Wednesday, February 23, 2011

பூசணிக்காய் பருப்பு

தேவையான பொருட்கள்:
சாம்பல் பூசணிக்காய் - கட் செய்தது ஒரு தட்டு முழுவதும்.
(நான் வாங்கிய துண்டு 800கிராம் இருந்தது)
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி -1
மல்லி,கருவேப்பிலை -சிறிது
பச்சை மிளகாய் -2-4
தேங்காய் - 4டேபிள்ஸ்பூன்
பருப்பு - 100கிராம்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
பூண்டு பல் - 6
கடுகு,உ.பருப்பு -தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் -2
உப்பு - தேவைக்கு

பருப்புடன்,மஞ்சள் தூள்,சீரகத்தூள்,பூண்டு பல் ,தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
பூசணிக்காயை கட் செய்து அலம்பி வைக்கவும்.


வெந்த பருப்புடன்,நறுக்கிய தக்காளி,வெங்காயம்,பூசணிக்காய்,மல்லி இலை சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.


தேங்காய் துருவலுடன் மிளகாய் சேர்த்து பரபரவென்று அரைத்து கொள்ளவும்.

அரைத்த தேங்காயை பூசணிக்காய் பருப்புடன் சேர்க்கவும்,குக்கரை மூடி மீண்டும் ஒரு விசில் விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை போட்டு வெடிக்கவும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவற வதக்கி தாளித்ததை வெந்த பூசணி பருப்பில் கொட்டவும்.கலந்து விடவும்.


சுவையான பூசணி பருப்பு ரெடி.
இது ப்லைன் சாதம், சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.பூசணி துண்டுகள் பார்க்க கண்ணாடி போல் இருக்கும்.எங்க ஊரில் இதனை தடியங்காய் என்று சொல்வது வழக்கம்.காயில் விதை முற்றாமல் இருந்தால் அத்துடன் நறுக்கி சமைக்கலாம்.
--ஆசியா உமர்.

30 comments:

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Hey.. This is my favorite...!

ஸாதிகா said...

இது வரை அலவாவைத்தவிர பூசணியில் எதுவும் சாப்பிட்டது இல்லை.அவசியம் செய்து பார்த்து விடுகிறேன்.வித்தியாசமாக சமைத்து அசத்தறீங்கப்பா.

சே.குமார் said...

Akka... ithu enga veetla amma seivargal... enakku romba pidiththa kozhumbu.

பூங்குழலி said...

எளிமையான ரெசிபி

asiya omar said...

கொச்சு ரவி கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

ஸாதிகா நான் அடிக்கடி வாங்கும் காயில் இதுவும் ஒன்று,சாம்பாரும் வைக்கலாம்.புளி சேர்க்காமல் தக்காளி போட்டு கெட்டியாக சாம்பார் வைத்தால் அருமையாக இருக்கும்.
வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி தோழி.

asiya omar said...

சே.குமார் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

பூங்குழலி வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கோவை2தில்லி said...

பூசணிக்காயில் கூட்டு, சாம்பார், தயிர் பச்சடி செய்வேன். இது வித்தியாசமா இருக்கு. செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

சாருஸ்ரீராஜ் said...

அக்கா சூப்பர்கா..பார்கும் போதே சாப்பிட தோணுது.

மனோ சாமிநாதன் said...

பூசணிக்காய் பருப்பு நன்றாயிருக்கிறது ஆசியா! வழக்கம்போல புகைப்படங்களும் அருமை!!

Jaleela Kamal said...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=685:-empty-&catid=19:non-veg&Itemid=133

இதில் உள்ள எம்டி சால்னா உஙகளுடையாதான்னு பாருங்க

கொஞ்ச அசந்தா பிலாக்கே தூக்கிடுவானுஙக் போல
இதுக்கதான் சமைய்ல் குறிப்பு போடவத குறைத்தேன், அங்கு என் ஆம்பூர் மட்டன் பிரியானியும்

Geetha6 said...

waav

asiya omar said...

