Sunday, February 13, 2011

ஒரு வருட நிறைவு

சென்ற வருடம் இதே நாள் அழைப்பிதழ், திறப்புவிழான்னு அசத்தலாக ஆரம்பித்த ப்ளாக்கிற்கு இன்றோடு ஒரு வருடம் நிறைவாகிவிட்டது. பவுலில் இருக்கும் தக்காளி பேரீச்சம்பழ ஸ்வீட் உங்களுக்கு தான்..

சமையற்கட்டை விட்டு கொஞ்சம் வெளியே வந்து அனுபவம், கதை, கவிதை, பார்த்தது, ரசித்தது, படித்தது, பிடித்தது என்று உங்கள் அனைவரோடு பகிர்ந்தது நிஜமாக ரொம்ப சந்தோஷமாக இருந்தது.


முதலில் அன்போடு என்னை பின் தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்தது மட்டுமின்றி விருதுகள் வழங்கியும் சந்தோஷத்தில் ஆழ்த்திய நட்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அதீத மகிழ்ச்சியில் நான் எப்பவும் ஸ்தம்பித்து விடுவதுண்டு, அதே நிலை தான் இன்று. எழுத வார்தைகள் வரவில்லை. தங்கள் வாழ்த்தும் வரவும் என்றும் வேண்டும் எனக்கு.


தக்காளி பேரீச்சம்பழ ஸ்வீட் :
தேவையான பொருட்கள் ;
தக்காளி - 600கிராம்
பேரீச்சம்பழம் - 200கிராம்
சர்க்கரை - 400கிராம்
நெய் - 50மில்லி
ஏலக்காய் -4
முந்திரிபருப்பு - 50கிராம்
கிஸ்மிஸ் -2டேபிள்ஸ்பூன்


நன்கு சிவந்த பழுத்த தக்காளியாக எடுத்து கொள்ளவும்.

தக்காளியை ஒரு பத்திரத்தில் எடுத்து அதன் மீது நன்கு கொதிக்கும் நீரை விடவும். 10நிமிடம் மூடி வைக்கவும்.

தோல் உரித்து மிக்ஸியில் எடுத்து கொள்ளவும்.

கவனமாக மூடி வெளியே சிந்தாமல் மிக்ஸியில் இப்படி அடித்து எடுக்கவும்.

அடித்த தக்காளி ஜூஸை ஒரு பாத்திரத்தில் விட்டு நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து பச்சை வாடை போன பின்பு சீனியை தட்டவும்.

நன்கு கலந்து விடவும், இப்படி சீனி கரைந்த பின்பு டார்க் ரெட் ஆக மாறும்.

ஏலக்காயுடன் ஒரு டீஸ்பூன் சீனி கலந்து மிக்ஸியில் பொடி செய்து கொதிக்கும் தக்காளி சீனி கரைசலில் தூவவும். கலந்து விடவும்.

ஏலக்காய் பொடி சேர்ந்து இப்படி நன்கு கொதிக்கட்டும்.

பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி இப்படி கட் செய்து வைக்கவும்.

ரெடியான தக்காளி ஸ்வீட்டில் சேர்த்து கிளறவும்.டேட்ஸ் சேர்த்து 5நிமிடத்தில் திக்காகி விடும். ஸ்வீட் அகப்பையில் ஊற்றுவது போல் இருக்க வேண்டும், ஆறினால் கெட்டியாகி விடும்.


கடாயில் நெய் விட்டு காயவும், முந்திரி கிஸ்மிஸ் பக்குவமாக வறுத்து எடுக்கவும்.

வறுத்த முந்திரி கிஸ்மிஸை நெய்யுடன் ரெடியான தக்காளி பேரீச்சம்பழ ஸ்வீட்டில் கலந்து விடவும்.

சுவையான சத்தான தக்காளி பேரீச்சம்பழ ஸ்வீட் ரெடி.
இதனை எங்க ஊர் பக்கம் பிரியாணியுடன் பரிமாறுவதுண்டு.நீங்களும் விஷேசமாக சமைக்கும் பொழுது இந்த ஸ்வீட் செய்து உடன் பரிமாறினால் அசத்தலாக இருக்கும்.

--ஆசியா உமர்.

60 comments:

ஜெய்லானி said...

many more happy returns of day

ஸாதிகா said...

வாழ்த்துக்கள்!தக்களி பேரீச்சம்பழஸ்வீட் எனக்கே எனக்கு.

ஸாதிகா said...

எங்கள் ஊரிலும்தான்.களறிச்சாப்பாடின் பொழுது நெய்சோறு,தாளிச்சா,இறைச்சி விருந்தின் போது இந்த தக்காளி ஜாமை பறிமாறுவார்கள்.இதனை தக்காளி ஜாம் என்போம்.

