Wednesday, March 2, 2011

ஒரு கதைக்கு இரு முடிவு இருக்கலாம் தானே!

முருகன் பார்ட்டி
இந்தக் கதையின் முடிவு என் பதிவுலக நட்பு எழுத்தாளர்களுக்கு திருப்தியில்லை என்று பின்னூட்டம் மூலம் தெரிந்து, ஏன் மறுமுடிவு தரக்கூடாது என்ற எண்ணம் என் மனதில் வந்ததால்,கதையை பாதியில் அதன் போக்கை மாற்றி எழுதி உங்களுக்காக மீண்டும் படைத்துள்ளேன்.

மீண்டும் முருகன் பார்ட்டி மறு முடிவுடன்

குமார் இரயிலில் இருந்து இறங்கி தன்னிடமிருந்த ஒரு சிகரெட்டை (புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு) பற்ற வைத்தான். தினமும் இரயில் நிலையத்திலிருந்து கல்லூரி சென்றடையும் இடைவெளியில் ரசித்து தம் அடிப்பது வழக்கம். ஒரு இழு இழுத்திருப்பான்,டேய் போதும்டா என்று ஓடி வந்த மகேஷ் பிடுங்கி ஒரு இழுப்பு,டேய் எனக்கு என்று சாமி, ஒரு இழு இழுக்க, கல்லூரி வாசலில் காத்திருந்த வேணு வந்து வாங்கி கடைசியாக இழுத்து முடித்தான், இந்த பசங்க புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடுன்னு தெரிந்தும் விளையாட்டிற்கு எப்பவாவது பந்தாவிற்கு இப்படி சிகரெட் பிடிப்பது வழக்கம்.

குமார் டேய்ஸ்காலர்,மகேஷ்,சாமி,வேணு மூவரும் ஹாஸ்டலில் ஒரே ரூம், மாதக்கடைசி ஒருவரிடமும் காசில்லை அதனால் குமார் வருகைக்காக காத்திருந்து,அவனிடம் இருந்த ஒரு சிகரெட்டை பங்கிட்டு குடிக்குமளவிற்கு அவ்வளவு நெருக்கமான நண்பர்கள்.பசங்க தங்கள் குரூப்பிற்கு முருகன் பார்ட்டின்னு பேர் வச்சிகிட்டாங்க.

சோம்பேறிப்பசங்க, காலையில் மெஸ் சென்று சாப்பிடக்கூட மாட்டாங்க. எவனையாவது அனுப்பி பார்சல் வாங்கி வரச்சொல்லி அனைவரும் ஏதோ சாப்பிட்டதாய் பேர் செய்து கையில் கிடைத்த பேண்ட் சர்ட் மாட்டிட்டு காலேஜ் போறது வழக்கம்,ஆனால் எல்லாரும் படிப்பாளிகள், யார் துணி துவைப்பாங்க, இஸ்திரி போடுவாங்க, ஒரு கணக்கும் கிடையாது,முதலில் ட்ரஸ் செய்றவன் ஹேங்கரில் பளிச்சென்று இருக்கும் பேண்ட் சர்ட்டை போடுவதும்,மற்றவர்கள் எது அழுக்கு இல்லாமல் சுமாராக பார்க்க பளிச்சென்று இருக்கோ அதனை மாட்டிக்கொண்டு போவதும் வழக்கம். இரவு தாமதமாக உறங்கி காலை ஏழரைக்கு எழுந்து எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் கல்லூரிக்கு அடிச்சிக்கோ பிடிச்சிக்கோன்னு பறக்கிற பசங்க, இரவு முழுவதும் பக்கத்தில் இருக்கும் இரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து அரட்டை அடித்து ஒரு டீ அடிச்சிட்டு உறங்கவில்லையென்றால் இவர்களுக்கு உறக்கமே வராது. இதை எல்லாம் தினமும் அவர்களோடு சேர்ந்து வேடிக்கை பார்ப்பது குமாருக்கு மிகவும் பிடிக்கும்.

கிரிக்கெட், டென்னிஸ், ,கூடைப்பந்தாகட்டும், கல்ச்சுரல், க்விஸ் ப்ரோகிராம் எதிலும் இந்த முருகன் பார்ட்டி கலந்து தூள் கிளப்புவதால் கல்லூரியில் இவர்கள் புகழ் பரவிக்கிடந்தது.
முருகன் பார்ட்டி பேரைக் கொடுத்தால், எல்லாருமே கொஞ்சம் தயங்குவதும், பின்னர் போட்டு பார்க்கலாம்னு களத்தில் இறங்குவதும், ஆனால் முடிவில் பதக்கங்களை அள்ளுவது முருகன் பார்ட்டி தான்.

