Thursday, February 17, 2011

முருகன் பார்ட்டி

குமார் இரயிலில் இருந்து இறங்கி தன்னிடமிருந்த ஒரு சிகரெட்டை (புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு) பற்ற வைத்தான். தினமும் இரயில் நிலயத்திலிருந்து கல்லூரி சென்றடையும் இடைவெளியில் ரசித்து தம் அடிப்பது வழக்கம். ஒரு இழு இழுத்திருப்பான்,டேய் போதும்டா என்று ஓடி வந்த மகேஷ் பிடுங்கி ஒரு இழுப்பு, டேய் எனக்கு என்று சாமி ஒரு இழு இழுக்க, கல்லூரி வாசலில் காத்திருந்த வேணு வந்து வாங்கி கடைசியாக இழுத்து முடித்தான், இந்த பசங்க புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடுன்னு தெரிந்தும் விளையாட்டிற்கு எப்பவாவது பந்தாவிற்கு இப்படி சிகரெட் பிடிப்பது வழக்கம்.

குமார் டேய்ஸ்காலர், மகேஷ்,சாமி,வேணு மூவரும் ஹாஸ்டலில் ஒரே ரூம், மாதக்கடைசி ஒருவரிடமும் காசில்லை என்பதால் குமார் வருகைக்காக காத்திருந்து, அவனிடம் இருந்த ஒரு சிகரெட்டை பங்கிட்டு குடிக்குமளவிற்கு அவ்வளவு நெருக்கமான நண்பர்கள். பசங்க தங்களுடைய குரூப்பிற்கு முருகன் பார்ட்டின்னு பெயர் வச்சிக்கிட்டாங்க.

சோம்பேறிப்பசங்க, காலையில் மெஸ் சென்று சாப்பிடக் கூட மாட்டாங்க. எவனையாவது அனுப்பி பார்சல் வாங்கி வரச் சொல்லி அனைவரும் ஏதோ சாப்பிட்டதாய் பேர் செய்து கையில் கிடைத்த பேண்ட் சர்ட்டை மாட்டிகிட்டு காலேஜ் போறது வழக்கம், ஆனால் எல்லோரும் படிப்பாளிகள், யார் துணி துவைப்பாங்க, இஸ்திரி போடுவாங்க, ஒரு கணக்கும் கிடையாது, முதலில் உடை மாற்றுகிறவன் ஹேங்கரில் பளிச்சென்று இருக்கும் பேண்ட் சர்ட்டை போடுவதும், மற்றவர்கள் எது அழுக்கு இல்லாமல் சுமாராக பார்க்க இருக்கோ அதனை மாட்டிக்கொண்டு போவதும் வழக்கம். இரவு தாமதமாக உறங்கி காலை ஏழரைக்கு எழுந்து எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் கல்லூரிக்கு அடிச்சிக்கோ பிடிச்சிக்கோன்னு பறக்கிற பசங்க, இரவு முழுவதும் பக்கத்தில் இருக்கும் இரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து அரட்டை அடித்து ஒரு டீ அடிச்சிட்டு உறங்கவில்லை என்றால் இவர்களுக்கு உறக்கமே வராது. இதை எல்லாம் தினமும் அவர்களோடு சேர்ந்து வேடிக்கை பார்ப்பது குமாருக்கு மிகவும் பிடிக்கும்.

கிரிக்கெட், டென்னிஸ், கூடைப் பந்தாகட்டும், கல்ச்சுரல், க்விஸ் ப்ரோகிராம் எதிலும் இந்த முருகன் பார்ட்டி கலந்து தூள் கிளப்புவதால் கல்லூரியில் இவர்கள் புகழ் பரவிக் கிடந்தது.
முருகன் பார்ட்டி பேரைக் கொடுத்தால்,எல்லோருமே கொஞ்சம் தயங்குவதும், பின்னர் போட்டு பார்க்கலாம்னு களத்தில் இறங்குவதும், ஆனால் முடிவில் பதக்கங்களை அள்ளுவதும் முருகன் பார்ட்டி தான்.