எல் கே said...

தக்காளி பேரீச்சம்பழம் ச்வீட்டுக்கு நன்றி சகோ. முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். கதை கொஞ்சம் நிறைய எழுதுங்கள் .

ஸாதிகா said...

எங்கே ஓட்டு பெட்டியை காணவில்லை????

Aruna Manikandan said...

Congratulations on ur first milestone and wishing u many more success....

Tomato with dates what an interesting and unique combo....

Looks healthy and delicious dear :)

asiya omar said...

ஜெய்லானி வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஸாதிகா வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.ஆமாம் ஊரில் தனியாக தக்காளியில் மட்டும் கூட செய்வதுண்டு,இப்ப எல்லாரும் டேட்ஸ் சேர்த்து செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.தாராளமாய் ஸ்வீட் எடுத்துகோங்க தோழி.

asiya omar said...

எல்.கே வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஸாதிகா ஒட்டு பெட்டி இணைக்க வேண்டும்.டெம்ப்லேட் மாற்றியதில் போய்விட்டது.

asiya omar said...

அருணா வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி.செய்து பாருங்க,உங்களுக்கு பிடிக்கும்.

சே.குமார் said...

AKKA....
முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்.

revathi said...

Congrats akka.... wishing u more success in the coming years... perfect dish for this perfect day.... lovely..
Reva

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள்

சி.கருணாகரசு said...

படமும் செயல் முறையும் மிக எளிமையா இருந்தது. மிக்க நன்றிங்க.

சி.கருணாகரசு said...

ஆண்டு நிறைவுக்கு என் வாழ்த்துக்கள்.... தொடர்ந்து அசத்துங்க

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா..,
முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களுடைய பொன்னான ழுத்துக்கள் இன்னும் மேலும் மேலும் தொடர்ந்து சாதிக்க இறைவனை வேண்டுவோம்....
அதோடு அசத்தலான ஸ்வீட்டையும் தந்து அசத்திட்டீங்க... பார்க்கவே சூப்பராக இருக்கு.வெறும் தக்காளியில் தான் செய்ததுண்டு.
உங்கள் முறையில் இனி செய்து பார்க்கணும்.
நன்றி,வாழ்த்துக்கள் அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Ridaa said...

வாழ்த்துக்கள்.தக்காளி பேரீட்சை பச்சடியை பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது.
அன்புடன்
ரிதா

செ.சரவணக்குமார் said...

Congratulations. தொடர்ந்து எழுதுங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் .. நல்லா இருக்கு ஸ்வீட் ..டெலிசியஸ் :)

Gopi Ramamoorthy said...

வாழ்த்துகள்:-)

Kalpana Sareesh said...

Congrts super n a simple dish ..will try..

Jaleela Kamal said...

ஒரு வருடம் முடிந்து விட்டதா?
வாழ்த்துகக்\ள் வாழ்த்துகக்ள்
இன்னும் பல பதிவுகள், பல கவிதை, பல கதைகள் எல்லாம் எழுத வாழ்த்துகள்.


தக்காளி பேரிச்சம் பழம் ஸ்வீட் எங்கமாமியார் வீட்டு பேவரிட், என் பாட்டி எனக்கு சொல்லி கொடுத்தது அடிக்கடி செய்வேன்,அம்மா வீட்டில்ல் ( பீட்ரூட், கேரட்) மாமியார் வீட்டில் தக்காளி பேரிட்சை
போன வெள்ளி ரொம்ப நாள் கழித்து செய்தேன். என் செய்முறை போல் தான் இருக்கு. நெட் பிராபளதால் போஸ்ட் இன்றூ காலை போஸ்ட் பண்ணி இருந்தால் எல்லோரும் குழம்பி போய் இருப்பார்கள் ,

கோவை2தில்லி said...

முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துகள். தக்காளி பேரீச்சை ஸ்வீட் எடுத்துக் கொண்டேன்.

Jaleela Kamal said...

பிரியாணி சாப்பிட்டு விட்டு இந்த தக்காளி பேரிட்சை ஸ்வீட் சாப்பிட்டால் நல்ல செமிக்கும் என்பார்கள்,

athira said...

ஆசியா... சதம் அடிச்சிட்டீங்களோ? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

எனக்கு மிகவும் பிடித்த பேரீச்சம்பழ சட்னி, இதில் தக்காழி சேர்த்திருப்பது புதுவிதமாக இருக்கு, ட்ரை பண்ணுகிறேன்.

இன்னும் பல சதம் இனிதே அடிக்க வாழ்த்துக்கள்... மியாவ்...மியாவ்...

angelin said...

congrats asiya,

மாதேவி said...

முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்.

afrine said...

