Saturday, January 22, 2011

பெல்பெப்பர் கார்லிக் ஃபிஷ்

தேவையான பொருட்கள்;
ஹமூர் ஃபில்லட் அல்லது முள்ளில்லாத மீன் - அரைகிலோ
கொடைமிளகாய் வெரைட்டியாக - 100கிராம்
வெங்காயம்-1
பூண்டு- 5பல்
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1டீஸ்பூன்
முட்டை-1
கார்ன் ஃப்லொர்-1டேபிள்ஸ்பூன்
மைதா- 1டேபிள்ஸ்பூன்
பெப்பர் பவுடர்-அரைஸ்பூன்
எண்ணெய்- 4டேபிள்ஸ்பூன்
டொமட்டோ சாஸ்-1டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ்-1டேபிள்ஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் -சிறிது
உப்பு -தேவைக்கு
முதலில் கொடைமிள்காய் வெங்காயத்தை சதுரமாக இப்படி கட் செய்து கொள்ளவும்.பூண்டையும்,வெங்காயத்தாளையும் பொடியாக நறுக்கவும்.

ஒரு பவுலில் முட்டை,கார்ன்ஃப்லோர்,மைதா,பெப்பர்,இஞ்சிபூண்டு,உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.


ரெடி செய்த கலவையில் கட் செய்து சுத்தம் செய்து கழுவிய மீன் துண்டுகளை ஊற வைக்கவும்.
பின்பு மீனை பொரித்து எடுக்கவும்.
அதே வாணலியில் வெங்காயம்,நறுக்கிய பூண்டு போட்டு வதக்கவும்.

கொடைமிளகாய் சேர்த்து வதக்கி சோயா சாஸ்,டொமட்டோ சாஸ் சேர்க்கவும்.


ஒரு கப் தண்ணீர் சேர்த்து கிளறவும்.மீன் துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.சிறிது எல்லாம் சேர்ந்து கொதி வரவும்,சிம்மில் வைத்து
அடுப்பை அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும். கட் செய்த வெங்காயத்தாள் தூவி அலங்கரித்து இறக்கவும்.
சுவையான பெல்பெப்பர் கார்லிக் ஃபிஷ் ரெடி.இது நாண், சப்பாத்தி,ரொட்டிக்கு தொட்டு சாப்பிடலாம்.
பின் குறிப்பு:
இதில் நான் கிங் ஃபிஷ் உபயோகித்துள்ளேன்.ஹமூரில் செய்தாலும் அருமையாக இருக்கும்.நாங்கள் ரெஸ்ட்டாரண்டில் சாப்பிட்ட ஒரு டிஷ் இது,இதனை வீட்டில் முயற்சி செய்து பார்த்தேன். அதே டேஸ்ட்டில் அருமையாக வந்தது.
--ஆசியா உமர்.


29 comments:

Gopi Ramamoorthy said...

முள் இல்லாத மீன். குடைமிளகாய். ரெண்டுமே பிடிக்கும் எனக்கு!

ஆனந்தி.. said...

Me is vegetarian:((((

savitha ramesh said...

miga arumai......nandraga ulladhu......seidhu paarkiren

asiya omar said...

கோபி வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

ஆனந்தி எனக்கும் வெஜிடேரியனாக மாற ஆசை தான்,ஆனால் முடியலையே.

asiya omar said...

சவிதா செய்து பாருங்க,நல்லாயிருக்கும்.மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

வித்தியாசமாக சமைத்து இருக்கிங்க ஆசியா.

Kousalya said...

நல்ல பசி தோழி...அதை நீங்க வேற ஜாஸ்தி பண்ணிடீங்க...

இந்த முறை கொஞ்சம் வித்தியாசம் தான்...முயற்சி செய்து பார்த்திட்டு டேஸ்ட் எப்படினு சொல்றேன்...

Mahi said...

வித்யாசமா இருக்கு ஆசியாக்கா! சர்வ் பண்ணிருப்பதும் மீன் வடிவிலான தட்டோ?:)

asiya omar said...

