Thursday, February 3, 2011

பாகற்காய் புளிக்கறி

தேவையான பொருட்கள்;
பாகற்காய் - 300கிராம்
புளி -சிறிய எலுமிச்சை அளவு
வெங்காயம்- 150கிராம்
தக்காளி- 150கிராம்
மசாலாதூள்- 2டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -3டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரைஸ்பூன்
வெந்தயம் - கால்ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு


பாகற்காயை இப்படி பொடியாக நறுக்கி கொள்ளவும்.தக்காளி, வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும்,புளி ஊறவைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காயவும்,கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் தாளித்து வெடிக்கவிடவும்.

கருவேப்பிலை சேர்க்கவும்.


நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

பின்பு நறுக்கிய பாகற்காய் போட்டு நன்கு பிரட்டி சிறிது உப்பு போடவும்.

பின்பு தக்காளி சேர்த்து சிறிது மூடி வைத்து அத்துடன் மசாலாத்தூள் சேர்த்து பிரட்டி கெட்டியாக புளிக்கரைசல் விடவும்.உப்பு சரி பார்க்கவும்.நன்கு கொதிவந்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.

சுவையான பாகற்காய் புளிக்கறி ரெடி.இது சாதத்துடன் தொட்டு கொள்ள,கலந்து சாப்பிடவும்,சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும். அதிக கசப்பு தெரியாது.நான் தேங்காய் சேர்க்கவில்லை,விரும்பினால் அரைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து கொள்ளலாம்.

பாகற்காய் புளிக்கறியை சாதம் அவித்த முட்டை,பருப்பு ரசம், அப்பளத்துடன்
பரிமாற சுவை பிரமாதம்.
--ஆசியா உமர்.

34 comments:

எல் கே said...

இதில் கசப்புத் தெரியாதா ?? அப்படி இருந்தால் செய்து பார்க்கலாம்

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு ............. நன்றிங்கோ

வெங்கட் நாகராஜ் said...

பாகற்காய்க்கு கசப்புதான் பிரதானம்! இந்த செய்முறை படிக்க நன்றாக இருக்கிறது. செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.

என் மகளுக்கு பாவற்காயை நன்கு ரோஸ்ட் செய்து கொடுத்தால் அப்படியே சாப்பிடுவாள். அவளுக்கு மிகவும் பிடித்த ஒரு காய்கறி - வித்தியாசமாய் [!] பாகற்காய்தான்.

பகிர்வுக்கு நன்றி சகோ.

coolblogger said...

lipsmacking recipe. I hardly get bitter gourd here. But would love to make this dish.

Anonymous said...

மசாலா தூள் என்பது மிளகாய் தூளா?
இதில் கொஞ்சம் வெல்லம் போட்டா கசக்காது தானே..

Jay said...

Mmmm....sounds delicious...the last pic is too tempting..:)
Tasty appetite

asiya omar said...

எல்.கே செய்து பார்க்கலாம்.கருத்திற்கு நன்றி.

அமைச்சரே மாடுலர் கிச்சன் பிஸினஸ் பிஸியிலும் வந்து போனது மகிழ்ச்சி.

asiya omar said...

வெங்கட் நாகராஜ் எங்க வீட்டிலும் எல்லாருக்கும் பாகற்காய் ரொம்ப பிடிக்கும்,பொதுவாக கசப்பும் புளிப்பும் சேர்ந்தால் அருமையாக இருக்கும்.

asiya omar said...

கூல் ப்ளாக்கர் கருத்திற்கு மிக்க நன்றி.

மஹா பொதுவாக எல்லார் வீட்டிலும் இருக்கும் குழம்பு மசாலாதூள் தான்.


jay வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

jagadeesh said...

Very nice ka...

அமைதிச்சாரல் said...

வித்தியாசமா, நல்லா இருக்குங்க..

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..பாகக்காய்..நல்ல உண்வு..பலருக்கும் இது பிடிக்காது..எனகேன்னவோ இது ரொம்பவே பிடிக்கும்.என் அம்மா என்னை எல்லா உணவையும் சாப்பிட பழக்கிவிட்டார்கள்...நல்லதுதான்..

நல்ல குறிப்பு..அத்துடன் அந்த செர்வ்டு ப்ளேட் சாப்பாட்டை பார்த்தவுடன் பசிதான் வருகிறது..

அன்புடன்
ரஜின்

Umm Mymoonah said...

