Tuesday, February 15, 2011

ஸ்டஃப்ட் எண்ணெய் கத்திரிக்காய்தேவையான பொருட்கள் :
சிறிய வயலட் கத்திரிக்காய் - அரை கிலோ
வெங்காயம் -1
தக்காளி-1
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2டீஸ்ஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
மல்லி,கருவேப்பிலை - சிறிது
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சர்க்கரை - அரைடீஸ்பூன்(விரும்பினால்)
உப்பு - தேவைக்கு

வறுத்து அரைக்க :
மிளகாய் வற்றல் - 5
முழுமல்லி -2டீஸ்பூன்
சோம்பு - 1டீஸ்பூன்
சீரகம் - 1டீஸ்ப்பூன்
மிளகு - கால்ஸ்பூன்
வெந்தயம் -கால்ஸ்பூன்
கடுகு - கால்ஸ்பூன்
எள் - 2டீஸ்பூன்
வேர்க்கடலை- 2டீஸ்பூன்
தேங்காய்துருவல் - 2டேபிள்ஸ்பூன்
முந்திரி -4

தாளிக்க :
நல்லெண்ணெய் -150மில்லி
கடுகு -1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1டீஸ்பூன்
கருவேப்பிலை - 2இணுக்கு

வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை துளித்துளி எண்ணெய் விட்டு தனி தனியாக வறுத்து எடுக்கவும்.


வறுத்தவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றிய பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.அதனை தனியாக எடுத்து வைக்கவும்.


பின்பு அதே மிக்ஸியில் வெங்காயம் தக்காளி போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.கத்திரிக்காயை நன்கு கழுவி காம்பை நறுக்கி கொண்டையுடன் எடுத்து நான்காக கீறிக்கொள்ளவும்.வறுத்து அரைத்தவற்றை மட்டும் ஸ்டஃப் செய்து வைக்கவும். சுமார் 24சிறிய கத்திரிக்காய் அரைகிலோவிற்கு வரும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காயவும் கடுகு,உளுத்தபருப்பு,போட்டு வெடிக்கவும்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.

தாளித்த பின்பு எண்ணெயில் இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்க்கவும்,நன்கு வதக்கவும்,அத்துடன் ரெடி செய்த ஸ்டஃப்ட் கத்திரிக்காயை சேர்க்கவும்.


கத்திரிக்காயை எண்ணெயில் பிரட்டி பிரட்டி வேக விடவும்.ஓரளவு நிறம் மாறி வரும் பொழுது அரைத்த வெங்காயம்,தக்காளி விழுதை சேர்க்கவும்.

பிரட்டி விடவும்,சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைத்து திறக்கவும்.

வறுத்தரைத்த மசாலா மீதி இருந்தால் அத்துடன் புளி கரைத்து ரெடி செய்யவும்.

எண்ணெயில் வதங்கிய கத்திரிக்காயில் புளிக்கரைசலை விடவும்.கொதி வரும்.உப்பு சரி பார்க்கவும்,

சிறிது நறுக்கிய மல்லி இலை தூவவும்.குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு, அடுப்பை அனைக்கவும்.குக்கரில் ஆவியடங்கியவுடன் திறந்து பார்த்தால் ஸ்ட்ஃப்ட் எண்ணெய் கத்திரிக்காய் இப்படி இருக்கும். திறந்து தேவைப்பட்டால் பரிமாறும் சமயம் சிம்மில் 5நிமிடம் வைத்து அணைக்கவும்.


