Wednesday, January 26, 2011

வியத்தகு இந்தியா


நேற்று பக்கத்தில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் போனால் Incredible India – Festival of India

ஏகப்பட்ட சமாச்சாரம் நம்ம சமையல் ப்ளாக் அதில் என்ன போடுறதுன்னு நினைச்சேன். ஒரு இடத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுச்சு, போய் பார்த்தால் கிட்ட தட்ட எல்லா மாநிலவாரியாகவும் பிரியாணி போட்டு வச்சிருந்தாங்க.. உடனே நம்ம கேமரா(மொபைல்) விழித்து கொண்டது.. 24 வகை பிரியாணி, தமிழ் நாடு – காஷ்மீர்.

ஆஹா இங்கேயும் சமைத்து அசத்திருக்காங்கன்னு கிளிக்க ஆரம்பிச்சேன்


தமிழ்நாடு -வான்கோழி பிரியாணிக்கு பிரசித்தமாம்.
கேரளா கிங் ஃபிஷ் பிரியாணி
மஹாராஸ்ட்ரா மட்டன் பிரியாணி
சட்டீஸ்கர் -குயில் பிரியாணி
மேற்கு வங்காளம் -மீன் பிரியாணி
நாகலாந்து - பீஃப் பிரியாணி
திரிபுரா- இறால் பிரியாணி
காஷ்மீர் - வெஜிடபிள் பிரியாணி.24வகையும் படம் பிடிக்க முடியலை,28மாநிலமாச்சே,மீதி 4எங்கேன்னு யார் கிட்ட கேட்க..
அட இங்க பாருங்க,மால் நடுவில் பெரிய தோசைகல்லை வைத்து மசால் தோசை சுட்டு கொடுக்கிறாங்க,குடியரசு தினத்தை எப்படில்லாம் கொண்டாடுறாங்கபா..
இத்தனை போட்டோ எடுத்துட்டு ஏதாவது வாங்காம வருவதான்னு நம்ம தமிழ்நாட்டு வான்கோழி பிரியாணி வாங்கிட்டு வந்தோம்..செம டேஸ்ட் ருசி பார்த்தாச்சுல்ல,இனி சமைக்கனும்,ஆனால் இங்க ஒரு கிலோவில் வான்கோழி கிடைக்கமாட்டேங்குதே!
திரும்பி வரும் பொழுது பார்த்தால் ஏகப்பட்ட லட்டு, ஜாங்கிரி.. இன்று குடியரசு தினம்,நாம லட்டாவது கொடுக்கலாம்னு நினைச்சு இந்த படம்.


குடியரசு தின வாழ்த்துக்கள்..--ஆசியா உமர்.


40 comments:

எல் கே said...

குடியரசு தின வாழ்த்துக்கள். லட்டு மட்டும் எடுத்துக்கறேன்

Pushpa said...

Mouthwatering biryanis.Too good.

புவனேஸ்வரி ராமநாதன் said...

குயில் பிரியாணியா? சாப்பிட்டா குரல் இனிமையா இருக்குமோ.

Krishnaveni said...

Happy Republic day, delicious foods

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..குடியரசு தின வாழ்த்துக்கள்ஸ்..

எப்பா எவ்ளோ பிரியாணி...

குயில் வேரையா???..காக்கா பிரியாணியா இருக்கப்போவுது...இத சாப்டா குயில் மாரி குரல் வருமா??

அன்புடன்
ரஜின்

asiya omar said...

எல்.கே.

புஷ்பா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

புவனா காடை பிரியாணியை தான் குயில் என்று எழுதிருக்காங்க..

கிருஷ்ணவேணி மிக்க நன்றி..

ரஜின் 24 வகை பிரியாணி விட்டா ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து டேஸ்ட் பார்த்திருப்பேன்.ஒரே கமகம்ன்னு மணம் வேற..

ஸாதிகா said...

ஆஆ..தோழி இப்படி பிரியாணி படம் காட்டி நாவூரச்செய்து விட்டீர்களே.படங்களும்,பகிர்வும் சுவாரஸ்யம்.படம் எடுத்தீங்களே.அப்ப உங்க ஆத்துக்காரர் & பிள்ளைகள் அடித்த் கமெண்டையும் சேர்த்து போட்டு இருக்கலாம்.

