராவது ரிட்டையர்ட் ஆகாமல் இருந்தாலும் பார்த்து வர ஆசை. நான் பாடித் திரிந்த கல்லூரி நந்தவனம்,ஹாஸ்டல்,வெட்லேண்ட்,ட்ரைலேண்ட்,கார்டன்லேண்ட்,மில்லட்ஸ்,லைப்ரரி பொட்டானிகல் கார்டன் இன்னும் மறக்க முடியாத எத்தனையோ இடங்கள் என்னை காணாமல் தவிப்பது என் மனசுக்கு புரியுது. இங்க யாருக்கும் புரியலையே !

--ஆசியா உமர்.

58 comments:

எல் கே said...

நம்மூர்ல படிச்சவங்களா நீங்க ? இதே மாதிரி நான் படிச்சப்ப ரெண்டு எல் கே என் வகுப்பில் . செம காமெடியா இருக்கும்

அமைதிச்சாரல் said...

பேர் என்ன பாடுபடுத்துது பாருங்க :-)))

எனக்கும் ஒரு ஆசியாவை தெரியும். என் பையர் சின்னவனா இருக்கச்சே அவளை ஆஷியா.. ஆஷியான்னுதான் கூப்பிடுவார் :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சீக்கிரமே பல்கலை சென்றுபார்க்க நாள் வரட்டும்..:)

இலா said...

Akka.. Very funny... i really laughed out loud. I was about to sleep. I thought I will post comment on the first blog appearing on the top.... Yeyyee... you are the winner . You also made me laugh.... dont worry .. tell me... my thambi will take you to TNAU tour when you visit.I actually went to meet indira there :)

asiya omar said...

எல்.கே வாங்க ,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.எங்க வகுப்பில் டி.மனோ,எஸ்.மனோ ந்னு 2 பேர் ஒரே காமெடி தான்.

asiya omar said...

அமைதிச்சாரல் என் தோழி லதாவும் என்னை ஆஷியான்னு தான் கூப்பிடுவாங்க,அது ரொம்ப பிடிக்கும்.

asiya omar said...

வருகைக்கு நன்றி முத்து லெட்சுமி,உங்க ரேடியோ பேட்டி மிகவும் அருமை.ரசித்து கேட்டேன்.

asiya omar said...

இலா வாங்க,ஆஹா தூங்கப்போற நேரம் சிரிக்க வச்சிட்டேனா?இந்திரா இப்ப கடலூரில் ரிசர்ச் ஸ்டேஷனில் வேலை.மிக்க நன்றி இலா.கருத்திற்கு மகிழ்ச்சி.

ISAKKIMUTHU said...

பெயரால் ஒருவர் இப்படி எல்லாம் கஷ்டப்படமுடியுமா என்ன? எப்படியிருந்தால் என்ன உங்கள் பெயர் அழகான பெயர்தான்.

சங்கவி said...

கோயம்புத்தூர்ல தான் படிச்சீங்களா...

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

திடீர்னு நகைச்சுவை பதிவ போட்டு அசத்திட்டீங்க.

வேளான்மை கல்லுரி மாணவியா (சாரி பழைய மாணவியா)நீங்கள்? அப்ப குறுவை சாகுபடி பற்றி ஒரு பதிவு போடலாமே.

சூப்பர்.

ஏலேலோ ஐலசா.

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா.... ஆசையா ... ஐலசா .... எல்லாம் டூ மச், பா... எப்படி சண்டை போடாம விட்டீங்க? நீங்க ரொம்ப நல்லவங்க.... ஹா,ஹா,ஹா,....

asiya omar said...

இசக்கி முத்து உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.சொல்லப்போனால் இன்னும் எவ்வளவோ இருக்கு.

asiya omar said...

சங்கவி கோவையில் தான் 4 வருடம் ஹாஸ்டல் வாழக்கை .வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

ராஜகிரி காஜாமைதீன் உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு ஒரு பழமொழி உண்டு தெரியுமா?ஏட்டை கட்டி 20 வருடம் ஆகுது,அனுபவம் இல்லாமல் வேளாண் பதிவு எப்படி போடுவது,புத்தகங்களை புரட்டினால் போடலாம்.பார்ப்போம்.

asiya omar said...