Nice recipe with pavakai, looks very tangy and yummy.

கோவை2தில்லி said...

வித்தியாசமாக இருக்கிறது. செய்து பார்த்துட வேண்டியது தான். பகிர்வுக்கு நன்றி.

இளம் தூயவன் said...

சகோதரி செய்முறை அருமையாக உள்ளது. இனிப்பு வியாதிக்கு நல்ல மருந்து.

S.Menaga said...

பாகற்காய் குழம்பு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று...

Gopi Ramamoorthy said...

புளிக்காய்ச்சலில் போட்ட பாகற்காய் மாதிரி இருக்கும் போல

asiya omar said...

ஜெகதீஸ் மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

ரஜின் மிக்க மகிழ்ச்சி,நானும் அப்படியே என் குழந்தைகளுக்கு எல்லாம் செய்து கொடுத்து சாப்பிட வைப்பதுண்டு.

asiya omar said...

உம் மைமூனா மிக்க நன்றி.

கோவை2தில்லி செய்து பாருங்க.

இளம் தூயவன் கருத்திற்கு நன்றி சகோ.

மேனகா எனக்கும் மிகவும் பிடிக்கும்,கத்திரிக்காய்,பாகற்காய்,சீனிஅவரைக்காய் போன்ற நாட்டுக்காய்கறிகளை கண்டால் வாங்க வேண்டும் என்று கை பறக்கும்.

asiya omar said...

கோபி புளிக்குழம்பு போல் திக்காக இருக்கும்.கருத்திற்கு மிக்க நன்றி.

Chitra said...

Thank you for the recipe.

தெய்வசுகந்தி said...

நான் இதில் வெல்லம் சேர்த்து செய்வேன், கசப்பு அவ்வளவா தெரியாது!!

Kanchana Radhakrishnan said...

வித்தியாசமா பார்க்க அருமையா இருக்கு.

Pushpa said...

One of my fav,love the tangy bitterness.Super wish I can come over for lunch.

ஆனந்தி.. said...

கட்டாயம் செஞ்சு பார்க்கிறேன் ஆசியா..இது வரை புளி சேர்த்து செஞ்சது இல்லை பாவற்காயில்...

சாருஸ்ரீராஜ் said...

கட்டாயம் செய்து பார்கிறேன்.

savitha ramesh said...

tangy gravy..will try it for sure.plz collect an award from my kitchen

asiya omar said...

சித்ரா
தெய்வசுகந்தி
காஞ்சனா
புஷ்பா
ஆனந்தி
சாருஸ்ரீ
சவீதா

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஹாஜி முஹம்மது மஸ்தான் said...

வாசகர்களே...
இந்த செய்முறையில் கசப்பு வேண்டாம் என்றால்... நறுக்கிய பார்கற்காயை ஓர் இரவு முழுவதும் புளித்தண்ணீரில் ஊறவைத்து பின்பு அதனை நன்றாக தெளித்து யெடுத்து பின்பு ஆசியா-உம்மா சொன்ன செய்முறையை பின் தொடரவும்.

asiya omar said...

மிக்க நன்றி ஹாஜி டிப்ஸ்க்கு,வருகைக்கு மகிழ்ச்சி.

R.Gopi said...

பாகற்காயின் அந்த கசப்பு தன்மையை நாம் சேர்க்கும் இந்த புளி எடுத்து விடும் என்று நினைக்கிறேன்...

சூப்பர் ரெசிப்பி...

********

எங்களின் முதல் முயற்சியான இந்த குறும்படத்தினை பார்த்துவிட்டு உங்களின் மேலான கருத்தினை சொல்லவும்...

”சித்தம்” குறும்படத்தை இங்கே கண்டு ரசியுங்கள்...

பார்ட் - 1
http://www.youtube.com/watch?v=VyVNcRKKGt4&feature=mfu_in_order&list=UL

பார்ட் - 2
http://www.youtube.com/watch?v=0fkLqLhdmGw

தோழமையுடன்


ஆர்.கோபி, துபாய்
www.jokkiri.blogspot.com / www.edakumadaku.blogspot.com

லாரன்ஸ் பிரபாகர்
www.padukali.blogspot.com

Lakshmi said...

பாகர்காய் புளிக்கறி, நன்றாக வந்தது.

ஸாதிகா said...

அவசியம் செய்து பார்க்கிறேன் தோழி.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆஹா சாப்பிட்டு பார்க்கணும் போலிருக்கு