Thursday, February 10, 2011

பரங்கிபேட்டை பிரியாணி

பிரியாணி ரெடியாவதற்குள் ஒரு எட்டு போய் பரங்கிபேட்டை சாப்பாட்டு கடையை பார்த்து விட்டு வாங்க,சகோ அப்துல் காதருடைய ப்ளாக்கில் சகோ.ஜெய்லானி பாடிய திங்க திங்க ஆசை தினமும் திங்க ஆசை பாடலைக் காண இங்கே கிளிக்கவும்.
இந்த பிரியாணி இணையத்தில் முதன் முதலாக அறிமுகமானதை  நம் தோழிகள் அனைவரும் அறிவர்.
அது போல் தான் என்னுடைய நீலகிரி பிரியாணியும்.

பரங்கிபேட்டை பிரியாணிக்கு இந்த மணம் தான் முக்கியம்.வெள்ளை மிளகு,கசகசா,சோம்பு,சீரகம்,ஏலம்,பட்டை கிராம்பு சேர்த்து செய்யும் இந்த பொடி தான் பிரதானம்.

தேவையான பொருட்கள் ;
பாசுமதி அரிசி - ஒரு கிலோ
மட்டன் -ஒன்னேகால் கிலோ
வெங்காயம் -400கிராம்
தக்காளி -400கிராம்
பச்சைமிளகாய்-6
மல்லி,புதினா -ஒரு கட்டு
இஞ்சி -75கிராம்
பூண்டு-100கிராம்
மிளகாய்த்தூள்- 2டீஸ்பூன்
தயிர்-200கிராம்
எலுமிச்சை -1பெரியது
எண்ணெய் -150மில்லி
நெய் - 100மில்லி
முந்திரிபருப்பு-100கிராம்
ஏலம்,பட்டை,கிராம்பு -தலா-2
சாஃப்ரான் -2பின்ச்
ரெட்கலர்- 1பின்ச்
உப்பு - தேவைக்கு

மணம் அரைக்க :
வெள்ளை மிளகு - 1டேபிள்ஸ்பூன்
கசகசா - 1டேபிள்ஸ்பூன்
சீரகம் -1டேபிள்ஸ்பூன்
சோம்பு -2டேபிள்ஸ்பூன்
ஏலம்- 8
கிராம்பு-10
பட்டை -2சிறிய சுருள்

காயவைத்து அல்லது லேசாக வெதுப்பி அரைத்து வைத்து கொண்டால் தேவைக்கு உபயோகிக்கலாம்,இந்த பொடியை தாள்ச்சாவிற்கு உபயோகிக்கலாம்.நான் இந்தளவு மணம் அரைக்க ஒரு அளவு கொடுத்து இருக்கிறேன்.உங்கள் சுவைக்கு தக்கபடி நீங்கள் மொத்தம் 2- 3 டேபிள்ஸ்பூன் மணம் மட்டும் பிரியாணிக்கு உபயோகித்தால் போதும்.மிளகாய்த்தூள் பார்த்து உங்கள் காரத்திற்கு சேர்க்கவும்.

லைம் ஜூஸ்,கலர்,சாஃப்ரான் கலந்து ஊறவைக்கவும்.

கறியை நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டி தயிர்,ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,அரைத்த மணத்தில் ஒரு 2 -3  டீஸ்பூன்கலந்து ஊறவைத்து விரும்பினால் குக்கரில் 2விசில் வைத்து எடுக்கவும்,கொஞ்சம் சமையல் செய்யும் பொழுது இப்படி செய்தால் ஈசியாக இருக்கும்,இல்லாவிடில் கறியை நேரே பாத்திரத்தில் பிரியாணி தாளிக்கும் பொழுது சேர்த்து வேக வைக்கலாம்.வெங்காயம்,தக்காளி,மல்லி,புதினா நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து வைக்கவும்,இஞ்சியை விட பூண்டு அதிகமாக இருக்க வேண்டும்.இஞ்சி பூண்டு காரமும் மணமும் தான் இந்த பிரியாணிக்கு தனிச்சுவையை கொடுக்கும்.
அரிசியை கழைந்து அரை மணி முன்பாக ஊறவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய்,நெய் விட்டு காய்ந்ததும் ஏலம்,கிராம்பு,பட்டை போட்டு வெடித்ததும் வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்,பின்பு ரெடி செய்த மணத்தில் 2 டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.