ஆமாம், இந்த முருகன் பார்ட்டியில் யார் முருகன்னு தானே யோசிக்கிறீங்க, முதல் வருடத்தில் இந்த குரூப்பில் முருகன்னு ஒரு பையன் குப்பத்தில் இருந்து வந்து சேர்ந்தான், அவன் எப்பவும் அமைதியாகவும் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது வழக்கம், ஆனால் எப்பவும் முகத்தில் ஒரு சோகம் இருக்கும். மற்ற பையன்களின் வசதி, நுனிநாக்கு ஆங்கிலம், நல்ல உடை எதுவும் தன்னிடம் இல்லையே என்ற ஏக்கமாக இருக்கலாம், தன் தந்தை எப்பவும் குடித்து விட்டு தாயை அடிப்பதைப் பற்றியும், அவனுடைய அம்மா வீட்டு வேலை பார்த்து தன்னை படிக்க வைப்பதாயும், தான் படித்து நல்ல வேலை கிடைத்ததும், அம்மாவை ராசாத்தி மாதிரி வைத்து காப்பாற்ற வேண்டும் என்று மட்டும் முருகன் எல்லோரிடமும் அவனைப் பற்றி ஆரம்பத்தில் சொல்லியிருந்தான்.
முருகன் எப்பவும் தனியாக இருந்தாலும் இந்தப்பசங்க முருகனை உடன் சேர்த்து எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரு கூட்டமாகத்தான் இருந்தார்கள், மெஸ் கட்டணம், செமஸ்டர் கட்டணம் கூட எல்லோரும் சேர்ந்து ஒரு முறை முருகனுக்காக கட்டியிருக்கிறார்கள், அவ்வளவு நல்ல பசங்க, முருகனும் அவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக கல்லூரி வாழ்க்கையை ஒட்டி கொண்டு இருந்தான். முருகன் அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது முதல் ரூம் பசஙக எல்லோருக்கும் எந்தளவு உதவி செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அவன் நன்றியைக் காட்டத் தவறவில்லை.

செமஸ்டர் விடுமுறையும் வந்தது, எல்லோரும் ஜாலியாக ஊர் கிளம்பி செல்ல முருகனுக்கு மட்டும் போக இஷ்டமில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தான், நண்பர்கள் எல்லோரும் அவரவர் வீட்டிற்கு அழைக்க, இல்லைடா, நீங்க போங்க,லீவு முடிந்த பின்பு பார்க்கத்தானே தானே போகிறோம்னு, சொல்லிட்டு எல்லோருடைய கையையும் பிடித்து கண் கலங்கினான். லீவிற்கு தானேடா போறோம் ஒரு வாரத்தில் பார்க்கப் போறோமேன்னு மற்ற பசங்க சொன்னாலும் முருகன் முகத்தை பார்த்து எல்லோருக்கும் சங்கடமாகத்தான் இருந்தது. மகேஷ்,சாமி,வேணு மூவரும் ஒரே ஊர் ஆகையால் முதலில் பஸ்ஸில் கிளம்ப , முருகன் மட்டும் இரயிலில் செல்ல குமாருடன் வந்தான், குமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து தினமும் வீட்டிலிருந்து கல்லூரி வந்து செல்வது வழக்கம்.

நண்பர்கள் அனைவரும் பிரிந்து சென்ற பிறகு முருகன் குமாரிடம் ஊர் போக இஷ்டமில்லை என்றும், திரும்பி வந்தாலும் வருவேன், அம்மா படிக்க வைக்க ரொம்ப கஷ்டப்படுறாங்கன்னு சொல்லி வருத்தப்பட்டான், குமாரும் அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைடா, அம்மா எப்படியாவது படிக்க வைப்பாங்கன்னு சொல்லிட்டு தன் ஊர் வரவும் இறங்கிக் கொண்டான்.

இது நடந்து ஐந்து நாள் இருக்கும், தீடீரென்று குமாருக்கு போன் வந்தது, முருகன் தூக்கு போட்டு இறந்து விட்டதாக, குமார் மனசொடிஞ்சி போனான், கடைசியாக பேசிய முருகன் முகம் கண் முன்னே வந்து நின்றது, ஒருவருக்கொருவர் செய்தியறிந்து நண்பர்கள் அனைவரும் வந்து சேர, இப்படி செய்வான்னு யாருக்கு தெரியும், நாமாவது கூட்டி சென்றிருக்கலாமேன்னு நண்பர்கள் கதறி அழுதார்கள்.

