Wednesday, February 2, 2011

ராஜா ராணி மீன் வறுவல்

தேவையான பொருட்கள்:
குட்டி மீன்-1கிலோ
எண்ணெய் -தேவைக்கு
மீன் மசாலா - 1டேபிள்ஸ்பூன் அல்லது
மிளகாய்த்தூள் -ஒன்னரைடீஸ்பூன்
மிளகுப்பொடி - கால்ஸ்பூன்
சீரகப்பொடி-கால்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
கடலை மாவு-2டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு-1டேபிள்ஸ்பூன்
முட்டை -1
வினிகர்-1டீஸ்பூன்
அல்லது லைம்ஜூஸ்-1பழம்
ரெட் கலர்- பின்ச் விரும்பினால்
உப்பு- தேவைக்கு
நெத்திலி மீன் வாங்க போனோம்,கிடைக்கலை,இந்த ராஜாராணி மீன் நல்லாயிருக்கும் சொன்னதால் வாங்கி வந்தாச்சு,சின்ன மீனை நாம தான் சுத்தம் செய்யணும். சுத்தம் செய்து தரமட்டாங்க.மீனில் உள்ள செதிலை சுரண்டி,வயிற்றில் உள்ள கழிவை எடுத்து தலையை எடுத்து நல்லா உப்பு மஞ்சள் போட்டு ஐந்து தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி வைங்க.

வடிகட்டிய மீனோடு குறிப்பிட்ட மசாலாபொடி வகை, இஞ்சி பூண்டுபேஸ்ட் ,வினிகர்,உப்பு சேர்த்து விரவி ஒரு மணி நேரமாவது ஊறவைக்கவும்.

ஊறிய பின்பு இப்படியேவும் பொரித்து சாப்பிடலாம்,இல்லாவிடில் ஸ்டார்டர் மாதிரி சும்மா சாப்பிடனும் என்றால் கீழே உள்ள முறையை பயன்படுத்தவும்.
மிக்ஸியில் ஒரு முட்டை,கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு அடிக்கவும்.

மசாலவில் ஊறிய மீனில் மிக்ஸியில் உள்ளதை விடவும்.நன்கு கலந்து வைக்கவும்,விரும்பினால் ரெட் கலர் பின்ச் சேர்க்கவும்.

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.சுத்தமாக எண்ணெய் குடிக்காது,பொரித்த பின்பு எண்ணெய் நிறம் மாறாமல் இருக்கும்.

சுடச் சுட சுவையான ராஜா ராணி மீன் வறுவல் ரெடி.அப்படியே எடுத்து சாப்பிடலாம்.கிரிஸ்பாகவும்,அதே சமயம் பஞ்சு போலவும் இருக்கும்.முள் பயம் உள்ளவர்கள் பார்த்து சாப்பிடவும்.
--ஆசியா உமர்.


34 comments:

சங்கவி said...

பதிவை படித்ததும் சாப்பிட்டது போல் ஒரு திருப்தி...

athira said...

சூப்பர் ஆசியா, சிக்கின் பொரியல் மாதிரி இருக்கு. நான் ஒரு தடவை இஞ்சி கார்லிக் பேஸ்ட்டோடு மாவும் சேர்த்துப் பிரட்டிப் பொரித்தேன், முறுகலாக வரவில்லை, மீன் அவித்தமீன்போலதான் வந்துது, அதனால் பின் செய்து பார்க்கவில்லை.

இதே முறையில் முயற்சி செய்கிறேன்.

இன்றும் வடை போச்சே...

சே.குமார் said...

அக்கா...
பசிக்கிற நேரத்துல மீன் பொறியல் பதிவ போட்டு வயித்தெரிச்சலை பொறிக்கிறீங்களே... பாக்கும் போதே சாப்பிடத் தூண்டுதே...

நீங்கள் மீனவர்களுக்காக எழுதிய "உப்பு காத்து" சிறுகதையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். பார்க்க லிங்க் இதோ.... http://vayalaan.blogspot.com/2011/01/blog-post_31.html

எம் அப்துல் காதர் said...

ஆஹா இப்படியுமா டேஸ்ட்ட கெளப்புறது!!

asiya omar said...

சங்கவி அருமையான கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Kurinji said...

புது புது பெயராக வைத்து அசத்தறீங்க ஆசியா...

குறிஞ்சி குடில்

asiya omar said...

அதிரா வடை போனால் என்ன மீன் வறுவல் இன்னும் நிறைய இருக்கு,உங்களுக்கு தான்.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

குமார் வருகைக்கு மகிழ்ச்சி.ஆஹா இப்படில்லாம் சொல்லலாமா?கண் பார்த்தால் மனசு திருப்தியாகனுமே.
கதையை படிக்கிறேன்,யாமுக்கா கதை எழுதியதில் இருந்து மனசு சரியில்லை,அவ்வளவே.

asiya omar said...

சகோ ஆஹா வாங்க, வீட்டில் அவங்ககிட்ட சொல்லி செய்து சாப்பிட்டால் போச்சு.வருகைக்கு நன்றி.

asiya omar said...

குறிஞ்சி வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு மிக்க நன்றி.

Gopi Ramamoorthy said...

