Sunday, January 23, 2011

காளிப்ளவர் தண்டு கூட்டு - பட்டான் ரொட்டி

தேவையான பொருட்கள்;
காளிப்ளவர் தண்டு இலையுடன் - இரண்டு கைபிடி
து.பருப்பு அல்லது பாசிபருப்பு - ஒரு கைபிடி
வெங்காயம்- 1
பூண்டு- 2பல்
மஞ்சள் தூள்- கால்ஸ்பூன்
சீரகத்தூள்- கால்ஸ்பூன்
மிளகாய்தூள்- கால்ஸ்பூன்
எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு- 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல்- 1
மல்லி,கருவேப்பிலை -சிறிது
தேங்காய்துருவல்- விரும்பினால்
உப்பு - தேவைக்கு


காளிப்ளவர் வாங்கும் பொழுது இளம் தண்டு இலையுடன் இருந்தால் துக்கி போடாமல் இப்படி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நன்கு அல்சி எடுத்து கொள்ளவும்,பருப்பு ஊற வைக்கவும்,பூண்டு,வெங்காயம் நறுக்கி கொள்ளவும்.சேர்க்காமலும் செய்யலாம்.

குக்கரில் ஊறிய பருப்பு,நறுக்கிய தண்டு,குறிப்பிட்ட மசாலா வகை,பாதி வெங்காயம்,பூண்டு போட்டு தேவைக்கு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கவும்.

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் மீதி பாதி வெங்காயம் வதக்கி வேக வைத்த பருப்பு தண்டு கூட்டை சேர்த்து உப்பு சிறிது சேர்க்கவும்.விரும்பினால் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.நறுக்கிய மல்லி இலை தூவவும்.

சுவையான காளிப்ளவர் தண்டு கூட்டு ரெடி.இதனை சப்பாத்தி,சாதமுடன் பரிமாறலாம்.
தந்தூரி ரொட்டி
இது நான் சுட்டது இல்லைங்க.எங்க வீட்டு பக்கத்தில் ரொட்டி ஷாப் இருக்கு,வாரம் இருமுறை நிச்சயம் இந்த ரொட்டி உண்டு,மற்ற நேரம் போனா போகுதுன்னு நானே சுட்டு விடுவேன்.எனக்கு யு.ஏ.இ யில் பிடித்தமான ஒன்று இந்த ரொட்டி.இதனை என் பிள்ளங்க பட்டான் ரொட்டின்னு சொல்லுவாங்க,பாகிஸ்தானிய பட்டான்ஸ் 3நேரமும் இந்த ரொட்டி தான் சாப்பிட வாங்குவாங்க.அவங்க அல்லது அஃப்கானிஸ்தான் மக்கள் தான் இந்த ரொட்டியை சுடுவாங்க.நான் வந்த புதிதில் 50ஃபில்ஸ் ஆக இருந்தது இப்ப 1திர்ஹம் ஆகிவிட்டது.ஆனாலும் ஹெல்தி ரொட்டி,வெறும் உப்பு,மாவு தண்ணீர் மட்டும் சேர்த்து பிசைந்து சாஃப்ட்டாக ரொட்டி யார் சுட்டு தருவாங்க.
எவ்வளவு பெரிசு பார்த்தீங்களா?

நான்காக மடித்து வைத்திருக்கிறேன்.
மதியம் வாங்கினால் இரவிற்கும் டிஃபன் கவலை இல்லை,ஏதாவது கிரேவி,சப்ஜி இருந்தால் என் வீட்டில் விருப்பமாக சாப்பிடுவார்கள்,என் பிள்ளைகளுக்கு மதியம் கூட ரைஸ் கொடுக்காமல் இந்த ரொட்டி கொடுத்தால் போதும்,அவ்வளவு விருப்பம்.காளிப்ளவர் ஃப்ரை,கூட்டு,ரொட்டி,சாதம்,ரசம் , பப்பட்,பிக்கிள்,தயிர் இதுவே சூப்பராக இருக்கும்.

நிறைய பேர் இந்த காளிப்ளவர் இலையை தூக்கி போடுவாங்க,ஒரு முறை செய்து பாருங்க,அருமையாக இருக்கும்.சத்தானதும் கூட.
--ஆசியா உமர்.