குடும்ப கஷ்டத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக எழுதி வைத்து சென்ற முருகனை என்னன்னு சொல்றதுன்னு, பசங்க தவிச்சு போனாங்க. எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு அவனுடைய அம்மா வளர்த்து படிக்க வச்சாங்க, இப்படி அம்மாவைப் பற்றி கூட யோசிக்காமல் முடிவெடுக்க எப்படி இவனால் முடிந்தது, அம்மாவை எப்படி எல்லாம் வாழ வைத்து பார்க்க ஆசைப்பட்டான், என்ற எண்ணங்கள் மோத எல்லோரும் மறுநாள் கல்லூரி வந்து சேர்ந்தனர்.

முருகனை மறக்க முடியாமல், அவன் நினைவாய்ப் பசங்க அவங்க
குரூப்பிற்கு, முருகன் பார்ட்டின்னு பெயரை வைத்திருந்தாங்க, பாசக்கார பசங்க..பாவம்..அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?....

--ஆசியா உமர்.


குறிப்பு:
தற்பொழுது ஊடககங்களில் கல்லூரி மாணவி, பள்ளி மாணவிகள் தற்கொலை என்ற செய்திகள் மனதை மிகவும் பாதித்தது. அதன் விளைவாய் எழுதிய கதை தான் இது.
பள்ளிகளிலும் ,கல்லூரிகளிளும் கவுன்சிலிங் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டால் மாணவ மாணவிகளுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும். ஒரு சில மாணவ மாணவிகள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள், உண்மை புரியாமல் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மீது பழி போடுவது இப்பொழுது சகஜமாகிவிட்டது. நான் குறிப்பிடும் ஆசிரியர்கள் பணிக்காக தங்களை அர்ப்பணித்தவர்களை மட்டும் தான்.

எங்கள் பல்கலைக் கழகத்தில் முதல் வருடம் நாங்கள் படிக்கும் பொழுது தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், தன்னம்பிக்கை டாக்டர். இல.செ.கந்தசாமி அவர்கள் சேவையாக ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் தனிப்பட்ட நேரம் ஒதுக்கி, அவர்களை சந்தித்து பிரச்சனைகளைக் கேட்டு அவர்களுக்கு அறிவுறை வழங்கியது நினைவு வருகிறது. அதனால் எத்தனை மாணவ மாணவிகள் மன உளைச்சலில் இருந்து விடுபட்டார்கள் என்பதை நான் அறிவேன். அவரைப் போல ஆசிரியர்களை இப்பொழுது பார்ப்பதே கடினம், டாக்டர் இல.செ அவர்கள் எழுதிய சில புத்தகங்கள் என்னிடம் உண்டு, அவற்றை பற்றி பின்பு பகிர்கிறேன். அவரின் சிரித்த முகம் எப்பொழுதும் என் கண் முன்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது, அவரிடம் பழகும், பேசும் வாய்ப்பு அப்பொழுது கிடைத்ததை இன்றும் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

இக்கதையில் கல்லூரி விடுதியில் மாணவர்களைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டத்தை ஓடவிட்டிருக்கிறேன், விமர்சனத்தை
மறக்காமல் சொல்லுங்க.

இந்தக் கதைக்கு இன்னொரு முடிவு இருக்கலாம் தானே அதனை வாசிக்க இங்கே கிளிக்கவும்.

--ஆசியா உமர்.


49 comments:

எல் கே said...

வேகமான ஓட்டம். காரணம் மட்டும் கொஞ்சம் வலுவா இருந்திருக்கலாமோ ??

asiya omar said...

எல்.கே வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.
ஆமாம் சகோ.வலுவில்லாத சின்ன சின்ன விஷயங்களைக்கூட இந்தக்கால மாணவ்ர்களால் தாங்க முடியலை என்பது தான் இப்போதைய மாணவர்களின் நிலை.

அமைதிச்சாரல் said...

