Thursday, February 24, 2011

சுறா முருங்கைக்கீரை ஆணம் & சுறாப்புட்டு

சுறா முருங்கைக்கீரை ஆணம் தேவையான பொருட்கள்: சுறா மீன் துண்டுகள் - அரைக்கிலோ முருங்கைக்கீரை - ஒரு கப் சின்ன வெங்காயம் -100கிராம் தக்காளி -1 பூண்டுபல்- 10 மிளகுத்தூள் - ஒன்னரை டீஸ்பூன் சீரகத்தூள் - முக்கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் - முக்கால் டீஸ்பூன் மல்லித்தூள் -2டீஸ்பூன் மீன் மசாலா - 1டீஸ்பூன் (விரும்பினால்) தேங்காய் - 3டேபிள்ஸ்பூன் புளி - நெல்லியளவு உப்பு - தேவைக்கு நல்ல எண்ணெய் -4டேபிள்ஸ்பூன் கடுகு,உ.பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் சுறா மீனை நன்கு கழுவி சுத்தமாக எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் குறிப்பிட்ட மசாலா தூள் வகைகள், பூண்டு,சின்ன வெங்காயத்தில் முக்கால் பாகம், தக்காளி,தேங்காய் துருவல் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும். புளி சிறிது கரைத்து எடுக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் மிக்ஸியில் அரைத்த மசாலா,தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.மசாலா வாடை அடங்கியதும். சிறிதளவு புளிக்கரைசல் விடவும்.நன்கு மூடினால் பொங்கி வடியும், திறந்தே கொதிக்கட்டும்.
அதற்குள் முருங்கைக்கீரையை ஆய்ந்து அலசி எடுக்கவும்.
கொதித்த ஆணத்தில் சுறா மீன் துண்டுகளை போடவும்.மீன் வேகட்டும். எலும்பு துண்டுகள் தவிர மற்ற துண்டுகளை புட்டுவிற்கு தனியாக எடுத்து வைக்கவும்.
ஆணத்தில் ஆய்ந்த முருங்கைக்கீரையை போடவும்.நன்கு வேகட்டும்.
ஒரு பாத்திரத்தில் தாளிக்க எண்ணெய் விட்டு, காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு போட்டு வெடித்ததும் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு சிவற வதக்கவும்.
கொதித்து கொண்டிருக்கும் சுறா முருங்கைக்கீரை ஆனத்தில் தாளிசத்தை கொட்டவும். அடுப்பை அணைத்து விடவும். நெலு நெலுன்னு ஆணம் சூப்பராக இருக்கும்.
சுவையான சத்தான சுறா முருங்கைக்கீரை ஆணம் ரெடி. குளிர்,பனிக்காலத்தில் செய்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது.பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் நல்லது.இந்த ஆணத்திற்கு, பூண்டு, நல்ல எண்ணெய், முருங்கைக்கீரை தான் தனி ருசியை தரும். ப்லைன் ரைஸில் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்,பொரித்த அப்பளம்,சுறாப்புட்டு உடன் பரிமாறலாம்.

சுறாப்புட்டு :

சுறா மீன் வேகவைத்தது - கால் கிலோ

வெங்காயம் - கால் கிலோ

பூண்டு -6பல்

தக்காளி - 1

பச்சை மிள்காய் - 2

தேங்காய் -3டேபிளஸ்பூன் மிளகுத்தூள் - அரைஸ்பூன்

சீரகத்தூள் - அரைஸ்பூன்

மிளகாய்த்தூள் -அரைஸ்பூன்(விரும்பினால்)

மல்லி,கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் -3டேபிள்ஸ்பூன்

கடுகு,உ.பருப்பு - 1டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

வெங்காய்ம், பூண்டு, தக்காளி, மல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் பச்சை மிளகாய் மிக்சியில் பரபரவென்று அரைத்து வைக்கவும்.
ஆணத்தில் இருந்து எடுத்த எலும்பு இல்லாத மீன் ஆற வேண்டும்.ஆணம் வைக்கவில்லை என்றால் தனியாகவும் மீனை கழுவி மஞ்சள் தூள்,உப்பு போட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விடாமல் வெந்து எடுக்கலாம்.
மீனை இப்படி உதிர்த்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு,கருவேப்பிலை தாளித்து நறுக்கியவற்றை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்,சிறிது நேரம் மூடவும்.
வெங்காயம், தக்காளி,பூண்டு வதங்கிய பின்பு உதிர்த்த மீனை சேர்க்கவும், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும், காரம் தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.பிரட்டி விடவும், உப்பு சரி பார்க்கவும்.

