Saturday, February 19, 2011

முள்ளங்கி பொரியல்

தேவையான பொருட்கள் ;
முள்ளங்கி -300கிராம்
வெங்காயம் - 2
முழுப் பூண்டு - 1
பச்சை மிளகாய் - 3
மல்லி,கருவேப்பிலை -சிறிது
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
கடுகு - 1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 3டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
முள்ளங்கியை தோல் நீக்கி இப்படி பொடியாக கட் செய்து கொள்ளவும்.

வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்கி கொள்ளவும், மிளகாய் கீறி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் நறுக்கிய வெங்காயம்,பூண்டு,கீறிய பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் பூண்டு வதங்கியதும், நறுக்கிய முள்ளங்கி சேர்த்து வதக்கவும், சிறிது உப்பு சேர்க்கவும்.நன்கு பிரட்டி மூடி விடவும்.

நன்கு வதங்கியதும் திறந்து தேங்காய் துருவல் சேர்க்கவும்.

தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.

நன்கு பிரட்டி விட்டு இறக்கவும்.
சுவையான சத்தான முள்ளங்கி பொரியல் ரெடி.
இது சாதம் சப்பாத்தி,குபூஸ் உடன் சாப்பிட அருமையாக இருக்கும். பூண்டு,வெங்காயம்,தேங்காய் சேர்த்து செய்யும் பொழுது அது தனி ருசியோடு இருக்கும்.
முள்ளங்கி முதுமையை தள்ளி போடும்னு சொல்வாங்க, அடிக்கடி சேர்த்துக்கோங்க.
--ஆசியா உமர்.

35 comments:

Kurinji said...

mullangila poriyala? puthusa erukku akka. thanks for sharing.

kurinjikathambam

angelin said...

thanks asiya for sharing this very healthy recipe.
idhu varaikkum naan mullangi sambar mattume seyveen .this is new and looks yummy .shall try this tomorrow.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அருமையான ரெசிபி.

ரமா said...

ஆசியா உங்க சமையல் குறிப்புகள் எல்லாம் அசத்தலாகதான் இருக்கு.அதனாலதான் நீங்க "சமைத்து அசத்தலாம்" என பெயரிட்டனீங்களா?
முள்ளங்கி சாம்பார்,தொக்கு இவைதான் செய்வேன்.இனி உங்க பொரியலையும் செய்து அசத்திவிடவேண்டியதுதான்.செய்முறையும் ஈஸியாக இருக்கு.
அழகாயிருக்கிறது படங்கள்..நன்றி ஆசியா.

இலா said...

முள்ளங்கி பொரியலில் பூண்டா .. சூப்பர்.. ஒன்னே ஒன்னு இருக்கு செய்து பார்த்து சொல்லறேன்.. உங்க கோபி பொரியல் அ.சு ல இருந்து ரொம்ப உதவியா இருக்கு.. படிச்சு சொன்னேன் வீரா செய்தார் நல்லா இருந்தது...

எல் கே said...

பூண்டு சேர்த்து பண்ணது இல்லை நன்றி சகோ

asiya omar said...

குறிஞ்சி வருகைக்கு மிக்க நன்றி.முள்ளங்கியை பூண்டு வெங்காயத்துடன் வதக்கும் பொழுது ஒரு சுவை.ஸோ டேஸ்டி.

asiya omar said...

ஏஞ்சலின் செய்து பார்த்திட்டு சொல்லுங்க.பிடிக்கும்.
கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

வ அலைக்கும் ஸலாம் ஆயிஷா,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ரமா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.ஏதோ வீட்டில் சமைக்கும் இலகுவான சமையலை படம் பிடித்தால் போடுவதுண்டு,நான் பெரிய குக் எல்லாம் இல்லைபா.நிறைய முயற்சி செய்வதுண்டு.

asiya omar said...

இலா வருகைக்கு மிக்க நன்றி.நீங்க என் ரெசிப்பி செய்து பார்ப்பதையறிந்து மிக்க மகிழ்ச்சி.

vanathy said...

முள்ளங்கி உடலுக்கு மிகவும் நல்லது. நான் எப்போதும் சிவப்பு முள்ளங்கி தான் சமையல் செய்வேன். அடுத்த முறை இதில் செய்து பார்க்க வேண்டும்.

FOOD said...

இன்று விடுமுறை நாளானதால், பலருக்கு நாவுக்கு ருசியான சத்தான ரெசிபி கொடுத்துள்ளீர்கள்.

asiya omar said...

எல்.கே வருகைக்கு மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

food வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Priya Sreeram said...

yummy- i add potato with radish ! this looks nice too !!