இப்பத்திய குழந்தைகள் சட்ன்னு எதுலயும் முடிவெடுத்துடறாங்க.. அருமையா எழுதியிருக்கீங்கப்பா..

Kurinji said...

அருமை !

குறிஞ்சி குடில்

jagadeesh said...

ஆமாங்க கா, இப்போ இருக்குற பசங்களுக்கு என்ன மாறி தைரியம் இல்ல :)))

Gopi Ramamoorthy said...

நல்லா இருக்கு சிஸ்டர்.

angelin said...

".வலுவில்லாத சின்ன சின்ன விஷயங்களைக்கூட இந்தக்கால மாணவ்ர்களால் தாங்க முடியலை என்பது தான் இப்போதைய மாணவர்களின்
நிலை."

100% unmai.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கதை. நிறைய மாணவர்கள் நொடியில் இது போன்ற தப்பான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். பகிர்வுக்கு நன்றி.

எம் அப்துல் காதர் said...

பொதுவா எல்லோரும் யோசித் திருப்பது போலவே நீங்களும் முருகனை தற்கொலை தான் செய்திருக்கனுமா? அங்கே கதையை திருப்பி தன்னம்பிக்கை கொடுத்து நிமிர்ந்து நிற்க வைத்திருக்கலாமே??

சிநேகிதன் அக்பர் said...

//(புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு)//

உங்க கடமை உணர்ச்சியை பார்த்து ஆனந்த கண்ணீர் வருது :)

asiya omar said...

அமைதிசாரல் மிக்க நன்றி.

குறிஞ்சி மிக்க நன்றி.

ஜெகதீஸ் மிக்க நன்றி.

S.Menaga said...

நல்ல கதை அக்கா!!

asiya omar said...

கோபி மிக்க நன்றி,தொடர்ந்து வாங்க.கொஞ்சம் அவசரமாக போஸ்டிங் ஆயிடுச்சு.

ஏஞ்சலின் மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

எம் அப்துல் காதர் said...

@!@ சிநேகிதன் அக்பர் said...

//(புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு)//

// உங்க கடமை உணர்ச்சியை பார்த்து ஆனந்த கண்ணீர் வருது :) //


நான் அழுதே விட்டேன் :-))

சிநேகிதன் அக்பர் said...

சினிமால போடுற மாதிரி சப்டைட்டில்லாம் இருந்ததை பார்த்து காமெடி பதிவுன்னு நினைச்சு முதல் கமெண்ட் போட்டுட்டேனே.

படிச்சு பார்த்த பின் தான் தெரியுது. ரொம்ப அழகான மெஸேஜ் சொல்லியிருக்கிங்க.

சரியான நேரத்தில் சரியான பதிவு.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் இதை இதை தான் எதிர்பார்த்தேன்,நடப்பை எதார்த்தமாக எழுதியது.இப்படி தான் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட பிள்ளைகள் போயிடறாங்கன்னு சொல்ல எழுதப்பட்டது தான் இந்தக்கதை,வசதியில்லாத ஏழை மாணவிகள் தான் தற்பொழுது தற்கொலை செய்து கொண்டது,அவங்க மன அழுத்தத்திற்கு
வசதியின்மையும் ஒரு காரணம்னு குறிப்பிடவே இந்த கதை.

கருத்திற்கு நன்றி சகோ.

asiya omar said...

அக்பர் வருகைக்கு மகிழ்ச்சி.
நானே இழு இழுன்னு இழுத்திருக்கேன்,யாராவது கொடி பிடிச்சிகிட்டு வந்திட்டா என்ன செய்றது சகோ?

Chitra said...

எங்கள் பல்கலைக் கழகத்தில் முதல் வருடம் நாங்கள் படிக்கும் பொழுது தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், தன்னம்பிக்கை டாக்டர். இல.செ.கந்தசாமி அவர்கள் சேவையாக ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் தனிப்பட்ட நேரம் ஒதுக்கி, அவர்களை சந்தித்து பிரச்சனைகளைக் கேட்டு அவர்களுக்கு அறிவுறை வழங்கியது நினைவு வருகிறது.

...It is a blessing to have professor like him.

சே.குமார் said...

