Sunday, February 6, 2011

மட்டன் தால்ச்சாவும் விருதும்


இந்த அழகான விருதை சவீதாகிச்சன், மஹாஸ்கார்னர் இருவரும் அன்பாக தந்தது.அவர்களுக்கு என் நன்றி.மஹாவே தோழிகள் அனைவருக்கும் கொடுத்து அசத்திட்டாங்க.எனவே
இந்த லவ்லி ப்ளாக் விருதினை சகோ.சே.குமார்,சகோ.சன்மர்க்கம் ரஜின்,சகோ.சசிகுமார்,சகோ.அஹமது இர்ஷாத்,சகோ.கோபி ராம்மூர்த்தி,சகோ.சௌந்தர், சகோதரிகள் வானதி,அதிரா,இலா,அமைதிச்சாரல்,கிருஷ்ணவேணி,ஆயிஷா,
அஸ்மா,காஞ்சனா,லக்‌ஷ்மிமா ஆகியவர்களுக்கு அன்புடன் வழங்குகிறேன்.
பதினைந்து நபர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்.
இது அப்சராஇல்லம் தந்த அன்பான அழகிய பூங்கொத்து, மிக்க நன்றி.

பிரியாணிக்கு மட்டன் வாங்கும் பொழுது இப்படி எலும்பு துண்டாக கால் கிலோ தனியாக எடுத்து கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.பருப்பு வகைகளை ஊறவைத்து கால்ஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து சரியான பக்குவத்தில் குக்கரில் வெந்து எடுக்கவும்.
தேவையான பொருட்கள்;
மட்டன் எலும்பு - கால் கிலோ
துவரம் பருப்பு-100கிராம்
கடலைபருப்பு-50கிராம்
கத்திரிக்காய்-கால்கிலோ
மாங்காய்-1
தக்காளி- 100கிராம்
பச்சைமிளகாய்-2
வெங்காயம்- 100கிராம்
மல்லி,புதினா,கருவேப்பிலை-சிறிது
இஞ்சிபூண்டு பேஸ்ட்-கால்+2டீஸ்பூன்
கரம் மசாலா-கால்+கால்டீஸ்பூன்
மஞ்சள்தூள்-கால்+அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள்-கால்+1டீஸ்பூன்
மல்லித்தூள்-2டீஸ்பூன்
சீரகத்தூள்-அரைடீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள்-அரைஸ்பூன்
புளி-பெரிய நெல்லியளவு
எண்ணெய்-4டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு-1டீஸ்பூன்
மிளகாய் வற்றல்-2
தேங்காய் துருவல்-2டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
குக்கரில் 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு,2டீஸ்பூன்இஞ்சி பூண்டு,கால்ஸ்பூன் கரம் மசாலா,குறிப்பிட்ட அளவு,மல்லித்தூள்,சீரக,பெருஞ்சீரகத்தூள் போட்டு வதக்கவும்.பின்பு அத்துடன் மட்டன் எலும்புகளை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு 4விசில் வைத்து குக்கரை இறக்கவும்.


மட்டன் வெந்த பின்பு அதே குக்கரில் நறுக்கிய கத்திரிக்காய்,தக்காளி,பச்சை மிளகாய்,மாங்காய்,சிறிது மல்லி புதினா இலை,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,
புளிக்கரைசல்,தேவைக்கு உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். 2விசில் வைத்து குக்கரை இறக்கவும்.

வெந்த பின்பு இப்படி காணப்படும்.அத்துடன் வேக வைத்த பருப்பை சேர்த்து கலந்து விடவும்.


மூன்று இணுக்கு கருவேப்பிலை கொத்தாக மணத்திற்கு ரெடியான தால்ச்சா கலவையில் போட்டு உப்பு சரி பார்த்து தேவையான கெட்டி தன்மை வைத்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.