நறுக்கிய மல்லி,புதினாவில் பாதி சேர்க்கவும்.வதக்கவும்.

நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து,மிளகாய்த்தூள் சேர்த்து,உப்பு சேர்த்து சிம்மில் வைத்து மூடி தக்காளி வதங்கியதும் கறி,தயிர் சேர்த்து கிளறி விடவும்.கறி ஓரளவு வெந்த பின்பு முந்திரி பருப்பை சேர்க்கவும்.

மூடி போட்டு இருபது நிமிடம் வேகவிடவும்.
கறி நன்கு வெந்து இப்படி காணப்படும்,இல்லாவிடில் கறியை நான் முன்பு குறிப்பிட்டது போல் குக்கரில் ஓரளவு வெந்து பிரியாணிக்கு தாளித்த பின்பு சேர்த்து சிம்மில் வைத்து மசாலாவும் கறியும் சேருமாறு சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.

உப்பு சரிபார்க்கவும்.மீதியுள்ள பாதி நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.


தனியாக ஒரு பாத்திரத்தில் முக்கால பதத்தில் அரிசியை வடித்து எடுக்கவும்,வேக வைத்த பிரியாணி அக்னி கறியில் தட்டி அதன் மேல் நாம் ரெடி செய்த சாஃப்ரான் கரைசலை விடவும்.அலுமினியம் ஃபாயில் போட்டு,திரும்ப தட்டு மூடி போட்டு மேலே சோறு வடித்த கஞ்சியையே வெயிட்டுக்கு வைத்து கால் மணி நேரம் அடுப்பை சிம்மில் வைத்து தம் போடவும்.
செய்யும் முறை ஆளாளூக்கு வேறுபடலாம். ஆனால் இந்த பிரியாணியில் இந்த மணம் தான் முக்கியம்.எங்க மாமா வீட்டில் கடலூரில் பல வருடங்கள் இருந்ததால் இந்த பிரியாணி அடிக்கடி செய்வது வழக்கம்.
தம் ஆன பின்பு திறந்து ஒரு போல் மிக்ஸ் செய்து பரிமாறவும் அல்லது அப்ப அப்ப மேலிருந்து கீழ் பிரட்டி மிக்ஸ் செய்தும் பரிமாறலாம்.

சுவையான பரங்கிபேட்டை மட்டன் பிரியாணி ரெடி.இதனை தயிர் பச்சடி,எண்ணெய் கத்திரிக்காய், ஸ்வீட் உடன் பரிமாறவும்.
காரம் அவரவர் தேவைக்கு குறைத்தோ கூட்டியோ கொள்ளவும்,எண்ணெய் நெய் விரும்பினால் கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்.

என்னுடைய நீலகிரி மட்டன் பிரியாணி பார்க்க இங்கே கிளிக்கவும்.

--ஆசியா உமர்.

62 comments:

எல் கே said...

present

கக்கு - மாணிக்கம் said...

ஐயோ பசி நேரத்தில் உங்க பதிவ படிப்பேனா? வாயெல்லாம் நீர். எனக்கு ஒரு சந்தேகம்.
பிரியாணியின் செய்முறைகள் கிட்ட தட்ட ஒரே மாதிரிதான் இருந்தாலும் அது எப்படி "பரங்கி பேட்டை பிரியாணி " நம்ம ஜெய்லானியை மட்டும் அப்படி பாட வைக்கும்? படங்கள் எல்லாம் ரொம்ப சிரம பட்டு போட்டுள்ளீர்கள். அனைத்தும் அருமை அழகு. நன்றி.

சே.குமார் said...

அக்கா...
பிரியாணி படத்தைப் பாக்கும் போதே பசிக்குது...
நாளை விடுமுறையில் இதை டிரைப் பண்ணிப் பார்க்கலாம் என்ற முடிவு....
(பிரியாணி நல்லா செய்யும் நண்பர் வந்தால் மட்டும்)

revathi said...

Ipadi ellam engaluku aasai kaativitu neega matun saapidreenga..... unga veetu address soneengana romba nallaa irukkum akka... biryani supero super....
Reva

ஸாதிகா said...