கத்திரிக்காய் உடையாமல் பிரட்டி விட்டு மசாலா சேர்ந்தாற்போல் பரிமாறவும்.
சுவையான் ஸ்டஃப்ட் எண்ணெய் கத்திரிக்காய் ரெடி.
இது பிரியாணி,புலாவ்,வெரைட்டி ரைஸ்க்கு அருமையான காம்பினேஷன்.
மசாலா சாமான்களை வறுத்து அரைத்து ஸ்டஃப் செய்வது தான் மிக்க ருசியை தரும். விரும்பினால் காரம் தேவைக்கு மிளகாய் வற்றல் சேர்த்து கூட்டி கொள்ளலாம். எண்ணெயும் அவரவர் விருப்பம் தான்.பிஞ்சி கத்திரிக்காய் என்பதால் தோலுடன் ஏன் கொண்டை கூட வெந்து சாப்பிட அருமையாக இருக்கும்.கெஸ்ட் வந்த சமயம் சமைத்ததால் என்னால் படங்கள் தான் நிதானமாக எடுக்க முடியலை.

எனது கத்திரிக்காய் காரக்குழம்பு குறிப்பைக் காண அறுசுவை கிளிக்கவும்.

--ஆசியா உமர்.

62 comments:

மகி said...

/கெஸ்ட் வந்த சமயம் சமைத்ததால் என்னால் படங்கள் தான் நிதானமாக எடுக்க முடியலை.//ஏனாம்,படத்துக்கென்ன குறைச்சல்? அமோகமா இருக்குது ஆசியாக்கா!!
இந்தமுறை கத்திரிக்காயும் வாங்கலை..இப்ப என்ன பண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணுவேன்?!!! :P:P :P

ரமா said...

எப்படி ஆசியா நான் கத்தரிக்காய் வாங்கியது தெரியுமா? சூப்பர் ரெசிபி.இன்று செய்ய இருக்கிறேன்.ஒருவாறு கணவரிடம் திட்டு
வாங்காமல்,இருக்க உதவியமைக்கு நன்றி ஆசியா.குழம்பு,பொரித்தகறிதான் செய்வேன்.வித்தியாசமாக இது இருக்கிறது.மீண்டும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப நாளா தேடிட்டு இருந்த ரெஸிப்பி. அட்டகாசம்!

கக்கு - மாணிக்கம் said...

எனக்கு மிகவும் பிடித்த வெரைட்டி இது. வெறும் சாதத்துடன் அப்படியே சேர்த்து சுட சுட சாப்பிட..............
ஆஹா......... படங்கள் நல்லாத்தான் வந்திருக்கு.

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கே தோழி.அவசியம் டிரை பண்ணிடுவோம்.

Kalpana Sareesh said...

super ahh irukku enakku kathrikkai pidikadhu aanaal indha dish kandippa try pannanum.

சே.குமார் said...

ஆஹா... அருமையா எண்ணெய் கத்திரிக்காய் வைப்பதுபோல் மசாலா சேர்த்து... படிக்கும்போதே சாப்பிட தூண்டும் படங்கள்...

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஆசியாக்கா
இந்த டிஷ் சின்ன வயசுல புடிக்காம இருந்து,காலப்போக்கில் சாப்பிட பழகியது..பிரியாணிக்கு செம காம்பினேஷன்..நல்லாவே செய்திருக்கிறீர்கள்..

அட பிஸியா இருக்கும் போதே இவ்ளோ நல்லா போட்டோ எடுத்துருக்கீங்களே..சும்மா மளமளன்னு ஸ்னாப் எடுத்து தள்ளிருக்கீங்க..

அன்புடன்
ரஜின்

asiya omar said...

மகி முதல் கருத்தா?மிக்க மகிழ்ச்சி.ஒண்ணும் பண்ண வேண்டாம்,வாங்கியவுடன் சமைத்தால் போச்சு.

asiya omar said...

ரமா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி,நன்றி. கத்திரிக்காயில் பொரித்த கறியா, எப்படி செய்யணும்?

asiya omar said...

கக்கு மாணிக்கம் உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி,படம் இன்னும் கொஞ்சம் நல்லா வந்திருக்கலாம்னு நினைச்சேன்.

asiya omar said...

ஸாதிகா,செய்து பாருங்க தோழி,இது எல்லாரும் செய்வது தான்.கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

கல்பனா வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி,செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

asiya omar said...

அக்பர் இது இப்படி ஸ்டஃப் பண்ணாமலும் இந்த மசாலா பிரட்டியும் செய்யலாம்.கருத்திற்கு மகிழ்ச்சி.