சித்ரா,எங்க அண்ணன் கிட்ட நான் அப்ப இப்படி எல்லாம் நடந்ததுன்னு சொன்னப்போ அதுக்கு அவங்க,உன்னால நாலு பேரு சிரிச்சாங்கன்னு சந்தோஷப்படுவியா அதை விட்டுட்டு இப்படி வருத்தப்படுறியேன்னு சொல்லிட்டாங்க.

சே.குமார் said...

விடுங்கக்கா... எப்படி கூப்பிட்டால் என்ன... நம்ம பேர் நமக்கு எப்பவும் அழகுதான்.

அமுதா கிருஷ்ணா said...

தனித்துவமான பெயர்.என்ன அர்த்தம்ப்பா??

Jaleela Kamal said...

தலைப்பும் கலக்கல்
ஒரே சிரிப்பு, அப்போது இருந்த சூழ்னிலையில் நானா இருந்தா பே பே ந்னு அழுது இருப்பேன்.

எனக்குஇந்த அனுபவஙக்ள் (ஹாஸ்டல், கேண்டின்) எல்ல்லாம் கிடையாது.
சின்ன வயதில் தான் வாத்தியார் எல்லாம்.
போக எல்லா இடத்திலும் ஒன்லி லேடிச்ஸ் தாண், (பள்ளி, ஹிந்தி கிளாஸ், தையல் கிளாஸ்,டைப்பிங், இன்னும் எல்லா இடத்திலும் ஒன்லி லேடி டீச்சர் தான்

Geetha6 said...

வாழ்துக்கள் மேடம்..நீங்க எங்க ஊர்
மாவட்டத்தில் படித்தீர்களா?
பசுமையான நினைவுகள் அனைத்தும்.

வெங்கட் நாகராஜ் said...

அசத்தலான பதிவுங்க. நகைச்சுவை உணர்வோட எடுத்துக்கிட்டா பிரச்சனை இல்லை இல்லையா? நான் வெங்காய ராமன் ஆன மாதிரி... :)))

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_20.html

asiya omar said...

குமார் இந்த பதிவை நகைச்சுவைக்காக தான் எழுதினேன்,நான் இப்ப வருத்தப்படுறது இல்லை.வருகைக்கு மகிழ்ச்சி.

revathi said...

Romba naerungi vanthuteenga....nama ooru neenga..."Kovai" vantheengana kateeyam veetukku varanum...Paeru paduthura paadu...solli mudiyaathu....
Reva

asiya omar said...

அமுதா ஆசியாவின் அர்த்தம் Meaning: The Arabic name Asiya means - one who tends to the weak, one who heals,hope...
-queen of victory kingdom
-solid foundation of strong building

-) Asiya (AS) is the name of Pharoah's wife. She found Prophet Musa (AS) as a baby and convinced Pharoah not to murder him. She then rejected her husband's claim of divinity and was a Muslim as she chose monotheism. Some Muslim girls are called Asiya.

இது மாதிரி நிறைய அர்த்தம் இருக்கு,ஆனால் எனக்கு எங்க பாட்டி பேருன்னு வச்சாங்க.

asiya omar said...

ஜலீலா வாங்க கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

கீதா நீங்க கோவையை சேர்ந்தவங்களா?கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

வெங்கட் நாகராஜ் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.


ரேவா கருத்திற்கு மிக்க நன்றி.அழைப்பிற்கு மகிழ்ச்சி.

Gayathri Kumar said...

My mom's house is near agri university. Next time when I go there I will think of you..

கோவை2தில்லி said...

எங்கூர்ல படிச்சவங்களா நீங்க. உங்கள் கல்லூரிக்கு சென்று நண்பர்களை ஆசிரியர்களை சந்திக்கும் வாய்ப்பு விரைவில் கிடைக்கட்டும்.

ஆமினா said...