வாவ்..பரங்கிப்பேட்டை பிரியாணி..கேள்விப்பட்டதே இல்லை.ஆம்புர்,வாணியம்பாடி,ஹைதராபாத் பிரியாணி வகைகள் தான் கேள்விப்பட்டுள்ளேன்.இது புதுசு.படம் காட்டி நாவில் நீர் ஊற வைத்து விட்டீர்கள் தோழி.

athira said...

ஆசியா, பரங்கிப்பேட்டை எனப் பார்த்ததும் ஜெய்யாத்தான் இருக்குமென ஓடிவந்தேன்.... ஜெய் ஏஏஏதான்:).

சூப்பர் பிரியாணி. supperrrr colour.

இப்னு ஹம்துன் said...

எங்க ஊர் பிரியாணி பற்றி சுவைபட எழுதிவிட்டீர்கள். நன்றிசகோதரி
இன்னைக்கே இங்கே (ரியாத்தில்) சமைத்துப் பார்க்கத் தூண்டி விட்டீர்கள்.

Jaleela Kamal said...

enna jeylaanikku parcel anuppiyaassaaa.

Jaleela Kamal said...

nalla asaththalaana biriyani

அமுதா கிருஷ்ணா said...

செய்யணுமே..

ஜெய்லானி said...

படத்தை பார்த்ததுமே ஊர் நினைவு வந்துடுச்சி :-(

வாசனையே நாலு தெருவுக்கு அடிக்குமே..!!

இந்த ஊர் தண்ணீரில் அதன் டேஸ்ட் வருவதில்லை..ஒரு வேளை மசாஃபி , அல்லைன் தண்ணீரில் டிரை செய்து பார்க்கனும் .

HA said...

Dear Fakhrudeen Bhai,

Please do call me when you make the Biriyani....

The writings and photos by the sister makes the subject very interesting and I too also want to taste it.

Hyder/Riyadh

Gopi Ramamoorthy said...

பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கே:-)

asiya omar said...

எல்.கே வருகைக்கு நன்றி.

கக்கு மாணிக்கம் நீங்க சொல்வது சரி,செய்முறை ஒரே மாதிரி தான் சேர்க்கும் பொருள் தான் மாறுபடும்,ருசியும் வேறுபடுத்தி காட்டும்.

சே.குமார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ரேவதி வாங்க கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றீ.

அதிரா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

ஜலீலா வாங்க,கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

ஸாதிகா நிச்ச்யம் செய்து பாருங்க,தோழி,மாமா வீட்டில் 10 வருடங்களுக்கு மேல் கடலூரில் இருந்ததால் எங்க வெட்டிங் ரிஷப்ஷன் அங்கு நடந்தது,எங்க ரிஷபசனுக்கு இந்த பிரியாணி தான்.மணமும் சுவையும் அபாரமாக இருக்கும்.நான் அவங்களை மாதிரி செய்திருக்கேனான்னு தெரியலை,75 கிராம் இஞ்சிக்கு 125 கிராம் அவங்க கணக்குக்கு பூண்டு சேர்ப்பாங்களாம்,எங்க மைனி சொன்னாங்க. சேர்த்திருக்கிற மணம் தான் முக்கியம்.இதே மணத்தை அங்கு தால்ச்சாவிற்கு பயன் படுத்துவார்களாம்,இந்த மணம் ரெசிப்பியை முன்பே நான் அறுசுவைய்யிலும் கொடுத்து இருக்கேன்.

asiya omar said...

சகோ.இப்னு ஹம்துன் முதல் வருகைக்கும்
கருத்திற்கும் மிக்க நன்றி.

சகோ.ஹைதர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

jagadeesh said...

ரொம்ப அருமையா இருக்கு கா.... சூப்பர்

asiya omar said...

அமுதா கிருஷ்ணா செய்து பாருங்க,நிச்ச்யம் உங்களுக்கு பிடிக்கும்.

asiya omar said...

சகோ.ஜெய்லானி வாங்க,வாங்க,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.உங்க பரங்கிபேட்டை சாப்பாட்டு பாடல் இப்ப எங்க வீட்டிலே ரொம்ப ஹிட்.அதில் உள்ளதை இனி ஒன்றொன்றாக செய்து பிள்ளைகளுக்கு கொடுக்கணும்.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

பிரியாணி சூப்பர்.