ஆமாம், இந்த முருகன் பார்ட்டியில் யார் முருகன்னு தானே யோசிக்கிறீங்க,முதல் வருடத்தில் இந்த குரூப்பில் முருகன்னு ஒரு பையன் குப்பத்தில் இருந்து வந்து சேர்ந்தான்,அவன் எப்பவும் அமைதியாகவும் தானுண்டு ,தன் வேலையுண்டு என்று இருப்பது வழக்கம்,ஆனால் எப்பவும் முகத்தில் ஒரு சோகம் இருக்கும். மற்ற பையன்களின் வசதி ,நுனிநாக்கு ஆங்கிலம், நல்ல உடை எதுவும் தன்னிடம் இல்லையே என்ற ஏக்கமாக இருக்கலாம், தன் தந்தை எப்பவும் குடித்து விட்டு தாயை அடிப்பதை பற்றியும், அவனுடைய அம்மா வீட்டு வேலை பார்த்து தன்னை படிக்க வைப்பதாயும், தான் படித்து நல்ல வேலை கிடைத்ததும் அம்மாவை ராசாத்தி மாதிரி வைத்து காப்பாற்ற வேண்டும் என்று மட்டும் முருகன் எல்லோரிடமும் அவனைப் பற்றி ஆரம்பத்தில் சொல்லியிருந்தான், முருகன் எப்பவும் தனியாக இருந்தாலும் இந்தப்பசங்க முருகனை உடன் சேர்த்து எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரு கூட்டமாகத்தான் இருந்தார்கள், மெஸ் கட்டணம், செமஸ்டர் கட்டணம் கூட எல்லோரும் சேர்ந்து ஒரு முறை முருகனுக்காக கட்டியிருக்கிறார்கள், அவ்வளவு நல்ல பசங்க,முருகனும் அவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக கல்லூரி வாழ்க்கையை ஒட்டி கொண்டு இருந்தான். முருகன் ரூமை சுத்தமாக வைத்துக் கொள்வது முதல் ரூம் பசஙக் எல்லோருக்கும் எந்தளவு உதவி செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அவன் நன்றியை காட்ட தவறவில்லை.

செமஸ்டர் விடுமுறையும் வந்தது, எல்லோரும் ஜாலியாக ஊர் கிளம்பி செல்ல முருகனுக்கு மட்டும் போக இஷ்டமில்லை என்று சொல்லி கொண்டிருந்தான், நண்பர்கள் எல்லோரும் அவரவர் வீட்டிற்கு அழைக்க, இல்லைடா, நீங்க போங்க,லீவு முடிந்த பின்பு பார்க்கத்தானே தானே போறோம்னு, சொல்லிட்டு எல்லோர் கையையும் பிடித்து கண் கலங்கினான்.லீவிற்கு தானேடா போறோம் ஒரு வாரத்தில் பார்க்கப் போறோமேன்னு மற்ற பசங்க சொன்னாலும் முருகன் முகத்தை பார்த்து எல்லோருக்கும் சங்கடமாகத் தான் இருந்தது. மகேஷ்,சாமி,வேணு மூவரும் ஒரே ஊர் ஆகையால் முதலில் பஸ்ஸில் கிளம்ப , முருகன் மட்டும் இரயிலில் செல்ல குமாருடன் வந்தான், குமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து தினமும் வீட்டிலிருந்து கல்லூரி வந்து செல்வது வழக்கம்.

நண்பர்கள் அனைவரும் பிரிந்து சென்ற பிறகு முருகன் குமாரிடம் ஊர் போக இஷ்டமில்லை என்றும் ,திரும்பி வந்தாலும் வருவேன், அம்மா படிக்க வைக்க ரொம்ப கஷ்டப்படுறாங்கன்னு சொல்லி வருத்தப்பட்டான், குமாரும் அப்படில்லாம் ஒண்ணுமில்லைடா,அம்மா எப்படியாவது படிக்க வைப்பாங்கன்னு சொல்லி விட்டு, தன் ஊர் வரவும் இறங்கி கொண்டான்.

