Monday, January 24, 2011

முட்டை பூந்தி,பாம்பே பன் டோஸ்ட்

தேவையான பொருட்கள்:
முட்டை -2
சீனி -4 டேபிள்ஸ்பூன்
பசும் பால் - 50 மில்லி
முந்திரி,கிஸ்மிஸ் -சிறிது விரும்பினால்
நெய்- 1 டேபிள்ஸ்பூன்

முதலில் பாலை காய்ச்சி வெது வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது அதில் சீனி போட்டு கரைத்து அத்துடன் முட்டை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.



ஒரு பேனில் நெய் விட்டு காயவும் அடித்த முட்டை கலவையை விடவும்.



நன்கு இப்படி திரண்டு வருமாறு கிளறவும்.அடுப்பை குறைக்கவும்.



சிவறக்கூடாது,இப்படி மணி மணியாக வரவேண்டும்,கலர் மஞ்சள் கரு கலரில் வரும்,பால் முழுவதும் முட்டை உள் வாங்கி பஞ்சி போல் இருக்கும்.அடுப்பை அணைக்கவும்.



சுவையான முட்டை பூந்தி ரெடி.விரும்பினால் முந்திரி திராட்சை வறுத்து அலங்கரிக்கலாம்.இதனை அப்படியே ஸ்வீட் போலவும் சாப்பிடலாம்.முட்டை வாடை சுத்தமாக இருக்காது.


இதனை பரோட்டா,இடியப்பம்,ப்ரெட்டுக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

பாம்பே பன் டோஸ்ட்

தேவையான பொருட்கள்;

பன் -2

முட்டை-2
பால்- அரை கப்

சீனி-6டேபிள்ஸ்பூன்

எண்ணெய் நெய் கலவை- 3டேபிள்ஸ்பூன்


பொதுவாக இந்த டோஸ்ட்டை ப்ரெட்டில் செய்வோம்,இதனை பன்னில் செய்து பாருங்க,அப்படியே ஜுஸியாக இருக்கும்.இப்படி பன்னை கட் செய்து வைக்கவும்.லாங் பன் அல்லது ரவுண்ட் பன் எதுவானாலும் சரி.


முட்டை பால் சீனி சேர்த்து அடித்து வைக்கவும்.


இப்படி பன்னை முழுவதும் ஊறுவது போல் டிப் செய்யவும்.




தோசைக்கலத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பன்னை போடவும்.லேசாக சிவறவும்,திருப்பி போடவும்.


கரிந்து விடாமல் இப்படி பொரித்து எடுக்கவும்.பேனிலேயே எடுத்த பின்பு விட்ட எண்ணெய் நெய் இருக்கும் அத்துடன் தேவையானால் சிறிது எண்ணெய் நெய் சேர்த்து மீண்டும் இதே போல் இருக்கும் பன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்.


சுவையான பாம்பே பன் டோஸ்ட் ரெடி.நான் இங்கு பசும்பால் சேர்த்து இருக்கேன்,எங்க ஊரில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வாங்க.


இந்த இரண்டு ரெசிப்பியும் சின்ன குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க,பன்னில் செய்து கொடுத்து பாருங்க.அடிக்கடி செய்து கேட்பாங்க.


-ஆசியா உமர்.

33 comments:

coolblogger said...

Looks yumm.

asiya omar said...

கூல் ப்ளாகர் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

ஸாதிகா said...

ஆஹா..தோழி புதுசு புதுசா சமைக்கறதுக்கு எப்படிஎல்லாம் யோசிக்கறீங்க!சூப்பர் பிரேக் பாஸ்ட்.

அமைதிச்சாரல் said...

முட்டை பூந்தி அழகாருக்கு..

பன் டோஸ்ட், ப்ரெட்டில் செஞ்சு பசங்களுக்கு டப்பாவில் கொடுத்தனுப்பியது ஞாபகம் வருது :-))))

எல் கே said...

present :)

Chitra said...

முதலாவது புதிய ஐட்டம். கேள்விப்பட்டது இல்லை. ரெசிபிக்கு நன்றி.
இரண்டாவது ஐட்டம் - ஊரில் அடிக்கடி மாலை நேரம் snack ஆக கொடுப்பாங்க.... ரொம்ப பிடிக்கும். நன்றி.

மகி said...

2 ரெசிப்பியும் புதுசு..பார்க்கவே சூப்பரா இருக்கு ஆசியாக்கா! :P :P

சசிகுமார் said...