விருது கொடுத்தவர்களுக்கு

பார்சல் அனுப்பிவிடவும்.

சாருஸ்ரீராஜ் said...

பார்கும் போதே சுவைக்க தூண்டுது.. வாசனை இங்க வரைக்கும் இருக்கு

S.Menaga said...

இப்போதான் சாப்பிட்டு வந்து பார்த்தால் உங்க ரெசிபி..ம்ம்ம்நாவூறுது..போங்கக்கா உங்க வீட்டுக்கு வரேன்....

Akila said...

wow what a mouthwatering mutton briyani....

Pushpa said...

Superb biryani....

angelin said...

kalakkal recipe asiya.
pudhusu pudhusa kalakkarenga.
feb 14 indha recipe seyya poreen.

Chitra said...

Thank you for the wonderful recipe...

This weekend's treat!

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா..,ஆஹா...பார்க்கும்போதே எனக்கு மணக்குறமாதிரில்ல இருக்கு... கசகசாவை தவிர்த்து மற்றவை எல்லாம் இருக்கு... இருக்கட்டும் இதை ஒரு நாள் செய்துபார்த்திட மாட்டோமா என்ன...?
நல்ல அசத்தலான பிரியாணியை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக இந்த வாரம் செய்துவிட வேண்டியது தான்...

கண்டிப்பாக வெள்ளை மிளகு தான் உபயோகிக்க வேண்டுமா...அருமையாக இருக்கின்றது...

அக்கா உங்க font sizeயினை பெரியதாகினால் இன்னும் நல்லா இருக்கும்...

asiya omar said...

அப்சரா,நான் மணத்தை ஊரில் இருந்து கொண்டு வந்தேன்,கசகசா கொண்டு வர முடியாது இல்லையா?செய்து பாருங்க.

கீதா ஆச்சல் வெள்ளை மிளகு தான் உபயோகிக்கணும்.எல்லாம் முழுதாக வாங்கி பொடி செய்து செய்தால் மணம் நல்லாயிருக்கும்.ஃபாண்ட் சைஸ் எனக்கு சரியாகத்தான் இருக்கு,மாற்றிவிடுகிறேன்.மிக்க நன்றி.

asiya omar said...

அன்புடன் கருத்து தெரிவித்த அனைவருக்கும்,தமிழ் மணத்திலும்,இண்ட்லியிலும் ஒட்டு போட்ட அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

அன்னு said...

ஆஸியாக்கா,

நாளைக்கு இதை நான் செய்யறேன் இன்ஷா அல்லாஹ்...ஆனா அளவுகளை கப்,ஸ்பூனுன்னு குடுங்களேன்... கிலோ, கிராம் எல்லாமெனக்கு தெரியாதே??? அதேபோல வெள்ளை மிளகு இல்லைன்னா குறு மிளகு உபயோகிக்கலாமா? அளவு அதேவா?? ஓக்கே...காலைல உங்கபதிலை பாத்திட்டுதேன் முடிவு செய்யணும். எனக்கு பிரியானி மட்டும் எப்பவுமே தகராறுதேன்...இன்ஷா அல்லாஹ் நாளைக்காவது சரி வருதான்னு பாக்கணும் :))

asiya omar said...

அன்னு சின்னதாக ஒரு வெயிங் மெசின் வாங்கிக்கோ,எப்பவும் யூஸ் ஆகும்.மணம் வகை ஸ்பூனில் தான் கொடுத்து இருக்கேன்,பொடித்து 2 டேபிள் ஸ்பூன் போடு,4 பெரிய வெங்காயம்,4 பெரிய தக்காளி,சில்லி பவுடர் - 2டீஸ்பூன்,தயிர் ஒரு கப்,இஞ்சி பூண்டு அரைத்தால் 4 டேபிள்ஸ்பூன் இருக்கணும்,இஞ்சி 3 பங்கு என்றால் பூண்டு 4 பங்கு வைத்து அரைத்து உபயோகிக்க வேண்டியது தான்,காரம் உன் தேவைக்கு பார்த்து போடவும்.வெள்ளை மிளகு முழுதாக இல்லைனால் ஒய்ட் பெப்பர் பவுடர் அரைஸ்பூன் சேர்க்கலாம்.பார்த்துமா நல்ல பக்குவமாக செஞ்சு கொடுத்து ஒரியாக்காரர் கிட்ட என் பெயரை காப்பாத்து.மிக்க மகிழ்ச்சி அன்னு.