Akka...
nalla kathai.. nalla solli irukkinga...
murugan irappukkana karanam satru idarukirathu... kasdappattu padikka vaikkum ammavai viddu sella manam varuma? anaal indru sila nigalvulkal ithu pola nadakkinrana enpathal ok. innum nalla karanamaga irunthirukkalam endra L.K.yin karuththey enakkum thondrukirathu...

irunthum nalla oru kurippudan kathai solli irukkinga... arumai akka. niraiya kathai ezhuthunga...

anbudan
thambi KUMAR. (Kathaiyilum naan thaano? Ha... Ha...)

bandhu said...

//எல்.கே வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.
ஆமாம் சகோ.வலுவில்லாத சின்ன சின்ன விஷயங்களைக்கூட இந்தக்கால மாணவ்ர்களால் தாங்க முடியலை என்பது தான் இப்போதைய மாணவர்களின் நிலை.//
ரொம்ப சரி! எது முக்கியம் எது முக்கியமில்லைன்னு உணர பெற்றோராகிய நாம் சரியாக சொல்லிக்கொடுப்பதில்லை என்று நினைக்கிறேன். படிப்பு , படிப்பு என்று அதை மட்டுமே முக்யமாக காட்டும் நாம் வாழ்கையில் படிப்பை தவிர மற்றதும் இருக்கிறதுன்னு சொல்வதில்லை! ஏனென்றால் நமக்கே புரிவதில்லை! இப்போது படித்து நல்ல வேலையில் இருக்கும் பலரும் ஜஸ்ட் vertically developed! மிக சாதாரண வேலைகளையும் செய்யத்தெரியாதவர்களாக இருக்கிறார்கள்! அடிப்படையிலேயே ஏதோ தவறு இருக்கிறது!

Riyas said...

கதை நல்லாருக்கு...

தங்கராசு நாகேந்திரன் said...

//(புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு)//

உங்க கடமை உணர்ச்சியை பார்த்து ஆனந்த கண்ணீர் வருது :)
எனக்கும்தான் என்ன உங்களது பொறுப்புனர்சி நல்ல பகிர்வு பாராட்டுக்கள்

டக்கால்டி said...

முருகன் பார்ட்டி...அருமை...எங்க கல்லூரியிலும் முருகனைப் போலவே ஒரு நண்பன் இருந்தான். பேரு காஜா...பயபுள்ள லூசுத் தனமா செத்துட்டான்...அதி ஞாபக படுத்தீட்டீங்க

vanathy said...

எல்கே சொன்னது போல இன்னும் கொஞ்சம் வலுவான காரணம் இருந்திருக்கலாம்ண்ணு தோணுது. நல்ல நடையில், சரளமாக எழுதி இருக்கிறீங்க.

இலா said...

Very nice story akka! Have you ever thought of writing about how much stress the younger kids are under. Too much pressure to study and fit in a school level social-norm. Last weekend I heard that one of my friend's friend's daughter is 4 year old and learning 5 languages polish, spanish, hindi,gujarathi, english :) where is the world moving. I want to write about it but time constraints . I am sure there are parents who burden the kids this way.

savitha ramesh said...

Miga arumai...neenga en oru book poda koodadhu..lovely

Gayathri Kumar said...

Very nice..

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Very nice one..!

asiya omar said...

மேனகா மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

குமார் கருத்திற்கு நன்றி.

bandhu மிக்க நன்றி.

ரியாஸ் மிக்க நன்றி.

தங்கராசு மிக்க நன்றி.

டக்கால்டி மிக்க நன்றி.

சசிகுமார் said...

சூப்பர் பதிவு அக்கா

asiya omar said...

வானதி மிக்க நன்றி.

இலா வருகைக்கு நன்றி.ஆமாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிள்ளைகளுக்கு மனஅழுத்தம் வேறுபட்டு காணப்படுகிறது.இந்தக்கதை மாதிரி பலவருடமாக நடந்து வந்தாலும் இப்ப ஊடகங்கள் வாயிலாக வெளியே வருகிறது.

asiya omar said...

சவிதா கருத்திற்கு நன்றி.அந்த அளவுக்கு எல்லாம் இன்னும் எழுத ஆரம்பிக்கலை.

கே.ஆர்.பி.செந்தில் said...