சே.குமார் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி.

ரஜின் வாங்க,உங்க ப்ளாக்கில் பதிவு போடலையா?

அன்புடன் மலிக்கா said...

இப்படி செய்து சாப்பிட எனக்கு ரொம்ப்ப பிடிக்கும் ஆசியாக்கா.
அருமையான ரெசிபி. சூப்பர்..

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஆசியாக்கா..
/உங்க ப்ளாக்கில் பதிவு போடலையா?/

ம்ம்..பதிவுகள் போடனுங்க்கா..

இந்த தட்ஸ்தமிழ்’ல அப்லோட் பண்ணுன ஒரு பதிவு,அப்டியே ஹோல்ட் ஆகி..புக்மார்க் பேஜ்லயே நின்னுபோச்சு..அது அவுட் டேட் ஆஹிட்டா போட்டுடலாம்..அதும் இல்லாம,கொஞ்சம் வேலை..
எழுதீட்டு இருக்கேங்க்கா..

இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிவுகள் வரும்..

அன்புடன்
ரஜின்

revathi said...

Superaaaa irukku akka... apadiyae saapidalaam...
Reva

அமைதிச்சாரல் said...

ஜூப்பரா இருக்குது ஆசியா.. ஒரு நாள் செஞ்சுடணும்.

Mohamed Ali Blog said...

Also Visit http://pettagum.blogspot.com

Gopi Ramamoorthy said...

\\பிஞ்சி கத்திரிக்காய் என்பதால் தோலுடன் ஏன் கொண்டை கூட வெந்து சாப்பிட அருமையாக இருக்கும்.\\

நான் அப்படித்தான் சாப்பிடுவேன்:-)

Gopi Ramamoorthy said...

இது வெறும் சாதம், அல்லது தயிர் சாதத்தோட கூட நல்லா இருக்கும் சாப்பிட:-)

Akila said...

i know stuffed kathirikkai and ennai kathirikkai separately... the mixed version is new to me... love it....

Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila

சாருஸ்ரீராஜ் said...

பார்கும் போதே வாய் ஊறுது .கத்திரிக்காய் இல்லை இப்போ சீக்கிரம் சமைத்து ரிசல்ட் சொல்லுகிறேன் . இன்னைக்கு உங்க பீட்ரூட் பொரியல் பண்ணி செல்போன்ல போட்டோ எடுத்து வச்சுஇருக்கேன் சீக்கிரம் போடுகிறேன்.

எம் அப்துல் காதர் said...

// கெஸ்ட் வந்த சமயம் சமைத்த தால் என்னால் படங்கள் தான் நிதானமாக எடுக்க முடியலை.//

நிதானமா எடுக்காத போட்டோவே இவ்வளவு அழகா இருக்குன்னா, நிதானத்தோட எடுத்தா...???

சும்மா கலாய்க்காதிங்க மேடம்!! எல்லாமே அருமையா இருக்கு நிம்மதியா சாப்டுட்டு தூங்குங்க!! அவ்வ்வ்வ்!!!

Chitra said...

well, will wait for the mutton recipe to try out. :-)

S.Menaga said...

ஆஹா அக்கா செம அருமை..கத்திரிக்காய் இல்லை வாங்கினால் செய்யனும்....

Aruna Manikandan said...

looks delicious and very tempting dear :)

angelin said...

aha asiya .idhu engal appavin Favorite recipe.THIS GOES WELL WITH ANY FRIED RICE AND BIRIYANI.
thanks for visting my place.i ll have to improve and do it better.

Kanchana Radhakrishnan said...

அருமை. படங்கள் super.

asiya omar said...

மலிக்கா வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

ரஜின் நிலாவிற்கு பின்பு பதிவு இல்லையேன்னு பார்த்தேன்.வருகைக்கு நன்றி.

ரேவதி மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

முகம்மது அலி வருகைக்கு மிக்க நன்றி.

asiya omar said...