Syed said...

சகோதரி சென்ற வாரம் தான் ஒரு ஆளுக்கு ( ஹைதராபாத் ) செய்து கொடுத்தேன் . சரி நம்ம ஊரு பிரியாணி பற்றி பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி. உங்கள் ப்ளாக் பற்றி என் facebook லும், லிங்க் கொடுத்து உள்ளேன்..வெளிநாடு வாழ் சகோதர்களுக்காக ..

எம் அப்துல் காதர் said...

பரங்கிப்பேட்டை பியாணியை சாப்பிடாமலே, நீங்க தந்திருக்கும் விளக்கத்தையும், படங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல! நேத்து நீங்க போட்டிருந்த இந்த செய்முறையை வைத்து இன்று வெள்ளிக்கிழமை ஜரூரா இங்கே வேலை நடக்குது. ஜும்மா முடிந்து வந்தாச்சு. வீடு வாசனையில் அல்லாடுகிறது. இருங்க மொதல்ல சாப்பிட்டு விட்டு வந்து சொல்றேன்!

asiya omar said...

சகோ.செய்யது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.


சகோ.அப்துல்காதர் சாப்பிட்டு பின்னூட்டம் சொல்லுங்க.வருகைக்கு நன்றி.

Mahi said...

புதுசு புதுசா போட்டு தாக்கறீங்க! :)

இளம் தூயவன் said...

பிரியாணி அருமை, நான் நிறைய விசேசங்களில் கலந்து இருக்கிறேன்.

vanathy said...

சூப்பரோ சூப்பர். உங்களுக்கு பிரியாணி ரெசிப்பி எல்லாமே அழகா போஸ் குடுப்பது போல ஒரு பிரமை. நல்லா இருக்கு போட்டோ & ரெசிப்பி.
ஜெய், ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம். சும்மா தண்ணியை திட்டாதீங்கோ, சரியா??

எண்ணத்துப்பூச்சி said...

சகோதரி ஆசியா,

படத்தைப் பார்த்து சாப்பிட்ட மாதிரி இருக்கு.பொறுமையுடன் செய்து அதை புகைப்படமாகவும் எடுத்து
மக்களுக்கு உதவும் உங்களுக்கு வாழ்த்துகள்.

அதுபோகட்டும் பரங்கிப்பேட்டை பிரியாணி என்று எந்த உணவகத்திலும் பார்த்ததில்லை.நிறைய முறை பரங்கிப்பேட்டை சென்றும்
பிரியாணி சாப்பிட்டதில்லை.

அடுத்தமுறை சுவைக்கக் காத்திருக்கிறேன்.

afrine said...

அன்பு ஆசியாக்கா,

பிரியாணி ரொம்ப சூப்பர். பார்க்கும் போதே ஓவர் டெம்ப்டிங். உங்க பிரியாணியை உங்க கைவண்ணத்தில் சுவைத்து இருப்பதால், ஆசை இன்னும் அதிகரிக்கிறது. எப்பவுமே உங்க ப்ரண்டேஷன் அருமையாக இருக்கும். இம்முறையும் அதுபோல்தான். ப்ளாக்கை நல்ல அழகு போல வைத்து இருக்கிறீர்கள் உங்கள் வீடு போலவே.

அன்புடன்

தனிஷா

asiya omar said...

அன்பு தனிஷா,
ஒரு வருடம் இருக்குமா?அல் அயின் வந்ததில் இருந்து தொடர்பே விட்டு போச்சு? என்னாச்சு,எங்கேயும் பார்க்க முடியலை,ஆனால் என் பளாக் பக்கம் எட்டிப் பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்க்கலை,வருகைக்கு மகிழ்ச்சி.

மாமா,தம்பி சைஃப்,வஜிஹா நலமா?நேரம் கிடைக்கும் பொழுது வந்து செல்லவும்.உன்னிடம் இப்ப தான் போனில் பேசும் சந்தர்ப்பம் கூட கிடைத்தது.
கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

எண்ணத்துப்பூச்சி உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.கருத்திற்கு மகிழ்ச்சி.கடலூர், பரங்கிபேட்டை பக்கம் இந்த பிரியாணிதானே!நீங்கள் கடலூர் என்றால் கல்யாண விருந்து கூட இந்த ஸ்டைல் பிரியாணி தானே!

mahavijay said...