அன்பு ஆசியாக்கா,

ப்ளாக் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டதா? ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் பார்த்த ஆசியாக்கா ரொம்ப இன்னசண்ட். குழந்தை தனமான சிரிப்பு, கனிவான பேச்சு, அன்பான உபசரிப்பு இவை மட்டும்தான் தெரியும் என நினைத்தேன். இந்த ப்ளாக்கில் நீங்கள் ஒருவருடமாக பதிந்தைவைகள் என்னை பலமுறை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நல்ல கவிதை எழுதக்கூடியவர், சமையல் வல்லுநர், நல்ல படைப்பாளர், நகைச்சுயாளர், இப்படி பல கோணங்களள உங்கள் ப்ளாக் மூலம் கண்டு கொண்டேன். தொடர்ந்து எழுதுங்கள். நிறைய பேர்க்கு உதவியாக இருக்கிறது.

தக்காளி ஜாம் அருமையாக இருக்கு. எங்கள் ஊரிலும் விருந்தின் போது கண்டிப்பாக வைப்பாங்க.

அன்புடன் தனிஷா

S.Menaga said...

வாழ்த்துக்கள் அக்கா!! பச்சடி செம சூப்பர்ர்!!!

Geetha6 said...

வாழ்த்துக்கள்.படங்கள் கண்ணை கவர்கின்றன .

jagadeesh said...

அக்கா இப்போ தா பார்த்தேன். வாழ்த்துக்கள். உங்கள் தளத்தில் மணம் வீசிக் கொண்டே இருக்கட்டும். வாழ்க வளமுடன்.

FOOD said...

வாழ்த்துக்கள் சகோ, வளரவேண்டும், வையமெங்கும் உங்கள் பதிவு பரவ வேண்டும். வருடா வருடம் வாழ்த்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்க வேண்டும்.

Kanchana Radhakrishnan said...

ஆண்டு நிறைவுக்கு என் வாழ்த்துகள்.

Rizhwana said...

Salam asiya...first of all i congrats u and i m ur silent follower...ur postings r very nice and useful for me and thanks for sharing with us...i m wishing u to write more and more - with duas RIZ

asiya omar said...

சே.குமார் மிக்க நன்றி.

ரேவதி மிக்க நன்றி.

சி.பி.செந்தில் குமார் மிக்க நன்றி.

கருணாகரசு மிக்க நன்றி.

அப்சரா மிக்க நன்றி.

ரிதா மிக்க நன்றி.

asiya omar said...

சே.சரவணக்குமார் மிக்க நன்றி.

முத்துலெட்சுமி மிக்க நன்றி.

கோபி மிக்க நன்றி.

கல்பனா மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

கோவை2தில்லி மிக்க நன்றி.

அதிரா மிக்க நன்றி.

asiya omar said...

ஏஞ்சலின் மிக்க நன்றி.

மாதேவி மிக்க நன்றி.

ஆஃப்ரின் மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

கீதா6 மிக்க நன்றி.

ஜெகதீஸ் மிக்க நன்றி.

food மிக்க நன்றி.

asiya omar said...

காஞ்சனா மிக்க நன்றி.

ரிஸ்வானா கருத்திற்கு மிக்க நன்றி.நீங்க யாருன்னு தெரியலை,எங்க ஊர் என்றால் கெஸ் செய்து விடுவேன்.என்றாலும் மிக்க மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் said...

வாழ்த்துகள் மேடம்-டீச்சர்!! இனியும் பல ஆண்டுகள் தொடர்ந்து சமைத்து -எழுதி - அசத்துங்கள்!! ஆமா ஒரு வருடம் சிறப்பாக கொண்டாடியதற்கு தக்காளி பேரிச்சம்பள பச்சடி தானா? அதுக்கு மெய்ன் டிஷ் எங்கே??

ராமலக்ஷ்மி said...

முதல் வருட நிறைவுக்கு இனிய வாழ்த்துக்கள். தொடர்ந்து அசத்துங்கள்.

நல்ல குறிப்புக்கு நன்றி.

Anonymous said...

congrats!!!
thanks for ur sweet...

Kurinji said...

Many many happy returns of the day Asia!

kurinjikathambam

Mahi said...

முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

புதுவிதமான இனிப்பு!படங்களுடன் தெளிவா சொல்லியிருக்கீங்க. டெம்ப்ளேட்டும் கண்ணுக்குக்குளுமையா இருக்கு. வாழ்த்துக்கள்!:)

asiya omar said...

சகோ அப்துல் காதர்,பிரியாணிக்கு அப்புறம் தானே ஸ்வீட் போஸ்டிங்.வருகைக்கும்,வாழ்த்திற்கும்மிக்க நன்றி.

ராம்லஷ்மி மிக்க நன்றி.

மஹா மிக்க நன்றி.

குறிஞ்சி மிக்க நன்றி.

asiya omar said...