ஸாதிகா என் மகனுக்கு ஏதாவது பிடிச்சால் வீட்டில் செய்து கொடுப்பேன்.அப்படி முயற்சி செய்தது தான் இது,நமக்கு என்னன்னு இருக்கு,பிள்ளைங்க விருப்பம் அதுவும் சின்ன வயசு வரை தான் இப்படி வெரைட்டி கேட்பாங்க,அப்புறம் நார்மல் சாப்பாட்டிற்கு வந்திடுவாங்க.அதனால முடிஞ்சதை செய்து கொடுப்பது வழக்கம்.

asiya omar said...

கௌசல்யா வருகைக்கு மிக்க நன்றி.

ஆமாம் மகி இந்த ப்ளேட் எப்பவோ வாங்கியது,பொதுவாக நாங்களாக சாப்பிடும் பொழுது குக் & சர்வ் தான் ,அப்படியே டேபிளில் வைத்து சாப்பிடுவது வழக்கம்,இங்க கொஞ்சம் ஃபிலிம் காட்ட வேண்டியது இருக்கே.

Chitra said...

இதே போல ரெசிபியை சிக்கன் வைத்து செய்து பார்த்து இருக்கிறேன். மீன் வைத்து இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.

Chitra said...

asiya omar said...

ஆனந்தி எனக்கும் வெஜிடேரியனாக மாற ஆசை தான்,ஆனால் முடியலையே.


.....அப்படியெல்லாம் தப்பி தவறி கட்சி மாறிடாதீங்க......ஹா,ஹா,ஹா,ஹா....

revathi said...

this is wonderful.... I am going to try this right away....looks lovely and tempting...
Reva

எம் அப்துல் காதர் said...

ஆஹா எனக்கு இது ரொம்ப பிடிக்கும்.

athira said...

சூப்பர் ஐலஷா... சே..சே..ஆர்யா... சே..சே... ஆசியா.. அப்பாடா இப்பத்தான் கரீட்டு:).

பெப்பரிலயே நல்ல நல்ல வெரைட்டி எல்லாம் பண்ணுறீங்க, மீன் பொரித்த முறையும் புதிதாக இருக்கு. முட்டையையும் மீனையும் சும்மா தந்தாலே சாப்பிடலாம், இது இப்படியெல்லாம் அலங்கரித்தால் சொல்லவா வேண்டும்.

இளம் தூயவன் said...

ஆஹா ஆஹா எல்லாம் நமக்கு பிடித்தவை.

Anonymous said...

முதல்ல உங்க சுறுசுறுப்பு புடிச்சிருக்கு..
அப்புறம் உங்க சமையல் ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு..
விருதத்தோட ப்ளாக் பக்கம் வந்துடேன்
ரொம்ப பசிய கிளப்பது இந்த மீன்:((

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

வித்தியாசமாக இருக்கு.

ஆமினா said...

கலர்புல்லான போட்டோ...

அழகான ரெசிபி

asiya omar said...

சித்ரா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

நன்றி ரேவதி.செய்து பாருங்க அருமையாக இருக்கும்.

asiya omar said...

சகோ.அப்துல் காதர்

சகோ.இளம் தூயவன்

இருவரும் ஆஹான்னு கருத்து சொன்னமைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

அதிரா வாங்கோ,பழையபடி உங்க ப்ளாக் களை கட்ட ஆரம்பிச்சிடுச்சே,மிக்க நன்றிமா.

asiya omar said...

மஹா விஜய்

ஆயிஷா

ஆமினா

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

எல் கே said...

//Me is vegetarian:((((//

repeatttu

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா....
பார்க்கும் போதே சுவை எவ்வளவு சூப்பராக இருக்கும்னு தெரியுது.சிக்கனில்தான் இது போல் செய்ததுண்டு.நீங்கள் ஃபிஷ்ஷில் செய்து இருப்பது வித்தியாசமாக உள்ளது.
வாழ்த்துக்கள் ஆசியா அக்கா...

அன்புடன்,
அப்சரா.

asiya omar said...

எல்.கே

அப்சரா

வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.

vanathy said...

super recipe, akka.

asiya omar said...

thanks vanathy.