எல்லா ஊர் பிரியாணியும் அற்புதமா செய்ரீங்க..
நான் சோயா சுக்கா செய்து பார்த்தேன்.
எனக்கும் அம்மாக்கும் ரொம்ப பிடித்துவிட்டது.

sds said...

Kandippa seidhu parkkaporom. Nalla taste ungallukku. Keep it up
HemaPriya Dhanasekaran

asiya omar said...

ஹாய் ஹேமா,
உங்க அம்மா செய்து பார்க்க போறாங்களா?ருமானா எப்பவும் சொல்வதுண்டு,ஹேமா ஸ்கூலிற்கு விதம் விதமாக டிஃபன் கொண்டு வருவா,எல்லாமே டேஸ்டாக இருக்கும்னு,செய்து பார்த்து கமெண்ட் சொல்லுங்க.வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஜெகதீஸ் மிக்க நன்றி.

ஆயிஷா மிக்க நன்றி.

சாருஸ்ரீ மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

அகிலா மிக்க நன்றி.

புஷ்பா மிக்க நன்றி.

ஏஞ்சலின் மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

அப்சரா மிக்க நன்றி.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

asiya omar said...

சகோ.அப்துல்காதர் மிக்க நன்றி.

சகோ.இளம்தூயவன் மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

மஹா விஜய் மிக்க நன்றி.

எம் அப்துல் காதர் said...

இந்த பிரியாணிக்கென்றே தனி மனமும் சுவையும் அதிகமா இருக்கு. பரங்கிபேட்டை காரங்க கொடுத்து வச்சவங்க. அதை நாமும் சாப்பிட அதுக்கு கொடுத்து வச்சிருக்கணும். ஹி..ஹி..

asiya omar said...

சகோ.அப்துல் காதர் செய்து ருசித்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

இலா said...

Wow! i made it today and it turned out to be awesome !Thanks for the wonderful recipe!

asiya omar said...

மிக்க நன்றி இலா.இன்றுதான் இந்த கருத்தை பார்க்கிறேன்.மகிழ்ச்சி.

Sumi said...

romba nalla iruku, came here again from sahiga's blog. So happy to see the recipe for parangipettai biriyani, which is my native place,Love that place :).I thought only parotta is only famous there.
kandippa intha biriyani try panna poren:) Glad to follow you.

sam said...

இந்த பிரியாணி இந்த வார இறுதியில் செய்யலாமென்று இருக்கிறோம்.
இதில் 3 சந்தேகங்கள் உள்ளன.தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.

1.வெள்ளை மிளகு முழுதாக இங்கே கிடைக்காது.white pepper powder கிடைக்கிறது.
நீங்கள் "மணம் அரைக்க"-வில் கொடுத்திருக்கும் வெள்ளை மிளகு 1 டேபிள்ஸ்பூனுக்கு பதிலாக whitepeper powder எவ்வளவு tablespoon உபயோகிக்கலாம்.

2.//கறியை நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டி தயிர்,ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்,
ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் கலந்து ஊறவைத்து விரும்பினால்
குக்கரில் 2விசில் வைத்து எடுக்கவும்,//என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

a.கறியுடன் ஊறவைக்க தயிர் எத்தனை டேபிள்ஸ்பூன் உபயோகிக்க வென்டும்.
b.நீங்கள் கறியுடன் ஊறவைக்க சொல்லியிருக்கும் தயிர்,இஞ்சி பூடு பேஸ்ட்,மிளகாய்த்தூள் போன்றவை
தேவையான பொருட்களில் சொல்லப்பட்டிருக்கும் அளவுகளில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டுமா.அல்லது இது தனி அளவுகளா.

3. இந்த பிரியாணிக்கு எலுமிச்சை சாறு தோராயமாக நாங்கள் உபயோகிக்கும் spoonக்கு(1spoon=15ml) எத்தனை spoon உபயோகிக்கலாம்.
இங்கு lemon ஆரஞ்சு பழ size ல் இருக்கிறது.புளிப்பு அதிகமாகிவிடக் கூடாது.அதனால் கேட்கிறேன்.