43 comments:

கோமதி அரசு said...

காளிப்ளவர் தண்டு கூட்டு அருமை.
பட்டான் சப்பாத்தி பகிர்வுக்கு நன்றி.

asiya omar said...

நன்றி கோமதி.வருகைக்கு மகிழ்ச்சி.

எல் கே said...

புதுசா இருக்கே

சே.குமார் said...

படங்களுடன் விளக்கம் அருமை.... சப்பாத்தியும் அருமை.

asiya omar said...

எல்.கே. சாதாரண கூட்டு தான் .வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

வாங்க,சகோ.குமார் கருத்திற்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

//இந்த காளிப்ளவர் இலையை தூக்கி போடுவாங்க//

நானும்:)! அவசியம் செய்து பார்க்கிறேன். நன்றி ஆசியா.

சிநேகிதன் அக்பர் said...

வேஸ்ட்டை டேஸ்டாக்குறீங்களே :)

நல்லாயிருக்கு.

Chitra said...

சூப்பராக இருக்குதே.

athira said...

நல்லதொரு கூட்டு.
அந்த ரொட்டியை பார்க்க பெரிதாக விளங்கவில்லை, பின்பு மடித்து வைத்திருக்கும்போது பார்க்கத்தான் தெரியுது எந்தாப்பெரிய ரொட்டி.

ஸாதிகா said...

வேஸ்டில் கூட்டு செய்து அசத்திட்டீங்க தோழி.நான் உங்கள் இல்லம் வந்திருந்த பொழுது இதே பட்டான் ரொட்டியை ஏகப்பட்ட சைட் டிஷ்களுடன் நீங்கள் பறிமாறிய இனிய நினைவுகள் இன்னும் மனதினை விட்டு நீங்காமல் உள்ளது.

apsara-illam said...

காலிஃப்ளவர் தண்டில் இப்படி ஒரு அருமையான சத்துள்ள டிஷ் செய்ய முடியும் என்று செய்து காட்டி இருக்கீங்க.... இனி வேஸ்ட் பண்ண மாட்டோமுல்ல...

அன்புடன்,
அப்சரா.

வெங்கட் நாகராஜ் said...

பெரும்பாலும் காலிஃபிளவர் இலையை/தண்டை தூக்கி எறிந்து விடுகின்றனர். அதை வைத்து ஒரு வித்தியாசமான கூட்டு! இது போலவே முள்ளங்கிக் கீரையைக் கூட தூக்கி எறியாமல் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள சப்ஜி செய்யலாம். நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ.

asiya omar said...

ராமலஷ்மி
அக்பர்
சித்ரா
அதிரா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஸாதிகா,நீங்க அவசரமாக வந்த அரைமணி நேரத்தில் என்னால் எதுவும் செய்ய முடியலை,அதனால் தான் இது,இல்லாட்டி பெரிய விருந்தே ஏற்பாடு செய்திருப்பேன்,தோழி.நீங்க வந்து சென்றதே பெரிய மகிழ்ச்சி.

asiya omar said...

அப்சரா வருகைக்கு மிக்க நன்றி,ஆகா உங்க ப்ளாக்கில் சமையல் குறிப்புகள் அசத்தலாக இருக்கே.

asiya omar said...

வெங்கட் நாகராஜ் நானும் முள்ளங்கி இலையை வேஸ்ட் செய்ததில்லை சகோ.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

பலே பிரபு said...

பாக்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு.

வலைப்பூவுக்கு வந்தா குண்டு போடுறீங்க.

மனோ சாமிநாதன் said...

காலிஃபிளவர் தண்டு கறி அருமை ஆசியா! நம் பக்கத்து ரொட்டியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்!! அதைப்பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது!

Gopi Ramamoorthy said...

நாங்களும் இலையை வேஸ்ட் பண்ண மாட்டோமே:-)

அமைதிச்சாரல் said...

இளந்தண்டா இருந்தா நார்த் இண்டியன் கறிகளிலோ, பொரியலிலோ சேர்ப்பது வழக்கம்தான்.. ஆனாலும், இலையையும் சேர்த்து கூட்டு புதுசா இருக்கு.

asiya omar said...

