Friday, February 4, 2011

சோயா சுக்கா

தேவையான பொருட்கள்;
சோயா மீல் மேக்கர் - 100கிராம்
வெங்காயம் - 100கிராம்
தக்காளி - 100கிராம்
பச்சை மிளகாய் -2
இஞ்சிபூண்டு பேஸ்ட்-2டீஸ்பூன்
கரம் மசாலா - கால்ஸ்பூன்
மஞ்சள்தூள்- கால்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் -அரைடீஸ்பூன்
சீரகத்தூள் -அரைடீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் -அரைடீஸ்பூன்
மல்லித்தூள் -1-2டீஸ்பூன்
எண்ணெய் - 4டேபிள்ஸ்பூன்
மல்லி இலை-சிறிது
உப்பு- தேவைக்கு.

நான்கு நபர்களுக்கு.சோயா பால்ஸ் பாத்திரத்தில் எடுத்து கொதிக்கும் நீர் விட்டு மூடி வைக்கவும்,ஐந்து நிமிடத்தில் இப்படி பொங்கி காணப்படும்.

வெங்காயம்,தக்காளி,மல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும்,மிளகாய் கீறி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,வெங்காயம் வதக்கி இஞ்சிபூண்டு கரம்மசாலா போட்டு வதக்கவும்,பச்சை மிளகாய் சேர்க்கவும்.

நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.

உப்பு சிறிது சேர்த்து மூடி மசிய விடவும்.

சோயாபால்ஸ் -சை சின்ன சின்ன துண்டாக நறுக்கி கொள்ளவும்.

வதங்கிய வெங்காயம் தக்காளியுடன் நறுக்கிய சோயாவை சேர்க்கவும்.

மேற்குறிப்பிட்ட மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,மிளகு,சீரகம்,பெருஞ்சீரகத்தூள்  மசாலாவகையை சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்,தேவைப்பாட்டால் தண்ணீர் சிறிது சேர்க்கவும்.மூடி போட்டு மசாலா வாடை போனதும்,உப்பு சரி பார்க்கவும்.

சிறிது நறுக்கிய மல்லி இலை தூவி பிரட்டி எடுக்கவும்.

சுவையான சோயா சுக்கா ரெடி.வெஜ் சாப்பிடுகிறவர்களுக்கு இது சிக்கன்,மட்டன் சுக்கா சாப்பிட்ட திருப்தியை தரும்.நல்ல சத்தானதும் கூட. இதனை வெரைட்டி ரைஸ் வகைகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.காரம் அவரவர் தேவைக்கு தகுந்தபடி சேர்த்து கொள்ளலாம்.
--ஆசியா உமர்.

35 comments:

Mahi said...

சூப்பரா இருக்கு! சோயா என்னவருக்கு மிகவும் பிடிக்கும். செய்துபார்க்கிறேன்.

Chitra said...

என்னதான் சொல்லுங்க.... மட்டன் மட்டன் தான் .... அதன் டேஸ்ட் தனிதான்....

asiya omar said...

நிச்சயம் செய்து பாருங்க மகி,நான் இதனை செய்தால் என் பிள்ளைகள் சும்மாவே ஃபோர்க் போட்டு சாப்பிட்டு விடுவார்கள்.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

சித்ரா என்னை வெஜ்க்கு மாற விடமாட்டீங்க போல் தெரியுது.நிஜமாக சூப்பராக இருக்கும்,செய்து பாருங்க,வருகைக்கு மகிழ்ச்சி.

மதுரை சரவணன் said...

asaththal.. pakirvukku vaalththukkal

அன்னு said...

ஆஸியா நானி,

சோயா சுக்கா பல்லொ ஒச்சி. ஆப்னோ கெமிதி அச்சோ? இட்டே மட்டன் சுக்கா காயிபா அசோ...

ஹெ ஹெ ஹெ...பயந்திராதீங்க. ஒரியாலதேன் பாராட்டினேன். என்ன பொருள்னு கேக்க பக்கத்து வீட்டை அணுகவும். :))

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா...,பார்க்கும் போதே நல்லா இருக்குமுன்னு தோணுது.
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

இளம் தூயவன் said...

கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது, விளக்க படங்கள் அருமையாக உள்ளது.

GEETHA ACHAL said...

சூப்பரோ சூப்பர்ப்....அருமையாக இருக்கின்றது...

vanathy said...

super recipe, Akka.

SpicyTasty said...

Wow!! I love soya chunks. Nice step by step pictures.

asiya omar said...

மதுரை சரவணன் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

அன்னு அவங்க இப்ப அபுதாபியில் போன் போட்டு கேட்டு சொல்றேன்,என்றாலும் பாராட்டிற்கு நன்றி.

asiya omar said...

அப்சரா மிக்க நன்றி.நீங்களும் சமையலில் அசத்துறீங்களே.

சகோ.இளம்தூயவன் கருத்திற்கு மகிழ்ச்சி.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

asiya omar said...

வானதி மிக்க நன்றீ.