காலையிலேயே ஸ்வீட்டா நன்றிக்கா

பயணமும் எண்ணங்களும் said...

முட்டை பூந்தி புதுசா இருக்கே.. நன்றிங்க

asiya omar said...

ஸாதிகா இது புதுசு இல்லை,எங்க ஊரில் வழமையாக எல்லாரும் செய்றது தான்.செய்து பாருங்க நல்லாயிருக்கும்.

asiya omar said...

அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

எல்.கே.வருகைக்கு மிக்க நன்றி.

asiya omar said...

ஆமாம் சித்ரா இந்த பன் டோஸ்ட் நம்ம நெல்லை பன்னில் செய்யும் பொழுது அவ்வளவு ருசியாக இருக்கும்.

asiya omar said...

மகி.மிக்க நன்றி,உங்களுக்கு பிடிக்கும் செய்து பாருங்க.


சசி குமார் வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

பயணங்களும் எண்ணங்களும் தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.கருத்திற்கு மகிழ்ச்சி.

சே.குமார் said...

ஆஹா...
ஆஹா...
ஆஹா...
ஆஹா...
ஆஹா...
ஆஹா...

Super..!

Umm Mymoonah said...

Very interesting name, looks very delicious like palkova.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

இரண்டும் செய்து பார்க்கிறேன் நன்றி ஆசியா வித்யாசமா இருக்கு

asiya omar said...

குமார்,ஆஹா,ஆஹான்னு போட்டு தள்ளிட்டீங்க,செய்து பாருங்க சகோ.

asiya omar said...

உம்மைமூனா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.


தேனக்கா வாங்க,மிக்க மகிழ்ச்சி..செய்து பாருங்க,ஈசி ரெசிப்பி தான்...

vanathy said...

சூப்பரோ சூப்பர். படங்கள் அழகு.

ஆயிஷா said...

முட்டை பூந்தி,பாம்பே பன் டோஸ்ட்
2 ரெசிப்பியும்
பார்க்கவே சூப்பரா இருக்கு.

S.Menaga said...

ஆஹா 2 ரெசியும் செம சூப்பர்ர்!!

Riyas said...

நீண்ட நாளைக்குப்பின்.. சுகம்தானே தமிழ்மனம் விருதுக்கு வாழ்த்துக்கள்

asiya omar said...

வானதி

ஆயிஷா

மேனகா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

ரியாஸ் நலமா?நினைவோடு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா... முதல் ரெஸிபி எனது தோழி செய்து நான் இரண்டு மூன்று முறை சாப்பிட்டு இருக்கேன்.ஆரஞ்சு கலர் பவுடர் சேர்த்து செய்வாங்க... அதனால் எனக்கு இதன் டேஸ்ட் தெரியும்.மிகவும் அருமையாக இருக்கும்.
இரண்டாவது குறிப்பு நான் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் குறிப்பு.
இந்த குறிப்புகள் குழந்தைகளுக்கு பிடிக்குதோ இல்லையோ என்னை போல் இனிப்பு விரும்பிகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

எம் அப்துல் காதர் said...

இது எது மாதிரியாவும் இல்லாம புது மாதிரியா இருக்கு!! சமைத்து அசத்தலாம்ன்னு பேர வச்சுக்கிட்டு புதுமையாவும் யோசித்து அசத்து வதிலும் நீங்க கில்லாடிதான் டீச்சர்.

mahavijay said...

wow superb..
romba easy ya eruku
boonthi ippo thaan theriyum
try pannanum

இளம் தூயவன் said...

சூப்பரோ சூப்பர்.

Jaleela Kamal said...

muttai bunthi girls nallathu,.

bombay toast naan adikkadi seyvahtu thaan

asiya omar said...

அப்சரா
சகோ.அப்துல் காதர்
மஹாவிஜய்
சகோ.இளம்தூயவன்
ஜலீலா
வருகைக்கும் கருத்திற்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.

அன்னு said...

சூப்பர் ரெசிபி ஆஸியாக்கா. மோத்தி சூர் லட்டு மாதிரி மென்மையா, இனிப்பா, அழகாவும் அருமையாவும் இருந்தது, இனி அடிக்கடி செய்ய வேண்டியதுதேன்.

asiya omar said...

அன்னு நலமா?உனக்கு பிடிச்சிருக்கா?மிக்க மகிழ்ச்சி.அவசரத்திற்கு செய்து அசத்தலாம்.