ஒகே..ஓகே...

FOOD said...

நிகழ் காலத்திற்கு ஏற்ற பதிவு. ஒருவரோடு ஒருவர் மனம் விட்டு பேசுதல் முக்கியம்.வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

அழகான அருமையான நடை.பட்டைதீட்டிக்கொண்டு வர்ரீங்க தோழி.

சி.கருணாகரசு said...

காலத்துக்கேற்ற கதை நல்லாவந்திருக்குங்க..... அப்படி ஏதும் குறையா தெரியல.

கோவை2தில்லி said...

எதார்த்தமான கதை. அழகா எடுத்து சொல்லியிருக்கீங்க.

asiya omar said...

காயத்ரி மிக்க நன்றி.

கொச்சுரவி மிக்க நன்றி.

சசி குமார் மிக்க நன்றி.

கேஆர்பி.செந்தில் மிக்க நன்றி.

food மிக்க நன்றி.

ஸாதிகா மிக்க நன்றி.

கருணாகரசு மிக்க நன்றி.

கோவை2தில்லி மிக்க நன்றி.

mahavijay said...

(புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு)

அய்யோ..:-)))

இப்போ யாருக்கும் எதையம் தாங்கும் மனசு இல்லை

கதை எழுத ரொம்ப ஆர்வம் வந்துவிட்டதா?? வாழ்த்துகள்..

இளம் தூயவன் said...

சொல்ல வந்த கருத்தை அழகாக சொல்லி உள்ளீர்கள். பிரச்சினைக்கு முடிவு தற்கொலை அல்ல ,அவை யாருடைய மனதில் எந்த ஒரு தருணத்திலும் தோன்ற கூடாது.

ரமா said...

எனக்கு உங்க கதை பிடித்திருகிறது ஆசியா. இப்படி நல்ல கருத்துக்கள் கொண்ட கதைகளை தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி.

Jaleela Kamal said...

இத படிச்சிட்டு என் பையன் நினைச்சி கலக்காமா போச்சு
என்னால் வீடு கிளீன் பண்ண முடியலன்னாலும், அவன் அவன் இடம் வரை புக், எல்லாம் சுத்தமா தட்டி பெருக்கி வைப்பான்,
ஹாஸ்டலில் நீங்கள் சொல்வது போல் தான் எல்லோரும் இருககஙக்லாம்,
இவன் மட்டும் வாரம் ஒரு முறை ஒரு ரூம கழுவி விடுவானாம், 3 மாதம் இவனே செய்வதை பார்த்துட்டு மீதி பிள்லைகள் வாரம் ஒரு முரை செய்ய ஆரம்பிச்சிட்டாஙலாம்.

Jaleela Kamal said...

இந்த காலத்து பிள்ளைகளுக்கு எதையும் எற்றுகொள்ளும் மனப்பக்குவம் இல்லை

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா...,
தற்கொலை என்னும் அவசரமான முடிவை நோக்கி வளரும் இளைய சமுதாயத்தினர் செல்வது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம். அவர்களெல்லாம் சிந்திக்க வைக்க நீங்க சொல்வது போன்ற நல்ல பேராசிரியர்களால் முடியும் என்பது சந்தோஷமான விஷயமாக உள்ளது அக்கா...
நல்ல கருத்தை யோசிக்க வைக்கும் கதை. வாழ்த்துக்கள் அக்கா...

அன்புடன்,
அப்சரா.

pinky4000 said...

எப்படி போஸ்ட் செய்வது

pinky4000 said...

கதைரொம்ப நன்னா இருக்கு.

Kamatchi said...

42மனதை உருக்கும் இந்தக்கால நிகழ்வு. வறுமையின் பிடிப்பில் பசங்களின் திடீர் முடிவு. கதைஓட்டம் படிப்பினையை அறிவுறுத்துகிறது.பாராட்டுகள்.
சொல்லுகிறேன் காமாட்சி

asiya omar said...

மஹா விஜய் மிக்க நன்றி.

ரமா மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

அப்சரா மிக்க நன்றி.

asiya omar said...

இளம் தூயவன் மிக்க நன்றி.

பிங்க்கி முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

காமாட்சி முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.