Saturday, February 26, 2011

சிக்கன் ஃப்ரான்க்ஸ் சாண்ட்விச் (நம்ம டேஸ்டில்)


சிக்கன் ஃப்ரான்க்ஸ் டீஃப்ராஸ்ட் செய்யாமல் குக்கரில் தண்ணீர் வைத்து ஒரு விசில் வைத்து எடுக்கவும்.
தேவையான பொருட்கள்;
சிக்கன் ஃப்ரான்க்ஸ் - 2
லாங் பன் - 2
டொமட்டோ கெச்சப் -2டீஸ்பூன்
புளிக்காத கெட்டி தயிர் - 2டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2டீஸ்பூன்
வீட்டு குழம்பு மசாலா -1டீஸ்பூன்
அல்லது கறி மசாலா.


வேக வைத்த ஃப்ரான்க்ஸில் ஆலிவ் ஆயில்,மசாலா தடவி ஓவனில் 30செகண்ட் வைத்து எடுக்கவும்.

பன் நீளவாக்கில் பாதியாக கட் செய்து முதலில் தயிர் தடவவும்.

பின்பு பன்னின் ஒரு பக்கம் டொமட்டோ சாஸ் தடவவும்.

ஓவனில் ரெடி செய்த ஃப்ரான்க்ஸ் பன்னின் நடுவில் வைக்கவும்.10-20செகண்டு ரெடி செய்த சாண்ட்விச் வைத்து எடுக்கவும்.


பின்பு ரெடி செய்த சாண்ட்விச்சை கட் செய்து பரிமாறவும். சாண்ட்விச்சில் லெட்டூஸ் இலைகள் வைத்தும் பரிமாறலாம்.இது நான் செய்த சாண்ட்விச் நம்ம ஸ்டைலில் வித்தியாசமான ருசியாக இருக்கும்.

என் மகன் செய்த சாண்ட்விச் படம் எடுத்தேன், அவர் மயோனைஸ் ,மஸ்டர்ட் சாஸ் மற்ற சாஸ் எல்லாம் சேர்த்து செய்திருக்கிறார்.இந்த சாஸ் ட்ரேயில் என்ன என்ன பிரியமோ அத்தனையும் சேர்த்து செய்திருக்கிறார்,ரெசிப்பி கேட்டேன், சீக்ரெட் என்று சொல்லிவிட்டார்.

25 comments:

athira said...

ஆசியா... இம்முறை வடை எனக்குத்தான், தராவிட்டால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

அழக்காகச் செய்து காட்டியிருக்கிறீங்க, இங்கே பொதுவாக எல்லாக் குட்டீஷுக்கும் இது பிடிக்கும்(எங்களுக்கும்தான்:)).

ஆனா நீங்க பெயர் ஏதோ சொல்றீங்க, நாங்க ஹொட் டோக் என்றுதான் அழைப்போம்... .

asiya omar said...

அதிரா இன்று உங்களுக்கே தான்..நாங்களும் ஹாட் டாஃ என்றும் இதனை சொல்வதுண்டு ,பேக்கில் இங்கு சிக்கன் ஃப்ரான்க்ஸ் என்று தான் போட்டு இருக்கிறார்கள்.உங்களோட மரவள்ளிக்கிழங்கு வறை செய்தேன்,ஒரு சில படங்கள் தெளிவாக வரலை,மீண்டும் செய்து படம் எடுக்க வேண்டும்.கருத்திற்கு மகிழ்ச்சி அதிரா.

Anonymous said...

உங்க மகன் செய்தது அழகா இருக்கு தம்பிகிட்ட சொல்லுங்க.

Kurinji said...

Puthusu puthusa seireenga, seithu paarkkathan time kidaipathillai, but book mark pannitten....

இளம் தூயவன் said...

பார்க்க அழகாக உள்ளது. ருசி சாப்பிட்டவுடன் தான் சொல்லமுடியும்.

ஸாதிகா said...

இதனை இங்கு ஹாட் டாக் என்று விற்கின்றனர்.பெயரைப்பார்த்தாலே சாப்பிடப்பிடிக்காது.

ஜெய்லானி said...

//ஆனா நீங்க பெயர் ஏதோ சொல்றீங்க, நாங்க ஹொட் டோக் என்றுதான் அழைப்போம்... .//

அது சாப்பிடும் கண்டிஷனில் ஹாட்டோக் .. இல்லாவிட்டால் ஃபிரான்ங்ஸ்தான் :-)))

சாமக்கோடங்கி said...

எனக்குக் காரமாகச் சாப்பிட வேண்டும். தக்காளி சாஸ் என்றால் தூர ஓடி விடுவேன்.. என்ன செய்ய..

savitha ramesh said...

super sandwitch..will try it here

asiya omar said...

மஹா விஜய் மிக்க நன்றி.எங்க வீட்டில் சாண்ட்விச் என் மகன் தான் என்னை விட அருமையாகச் செய்வார்.

asiya omar said...

குறிஞ்சி மிக்க நன்றி.

சகோ.இளம் தூயவன் மிக்க நன்றி.

ஸாதிகா கருத்திற்கு மிக்க நன்றி.

சகோ.ஜெயலானி வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.

சாமக்கோடங்கி மிக்க நன்றி.

சவிதா செய்து பாருங்க,அருமையாக இருக்கும்.

அமைதிச்சாரல் said...

நல்லாருக்குங்க..

angelin said...

உங்கள் மகன் டிஸ்ப்ளே செய்த விதம் நன்றாக இருக்கு .
இந்த recipe என் மகளுக்கு மிகவும் பிடிக்கும் .நான் lettuce மற்றும் டொமாடோ ,வெள்ளரி சேர்த்து veg sandwich செய்வேன்.thanks for sharing this yummy sandwich recipe.

எல் கே said...

உள்ளேன்

FOOD said...

//என் மகன் செய்த சாண்ட்விச் படம் எடுத்தேன், அவர் மயோனைஸ் ,மஸ்டர்ட் சாஸ் மற்ற சாஸ் எல்லாம் சேர்த்து செய்திருக்கிறார்.இந்த சாஸ் ட்ரேயில் என்ன என்ன பிரியமோ அத்தனையும் சேர்த்து செய்திருக்கிறார்//
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

vanathy said...

நல்லா இருக்கு. எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. கணவர், குழந்தைகள் எப்போதாவது விரும்பி சாப்பிடுவார்கள்.

சுந்தரா said...

மசாலா சாண்ட்விச் வித்தியாசமாயிருக்குது.
செய்துபாத்துரவேண்டியதுதான்.

asiya omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

ஏஞ்சலின் மிக்க நன்றி.

எல்.கே.வருகைக்கு மகிழ்ச்சி.

ஃபுட் உங்கள் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

வானதி,நாம ப்ராண்ட் பார்த்து வாங்கனும்,ஒரு சில ப்ராண்ட் தான் டேஸ்டாக இருக்கும்.எனக்கும் எங்க வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்,எப்பவாவது செய்து சாப்பிடுவதுண்டு.
வருகைக்கு மகிழ்ச்சி.

சுந்தரா வாங்க,செய்து பாருங்க.உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்.

Saras said...

New to me, looks delicious, sure will try it...

Jay said...

This looks very delicious...fantastic try..:D
Tasty appetite

Chitra said...

I will pass. :-)

சே.குமார் said...

பார்க்க அழகாக உள்ளது.

asiya omar said...

சரஸ் மிக்க நன்றி.

jay மிக்க நன்றி.

சித்ரா மிக்க மகிழ்ச்சி.

சே.குமார் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

Thanks for linking asiya