இந்த வார இறுதியில் friends உடன் சின்ன get-together இருக்கிறது.இந்த பிரியாணி செய்ய விருப்பம்.
உங்கள் பதிலை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

Asiya Omar said...

சாம் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
1.வெள்ளை மிளகுப் பொடி ஒன்னரை டீஸ்பூன் சேர்க்கவும்.
2.சொன்ன அள்வில் இருந்து தான் அரைத்த பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் எடுக்க வேண்டும்.அரைத்த பின்பு மொத்தம் இஞ்சி பூண்டு குவியலாக மூன்று டேபிள்ஸ்பூன் இருக்கும்.மீதியை தாளிக்கும் பொழுது பயன்படுத்தலாம்.

3.4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு உபயோகிக்கலாம்.

200 தயிரில் பாதியை வேகவைக்கும் பொழுதும்,பாதியை கறி தாளிக்கும் பொழுதும் கூட சேர்க்கலாம்.அது மாதிரி தான் பிரியாணி மணத்தையும் பாதி கறியில் ஊறவைக்கும் பொழுதும் பாதியை கறியை தாளித்த பின்பும் சேர்க்கலாம்.
இப்படி செய்தாலும் பிரியாணி மணவாகவும் சுவையாகவும் இருக்கும்.
என்னுடைய வீடியோ சமையலை பாருங்க.வீடியோவை பார்த்தால் செய்யும் முறை தெரியும்.
http://asiyaomar.blogspot.com/2011/05/blog-post_09.html
லின்க் கிளிக் செய்து பாருங்க தம்பி.
மேலும் ஏதும் புரியலைன்னாலும் கேட்கவும்.

sam said...

சந்தேகத்திற்கு பதில் தந்ததற்கு மிகவும் நன்றி. உங்க பிரியாணி செய்துட்டோம்.சூப்பர் டேஸ்ட்.
எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது,அடிக்கடி செய்து சுவைக்கத் தூண்டும் பிரியாணி.

உங்கள் வீடியோ செய்முறை பார்த்தோம்,நன்கு புரிந்தது.
செய்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
கரெக்டாக செய்து கொண்டிருந்த சமயம் invite பண்ணியிருந்த எங்க நண்பரும் அவங்க மனைவியும் வந்துட்டாங்க.
அந்த அக்கா அவன்லயே தம் போட்டு சூப்பரா எடுத்துட்டாங்க.அவங்க கேட்டாங்க ரொம்ப டேஸ்ட்டியா பிரியாணி இருக்கே,எந்த website என்று.
நாங்க உங்க bloglink கொடுத்திருக்கோம்.

மீண்டும் எங்கள் அனைவரின் சார்பாக உங்கள் சுவையான குறிப்புக்கு மனதார்ந்த நன்றிகள்.

sam said...

நீங்கள் அறுசுவையில் கொடுத்திருக்கும் கேரளத்து மீன் குழம்பு மிக விரைவில் செய்து பார்க்க விருப்பம்.
குறிப்பை பார்த்தாலே தெரிகிறது மிக மிக சுவையாக இருக்கும் என்று.
http://www.arusuvai.com/tamil/node/10107

இதை சாப்பிடுவதற்கென்றே இங்குள்ள கேரளா ரெஸ்டாரெண்ட்டிற்கு போவோம்,அந்த அளவிற்கு பிடித்த குழம்பு.

இதில் சில கேள்விகள் உள்ளன.தெளிவுபடுத்தி தருவீங்களா please.

1. வெந்தயம்,சீரகம் u have given in spoon.(tablespoon/teaspoon)
2. இந்த குறிப்பிற்கு பொடியாக நறுக்கிய இஞ்சி எத்தனை டீஸ்பூன் சேர்க்கலாம்.
3 இந்த குறிப்பிற்கு பொடியாக நறுக்கிய பூடு எத்தனை டீஸ்பூன் சேர்க்கலாம்.
அதற்குத் தகுந்தாற்போல் நாங்கள் சிதைத்து பயன்படுத்தி கொள்கிறோம். (இங்கு கிடைக்கும் பூடு மிக மிக பெரிய பல்லாக கிடைக்கிறது)
4. தக்காளி(1) - தோராய கிராம் அளவில் தாருங்களேன்.
5. தேங்காய்ப்பால் - 1 கப் என்று கொடுத்திருக்கீங்க.
நீங்கள் உபயோகித்திருக்கும் 1 கப் என்பது எவ்வளவு மில்லி. ரெடிமேட் திக்கான தேங்காய்பால் உபயோகிக்கலாம் தானே.

