Monday, February 28, 2011

கார கோஸ் பொரியல்

தேவையான பொருட்கள் ;
முட்டை கோஸ் - 200கிராம்
வெங்காயம் - 100கிராம்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.ளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
கருவேப்பிலை - 2இணுக்கு
உப்பு - தேவைக்கு
வெங்காயம் முட்டை கோஸ் நறுக்கி கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,கடுகு உ,பருப்பு,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,வெங்காயம் சேர்த்து வதக்கவும், அத்துடன் முட்டை கோஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். நன்கு பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் மூடி கோஸ் நன்கு வதங்கியதும் திறக்கவும்.

சுவையான இலகுவாக செய்யக்கூடிய கார கோஸ் பொரியல் ரெடி. இதனை சாதத்துடன் பரிமாறலாம். சப்பாத்தி, தோசையில் ரோல் செய்தும் சாப்பிடலாம்.
காய்கறிகளை சிம்பிளாக சமைக்கும் பொழுது தான் அதன் ருசி அபரிமிதமாக இருக்கும்.பேச்சிலர்ஸ்க்காக இந்த இலகுவான குறிப்பை கொடுத்து இருக்கிறேன்.விரும்பினால் தேங்காய் துருவல் சேர்க்கலாம்.
--ஆசியா உமர்.

32 comments:

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வு.

சாருஸ்ரீராஜ் said...

பொரியல் சூப்பர் , நான் சிறிது தேங்காய் சேர்ப்பதுண்டு

அமைதிச்சாரல் said...

ரொம்பவே நல்லாருக்குமே.. சப்பாத்திக்கு தொட்டுக்க எங்க வீட்ல இந்தமுறையில்தான் :-))))

கோமதி அரசு said...

தேங்காய் சேர்த்து செய்வேன்.

பொரியல் படம் அருமை.
தயிர் சாதத்திற்கும் நல்லா இருக்கும்.

Priya Sreeram said...

nice stir fry !

ஸாதிகா said...

கோஸ் பொரியலுக்கு மிளகாய் போட்டதில்லை.அடுத்த முறை உங்கள் குறிப்பில் கண்ட படி சமைத்துப்பார்க்கிறேன்.

எல் கே said...

அட முயற்சி பண்ணலாம் போல இருக்கே

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. நன்றி சகோ.

வல்லிசிம்ஹன் said...

படம் சூப்பர். அழகா நறுக்கி செய்திருக்கீங்கப்பா. தேங்காயும் போட்டா நல்லா இருக்கும்.

asiya omar said...

கோவை2தில்லி மிக்க நன்றி.

சாருஸ்ரீ மிக்க நன்றி,சில சமயம் தேங்காயும் சேர்ப்பதுண்டு.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

கோமதியரசு மிக்க நன்றி.

ப்ரியா ஸ்ரீராம் மிக்க நன்றி.

அந்நியன் 2 said...

நல்ல பகிர்வு.


சமைத்துப்பார்க்கிறேன்.in my home

asiya omar said...

தோழி ஸாதிகா மிக்க நன்றி.செய்து பாருங்க.

எல்.கே முயற்சி செய்து பாருங்க,உங்காத்து சமையலை எங்களுக்கும் சொல்லி தாங்க.

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

அந்நியன் 2 said...

நல்ல பகிர்வு.


சமைத்துப்பார்க்கிறேன்.in my home

asiya omar said...

வல்லிசிம்ஹன் வாங்க.முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.நானும் தேங்காய் சேர்த்தும் செய்வதுண்டு.கருத்திற்கு மிக்க நன்றி.

Gopi Ramamoorthy said...

ரொம்ப சிம்பிள். வேகமா சமைச்சிடலாம் போல

இலா said...

Akka! Good one! Remainds me of my tuty days .We had cabbage w/ thayir sadam or lemon rice. Nice combo too.Yummm...

mahavijay said...

Bachelors க்கு மட்டும் அல்ல என்னை போன்ற Beginners க்கும் useful ல இருக்கு

Krishnaveni said...

very easy and healthy recipe, yumm

asiya omar said...

FOOD has left a new comment on your post "கார கோஸ் பொரியல்":

தினம் தினம் அருமையான பகிர்வுகள். வாழ்த்துக்கள்.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.publish கிளிக் செய்வதற்கு பதில் கைதவறி delete கிளிக் செய்து விட்டேன்,அதனால் மெயிலில் உள்ளதை காப்பி செய்து போடிருக்கிறேன்.

asiya omar said...

கோபி ராமமூர்த்தி மிக்க நன்றி.

இலா மிக்க நன்றி.

மஹாவிஜய் மிக்க நன்றி.

கிருஷ்ணவேணி மிக்க நன்றி.

ரமா said...

கோஸ் பொரியல் நல்லா இருக்கு பார்க்க. வார இறுதியில்தான் செய்ய இருக்கிறேன் உங்க குறிப்பின்படி.நான் தேங்காய்+இஞ்சி சேர்ப்பேன். அம்மா கோஸ் மணக்காதிருக்க இஞ்சி சேர்ப்பா. அதையே நானும் பின்பற்றுகிறேன்.
ஆனால் ஆசியா ஒரு கேள்வி.எனக்கு dryஆக வருவதில்லை.ஏன்? தண்ணீர் இல்லாமல் dry ஆகவந்தால்தான் கணவருக்கு பிடிக்கும்.அதனால் கூடுமானவரை கூட்டு,சலாட்,அல்லது பருப்பு போட்டு வைத்துவிடுவேன். பதில் தாருங்கள் ஆசியா. நன்றி.

asiya omar said...

காயை நன்கு கழுவி நீர் வடியவிட்டு தாளிக்கும் பொழுது சேர்க்கணும்,தண்ணீர் சிறிது கூட சேர்க்காமல் எண்ணெயில் வதக்கலாம்,காய் வேகும் பொழுது மூடி போட்டு மூடாமல் வதக்கினால் ட்ரையாக வரும்.அல்லது மற்ற பீன்ஸ் போன்ற காய்கறிகளை கரெக்டாக வேகும் அளவு தண்ணீர் விட்டு, காயும் வெந்து தண்ணீர் வற்றி வரும் பொழுது தாளித்து கொட்டினாலும் ட்ரையாக உதிரியாக வரும்.செய்து பாருங்க.நானும் இஞ்சி கோஸ் பொரியல் ரெசிப்பி கொடுத்திருக்கிறேன்,பார்க்கவும்.

இளம் தூயவன் said...

பொரியல் சூப்பர்.

savitha ramesh said...

miga arumai.chapathis ku romba nalla irukkum.naaum ippadi dhan seyven

vanathy said...

super porial. I never added chilli powder.

asiya omar said...

இளம் தூயவன் மிக்க நன்றி.

சவிதா மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Cabbage is my favorite. My mom used to make Cabbage pulao.. I think this porial goes with Curd rice.

சே.குமார் said...

பொரியல் + படம் அருமை.
தேங்காய் சேர்த்தால் நல்லா இருக்கும்.

Aruna Manikandan said...

healthy delicious poriyal

"குறட்டை " புலி said...

தவறுதலாக கருத்துரை பதிவாகிவிட்டமைக்கு வருந்துகிறேன்.
சமையல் பதிவுகளில் வாசனை தூக்குகிறது!

பித்தனின் வாக்கு said...

good asia, you also cutting if as lengthy, but it should be thin.
nice and good.

எம் அப்துல் காதர் said...

இது நல்லா இருக்கே!! படமும் அருமை!!