கோவை2தில்லி மிக்க நன்றி.

சாருஸ்ரீ மிக்க நன்றி.

மனோ அக்கா மிக்க நன்றி.

கீதா6 மிக்க நன்றி.

Priya Sreeram said...

i love it--- perfect with hot rice or rotis

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...எனக்கு மிகவும் பிடித்தது...சூப்பர்ப்....

asiya omar said...

ஜலீலா,நான் இப்ப தான் போய் பார்த்தேன், அந்த வயிற்று எரிச்சலை ஏன் கேட்கறீங்க,இன்னும் அறுசுவையில் நான் கொடுத்த சில குறிப்புக்களும் இருக்கு,கொஞ்சம் முன்னே பின்னே போட்டு இருக்காங்க.நான் இந்த குறிப்பை 2009 பிப்ரவரியில் அறுசுவையில் கொடுத்து இருக்கேன்,இங்கே அக்டோபரில் கொடுத்து இருக்காங்க.தினகரனே என் பல குறிப்பை அப்படியே காப்பி செய்து போட்டிருக்கும் பொழுது கீற்று மட்டும் என்னவாம்?
நம்மால் என்ன செய்ய முடியும்? யாரோ நம்மால் பிழைக்கிறாங்களேன்னு சந்தோஷம் பட்டுக்க வேண்டியது தான்,இது ரெசிப்பி தர்மம் செய்த மாதிரி...நினைத்து கொண்டேன்.

Kanchana Radhakrishnan said...

சூப்பர்.

vanathy said...

super combination, Akka.

Chitra said...

இதை சாதத்தில், நெய்யுடன் சேர்த்து சாப்பிட எனக்கு பிடிக்கும். :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

பூசணிக்காய் வாங்கி வச்சிருக்கேன்.. இன்னிக்கே செஞ்சிட வேண்டியதுதான்..

நன்றிங்க :)

FOOD said...

தினம் நீங்கள் தரும் புது புது ரெசீப்பீ சூபர்

மோகன்ஜி said...

போடோவைப் பார்த்ததும் பசிக்க
ஆரம்பிச்சிடுச்சி

asiya omar said...

ப்ரியா ஸ்ரீராம் மிக்க நன்றி.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

ஆனந்தி மிக்க நன்றி.

food மிக்க நன்றி.

மோகன் ஜி மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் ஒட்டிற்கும் மிக்க நன்றி.

S.Menaga said...

பார்க்கவே செம அருமையாக இருக்கு...

savitha ramesh said...

romba nalla irukku...yaar enna seidhalum,neengal post pannuvadhai vittu viadheergal...

அமைதிச்சாரல் said...

ஆஹா.. நல்லாருக்குமே.

அமுதா கிருஷ்ணா said...

பார்க்கவே நல்லாயிருக்கு

ரமா said...

அசத்துறீங்க ஆசியா.சான்ஸே இல்லை. சூப்பர் டேஸ்ட்.நான் செய்துபார்த்துவிட்டுத்தான் கமன்ட் எழுதுகிறேன். எப்படி நல்ல நல்ல ரெசிபி கொடுத்து அசத்துறீங்க. ஆனால் நீங்க கொடுக்கும் ரெசிபியால் அதிர்ஷ்டம் எனக்கு.நன்றி.நன்றி.கணவர் பாராட்டும்,கிப்டும் சேர்த்து கிடைக்கிறது.நான் ஒன்லிவெஜிடேரியன்.நன்றி ஆசியா.

asiya omar said...

மேனகா மிக்க நன்றி.

சவிதா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

அமுதா கிருஷ்ணா மிக்க நன்றி.

ரமா மிக்க நன்றி.செய்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா..,பூசணியை இதுவரை வாங்கி சமைத்தது கிடையாது.தோழி வீட்டில் சாப்பிட்டிருக்கின்றேன் அவ்வளவுதான்.
உங்கள் கூட்டு முறை மிகவும் நல்லா இருக்கு.

அன்புடன்,
அப்சரா.