Monday, February 21, 2011

கூனி தட்டைபயறு கத்திரிக்காய்

தேவையான பொருட்கள்:
காய்ந்த கூனி இறால் - 2கைபிடியளவு
கத்திரிக்காய் -கால்கிலோ
தட்டைப்யறு -100கிராம்
வெங்காயம் -2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
பூண்டு பல் -4
குழம்பு மசாலா அல்லது மீன் மசாலா - 2டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - 1டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
தேங்காய் அரைத்தது - 3டேபிள்ஸ்பூன்
புளி - பெரிய நெல்லியளவு
உப்பு - தேவைக்கு
கூனி இறாலை மணம் வரும்படி சிவறாமல் வறுத்து கொள்ளவும்.தட்டை பயறை குறைந்தது நான்கு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் பயறுடன் தேவைக்கு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும், கடுகு, உ.பருப்பு கருவேப்பிலை சேர்த்து வெடிக்கவும்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாய் போட்டு வதக்கவும்.

பின்பு நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு மூடி போட்டு வேக விடவும்.

கத்திரிக்காய் வெந்ததும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டவும்.

வறுத்த கூனி இறால், மசாலா தூள் சேர்க்கவும்,நன்கு பிரட்டி விடவும்.

வேக வைத்த தட்டை பயறு சேர்க்கவும்.


நன்கு பிரட்டி விடவும்.

புளிக்கரைசல் விடவும், உப்பு சரிபார்க்கவும்.நன்கு கொதிக்க விடவும்.மசாலா,புளி வாடை மடங்க வேண்டும்.


அரைத்த தேங்காய் சேர்த்து நன்கு கொதிவரவும், சிம்மில் சிறிது வைத்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான கூனி தட்டைபயறு கத்திரிக்காய் ரெடி. இதனை ப்லைன் ரைஸ், சப்பாத்தி,அரிசி மாவு ரொட்டியிடனும் பரிமாறலாம்.வெஜ் சாப்பிடுறவங்க தட்டை பயறு கத்திரிக்காய் மட்டும் போட்டு இம்முறையில் செய்யலாம்.
--ஆசியா உமர்.

25 comments:

எல் கே said...

present

சங்கவி said...

சூப்பர்...

Jaleela Kamal said...

சத்தனா சமையல்

Chitra said...

Thank you for this mouth-watering recipe. Looks so good!

சசிகுமார் said...

என்னென்னமோ பேரு வைக்கிறாங்கப்பா சரி நமக்கு தெரிஞ்சத சொல்லிடுவோம் எப்பவும் போல அருமையான டிப்ஸ் அக்கா

asiya omar said...

எல்.கே.வருகைக்கு நன்றி.

சங்கவி மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

சசிகுமார் எங்க பக்கம் காய்ந்த சிறிய சன்னா கூனியை சுருக்கி கூனின்னு சொல்வது வழக்கம்.கருத்திற்கு மிக்க நன்றி.

Kurinji said...

Superb.....

சே.குமார் said...

அருமையான சமையல் டிப்ஸ் அக்கா.

ஸாதிகா said...

ஆசியா,என்ன வித்தியாசமாக சமைக்கறிங்கப்பா!

FOOD said...

தினம் தினம் தூள் கிளப்புறீங்க. வாழ்த்துக்கள்.

ஜிஜி said...

போட்டோஸ் பாக்கும்போதே எச்சில் ஊருது.டெல்லில நான் இருக்குற ஏரியாவுல இறால் எல்லாம் கிடைக்காதுங்க. அதனால ஊருக்குப் போனாதான் இதெல்லாம் சாப்பிட முடியும்.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...! சுடு சோற்றுக்கு இது சூப்பரா இருக்கும் ;) இந்த இறாலை எங்க ஊர் பக்கம் 'செனக்கூனி' என்பார்கள். அதில் பல வகையா சமைக்கலாம்! பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி ஆசியாக்கா.

Anonymous said...

உங்க வீட்டுக்கு வந்து ஒரு மாதம் தங்கி உங்க எல்லா சமையலையும் ருசிக்கனும் போல இருக்கு.

என் ஆசை நடக்கவா போகுது:-(

Jay said...

very intersting n tempting dish..
Tasty appetite

சிநேகிதன் அக்பர் said...

சமைத்து அசத்திட்டீங்க

S.Menaga said...

மிகவும் அருமையாக இருக்கும்..நாங்க தட்டைப்பயிறு சேர்க்காம செய்வோம்...

Gopi Ramamoorthy said...

இப்போதான் இதைப்பத்திக் கேள்விப்படறேன். நல்லா இருக்கு

தேனம்மை லெக்ஷ்மணன் said...

இறாலின் தோல் எடுக்க வேண்டாமா ஜலீலா..

asiya omar said...

குறிஞ்சி மிக்க நன்றி.

சே.குமார் மிக்க நன்றி.

ஸாதிகா மிக்க நன்றி.

food மிக்க நன்றி.

ஜிஜி மிக்க நன்றி.

அஸ்மா மிக்க நன்றி.

மஹாவிஜய்,வாங்க. மிக்க நன்றி.

jay மிக்க நன்றி.

அக்பர் மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

கோபி மிக்க நன்றி.

தேனக்கா,இது காய்ந்தே வரும்,தோல் எடுக்கவேண்டாம்,மிகச்சின்னது.மறதியாக ஜலீலான்னு சொல்லீட்டீங்களா அக்கா?

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Krishnaveni said...

mouthwatering recipe, yummy

angelin said...

தட்டை பயறு என்பது காராமணி தானே ஆசியா.ஹையா ஹையா எனக்கு தமிழ் font வேலை செய்யுது

vanathy said...

சூப்பரா இருக்கு ரெசிப்பி & படங்கள்.

அமைதிச்சாரல் said...

நல்லாருக்குப்பா..

Vijisveg Kitchen said...

நல்ல சூப்பர் ரெசிப்பிங்க. எனக்கு பிடித்த டிஷ்.

Vijisveg Kitchen said...

இதில் இறால் எல்லாம் நாங்க சேர்க்க மாட்டோம், அது இல்லாம்ல் செய்வோம்.