கோபி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.டிஃபன் அயிட்டமுடனும் கூட சாப்பிடலாம்.

அகிலா கருத்திற்கு நன்றி.

சாருஸ்ரீ செய்து பார்த்திட்டு சொல்லுங்க,உங்களுக்கு பிடிக்கும்.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் கருத்திற்கு மிக்க நன்றி.

மிக்க நன்றி சித்ரா.

மேனகா நீங்களே அசத்தலாக செய்வீங்களே! மிக்க நன்றி.

அருணா கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

ஏஞ்சலின் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.உங்க ஆர்ட் & கிராஃப்ட் அருமை.

தெய்வசுகந்தி said...

எனக்கு ரொம்ப்ந் பிடித்த குழம்பு இது!!

asiya omar said...

சுகந்தி கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.இது குழம்பு போல் இருக்காது,பிரட்டியது போல் கெட்டியாக இருக்கும்.

இளம் தூயவன் said...

கத்திரிக்க பச்சடி, இது எங்கள் ஊர் பக்கம் புலவு சாப்பாட்டிற்கு (ஐந்து வகை)செய்வார்கள்.

இளம் தூயவன் said...

//சிநேகிதன் அக்பர் said...
ரொம்ப நாளா தேடிட்டு இருந்த ரெஸிப்பி. அட்டகாசம்!//

இம் இதுவேற நடக்குதா, 150 கிலோ மீட்டர் தான் வந்துடுறேன்.

அப்பாவி தங்கமணி said...

ம்ம்ம்....பெருமூச்சு தான்..:)
பாக்கவே அழகா இருக்கு... ஆன ரெம்ப ஆயில் இருக்குமோ...சும்மாவே கலோரீஸ் அதிகமா உள்ள போகுது...அதாங்க கேட்டேன்... ஆன ரெம்ப நல்லா இருக்கும்னு தோணுது...ரியலி tempting ...:))

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...சூப்பரோ சூப்பர்ப்....

உங்க ப்ரங்கிபேட்டை பிரியாணி அருமை...செய்தேன்...சீக்கிரம் பதிவு போடுகிறேன்...

asiya omar said...

சகோ.இளம்தூயவன் உங்க ஊர் பக்கம் ஐந்து வகை கத்திரிக்காய் பச்சடியா?ஆஹா ! கொஞ்சம் வீட்டம்மாட்ட கேட்டு எழுதுங்க.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

கீதா ஆச்சல்,பரங்கிபேட்டை பிரியாணி செய்து நல்ல பின்னூட்டமும் தந்தமைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.சீக்கிரம் பதிவு போடுங்க.

asiya omar said...

அப்பாவி தங்கமணி இவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் பிரட்டி விடும் பொழுது மசாலாவும் கத்திரிக்காயும் இழுத்து கொள்ளும்.நான் ஏற்கனவே ரெசிப்பியில் குறிப்பிட்டபடி உங்கள் தேவைக்கு எண்ணெய் குறைத்து உபயோகிக்கலாம்.நான் கூட எங்களுக்கு தகுந்த படி அளவை மாற்றி கொள்வதுண்டு.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

எல் கே said...

@அப்பாவி

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது .....

@ஆசியா
இது எனக்கு ரொம்பப் பிடிக்கும்

coolblogger said...

eggplant is my favorite and this one is so yummm

savitha ramesh said...

enga ammma vai nyabagam paduthareenga.super delicious kathrikkai

FOOD said...

வகை வகையாய் வீட்டில் செய்வதற்கு வாய்ப்பு.

vanathy said...

பார்க்கவே சூப்பரா இருக்கு. கத்தரிக்காய் என்றால் என் கணவருக்கும் உசிர், செய்து பார்த்துட்டு சொல்றேன்.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

சூப்பர் ரெசிபி.வித்தியாசமாக இது இருக்கிறது.

athira said...

சூப்பர் ஆசியா. முன்பு செல்வியக்காவின் குறிப்பு பார்த்து செய்திருக்கிறேன், இது சற்று வித்தியாசம் தக்காழி எல்லாம் சேர்த்திருக்கிறீங்க....