சே.குமார் said...

Mullanki poriyal... Wow... nalla samaiyal kurippu akka.

GEETHA ACHAL said...

அருமையான சத்தான பொரியல்...சூப்ப்பர்...

Akila said...

never done like this.. always used to do mullangi sambar only... this one is nice...
Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila

ஜெய்லானி said...

முள்ளங்கியில் சாம்பார்ன்னா ரொம்ப பிடிக்கும். ((அதுவும் மனைவி கையால் செய்தால் மட்டுமே)) :-))

மற்றபடி வெள்ளை முள்ளங்கி தேங்காய் போடாமல் செய்யுங்க பீப்பி பிரஷர் உள்ளவங்களுக்கு ரொம்ப நல்லது

ஹை ஷுகர் பேஷண்டுக்கு தொடர்ந்து முள்ளங்கி வேக வைத்த நீர் குடித்து வந்தால் சர்க்கரை அளவு குறைந்து 15 நாளில் வித்தியாசம் தெரியும் . நார்மல் நிலைக்கு வருவாங்க .

வெங்கட் நாகராஜ் said...

எங்க வீட்டுலயும் செய்வாங்க! நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ.

savitha ramesh said...

miga arumai...enakkum poriyal theriyadhu.will try it soon

mahavijay said...

முள்ளங்கி முதுமையை தள்ளி போடும்னு சொல்வாங்க, அடிக்கடி சேர்த்துக்கோங்க.

இது ரொம்ப நல்ல தகவளா இருக்கு..
நன்றி..

அன்புடன் மலிக்கா said...

இதில் நான் முட்டையும் சேர்த்து செய்வோம் ஆசியாக்கா..

அருமையான ரெசிபி..

இளம் தூயவன் said...

செய்முறை மற்றும் படங்கள் அருமை.

Jaleela Kamal said...

பார்க்கவே வெள்ளை வெளேருன்னு இருக்கு
நானும் பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்குவேன்.

கோமதி அரசு said...

வெங்காயம் பூண்டு சேர்க்காமல் முள்ளங்கி பொரியல் செய்வேன்.
அடுத்தமுறை வெங்காயம் பூண்டு சேர்த்து செய்துப் பார்க்கிறேன்.

நன்றி ஆசியா.

asiya omar said...

ப்ரியா ஸ்ரீராம் மிக்க நன்றி.

சே.குமார் மிக்க நன்றி.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

அகிலா மிக்க நன்றி.

ஜெய்லானி மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

சவிதா மிக்க நன்றி.

மஹாவிஜய் மிக்க நன்றி.

மலிக்கா மிக்க நன்றி.

இளம்தூயவன் மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

கோமதியரசு மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் said...

// முள்ளங்கியில் சாம்பார்ன்னா ரொம்ப பிடிக்கும். ((அதுவும் மனைவி கையால் செய்தால் மட்டுமே)) :-))//

எனக்கும் தான். ஆனா மகள் கையால் செய்தது தான் மிகவும் இஷ்டம். ஏன்னா அது நீங்கள் போட்ட குறிப்பை பார்த்து தான் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

எம் அப்துல் காதர் said...

//பீப்பி பிரஷர் உள்ளவங்களுக்கு ரொம்ப நல்லது. ஹை ஷுகர் பேஷண்டுக்கு தொடர்ந்து முள்ளங்கி வேக வைத்த நீர் குடித்து வந்தால் சர்க்கரை அளவு குறைந்து 15 நாளில் வித்தியாசம் தெரியும். நார்மல் நிலைக்கு வருவாங்க. //

டாக்டர் ஜெய்லானி வாழ்க!! (ஹி..ஹி..)

asiya omar said...

சகோ.அப்துல் காதர் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வு. நானும் செய்வதுண்டு. பூண்டு சேர்த்ததில்லை. தேங்காய் துருவலுக்கு பதிலா வறுத்த வேர்க்கடலையை ஒன்றும் பாதியுமா உடைத்து சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கி விடுவேன்.

சி.கருணாகரசு said...

மிக எளிமையா இருக்குங்க மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

அருமையான பொரியல்...சூப்பர்...

Gopi Ramamoorthy said...

இதுவும் புதுசா இருக்கு. ட்ரை பண்ணிப் பாத்துட வேண்டியதுதான்

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா..., முள்ளங்கியில் சிம்பிள் மற்றும் சூப்பரான பொறியலை தந்துள்ளீர்கள்.நிச்சயம் டேஸ்ட்டாக இருக்கும்னு நினைகிறேன்.
நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.