ஒரு வாணலியில் 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,சிறிது வெங்காயம் போட்டு வதக்கி கால்ஸ்பூன் இஞ்சி பூண்டு,கால்ஸ்பூன் கரம் மசாலா போட்டு வதக்கவும்,2டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.வதக்கவும்.

தேங்காய்துருவல் வதங்கியபின்பு கால்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
வதக்கியதும் உடனே வெந்த தால்ச்சாவில் கொட்டவும்.
தாளித்து கொட்டிய பின்பு நன்கு கலந்து விடவும்.

சுவையான மட்டன் தால்ச்சா ரெடி.இதனை பிரியாணி,கீரைஸ்,தேங்காய் சோறு,மருந்து சோறு,ப்லைன் ரைஸ் உடன் பரிமாறலாம்.

-ஆசியா உமர்.



43 comments:

R.Gopi said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

பெற்ற விருதை 15 பேருடன் பகிர்ந்தமை நன்று...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

“சித்தம்” குறும்படம் கண்டு, பதிலுரைத்தமைக்கு மிக்க நன்றி மேடம்.

எல் கே said...

உங்களுக்கும் விருதுப் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

mahavijay said...

thank u so much ASIYA

GEETHA ACHAL said...

ஆஹா,,,அருமையாக இருக்கின்றது...படிக்கும் பொழுதே சாப்பிட தோனுது...

ஸாதிகா said...

ஆஹா..அருமையான தாளிச்சா.நெய்சாதத்திற்கு பொருத்தமாக இருக்கும்.அவசியம் உங்கள் முறையில் செய்து பார்த்து விடுகின்றேன் தோழி.விருதுக்கு வாழ்த்துக்கள்.

asiya omar said...

R.Gopi வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

எல்.கே. வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Gopi Ramamoorthy said...

விருது கொடுத்தமைக்கு நன்றி.

#ஆத்தா நான் பாசாயிட்டேன்:-)

asiya omar said...

மஹா நாங்க எங்க ஊரில் வீட்டு மசாலா வைத்து இந்த தால்ச்சா செய்வோம்,உனக்காக தனி தனி மசாலா போட்டு ரெசிப்பி கொடுத்திருக்கிறேன்.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

கீதா ஆச்சல் மிக்க நன்றி.செய்து பாருங்க.

ஸாதிகா தோழி வருகைக்கு மகிழ்ச்சி.செய்து பாருங்க,உங்க முறையும் கொஞ்சம் சொல்லி தாங்களேன்.

Chitra said...

Congratulations!

Best wishes to everyone, who received the award from you. :-)

athira said...

ஆசியா விருதுக்கு வாழ்த்துக்கள்.

அதை எனக்கும் தந்தமைக்கு மிக்க நன்றி.(எப்படியாவது 15 பேருக்கு கொடுக்கோணுமே என்ற கட்டாயத்தால எனக்குத் தரல்லியே?:))))))... உண்மையாகத்தானே தந்திருக்கிறீங்க... சரிசரி முறைக்கப்படாது சும்மாதான் கேட்டேன். ஆனால் நான் யாருக்கும் கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர், சோகேஷில் பூட்டிவைக்கப்போகிறேன்.

குறைநினைக்காதீங்க ஆசியா, நேரம் கிடைப்பதில்லை, காலையில் கொஞ்சம் வெள்ளென எழும்பி, இப்படிப் பார்க்கிறேன், நீங்க கூப்பிட்டதும் வராமல் இருக்க முடியவில்லை அதுதான் வந்தேன்.

மட்டின் தால்சா சூப்பரா இருக்கு, நிறையப் பொருட்கள் சேர்த்துச் செய்திருக்கிறீங்க.

Geetha6 said...

வாழ்த்துக்கள் தோழி !!

சிநேகிதன் அக்பர் said...

மட்டன் தால்ச்சவின் மண‌ம் இங்கு வரை அடிக்கிறது :)

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

நீங்கள் அழைத்த தொடர்பதிவை எழுதியிருக்கிறேன். அழைத்ததற்கு மிக்க நன்றி.

mahavijay said...