ஐலசான்னு சொன்னதும் பயங்கரமா சிரிச்சுட்டேன்.....

செம காமெடி

ஸாதிகா said...

கொசு வத்தியை சூப்பரா சுற்றிட்டீங்க..ஏம்பா..ஆஸியா அழகான பெயர்தானே.சில பெயர்கள் பழமையானாலும் உச்சரிக்கவே இனிமையாக இருக்கும்.அதனாலேயெ என் பொண்ணுக்கு ஆயிஷா என்ற பழமையான பெயரை வைத்தேன்.

jagadeesh said...

ஒ நீங்க விவசாய கல்லூரி மாணவியா?

Gopi Ramamoorthy said...

நல்ல பதிவு சிஸ்டர்.

நிச்சயமா காலேஜ் ஒருவாட்டி போய் வாங்க. நான் பதினேழு வருஷம் கழிச்சுப் போன வருஷம் பள்ளிக்கூடம் போயிட்டு வந்து அந்த அனுபவங்களை யார்க்கிட்டயாவது பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும் என்று சொல்லித்தான் பதிவெழுதவே ஆரம்பித்தேன்.

angelin said...

from morning i was dull .
ungal padhivai paditha pin siri siri endru siritheen.
asiya is a lovely name.
i enjoyed this post

எம் அப்துல் காதர் said...

இது நல்லா இருக்கே. அருமையா சொல்லிட்டீங்களே டீச்சர். ம்ம்ம் இப்படி தானிருக்கணும் என்று ஒரு அடையாக் குறிப்பை இனி படிக்கப் போகும் பிள்ளைகளுக்கு சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்!!

எம் அப்துல் காதர் said...

(நானும் சின்னதா கலாய்சுக்கிறேன்
:-)))

// வேளான்மை கல்லுரி மாணவியா? அப்ப குறுவை சாகுபடி பற்றி ஒரு பதிவு போடலாமே.//

ஏன் நீங்க படிக்கும் போது IR-8 , பொன்னி, எல்லாம் கிடையாதா? அப்ப அதையும்... ஹி..ஹி

ஏலேலோ ஐலசா.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா... பள்ளி,கல்லூரி நினைவுகள் நிச்சயம் எல்லோர் வாழ்விலும் மறக்கமுடியாத ஒன்று.அதிலும் இது போன்ற நினைவுகள் அப்போது கஷ்ட்டமாக இருந்தாலும்,இப்ப நினைக்கும் போது உங்களையும் மறந்து சிரிக்கதோணும் இல்லையா...?
எனக்கு கல்லூரி அனுபவம் இல்லாததால் உங்களை போன்றவர்களின் கல்லூரி நினைவலைகளை மிகவும் ரசிப்பேன்.:-)

அன்புடன்,
அப்சரா.

asiya omar said...

காயத்ரி
கோவை2தில்லி
ஆமினா
ஸாதிகா
ஜெகதீஸ்
கோபி ராமமூர்த்தி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

பசுமையான நினைவுகள் அனைத்தும.

இப்பவும் நிறை மாணவ,மாணவிகளுக்கு
இருக்கு. இந்த பெயர் பிரச்சனை.

asiya omar said...

ஹா ஹா ஏஞ்சலின்,நல்லா சிரிச்சீங்களா?மிக்க சந்தோஷம்.

சகோ.அப்துல் காதர் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

S.Menaga said...

அக்கா படிச்சு ஒரே சிரிப்புதான் போங்க..... இன்னிக்கு என்னை ரொம்ப சிரிக்கவச்சிட்டீங்க...தலைப்பே சூப்பராயிருக்கு..

savitha ramesh said...

first time veru oruvar blog - a unga pera paarthu naanum konjam kuzhambinen.but now after reading all the probs u have faced.....paavam neengal...malarum ninaivugal

Kanchana Radhakrishnan said...

பசுமையான நினைவுகள்.thanks for sharing.

Mahi said...