கடசிப் படத்தை உற்று உற்று பார்த்திட்டேன் ஆசையில்.
எனக்கு கத்தரிக்காய் ரொம்ப ரொம்ப பிடிக்கும்..(எச்சூச்ச்மி வான்ன்ஸ்ஸ்ஸ்ஸ்:))

asiya omar said...

cool blogger மிக்க நன்றி.

சவீதா மிக்க நன்றி.

food மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

ஆயிஷா மிக்க நன்றி.

அதிரா மிக்க நன்றி.

இளம் தூயவன் said...

asiya omar said...
//சகோ.இளம்தூயவன் உங்க ஊர் பக்கம் ஐந்து வகை கத்திரிக்காய் பச்சடியா?ஆஹா ! கொஞ்சம் வீட்டம்மாட்ட கேட்டு எழுதுங்க.கருத்திற்கு நன்றி. //

சகோதரி நான் கூற வந்தது, ஐந்து வகை கறி சாப்பாட்டில் இது ஒரு கறி, அவ்வளவு தான்.

ஜெய்லானி said...

ம்...இதுவும் பிரியாணியின் சைடு டிஷ் :-))

Pushpa said...

Stuffed brinjal looks delicious..

Nandini said...

Omg..... mouthwatering dish. Will try out soon.

asiya omar said...

சகோ.இளம்தூயவன் பதில் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

சகோ.ஜெய்லானி கருத்திற்கு மிக்க நன்றி.

புஷ்பா மிக்க நன்றி.

நந்தினி மிக்க நன்றி.

Malar Gandhi said...

Stuffed Ennai Kathirikai sounds delicious...looks appetizing...perfect with biriyanis.

asiya omar said...

மலர் காந்தி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி,நன்றி.

Anonymous said...

எங்க அப்பாக்கு கத்திரிக்காய் ரொம்ப பிடிக்கும் இந்த முறையில் செய்து கொடுத்து ஐஸ் வைக்க வேண்டியதுதான்.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா...
ஆஹா...மிகவும் அருமையான படங்களுடன் கூடிய எண்ணெய் கத்திரிக்காய்.பார்க்கும் போதே நா ஊறுகின்றது.மல்லி சேர்த்து வறுத்து அரைத்திருப்பது புதிதாக உள்ளது.நிச்சயம் ஒருமுறை செய்து பார்த்துட வேண்டியதுதான்.
வாழ்த்துக்கள் அக்கா...

அன்புடன்,
அப்சரா.

இமா said...

கீதா ஆச்சல் பக்கமிருந்து இங்கே வந்தேன் ஆசியா. பெப்ரவரி 15... அப்போ பிசியாக இருந்தேன், என் கண்ணில் படாமல் போயிருக்கிறது.

பிடிச்சிருக்கு. கட்டாயம் ட்ரை பண்ணுவேன். அப்போ வந்து பின்னூட்டம் கொடுக்கிறேன்.

r777 said...

Assalamu alaikum Madam,
One of ma favourites is this yenna kathrikai kulambu due 2 ma mom's delicious cooking taste... now on c'ing this cooking instructions along with photos..mouth watering.. anyway now i gonna start cooking.. again i'll comment u soon after cooking... thanq'u for giving this super recipe..

nasreen fathima said...

ஆசியா அக்கா இந்த ரெஸிபீ போன நோன்பு க்கு சமைத்தைன். ஓரே பாராட்டு. போன வாரம் என் ஃப்ரென்ட்ஸ் க்கு ட்ரீட் . ஹுங்க ப்லோக் open ஆகல. நான் பைத்தியம் மட்டும் தான் ஆகல. thrusday விருந்து. திரும்பவும் ட்ரை பண்ணி பார்கலாம் என்று open பன்னா ஓரே சந்தோசம். ரொம்ப தாங்க்ஸ் அக்கா. நான் எழுதி வைத்து கொண்டைன்