இன்று உங்கள் பதிவில் இருந்த சிக்கன் 65 செய்தேன் நல்லா இருந்தது.

இந்த வாரத்திற்குள் தால்சா செய்கிறேன்.

எனக்காக தனி தனி மசாலா போட்டு சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி..

asiya omar said...

கோபி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.


சித்ரா மிக்க நன்றி.

அதிரா விருது கொடுக்கும் சந்தர்ப்பத்திற்க்காக காத்திருந்து கொடுத்தது.மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

கீதா6 மிக்க நன்றி.

அக்பர் மிக்க நன்றி.

மஹா விஜய் மிக்க நன்றி.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஆசியாக்கா..
விருது வழங்கியதற்கு நன்றிகள் பல...

தளிச்சா,செய்முறை அருமை..எங்க ஊர் கல்யாண தாளிச்சா,ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும்..தேங்காய் சோறுக்கு நல்ல காம்பினேஷன் இது...

ஆனா அதுல பூசணி,அப்ரோ சோத்துஎல,இதெல்லா போடுவாங்க...உங்க ஐட்டத்துல இல்லியே..
ம்ம்..ஊருக்கு ஊர் வேறுபடும்தானே...

அன்புடன்
ரஜின்

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

என்னையும் அழைத்து தந்த
விருதுக்கு வாழ்த்துகள்.நன்றிகள் பல.

விருது பெற்ற மற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்கள். மட்டன் தால்ச்சா அருமை .

asiya omar said...

ரஜின் வாங்க,எங்க ஊரிலும் தடியங்காய்(பூசணி)சேர்ப்பதுண்டு,நான் இங்கு சேர்க்கலை,கிடைத்ததை வைத்து செய்தேன்.அது கண்ணாடி மாதிரி அழகாக இருக்கும்,அதனை நான் நீ என்று போட்டி போட்டு எடுத்து சாப்பிடுவதுண்டு.கருத்திற்கு நன்றி.


ஆயிஷா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சௌந்தர் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் அக்கா...
பூங்கொத்தை பெற்று கொண்டேன்....

விருதுக்கு நன்றி அக்கா

அஸ்மா said...

சலாம் ஆசியாக்கா! எனக்கு மேலும் மேலும் நீங்கள் விருது கொடுப்பது மனம் நெகிழ வைக்கிறது. நன்றி ஆசியாக்கா! இதுவரை வந்த‌ விருதுகள் எல்லாம் பத்திரமாக லாக்கரில் வைத்துள்ளேன் :-) அதற்கு ஒரு நேரம் ஒதுக்கி பகிர்ந்துக் கொள்வதற்குள் அவற்றை மற்றவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொள்வதால் இன்னும் பத்திரமாகவே உள்ளது :)) ஒருநாள் கண்டிப்பாக பகிர்வேன்! (இன்ஷா அல்லாஹ்)

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

தாளிச்சாவின் ஆரம்பம் கிட்டத்தட்ட எங்க ஊர் முறைப்படி உள்ளது. ஆனால் கடைசியில் தாளித்துக் கொட்டுவது புதுமையாக உள்ளது ஆசியாக்கா! இன்று தாளிச்சாதான் செய்கிறேன். இந்த முறையில் தாளித்து பார்க்கிறேன்.

S.Menaga said...

ஆஹா படிக்கும்போதே நாவூறுது...விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஆசியாக்கா!!

Kanchana Radhakrishnan said...

விருது கொடுத்தமைக்கு நன்றி.

angelin said...

congrats asiya

அஹமது இர்ஷாத் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் விருது கொடுத்தமைக்கு நன்றி :)

coolblogger said...

congrats on ur award. This looks awesome. My hubby likes mutton, though I am kinda eggaterian and chickenarian mhyself :)

asiya omar said...

சௌந்தர் உங்களுக்கு விருதும் வழகியிருக்கிறேன்,வருகைக்கு மகிழ்ச்சி.