மகி வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.ஒரு வருட நிறைவை கொண்டாடவே டெம்ப்லேட் மாற்றம்.நல்லாயிருக்கா? மிக்க மகிழ்ச்சி.

வெங்கட் நாகராஜ் said...

முதல் வருட நிறைவிற்கு தக்காளி பேரீச்சம்பழ இனிப்பு கொடுத்து எங்களை ஆனந்தப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ. மேலும் பல பதிவுகள் எழுத வாழ்த்துகள்.

ரமா said...

வாழ்த்துக்கள் ஆசியா. உங்க திறமைகளை தொடர்ந்து வெளிக்கொண்டுவரவேண்டுகிறேன்.ஸ்வீட் ரெம்ப அசத்தலா இருக்கு.நிச்சயம் செய்துபார்க்கிறேன் ஆசியா.
பழைய பதிவில் கேட்டகேள்விக்கு பதில் தாமதமாக தருகிறேன்.மன்னிக்க.நான் இருப்பது ஹிட்லர் நாடு.

ரமா said...

மாற்றியமைத்த டெம்ப்ளேட் அழகாக இருக்கிறது ஆசியா.நன்றி.

அன்னு said...

vaazthukkal asiyakka.
biriyani eppavum pola sothappiduchu. ennu mail ezutharen.
sweetaavathu se4nju saappittukaren. he he he

once again, kalakkunga :))

asiya omar said...

வெங்கட் நாகராஜ் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ரமா வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.நீங்க எப்ப ப்ளாக் ஆரம்பிக்கப்போறீங்க?...

asiya omar said...

அன்னு உனக்காகவே பிரியாணி செய்து வீடியோ அட்டாச் பண்ணனும் போல.நானும் முதலில் உன்னை போல் தான், வாரம் வாரம் பிரியாணி செய்து பழகினேன்.ஊரில் நான் சமைக்க அதிக சந்தர்ப்பம் கிடைத்ததில்லை,விஷேஷம்னால் அவரோட தங்கை தான் சமைப்பாங்க அல்லது சமையல்காரங்க,இப்படி தனியாக இருக்கும் பொழுது சமைத்து பழகியது தான்.இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை,செய்து செய்து பார்த்தால் வந்து விடும்.

ஆனந்தி.. said...

ஒரு வருஷம் ஆச்சா பா...ரொம்ப சந்தோஷம் ஆசியா ...வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...

R.Gopi said...

வாவ்....

ப்ளாக் ஸ்டார்ட் பண்ணி அதுக்குள்ள ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சா?

பலே... வாழ்த்துக்கள்...

தக்காளி பேரீச்சம்பழம் ஸ்வீட் அசத்தல். லைட்டா புளிக்காம இருக்க, சர்க்கரை கொஞ்சம் ஜாஸ்தி சேர்க்க வேண்டுமோ?

ரெண்டாவது ஃபோட்டோல தக்காளி தண்ணிக்குள்ள இருக்கறத சட்டுனு பார்த்தா, குலோப்ஜாமூன் மாதிரியே இருந்தது...

மென்மேலும் பல அசத்தல் பதிவுகளை பதிவிட்டு அசத்துங்கள்...

மனோ சாமிநாதன் said...

முதலாம் வருட நிறைவு நாளுக்கு அருமையான இனிப்பு கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள் ஆசியா! என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு!!!

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஆசியாக்கா..

ஒரு வருஷத்த முடிச்சுட்டீங்களா??
தொடர்ச்சியான பதிவுகளும்,சமையல் குறிப்புகளும் அருமை..
மென்மேலும் ஆரோக்கியமான பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்ஸ்.
.
இந்த தக்காளி ஸ்வீட்.சகோ ஸாதிகா சொன்ன மாதிரி எங்கூர்ல கூட ஜாம்’னு தா சொல்லுவோம்.
நல்லாவே செய்திருக்கிறீர்கள்..

போட்டோ நம்பர் 2அ பாக்கும் போது குலாப் ஜாமூன் மாதிரி தெரியுது..

அன்புடன்
ரஜின்

vanathy said...

வாழ்த்துக்கள், அக்கா. சூப்பர் ரெசிப்பி.

சிநேகிதன் அக்பர் said...

இன்று போல் என்றும் தொடர வாழ்த்துகள்.

சுந்தரா said...

வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் ஆசியா!

அசத்தலான ஸ்வீட், நிச்சயம் செய்துபார்க்கிறேன்.

asiya omar said...

ஆனந்தி மிக்க நன்றி.

R.கோபி மிக்க நன்றி.

ரஜின் மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

அக்பர் மிக்க நன்றி.

சுந்தரா மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Siva Kumar said...

Nice dish.Easy to cook and tasty one