உங்களிடமிருந்து பதில் கிடைத்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்,செய்து பார்ப்பதற்கு.
உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.நன்றி.

Asiya Omar said...

பிரியாணி செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி சாம்.
நானும் கொஞ்சமாக செய்யும் பொழுது குக்கிங் ரேஞ்ச் ஓவனில் தம் செய்து எடுப்பது வழக்கம்.அது ஈசியும் கூட.

Asiya Omar said...

சாம்

http://asiyaomar.blogspot.com/2010/05/blog-post_11.html
கேரளா மீன் குழம்பு இந்த முறையை பாருங்க சாம்.இப்படியும் செய்யலாம்.இதைப் பார்த்தால் உங்களுக்கு புரியும்.நீங்கள் கேட்ட அளவுகள் தெளிவாக இங்கு இருக்கு.தேங்காய்ப்பால் 200 மிலி சேர்க்கலாம்.பூண்டு பெரிய பல் என்றால் 4 பல்.தக்காளி 100கிராம்.காரம் உங்க விருப்பம்.
முன்பு நான் குறிப்பு கொடுக்கும் பொழுது தமிழ் டைப்பிங் பிரச்சனை,தவறாக டைப்பினால் எடிட் செய்ய தெரியாது.இந்த லின்க் அளவுப் படி செய்து பாருங்க.தேங்காய்ப்பால் சேர்க்காமல் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் அரைத்தும் விடலாம்.வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்க.

sam said...

பதிலுக்கு மிக மிக நன்றி.உங்களிடம் சந்தேகம் கேட்கும் போதெல்லாம் ஒரு உதறலோடு/பயத்தோடு தான் டைப் செய்வேன்.
சமையலில் எவ்வளவு பெரிய expert நீங்க.
ரொம்ப basic doubts கேட்கிறோமேன்னு தயக்கமா இருக்கும்.

நீங்கள் கொடுத்திருக்கும்
http://asiyaomar.blogspot.com/2010/05/blog-post_11.html
லிங்கையும் favourites ல சேர்த்துட்டேன்.கண்டிப்பாக ரெண்டு முறையையுமே செய்து பார்க்கிறேன்.
ரெடிமேட் தேங்காய்பால் டின் roomல் இருக்கு. எனவே முதலில்
தேங்காய்பால்,மீன் மசாலா சேர்த்து செய்யும் அறுசுவை குறிப்பை
இன்று அல்லது நாளை செய்துவிட்டு கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


http://www.arusuvai.com/tamil/node/10107
என்ற லிங்கில் இரண்டு சந்தேகங்கள் உள்ளன.தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.

1.வெந்தயம் - கால் ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
என்று கொடுத்துள்ளீர்கள்.ஸ்பூன் அளவு என்பது teaspoon or tablespoon.

2.இந்தக்குறிப்பிற்கு ரெடிமேட் திக்கான தேங்காய்பால் டின் 200ml உபயோகிக்கலாமா.

Thanks and i will get back to you with my feedback.

Asiya Omar said...

சாம்,நிச்சயம் செய்து பார்த்திட்டு சொல்லுங்க. உங்களுக்கு வெந்தயம் சீரக மணம் பிடிக்கும் என்றால் இரண்டும் அரை அரைடீஸ்பூன் சேர்க்கவும்.இல்லாவிடில் கால் டீஸ்பூனே போதும். தேங்காய்ப்பால் ரொம்ப திக்காக இருந்தால் உங்க டேஸ்டிற்கு பார்த்து சேர்த்து கொள்ளவும்.ரெடிமேட் தேங்காய்ப்பால் நான் உபயோகித்ததில்லை.

Kalai said...

ரொம்ப டேஸ்ட்தான்! என்ன, கொஞ்சம் குழைந்து போச்சு! மிக்க நன்றி!
பரங்கிப்பேட்டை (பரோட்டா) சால்னா ரெசிப்பியும் எழுத முடியுமா அக்கா?