SPICY TASTY வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஆசியாக்கா

இது மீல் மேக்கர் தானே...ம்ம்..அதிகம் சாப்பிட்டதில்ல..எது நல்லாவே நான்வெஜ் ஃப்லேவர் குடுக்கும்,..ஆனா அத சாப்பிடும்போது சக்கைமாதிரியே இருக்கும்..அதனால் அதிகம் விருப்பம் இருந்ததில்லை.ஒருவேல நான் சாப்பிட்டதை அப்படி சமைத்திருப்பார்களா தெரியவில்லை..

குறிப்பும்,படங்களும் நல்லாயிருக்கு..

அன்புடன்
ரஜின்

சசிகுமார் said...

சூப்பர் பிரிண்ட் எடுத்தாச்சு

Priya Sreeram said...

healthy n very yummy looking !

Ridaa said...

சோயா சுக்கா பார்க்க அருமையாக இருக்கிறது.
அன்புடன்
ரிதா

S.Menaga said...

மிகவும் அருமையாக இருக்குக்கா...

Gopi Ramamoorthy said...

சிஸ்டர், எனக்குக் கல்யாணம் ஆன நாளில் இருந்து அசைவம் சாப்பிடுவது கிடையாது:-(

பனீரும், சோயாவும்தான் ஆறுதல். உங்க பதிவில் அசைவ உணவு வகைகளைப் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்வதோடு சரி.

mahavijay said...

நிச்சயம் செய்து பார்க்கிறேன்
என்னோட fav.

Geetha6 said...

நல்லா இருக்கு

எம் அப்துல் காதர் said...

அன்னு கூறியது...

//ஆஸியா நானி, சோயா சுக்கா பல்லொ ஒச்சி. ஆப்னோ கெமிதி அச்சோ? இட்டே மட்டன் சுக்கா காயிபா அசோ...//
((ஹெ ஹெ ஹெ...பயந்திராதீங்க. ஒரியாலதேன் பாராட்டினேன். என்ன பொருள்னு கேக்க பக்கத்து வீட்டை அணுகவும். :))

ஆசியா பாட்டி, தெரிஞ்சுங்க சோயா சுக்கா போட தெரியலேன்னா - மட்டன் சுக்கா போடுங்க!! இல்லேன்னா பல்ல ஒடச்சி கையில கொடுத்திடுவேன்!!

(ஹி ஹி இது தானே அர்த்தம் அனீஸ்!! (நாங்களும் ஆசியா டீச்சரும் பக்கத்து ஊடு)

எம் அப்துல் காதர் said...

சோயா சுக்கா எனக்கு ரொம்ப ரொம்ப இஷ்டம்!!

asiya omar said...

வ அலைக்கும் ஸலாம் ரஜின்,மிக்க நன்றி.

ப்ரியா மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ரிதா முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.மகிழ்ச்சி.

சசிகுமார் மிக்க மகிழ்ச்சி.

மேனகா மிக்க நன்றி.

மஹா விஜய் மிக்க மகிழ்ச்சி.

கீதா6 மிக்க நன்றி.

கோபி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் ஒரிய மொழியை பெயர்த்து சொல்றேன்னு பல்லை பெயர்த்து கொடுத்துட்டீங்களே!
என்றாலும் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

தெய்வசுகந்தி said...

super. naan adikkadi seyvathu ithu.

எல் கே said...

//வையான சோயா சுக்கா ரெடி.வெஜ் சாப்பிடுகிறவர்களுக்கு இது சிக்கன்,மட்டன் சுக்கா சாப்பிட்ட திருப்தியை தரும்.//

வெஜ் சாப்பிடறவங்களுக்கு எப்படிங்க நான் வெஜ் ஐட்டம் சாப்பிட்ட திருப்தி வரும் ??

எல் கே said...

// Chitra said...

என்னதான் சொல்லுங்க.... மட்டன் மட்டன் தான் .... அதன் டேஸ்ட் தனிதான்....//

மட்டன் மட்டன் தான், சிக்கன் சிக்கன்தான் :D

எல் கே said...

// அன்னு said...

ஆஸியா நானி,

சோயா சுக்கா பல்லொ ஒச்சி. ஆப்னோ கெமிதி அச்சோ? இட்டே மட்டன் சுக்கா காயிபா அசோ.///

என்னது ஆசியா அக்கா பல்லை ஓடைக போறீங்களா ?? வேண்டாம் வேண்டாம்

எல் கே said...

முயற்சி பண்ணி பார்க்கிறேன் சகோ

ஸாதிகா said...

சோயாவில் சுக்கா...உண்மையில் சமைத்து அசத்துறீங்க ஆசியா.

asiya omar said...

எல்.கே.இப்படியா கேள்வி மேல் கேள்வி கேட்பது?வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

சே.குமார் said...

அக்கா...
படங்களுடன் விளக்கம் அருமை.

asiya omar said...

ஸாதிகா மிக்க நன்றி.உங்கள் பாராட்டு மகிழ்ச்சியை தருது தோழி.

சே.குமார் வருகைக்கு மிக்க நன்றி.