பலே பிரபு குண்டல்ல அது பலூன் பறக்க விட்டிருந்தேன்,இப்ப மாத்தியாச்சு.வருகைக்கு நன்றி.

asiya omar said...

மனோ அக்கா,வருகைக்கு மகிழ்ச்சி.ஆமாம் எங்க வீட்டில் இந்த ரொட்டி ரெகுலராக உண்டு.கருத்திற்கு நன்றி அக்கா.

asiya omar said...

குட் கோபி,கருத்திற்கு மகிழ்ச்சி.

அமைதிச்சாரல் நான் இந்த முறை வாங்கிய காளிப்ளவரில் இலையும் பார்க்க அழகாக இருந்தது,அதனால் தான் கூட்டு,இளந்தண்டை மற்றபடி குருமாவில் போடுவதுண்டு.
வருகைக்கு மகிழ்ச்சி.

Kanchana Radhakrishnan said...

காளிப்ளவர் தண்டு கூட்டு அருமை.

S.Menaga said...

நானும் இளந்தண்டாக இருந்தால் இலையுடன் சமைப்பேன்,ரொட்டியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்..சூப்பர்ர்!!

ஆயிஷா அபுல் said...

வேஸ்டில் கூட்டு செய்து அசத்திட்டீங்க.

விளக்கம் அருமை.

asiya omar said...

காஞ்சனா

மேனகா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் said...

கொஞ்சம் வித்தியாசமாக அருமையாக உள்ளது.

FARHAN said...

செஞ்சி பார்த்திட வேண்டியது


நான் 200 வது பாலோவர் சிறப்பு பரிசாக சமையல் குறிப்புகள் அனுப்பி வையுங்க

savitha ramesh said...

ovvoru um bomurayum,ungal pakkam varum bodhu ,niraya katru kolgiren...mikka nandri....arumayana sabzi

asiya omar said...

ஆயிஷா அபுல் மிக்க நன்றி.

இளம் தூயவன் வருகைக்கு நன்றி.

asiya omar said...

ஃபர்ஹான் முதல் வருகைக்கும் தொடர்ந்ததற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.சிறப்பு பரிசு தானே அனுப்பிட்டா போச்சு.

asiya omar said...

சவீதா உங்க சமையலும் அருமையாக இருக்கு.கருத்திற்கு மகிழ்ச்சி.

ஆனந்தி.. said...

காலி பிளவர் தண்டு வச்சு கூட்டா...பிரமாதம்..அது ஸ்மெல் அடிக்கும்னு தூக்கி போட்ருவேன்:( ..நல்லா யோசிசிருக்கிங்க ஆசியா..வெரி குட்...

asiya omar said...

ஆனந்தி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.இளந்தண்டாக இருந்தால் அருமையாக இருக்கும்.

கோவை2தில்லி said...

தண்டை நானும் சப்ஜி செய்யும் போது சேர்ப்பதுண்டு. ஆனால் இலையில் இது வித்தியாசமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

asiya omar said...

கோவை2தில்லி வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.

vanathy said...

அருமையா இருக்கு ரெசிப்பி & ரொட்டி.

Jaleela Kamal said...

paravaayilla viiddu pakkaththileeyee kadai

en paiyanukku intha periya rotti rompa pidikkum

jayanthi said...

ஆசியா நல்லா இருக்கீங்களா? வீட்டில் எல்லோரும் நலமா? நேற்றுதான் காலிப்ளவர் தண்டுகளை தூக்கிப் போட்டேன்.
எதையோ நெட்டில் தேடும்போது உங்கள் ப்ளாக்கைப் பார்த்தேன். எல்லோரும் ப்ளாக்குகளில் கலக்கிக்கொண்டிருக்கீங்க.
வாழ்த்துக்கள் ஆசியா

asiya omar said...

ஜெயந்தி உங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.எனக்கு ஜெயந்தி மாமின்னு அறுசுவையில் பழக்கம்,அவங்க தானா, நீங்க?கருத்திற்கு மிக்க நன்றி.

jayanthi said...

நான் நான் நானேதான் ஆசியா.