Tuesday, March 1, 2011

ஃப்ரை ஆலு பாலக்



தேவையான பொருட்கள்;
பாலக்கீரை - 2சிறிய கட்டு
உருளைக்கிழங்கு - கால் கிலோ
பெரிய வெங்காயம் -1
பூண்டு -4பல்
தேங்காய் துருவல் -2டேபிள்ஸ்பூன்
மஞ்சள் - கால் +கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
பெருங்காயத்தூள் - பின்ச்
உப்பு,எண்ணெய் - தேவைக்கு
கீரையின் இலை மட்டு ஆய்ந்து நன்கு மண் போக அலசி எடுக்கவும்.பொடியாக நறுக்கி வைக்கவும்.

உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிய துண்டாக நறுக்கி அரைஸ்பூன் மிளகாய்த்தூள்,கால்ஸ்பூன் மஞ்சள்தூள்,உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.


மசாலா கலந்த நறுக்கிய உருளைக்கிழங்கை ஃப்ரீசரில் அரைமணி நேரம் வைத்து எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து உருளைகைக்கிழங்கை பொரித்து எடுக்கவும்.

இப்படியே சாப்பிட சூப்பராக இருக்கும், சாப்பிடாமல் எடுத்து வைக்கவும்.

வாணலியில் 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காயவும், நறுக்கிய வெங்காயம்,பூண்டு வதக்கி கீரையை சேர்த்து வதக்கவும்.கீரை நன்கு வதங்கியதும், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு சிறிது சேர்க்கவும், உப்பு உருளைக்கிழங்கில் சேர்த்து இருப்பதால் மிகச் சிறிதளவு சேர்த்தால் போதும்.

கீரை வதங்கியதும் பொரித்த உருளைக்கிழங்கை போடவும்.

உருளைக்கிழங்கை வதக்கிய பாலக் கீரையுடன் சேர்த்து பிரட்டி விடவும்.அப்படியேயும் பரிமாறலாம்.சுவை அருமையாக இருக்கும்.

இப்ப ரெடியாயிடுச்சு. ஃப்ரை செய்ய விருப்பமில்லாதவர்கள் உருளைக்கிழங்கை பேக்ட் செய்து சேர்க்கலாம்.

விரும்பினால் தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டியும் பரிமாறலாம்.ருசி அருமையாக இருக்கும்.


சுவையான ஃப்ரை ஆலு பாலக் ரெடி.
இதனை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.ஆலு பாலக்கை கிரேவி மாதிரியும் செய்யலாம்,இது கொஞ்சம் பிரட்டியது போல் இருக்கும்.
--ஆசியா உமர்.

ஈசி பொட்டட்டோ ஃப்ரை, பொட்டட்டோ பால்ஸ் ரெசிப்பிக்களை கிளிக் செய்து பார்க்கவும்.

33 comments:

Kalpana Sareesh said...

arumayana recipe..

சே.குமார் said...

palakk ithu polavum seyyalama...

Kurinji said...

palak use panni seivatharkku oru arumaiyana recipe kidachachu!!!!

kurinjikathambam

சி.கருணாகரசு said...

எளிமையான செய்முறை... படம் பார்க்கும் போதே சாப்பிட ஆசையா இருக்குங்க....

அமைதிச்சாரல் said...

அசத்தலான ரெசிப்பிங்க.. ஆலுமேத்தியும் இதேமாதிரி செய்யலாம்..

எல் கே said...

ஆலு எப்படி சாப்பிட்டாலும் எனக்குப் பிடிக்கும்

அமுதா கிருஷ்ணா said...

செய்து பார்க்கணும்.இல்லை சாப்பிடணும்.

asiya omar said...

கல்பனா மிக்க நன்றி.

குமார் மிக்க நன்றி.

குறிஞ்சி மிக்க நன்றி.

கருணாகரசு மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

எல்.கே. மிக்க நன்றி.

அமுதா கிருஷ்ணா மிக்க நன்றி.

athira said...

ஆசியா வித்தியாசமானதாக இருக்கு, செய்திட்டால் போச்சு. எதுக்காக கிழங்கை ஃபிறீசரில் வைக்கோணும், அப்படியே எடுத்து பொரித்தால் தணிபோட்டதுபோல இருக்குமே முறுகாதே....

///இப்படியே சாப்பிட சூப்பராக இருக்கும், சாப்பிடாமல் எடுத்து வைக்கவும்.
/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

asiya omar said...

அதிரா உருளைக்கிழங்கை மசாலா தடவி அரை மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் மசாலா நன்கு மேரினேட் ஆகி கிழங்கில் ஒட்டி விடும்.நல்ல காய்ந்த எண்ணெயில் போடும் பொழுது மசாலா தனியாக பிரியாமல் கிழங்கோடு சேர்ந்து பொரித்தெடுக்க கிரிஸ்பியாக இருக்கும்.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா...,சூப்பரான குறிப்பை தந்து அசத்தியிருக்கீங்க...
பார்க்கும் போதே நலல இருக்கு.
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

சாருஸ்ரீராஜ் said...

supera irukku akka first time pathi recepiela senchu appadiye sapiduren next time full methodla seyren super

ஸாதிகா said...