இதைக் குழம்பாகவும் வைக்கலாம் போலயே. நம்ம லாஜிக் சிம்பிள். பெரிய சைஸ் என்றால் வறுவல். சின்ன சைஸ் என்றால் குழம்பு? எப்பூடி:-)

அமைதிச்சாரல் said...

நல்லாருக்குப்பா..

Chitra said...

mouth-watering recipe and photos.

vanathy said...

super. Looking delicious!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நிஜம்தான் ஆசியா எனக்கு முள் பயம் உண்டு..:)) பார்க்க அருமையா இருக்கு..

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா...,எங்கள் வீட்டின் ஃபேவரட் இது...
ஆனால் நான் முட்டை,கடலை மாவு சேர்க்க மாட்டேன்.மசாலாத்தூள் கர்ன் மாவுதான்...குழந்தைகளுக்கு நடுவில் முள்ளை க்ளீன் செய்யும் போதே எடுத்துவிட்டுதான் செய்வேன்.நல்லா மொறு மொறுன்னு இருக்கும்.
ஆனால் இப்ப இந்த மீனை வாங்கியே நாளாச்சு.இப்ப உங்க குறிப்பை பார்க்கவும் ஆசை வந்துடுச்சு.
ஒரு நாள் உங்க மெத்தட்லேயும் செய்து பார்த்துட வேண்டியதுதான்...
வாழ்த்துக்கள் ஆசியா அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Kanchana Radhakrishnan said...

தலைப்பு சூப்பர்.

ஹாஜி முஹம்மது மஸ்தான் said...

அருமையான தலைப்பு...
அழகிய மீன்களை அறுவடை செய்து
அழகிய முறையில் வறுத்து எடுத்து
ஆறுவதற்கு முன்பே
அதனை சுவைத்து பார்பதே
நமது வேலை...

ஜெய்லானி said...

இந்த மீனை கிளீன் பண்ணவே ஒரு மனிநேரம் பிடிக்குமே..!!

mahavijay said...

காதலர் தினத்திற்கு போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

உங்களுக்கு விருது வழங்கி இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்.

Pushpa said...

Never tried this fish before,looks delicious.

S.Menaga said...

ரொம்ப சூப்பராக இருக்குக்கா..

இளம் தூயவன் said...

மீன் ருசித்து சாப்பிடுபவர்க்கு கண் பார்வை பிரகாசமாக இருக்கும் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நான் மீன் சாப்பிடாவிட்டாலும்... உங்க படத்துடன் கூடிய செய்யும் முறையே.. சொல்லுது...

எவ்ளோ ருசியா இருக்கும்னு... :-))))

அன்னு said...

நீங்க பேசாம அமஎரிக்கவிற்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிடுங்களேன்? எனக்கு உபயோகமா இருக்கும் :))

ஆஸியாக்கா, இதை நெத்திலி மீனிலும் செய்ய முடியுமா? மீன் மசாலா பேக்கட் இல்லைன்னா என்ன செய்ய?

savitha ramesh said...

crispy fish fry...romba arumaya irukku..

asiya omar said...

கோபி
அமைதிச்சாரல்
சித்ரா
வானதி
தேனக்கா
அப்சரா
காஞ்சனா
ஹாஜி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

ஜெய்லானி ,ஆமாம் கொஞ்சம் வேலை தான். குட்டிமீன் சீப் &பெஸ்ட்.சனிக்கிழமை தோறும் ஃபிஷ் மார்க்கெட் போய் வாரத்திற்கு வெரைட்டியாக மீன் வாங்கி அதனை சரி செய்கிற வேலை தான்.வருகைக்கு நன்றி.

asiya omar said...

மஹா விஜய்
மேனகா
புஷ்பா
சகோ.இளம்தூயவன்
ஆனந்தி
சவிதா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

அன்னு மீன் மசாலா இல்லை என்றால் சில்லி பவுடர்,பெப்பர்பவுடர்,சீரகபவுடருடன்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கடலை,அரிசி மாவுகள்,முட்டை,வினிகர்,உப்பு,கலர் சேர்த்து விரவி செய்ய ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.தாராளமாக நெத்திலியில் செய்யலாம்.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..ஒரு நாள் விட்டாலும் கேப்ல ஒரு பதிவு போட்டுர்ரீங்களே..

நல்லா இருக்கு சகோ.சின்ன மீன்ல அதிக சத்து இருக்குரதா கேள்விபட்டு இருக்கேன்..
இந்த முட்டை மிக்ஸ் ஐட்டம்ஸ் எல்லா இப்பொதா கேள்விப்படுறேன்..இங்க நாங்க மேரிட் பேச்சுலர்ஸா இருக்கிறதால கொஞ்சம் சமையல் எக்ஸ்பிரிமெண்ட் எல்லா செய்வோம்..இதையும் செஞ்சு பாத்துருவோம்..

இன்ஷா அல்லாஹ்..

அன்புடன்
ரஜின்

Nandini said...

That's a very appetizing fish varuval! Makes a great snack!

asiya omar said...

ரஜின் நீஙக் சொல்வது சரி தான்,குட்டி மீன் ரொம்ப நல்லதுன்னு சொல்வாங்க,செய்து பாருங்க சகோ.

ஸாதிகா said...

ராஜா ராணி மீன் இப்பதான் கேள்விப்படுறேன்.வித்தியாசமாக வறுத்து இருக்கீங்க.