அரைத்த தேங்காய் மிளகாய் கலவையை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்,புளிப்பு தேவைப்பட்டால் அரை எலுமிச்சை பழம் பிழியவும், நன்கு பிரட்டி விடவும்.

.
சுவையான சுறாப்புட்டு ரெடி.

இதனை சாதத்துடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும், மீதியானால் ப்ரெட்டில் வைத்து சாண்ட்விச் செய்தும் சப்பாத்தியில் ரோல் செய்தும் சாப்பிடலாம்.

என்னுடைய மற்றொரு சுறாப்புட்டு ரெசிப்பியை இங்கு காணலாம்.


--ஆசியா உமர்.


30 comments:

Chitra said...

சுறாப்புட்டு, ஊரில் அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன். முருங்கை கீரையுடன் செய்யும் அந்த குழம்பு முறை, எனக்கு புதுசாக இருக்கிறது.

அன்னு said...

@asiyaakka,

englishla enna peyar intha minukku? murunggai ilaiyai kannaal parththe varudangalaagi vittathu. ninachaale azuvaachi azuvaachiyaa varuthu.... :((

asiya omar said...

சித்ரா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.எங்க ஊரில் இப்படி செய்வது வழக்கம்.

asiya omar said...

ஆங்கிலத்தில் shark.பால் சுறா பார்த்து வாங்க வேண்டும்,இங்கு யு.ஏ.யில் ரொம்ப சீப்.ஒரு கிலோவில் கூட மீன் கிடைக்கும்,தோல் உரித்து கட் செய்து தருவாங்க,இது நான் ஊரில் இருக்கும் பொழுது செய்த பொழுது எடுத்தது,அதை ஃபைலில் இருந்து எடுத்து இன்று போட்டேன்.வருகைக்கு நன்றி அன்னு.

சே.குமார் said...

முருங்கை கீரையுடன் செய்யும் முறை புதுசாக இருக்கிறது.

அமைதிச்சாரல் said...

முருங்கையுடன் புதுசா இருக்கு..

ஸாதிகா said...

வித்த்யாசமான காம்பினேஷனில் சமைக்கறீங்க ஆசியா.

asiya omar said...

சே.குமார் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.

அமைதிச்சாரல் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.

ஸாதிகா இது காலங்காலமாக எங்க ஊரில் சுறா என்றால் முருங்கைக்கீரை மிளகு ஆணம் தான்.வருகைக்கு மகிழ்ச்சி ஸாதிகா.

GEETHA ACHAL said...

நன்றாக இருக்கின்றது...பார்க்கும் பொழுதே சாப்பிட தோனுது..

மீனை வேகவைக்காமல் அப்படியேவா குழம்பில் போட வேண்டும்...

asiya omar said...

கீதா ஆச்சல் அப்படியே தான் குழம்பில் மீனை போடனும்,குழம்பு கொதிக்கும் பொழுது வெந்து விடும்.குழம்பில் உள்ள வெந்த மீனை எடுத்து புட்டு வைப்பாங்க எங்க பக்கம்.
வருகைக்கு மகிழ்ச்சி.

ஜெய்லானி said...

சுறா மீன் இதுவரை சாப்பிட்டதில்லை ..!! அதனால நோ கமெண்ட்ஸ் :-)

revathi said...

Aanam / suraa puttu - rendum supera irukku... combination asathal..
Reva

mahavijay said...

புதுசா இருக்கு இந்த குழம்பு.