வித்தியாசமான காம்பினேஷன்.நாளைக்கே செய்து விடுகிறேன்.

Chitra said...

இப்படியே சாப்பிட சூப்பராக இருக்கும், சாப்பிடாமல் எடுத்து வைக்கவும்.


.....என்னை மாதிரி உருளை பிரியர்களுக்கு, கண்டிப்பாக நீங்கள் சொல்ல வேண்டிய குறிப்புதான்... ஹா,ஹா,ஹா,ஹா.... நிச்சயம் செய்து பார்க்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

செய்முறையை ஒவ்வொரு நிலையிலும் படம் எடுத்து அளிக்கும் சிரத்தை பாராட்டுக்குரியது. நல்ல குறிப்புக்கு நன்றி. [தக்காளி பேரீட்சை ஜாம் நல்லா வந்தது:)!]

ராமலக்ஷ்மி said...

//இப்படியே சாப்பிட சூப்பராக இருக்கும், சாப்பிடாமல் எடுத்து வைக்கவும்.//

அது சரி:))!

mahavijay said...

உருளை கிழங்கை தினமும் கொடுத்தாலும் சாப்பிடுவேன்.

கீரை கொஞ்சம் சாப்பிடுறது கஷ்டம்தான் உங்க முறையில் செய்து பார்க்களாம்

Gopi Ramamoorthy said...

//இப்படியே சாப்பிட சூப்பராக இருக்கும், சாப்பிடாமல் எடுத்து வைக்கவும்.//

நாங்க அப்படித்தான் சாப்பிடுவோம்:-)

சுந்தரா said...

ஆலூ பாலக் சாப்பிட்டதுண்டு.

பாலக்கோடு செய்ய இன்னுமொரு சுவையான ரெசிப்பி கொடுத்ததுக்கு நன்றி!

அன்னு said...

ஆஹா... உருளைக்கிழங்கை கிட்டத்தட்ட விட்டாச்சு, இருந்தாலும் செஞ்சு பாக்கறேன்... படங்களே ஆசைய தூண்டுது ஆஸியாக்கா.. :)

அந்நியன் 2 said...

சமையல் அசத்தல்...சகோ.

வெறும் தொட்டுக்கிற ஐட்டமா சமைக்கிறியலே.... மெயின் ஐட்டம் எங்கே ?( பிரியாணி,மற்றும் சாம்பார்)

Kurinji said...

Many thanks Asia ,for participating in my HRH event. Please collect the participation award.

HRH - Rickeflakes Event Roundup!!!

asiya omar said...

அப்சரா மிக்க நன்றி.
சாருஸ்ரீ மிக்க நன்றி.

ஸாதிகா மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

ராமலஷ்மி வாங்க,மிக்க நன்றி.

மஹாவிஜய் மிக்க நன்றி.

கோபி மிக்க நன்றி.

சுந்தரா மிக்க நன்றி.

அன்னு மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சகோ.அந்நியன் வருகைக்கு நன்றி.முன்பே கொடுத்ததை சமைத்தால் படம் எடுப்பதில்லை.பிரியாணி,மட்டன்,சிக்கன்,மீன்,வெஜ் சமையல் இப்படி பிரிவாக எல்லாம் சைடில் இருக்குமே!கிளிக் செய்து பார்க்கவும்.

asiya omar said...

குறிஞ்சி மிக்க நன்றி,இரண்டாவது ஏதாவது செய்து லின்க் கொடுக்க நினைத்தே நாள் போய்விட்டது.மிக்க மகிழ்ச்சி.

S.Menaga said...

super combo,love it!!

இளம் தூயவன் said...

//இப்படியே சாப்பிட சூப்பராக இருக்கும், சாப்பிடாமல் எடுத்து வைக்கவும்.//

சாப்பிட்டு விட்டேனே.......?

savitha ramesh said...

romna nalla irukku.palak with aloo,yumelicious.

கோவை2தில்லி said...

ஆலுவை மசாலாவோடு ப்ரீசரில் வைத்து எடுத்தா மசாலா நல்லா ஒட்டிக்கும் என்ற தகவலுக்கு நன்றி. ஆலு மேத்தி செய்வதுண்டு. ஆலு பாலக் செய்து பார்க்கிறேன்.

மகி said...

சூப்பரா இருக்கு ஆசியாக்கா!

vanathy said...

சூப்பரா இருக்கு ரெசிப்பி. நான் கிழங்கு வாங்குவதே குறைவு. அடுத்த முறை வாங்கிட்டு செய்து பார்க்கணும்.

மாதேவி said...

ஆலுபாலக் அருமை.

goma said...

ஆலூ பாலக் யம்ம்ம்மி
அசத்துரீங்க...