சே.குமார் said...

அக்கா...
போட்டோவை போட்டு பசியத் தூண்டிட்டிங்களே... நியாயமா?

லட்டு கொடுத்ததுக்காக குடியரசு தின வாழ்த்துக்கள்.

என்ன செய்ய பள்ளிடத்துல முட்டாயி கொடுத்து பழக்கிப்பிட்டாங்க...

அமைதிச்சாரல் said...

இத்தனை வகைகளா!!!

லட்டு டேஸ்டா இருக்கு.

Anonymous said...

HAPPY REPUBLIC DAY ASIYA
SUPERB PHOTOS

அஸ்மா said...

அத்தனையும் அருமை ஆசியாக்கா! துபைல இப்படிலாம் அனுபவிக்கிறீங்க...! இங்கெல்லாம் அதற்கு சான்ஸே இல்ல :( ம்ம்ம்...., நல்லா இருங்க‌! சும்மா பெருமூச்சுதான், வயிற்றெரிச்சலெல்லாம் இல்லபா.. :))

asiya omar said...

ஸாதிகா,பயந்து போய் அட யாருக்கும் தெரியாம எடுத்தேன் ,நானும் அவரும் தான் ஸ்கூல் டேய்ஸ் ல ஷாப்பிங் போற பழக்கம்,இப்படி போட்டோ எடுத்தேன்னு அவர்கிட்ட சொன்னேன்,என் கிட்ட சொன்னால் நான் எல்லாத்தையும் தெளிவாக எடுத்து தந்திருப்பேனேன்னு ஒரு ஷாக் கொடுத்தார் பாருங்க,அசந்துட்டேன்.ஆஹா இனிமேல் சான்ஸ் வராமலா போகும்.

வருகைக்கு நன்றி தோழி.

asiya omar said...

சே.குமார் வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

அமைதிச்சாரல் கருத்திற்கு நன்றி.

மஹா மிக்க நன்றி.

அஸ்மா,கருத்திற்கு மகிழ்ச்சி.வருகைக்கு நன்றி,இன்னும் கர்நாடகா,ஹைத்ராபாத் பிரியாணி மற்றும் அனைத்து மாநில பிரியாணியும் எடுக்காமல் விட்டுட்டேன்,அத்தனை வெரைட்டி,கண்ணாலயாவது பார்க்கலாம்.அஸ்மா இங்கு நம்ம இந்தியாவில் கிடைக்கும் அனைத்தும் அதைவிட நல்ல குவாலிட்டியாக கிடைக்கும்.

Priya Sreeram said...

nice clicks and a Happy Republic Day !

Jaleela Kamal said...

super

font work aakala

S.Menaga said...

ஆஹா விதவிதமான பிரியாணி படங்கள்.அசத்தல்!!

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

படங்களும்,பகிர்வும் அருமை

savitha ramesh said...

padangall arumai...anniya mannil, nam vizhavai kaana kan kodi vendum....
mikka magizhchi...vaazhthukkal

athira said...

ஆசியா.. என்ன வேலை பார்த்திருக்கிறீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர். செய்துகூடப் பார்க்கமுடியாத பிறியாணிப்படமெல்லாம் போட்டுக்காட்டி என் ஆசையை எல்லைமீற வச்சிட்டீங்க... அனைத்துமே சூப்பர். நீங்க என்ன பிரியாணி வாங்கினனீங்க எனச் சொல்லலிலே.

முதன்முதலில் கேள்விப்படுகிறேன் பிரியாணியும் கிலோக் கணக்கில் விற்கப்படுவதை.

இளம் தூயவன் said...

பிரியாணி படங்கள் ரொம்ப அருமையாக உள்ளது .

asiya omar said...

ப்ரியா
ஜலீலா
மேனகா
ஆயிஷா
சவீதா

வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

பசிக்கிற நேரத்தில் இந்த பக்கம் வந்தது தப்பாப்போச்சு. இப்ப கொடூர பசியா மாறிடுச்சு :)

asiya omar said...