செம காமெடி ஆசியாக்கா! முதலில் உங்க பெயரைக் கேள்விப்பட்டபோது வித்யாசமாதான் இருந்தது..ஆனா உங்க ஆசிரியர்கள் மாதிரி நான் பெயரை கொலை பண்ணலை! :)

மலரும் நினைவுகளுக்கு போயிட்டு வந்துட்டீங்க.எப்ப கோவை போறீங்கன்னு சொல்லுங்க..டைம் ஒத்துவந்தா சந்திக்கலாம்! ;)

Krishnaveni said...

super comedy, but i know your feelings madam, me too from tnau

asiya omar said...

அப்சரா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

ஆயிஷா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

asiya omar said...

மிக்க நன்றி மேனகா.

சவிதா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

காஞ்சனா மிக்க நன்றி.

மகி இன்னும் ஆறேழு மாதம் இருக்கே.எல்லாரும் சிரிச்சது மகிழ்ச்சி.

கிருஷ்ணவேணி,மிக்க நன்றி.நீங்களும் அங்கு படித்தது அறிந்து மகிழ்ச்சி.என்ன இருந்தாலும் நம்ம கேம்பஸ் நம்ம கேம்பஸ் தான்.

இளம் தூயவன் said...

உங்கள் கல்லூரியில் நடந்த நிகழ்வுகளை, நல்ல நகைச்சுவையுடன் கூறியுள்ளிர்கள்.

mahavijay said...

எனக்கும் என்னோட பெயர் பிடிக்காது
காரணம் நான் படிச்சது முஸ்லீம் school
அந்த school ல என்னோட பெயர் வித்யாசமா தெரியும்

காமெடியா எழுதி இருக்கீங்க...

GEETHA ACHAL said...

ஒரு பேருக்கு பின்னாடி இவ்வளவு பிரச்சைனையா...பாவம் தான் நீங்க...

தப்பாக நினைக்காதிங்க...நானும் கூட முதன்முதலில் உங்கள் பெயரினை படிக்கும் பொழுது ஆசியா- Asia...என்று தான் நினைத்து கொண்டேன்..இப்படி கூட பெயர் இருக்கின்றதே என்று ஆச்சரியம்...அப்பறம் தான் தெரிந்தது.......

asiya omar said...

நன்றி கீதா ஆச்சல் நீங்க நினைச்ச மாதிரி இன்னும் நிறைய பேர் இருப்பாங்கன்னு தான் இந்த போஸ்டிங்கே,வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

இளம் தூயவன்

மஹாவிஜய்.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கோமதி அரசு said...

பலகலை கழகத்தை விரைவில் பார்க்க வாழ்த்துக்கள்.

Noorul said...

ஓ... அக்கா நீங்க Agree பண்ணிருக்கீங்களா? Super super, but சமையள்ள பட்டய கிளப்புறீங்க!!
எனக்கும் இந்த பேர் பிரச்சனை உண்டு...... ஹாங்காங் இமிக்ரேஷன்ல Resident ID வாங்க காத்திருந்த போது என்னை (Something sounds like..) நுயுருல் எலின (Nurul Alina) ணு கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்துவிட்டு நான் போகததால் அடுத்த ஆளை கூப்பிட்டு விட்டார்கள். (I was waiting for a looong time and somehow realized later)3

asiya omar said...

கோமதியரசு வருகைக்கு மிக்க நன்றி..


நூருல் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி..

Noorul said...

Oh! Noooooooo, its not my first comment!!!
"நூருல் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.."
Again you are wrong, நாமெல்லாம் daily attendance போட்டுருவோம்ல‌!!

asiya omar said...

நூருல் நீங்க யாருன்னு எனக்கு தெரியலயே!எனக்கு கொஞ்சம் நியாபக மறதி ஜாஸ்தி.என்றாலும் உங்க வருகைக்கு மகிழ்ச்சி.

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா - பள்ளி கல்லூரியில் தங்கள் பெயர் பட்ட பாடு .... ஆகா மலரும் நினைவுகளாய் இஙக எழுதிட்டீங்க - பலே பலே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

yathavan nambi said...


அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (16/06/2015)
தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE