Friday, January 28, 2011

முதபல் & ஹமூஸ்

முதபல் என்பது கத்திரிக்காய் எள் சேர்ந்த பேஸ்ட், ஹமூஸ் என்பது கொண்டைக்கடலை,எள் சேர்த்து செய்வது,இதனை அரபிக் முறையில் நானும் என் டேஸ்டுக்கு செய்து இருக்கிறேன்.


தேவையான பொருட்கள்;
வயலட் கத்திரிக்காய் -300கிராம்
பூண்டு-4பல்
சின்ன வெங்காயம்-2
எலுமிச்சை-1
தகினா(எள் பேஸ்ட்)-2டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
வேக வைத்த கொண்டைக்கடலை- ஒரு டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில்- தேவைக்கு




கத்திரிக்காய்,பூண்டு,வெங்காயம் வைத்து ஓவனிலோ அல்லது தணல் அடுப்பிலோ சுட்டு எடுக்கவும். வெங்காயம் சேர்க்காமலும் செய்யலாம்.


முற்சூடு செய்த அவனை இருநூறு டிகிரி செட் செய்து பத்து நிமிடம் வைத்து திரும்ப,கத்திரிக்காயை திருப்பி வைத்து பத்து நிமிடம் வைத்து எடுத்தால் கத்திரிக்காய் நன்கு சுட்டு விடும்,அவரவர் ஓவன் படி நேரம் வேறுபடும், கவனமாக பார்த்து எடுக்க வேண்டும்.




இப்படி தோல் உரித்து கத்திரிக்காயை எடுத்து கொள்ளவும்.


சுட்டு தோல் உரித்த கத்திரிக்காய்,பூண்டு,வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.விரும்பினால் கால்ஸ்பூன் மிள்குத்தூள் சேர்க்கலாம்.

அரைத்த கத்திரிக்காயுடன்,தகினா பேஸ்ட் (எள்ளு பேஸ்ட்) சேர்த்து மிக்ஸ் செய்யவும்,விரும்பினால் 1டேபிள்ஸ்பூன் வேகவைத்த ஊறிய கொண்டைக்கடலயும் சேர்த்து சுட்ட கத்திரிக்காயுடன் அரைத்தால் நல்ல கெட்டியாக இருக்கும்.நான் கொண்டைக்கடலை சேர்க்கலை.தேவைக்கு புளிப்பு சுவைக்கு லைம் ஜூஸ் சேர்த்து கொள்ளவும்.எல்லாம் சேர்ந்து கலந்த பின்பு ஆலிவ் ஆயில் கலந்து வைக்கவும்.

சுவையான முதபல் ரெடி. இதனை கிரில் சிக்கன் குபூஸ்,ரொட்டி வகைகளுடன் பரிமாறலாம்.விரும்பினால் பார்ஸ்லி இலை சாப் செய்து சிறிது முதபலில் சேர்க்கலாம்,பார்ஸ்லி இலை கொத்தமல்லி இலை போலவே மணமில்லாமல் இருக்கும்.

அரபிக் பிக்கிள்;
நம்ம ஊரில் ஊறுகாய் சாப்பிடுவது போல் இங்கு எல்லாக்காயும் சேர்த்து இப்படி உப்பு,வினிகர்,தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது வழக்கம்.ஆலிவ்,வெள்ளரி,கேரட்,முள்ளங்கி,எலுமிச்சை,பச்சை மிளகாய் சேர்த்து ஊறவைத்தது இது.நிறைய வெரைட்டி இருக்கு,இது பொதுவாக எல்லோரும் உபயோகப்படுத்துவது.

ஹமூஸ்
தேவையான பொருட்கள்:
டின் சிக்பீஸ் அல்லது (ஊறவைத்து அவித்த கொண்டக்கடலை)-200கிராம்
தகினா பேஸ்ட்(எள் பேஸ்ட்)-2டேபிள்ஸ்பூன்
பூண்டு-2பல்
சின்ன வெங்காயம்-பாதி அல்லது நாட்டு உள்ளி 1 (விரும்பினால்)
உப்பு-சிறிது
ஆலிவ் ஆயில் -தேவைக்கு

மிக்ஸியில் சிக் பீஸ்,பூண்டு,வெங்காயம்(விரும்பினால்) நாட்டு உள்ளி ஒன்று ,தகினா பேஸ்ட் சேர்த்து மிக்ஸியில் அரைத்து  எடுக்கவும்,அத்துடன் ஆலிவ் ஆயில் கலந்து பரிமாறவும்.நான் சிக்பீஸ்,தகினா எல்லாம் ரெடிமேட் தான் உபயோகித்து செய்திருக்கேன். டின் சிக்பீஸில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க வேண்டாம்.

சுவையான வீட்டிலேயே தயார் செய்த ஹமூஸ் ரெடி. இதனை குபூஸ் ரொட்டி,கிரில் சிக்கன்,பிக்கிள் உடன் பரிமாறலாம்.


பின்குறிப்பு:

எள் பேஸ்ட் ரெடிமேடாக கிடைக்காதவர்கள் எள்ளை மணம் வர வறுத்து,சிறிது ஊற வைத்து அரைக்கும் பொழுது சேர்த்து அரைக்கலாம்.
டின் சிக்பீஸ் வடிகட்டியும் அரைக்கலாம் அல்லது அப்படியே அதில் இருக்கும் கரைசலை சேர்த்து அரைத்தாலும் நல்லா இருக்கும்.இப்ப எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலும் கொண்டைக்கடலை,தகினா ரெடிமேடாக கிடைக்கிறது.முதபல்,ஹமூஸ் குறிப்பு கேட்ட தோழிகளுக்காக கொடுத்து இருக்கிறேன்.

--ஆசியா உமர்.

34 comments:

Chitra said...

இங்கே மிடில் eastern restaurants ல சாப்பிட்டு இருக்கேன்.... எனக்கு Falafel பிடிக்கும்.

சாருஸ்ரீராஜ் said...

very nice akka

சுந்தரா said...

முதபல் சாப்பிட்டதில்லை. குபூஸுடன் ஹமூஸ் ரொம்பப் பிடிக்கும்.

இனி, வீட்டிலேயே செஞ்சு அசத்திரலாம் :)

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள் ஆசியா!( இப்பதான் பார்க்கிறேன்)

Pushpa said...

Lovely authentic dish,thanks for sharing.

Jaleela Kamal said...

நானும் அடிக்கடி செய்வது பிள்ளைகலுக்கும் ரொம்ப பிடிக்கும், எங்களுக்கும் ரொம்ப் பிடிக்கும் இரவு உணவுக்கு குபூஸும் இதுவும் செய்வேன் , எல்லாம் கேமாராவில் இருக்கு போட நேரமில்லாமல்;
படங்கள் தெளிவாக இருக்கு ரொம்ப அருமை

ஸாதிகா said...

ஹமூஸ்,முதபல் ஃபலாஃபில் போன்றவை நான் ரசித்து சுவைத்தவை.உங்கள் இல்லத்திலும் விரும்பி சாப்பிட்டு இருக்கின்றேன்.தோஹாவில் ரொடானா என்ற ரெஸ்டாரெண்டில் சுட்ட சேரிமீனும்,முதபலும் ரொம்ப ஃபேமஸ்.அங்கு தயாரிக்கும் சுவையே தனி.வீட்டிலேயே தயாரித்து சாப்பிட வழிசெய்த தோழி ஆசியாவுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

பகிர்வுக்கு நன்றி.

asiya omar said...

சித்ரா மிக்க மகிழ்ச்சி.நன்றி.

சாரு வருகைக்கு நன்றி மகிழ்ச்சி.

Kurinji said...

புதுசு கண்ணா புதுசு....Super o super....

Kurinji Kathambam

Event : Healthy Recipe Hunt - 1 (Aval/Poha/Riceflakes)

குறிஞ்சிக் குடில்

asiya omar said...

சுந்தரா வாழ்த்திற்கு மகிழ்ச்சி.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

புஷ்பா மிக்க நன்றி.

asiya omar said...

ஜலீலா வருகைக்கு மகிழ்ச்சி.வீட்டில் செய்து பழகிட்டால் அதன் சுவையே தனிதான்..

ஸாதிகா சில ரெஸ்ட்டாரண்ட் சுவை தனித்தன்மையாக இருப்பதுண்டு,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.எனக்கும் சேரி ஃபிஷ் கிரில் ரொம்ப பிடிக்கும்..

asiya omar said...

வெங்கட் வாங்க,வருகைக்கு மகிழ்ச்சி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

புதுசா இருக்கு.

GEETHA ACHAL said...

ஆஹா சூப்பராக இருக்கின்றது ஆசியா அக்கா..

அருமையான படங்கள்...தெளிவாக விளக்கு இருக்கின்றிங்க....ஹமூஸ் செய்து இருக்கின்றேன்...முதபல் செய்து பார்க்க வேண்டுமே...

கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...முள்ளங்கியுமா Pickeled veg...யில் சேர்ப்பாங்க...சாப்பிட்டா மாதிரி தெரியவில்லை...

கடைசி படம் சூப்பர்ப்...உங்க வீட்டுக்கு வரலமா...

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

படங்கள் தெளிவாக இருக்கு. ரொம்ப அருமை.பகிர்வுக்கு நன்றி.

S.Menaga said...

மிகவும் அருமையாக இருக்கு...

Umm Mymoonah said...

These both dips are my favourite, looks so delicious.

mahavijay said...

எல்லாமே புதுசா இருக்கு.
மட்டன் தால்சா கொஞ்சம் சொல்லி தாங்களேன்.. pls

vanathy said...

சூப்பரோ சூப்பர். நானும் ட்ரை பண்ணனும்.

asiya omar said...

குறிஞ்சி மிக்க நன்றி.

புவனா மிக்க நன்றி.

கீதா மிக்க நன்றி,நிச்சயம் எங்க வீட்டிற்கு வாங்க.


ஆயிஷா மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

asiya omar said...

உம்மைமூனா மிக்க நன்றி.

மஹா விஜய் மிக்க நன்றி.மட்டன் தால்ச்சா குறிப்பு கொடுக்கிறேன்.

வானதி மிக்க நன்றி.

இளம் தூயவன் said...

ஆஹா வளைகுடா சாப்பாடு கலக்கலா இருக்கு.

எம் அப்துல் காதர் said...

கொஞ்சம் மெனக்கெடல் ; ஆனா இந்த டேஸ்ட் ; அதுக்காக தாரளமாக மெனக்கெடலாம். என்னான்றிங்க டீச்சர்!!

சசிகுமார் said...

கத்தரிக்காயா இல்லை சொரக்காவா இவ்ளோ பெருசா இருக்கு

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..
அரபு உணவுகளிலும் கைதேர்வை காட்டிவிட்டீர்கள்,,,செய்முறை போட்டோ நல்லாவே இருக்கு,..

இங்க நான் சாப்பிட்ட ஹப்ஸா தா எப்டி செய்ரதுன்னே தெரியல..அதுக்கான செய்முறை தெரிந்தால் போடுங்களேன்..


அன்புடன்
ரஜின்

ஜெய்லானி said...

//பிடித்திருந்தால் கருத்து சொல்லுங்க
அப்படியே //

சாரி....டேஸ்ட் பார்ஸல் இல்லாமல் கருத்து சொல்வது இல்லை :-)

asiya omar said...

இளம் தூயவன் கருத்திற்கு நன்றி.

சகோ.அப்துல் காதர் மெனக்கெடல் இல்லை,மற்ற சமையலை விட ஈசிதான்.கருத்திற்கு மிக்க நன்றி.

ரஜின்,விரைவில் கப்சா செய்முறை எனக்கு தெரிந்த படி போடுறேன்.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

வாங்க,சகோ.ஜெய்லானி,ஓட்டு நிறைய விழுந்திருக்கேன்னு பார்த்தால் நம்ம சகோவின் விஜயம்.மிக்க நன்றி.மகிழ்ச்சி.

revathi said...

Asathureenga... ipadiellam ennai paarkavachu saapida kudaathu...
Reva

அஸ்மா said...

அருமை ஆசியாக்கா!

asiya omar said...

சசிகுமார்,இது ஓமான் கத்திரிக்காய்.பஞ்சி மாதிரி இருக்கும்.

ரேவதி வாங்க, சேர்ந்து சாப்பிடலாம்.

அஸ்மா மிக்க நன்றி.

coolblogger said...

hearing for the first time, sounds pretty interesting.

மதுரை சரவணன் said...

கத்தரி எள் பேஸ்ட் அற்புதம்.. வாழ்த்துக்கள்

Mahi said...

நல்லா இருக்கு ஆசியாக்கா!