அஸ்மா நீங்க பத்திரமாக வைத்திருப்பதே மகிழ்ச்சி.

மேனகா மிக்க நன்றி.

asiya omar said...

காஞ்சனா மிக்க நன்றி.

ஏஞ்சலின் மிக்க நன்றி.நீங்க ப்ளாக் ஆரம்பிக்கலையா?

கூல்ப்ளாகர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

அஹமது இர்ஷாத் வாங்க,வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.பத்திரிக்கையில் எல்லாம் எழுதி அசத்துறீங்க.மிக்க மகிழ்ச்சி.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா...,ஆஹா... தாளிச்சா வாசம் தாங்காமல் ஓடோடி வந்தேன்.... கிட்டதட்ட நாங்கள் செய்யும் முறைப்படி இருந்தாலும்... கடைசியில் தேங்காய் தாளித்து கொட்டும் முரை வித்தியாசமாக உள்ளது அக்கா... இனி அடுத்தமுறை தாளிச்சா என்றால் உங்கள் முறைபடி செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்...
அவர்ட் பெற்றதற்க்கு வாழ்த்துக்கள் அக்கா...
எனது பூங்கொத்தை ஏற்றதற்க்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்.
நன்றி ஆசியா அக்கா...

அன்புடன்,
அப்சரா.

இளம் தூயவன் said...

தாளிச்சா எனக்கு ரொம்ப பிடித்தது, செய்முறை விளக்கம் அருமை.விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

asiya omar said...

அப்சரா கருத்திற்கு நன்றி.சும்மா இப்படி தாளித்து பார்த்தேன்,நல்லாயிருந்தது.


சகோ.தாள்ச்சா ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி செய்வது தான்,நன்றி வருகைக்கு.

மங்குனி அமைச்சர் said...

தேவையான பொருட்கள் :

யப்பா எவ்வ்வ்வ்.......வ்வ்வ்ளோ பெரிய லிஸ்டு ............ எனக்கு இந்த தால்ச்சா பிரியாணிக்கு ரொம்ப புடிக்கும் மேடம்

மங்குனி அமைச்சர் said...

asiya omar said...

ப்ளாக் விஷயம் மனைவிக்கு தெரியாதா?இது டூ மச்.////

வீட்ல சிஸ்டம் இல்லைங்க மேடம்...... ரொம்ப தெரியாது ............ இந்த பெயர்கள் உண்மையிலேயே அன்னைக்கு தான் தெரியும்

asiya omar said...

அமைச்சர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
அப்படியா சரிங்க,நிஜமாகவே பதிவு இண்ட்ரெஸ்டிங்.

நாஸியா said...

இதெல்லாம் நானு சமைச்சு, எங்க வீட்டுல உள்ளவங்க சாப்பிட்டு... ஊஹூம்.. நடக்குற கதையே இல்ல.. பேசாம உங்க வீட்டுக்கு வந்துட வேண்டியது தான்!

சே.குமார் said...

விருதுக்கு வாழ்த்துகள் + நன்றி அக்கா.

அமைதிச்சாரல் said...

விருதுக்கு நன்றி ஆசியா..

vanathy said...

சூப்பர் ரெசிப்பி. விருதுக்கு வாழ்த்துக்கள் & நன்றிகள்.

Krishnaveni said...

congrats on all your awards and thanks for sharing, so sweet of you, mutton thalcha looks mouthwatering, super recipe

asiya omar said...

நாஸியா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.மகிழ்ச்சி.

சே.குமார் கருத்திற்கு மகிழ்ச்சி தம்பி.

அமைதிச்சாரல் மிக்க மகிழ்ச்சி.

வானதி மிக்க மகிழ்ச்சி.

கிருஷ்ணவேணி கருத்திற்கு மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் said...

தால்சாவுக்கு வாழ்த்துகள்... விருது அருமை,,, மாற்றி எழுதிட்டேனோ?? :-))

தேனம்மை லெக்ஷ்மணன் said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்..தால்ச்சா அருமை ஆசியா