முருங்கை கீரையில் சாம்பார்தான் தெரியும்.

புதுசா சொல்லி தருவதற்கு நன்றி.

இலா said...

Yummooiiii... Yummy!!! I like the recipe will try it when i get shark :)

இளம் தூயவன் said...

ஆஹா இது என்ன புது மாதிரியா இருக்கு.

S.Menaga said...

Both recipes looks very tempting ..

vanathy said...

mouth watering recipes. super!!

AZIFAIR-SIRKALI said...

Fisha miss pannetene...பார்க்கும் பொழுதே சாப்பிட தோனுது..
azifair-sirkali.blogspot.com

சசிகுமார் said...

முதல்ல எனக்கு ஒண்ணு சொல்லுங்க இது சைவமா இல்லை அசைவமா

Malar Gandhi said...

I have tasted sura puttu a lot, back home in India. But the other recipe you described looks very unique' trendy...sounds interesting to me, a healthy addition...who can resist this incredible preparation,Love Murungai keerai a so much:):)

சுந்தரா said...

இதுவரைக்கும் கேள்விப்படாத ரெசிபி.

படத்தைப் பார்த்ததும் முருங்கைக்கீரை ஆசை வந்திடுச்சு.

FOOD said...

கலக்குறீங்க சகோ

மகி said...

ப்ரெசென்ட் ஆசியா அக்கா! :)

நான் கீரையை குக்கர்ல வேக வைத்ததே இல்ல..3 -4 நிமிஷத்திலே வெந்துபோகுமேன்னு சும்மாதான் வைப்பேன்.

Saras said...

sura puttu looks delicious & healthy one and my husband fav too...
You have nice space here & following you..

asiya omar said...

ஜெய்லானி வருகைக்கு நன்றி.

ரேவதி மிக்க நன்றி.

மஹா விஜய் மிக்க நன்றி.

இலா மிக்க நன்றி.

இளம்தூயவன் மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

ஆஸிஃப் மிக்க நன்றி.

சசிகுமார் இது நான் வெஜ் தான் மீன் நான்வெஜ்தானே!

மலர் காந்தி மிக்க நன்றி.

சுந்தரா வாங்க,மிக்க நன்றி.

ஃபுட் மிக்க நன்றி.

மகி நான் இங்கு குக்கரில் வேக வைக்க சொல்லலையே!கமெண்ட் பார்க்காமல் போட்டுட்டியா ?வருகைக்கு நன்றி.

asiya omar said...

சரஸ் வாங்க,கருத்திற்கும் பின் தொடர்வதற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

Mahi said...

ஹிஹி,ஆசியாக்கா,தூக்க கலக்கத்துல கமென்ட் போட்டுட்டேன் போல!!:) :)

Jaleela Kamal said...

எங்க முருங்ககீரை இப்ப கிடைக்குது, முன்பு இருந்த ஆபிஸ் பாய் பெரியவர் அடிக்கடி பறித்து கொண்டு வந்து தருவார்,
இப்ப அவர் கேன்சலில் போய் விட்டார், முருங்கக்கீரையும் கிடைக்கல
சுறா மீன் சால்னா புட்டு என்றால் ஒரு பிடிதான்

Tharifa said...

asiya akka,en oorum melappalayam thaan.namma oor thakkudi konjam saithu kattungalen.pls.matrapadi inru thaan ungal blog enakku therindathu.arusuvaiil ungal kurippugal paarthullen.anaithum super.

asiya omar said...

tharifa வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.நம்ம ஊர் தக்கடி குறிப்பு ஏற்கனவே கொடுத்திருக்கிறேன்.லின்க் இதோ
http://asiyaomar.blogspot.com/2010/06/blog-post_24.html
மட்டன் குறிப்பு,டிஃபன் வகை,மேலப்பாளையம் ஸ்பெஷலில் தக்கடி குறிப்பு இருக்கு.நீங்க இந்த லின்கை கிளிக் செய்து அல்லது காப்பி பேஸ்ட் செய்து பாருங்க.