அதிரா வாங்கோ,இங்கு ஃபுட் செக்‌ஷனில் எல்லா வெரைட்டியுமே கிலோ கணக்கில் கிடைக்கும்.சமைக்க சோம்பல் பட்டால் பிரியாணி மட்டுமல்ல தேவைக்கு கால்,அரை கிலோ என்று தால்,குருமா,சிக்கன்,மட்டன்,ஃபிஷ்,ரைஸ் என்ன வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம்.
அதிரா நான் பிரியாணி ஃபெஸ்டிவலில் தமிழ்நாடு வான்கோழி பிரியாணி வாங்கினேன்,போட்டோவும் இணைத்து செய்தியும் பதிவில் இருக்கே.

Kanchana Radhakrishnan said...

புகைப்படங்கள் அருமை.

GEETHA ACHAL said...

என்ன இப்படி எல்லாம் படம்பிடித்து காட்டி எங்களுடைய ஆசையினை கிளப்புறிங்க...ரொம்ப மோசம்..

சரி...படங்களை பார்த்து சந்தோசம் பட்டுக்க வேண்டியது தான்...அருமை..

பகிர்வுக்கு நன்றி...

GEETHA ACHAL said...

//குயில் பிரியாணியா? சாப்பிட்டா குரல் இனிமையா இருக்குமோ//அப்படியா....

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

நடப்பன, பறப்பன, ஊர்வன ஒண்ணுமே விடல போல இருக்கு! எல்லாத்திலேயும் பிரியாணி :)

நல்ல பகிர்வுக்கு நன்றி.

சுந்தரா said...

இத்தனை வகை பிரியாணியையும் மொத்தமா காட்டி நாவூற வச்சிட்டீங்க :)

coolblogger said...

The pics make me drool hard.

Me and my thinking cap

Mahi said...

லட்டு சூப்பர்! :P
belated குடியரசு தின வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

மனோ சாமிநாதன் said...

ஆசியா! பிரியாணி வகைகளெல்லாவற்றையும் படம் எடுத்து போட்டது அருமை! அந்த மால் LULU தானா?? குடியரசு தினம் முடிந்ததும் அவற்றையெல்லாம் எடுத்து விட்டார்களா?

asiya omar said...

அக்பர்
இளம் தூயவன்
காஞ்சனா
கீதா ஆச்சல்
வெங்கட் நாகராஜ்
சுந்தரா
கூல் ப்ளாகர்
மகி
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கோவை2தில்லி said...

ஒன்றையுமே விட்டு வைக்கவில்லை போலிருக்கே!!!!!!!!!!!!!
லட்டு மட்டும் எடுத்து கொண்டேன்.

asiya omar said...

மனோ அக்கா,லூலூ ஹைப்பர் மார்க்கெட் தான்,அவையெல்லாம் விற்பனைக்கு,ஒரு வாரம் செலிப்ரேஷன் நடந்தது,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாம்,நாங்க போன அன்று இந்த வெரைட்டி வச்சிருந்தாங்க.
வருகைக்கு நன்றி..

vanathy said...

அக்கா, எல்லாமே சூப்பரா இருக்கு. பசிக்குது போய் பிரெட் சாப்பிட்டுட்டு வரேன்.

சௌந்தர் said...

எனக்கு வான்கோழி பிரியாணி தான் பிடிக்கும்...!

asiya omar said...

வானதி பசியை தூண்டி விட்டுட்டேனா,ஆனால் மனசு நிறைஞ்சிடும்.

சௌந்தர் வாங்க,எனக்கும் பிடிக்கும்,வான் கோழி பிரியாணிக்கு தான் நல்லாவே இருக்கும்.

தளிகா said...

ஆசியாக்கா இப்ப எங்க இருக்கீங்க..உங்க நம்பர் இல்லை என்னை கூப்பிட முடிந்தால் கூப்பிடுங்க

asiya omar said...

தளிகா வருகைக்கு மகிழ்ச்சி.நான் அல் ஐனில் இருக்கேன் .உன் நம்பர் இப்ப என்கிட்ட இல்லை.