இது நடந்து ஐந்து நாள் இருக்கும், தீடீரென்று குமாருக்கு முருகன் அம்மாவிடம் இருந்து போன் வந்தது.முருகன் வீட்டை விட்டு காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆகிறது என்றும், இன்று தான் அவன் டயரியில் குமார் போன் நம்பர் பார்த்து விசாரிப்பதாயும் முருகனின் அம்மா சொல்லிவிட்டு “தம்பி, உனக்காவது தெரியுமா?அவன் எங்கே போயிருப்பான்னு, பெத்தவ மனசு பதறுதுபா,எம் பிள்ளை எங்கேயாவது உயிரோடு இருந்தால் அதுவே போதும்,நான் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் எம் பிள்ளை வீட்டை விட்டு போய்ட்டான்பா,எங்கேயாவது பார்த்தாலோ,உங்க கிட்ட போன் செய்தாலோ எனக்கு சொல்லுப்பா” என்றும், பசங்க எல்லாருகிட்டேயும் தெரிவிக்கும்படியும் சொல்லிவிட்டு, பாவம் போனை வைத்து விட்டாங்க முருகனின் அம்மா.

குமாருக்கு ஒன்றும் ஓடவில்லை, அட இந்த பையன் இப்படி செய்து விட்டானே! எங்களிடம் உதவி கேட்டால் நாங்கள் செய்ய மாட்டோமா என்ன? படிப்புச் செலவா பெரிசு,பேங்க்கில் லோன் வாங்கலாம், எத்தனை நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள், யாரிடமாவது உதவியாவது கேட்டு இருக்கலாமே என்று எண்ணியவண்ணம் தன் நண்பர்களுக்கு முருகன் பற்றிய செய்தியை தெரிவித்து விட்டு, யாரையாவது முருகன் தொடர்பு கொண்டால் தெரிவிக்கும் படியும், சொல்லி விட்டு போனை வைத்தான் குமார்.

மறுநாள் குமார் போன் செய்து முருகன் அம்மாவிடம், “முருகன் எதுவும் தவறான வழிக்கு செல்ல மாட்டான்,கவலைப்படாமல் தைரியமாக இருக்கும்படியும்,நல்ல செய்தி எப்படியும் வரும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தான்,குமாருக்கும் நம்பிக்கை இருந்தது, தன் தோழனை ஒரு கோழையாக அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

செமஸ்டர் லீவு முடிந்து கல்லூரிக்கு வந்த பசங்க,முருகன் ரூமில் இல்லாத வெறுமையை சமாளிக்க முடியாமல் கலங்கினர்,ஆறுமாதம் தான் சேர்ந்து ஒரு ரூமில் இருந்தாலும் பாசக்கார பசங்களால் முருகனை மறக்க முடியலை. இப்படியே ஒரு மாதம் கழிந்தது.

தீடீரென ஒரு நாள், குமார் கல்லூரி வரும் பொழுதே மிகச் சந்தோஷமாக வந்தான்,நல்ல செய்தி என்றும், முருகன் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது, மும்பையில் ஒரு ப்ரிண்ட்டிங் ப்ரஸில் வேலை செய்வதாயும், அம்மாவிற்கு கூட மாதச் சம்பளம் வாங்கி அனுப்பியதாயும், ப்ரிண்ட்டிங் ப்ரஸ்சின் முதலாளி அவனை அடுத்த மாதம் முதல் ப்ரிண்ட்டிங் டெக்னாலஜி கோர்ஸில் சேர்த்து விடுவதாயும்,படித்து கொண்டே வேலை செய்யப் போவதாய் தகவல் சொன்னதாக தெரிவித்தான் குமார்.

பசங்களுக்கு தலைகால் புரியவில்லை.மிக சந்தோஷமாக இருந்தார்கள்,அடிக்கடி போனில் முருகனுடன் தொடர்பு கொண்டார்கள்,அம்மாவை வந்தாவது ஒரு முறை பார்த்து செல்லும்படி எவ்வளவு எடுத்து கூறியும்,முருகன் தன் படிப்பை முடித்து விட்டு தான் ஊர் வருவேன் என்றும்,படிப்பு முடிந்து அம்மாவை அழைத்து செல்வது தான் முடிவு என்றும் வைராக்கியமாக சொல்லி விட்டதால், பசங்க நம்பிக்கையுடன் தங்களின் அன்புத்தோழன் முருகனுக்காக காத்திருக்கின்றனர்.
--ஆசியா உமர்.
ஒரு படைப்பாளி நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்,எதையும் எப்படியும் மாற்றமுடியும் என்பதே பெரிய மகிழ்ச்சி தானே!

43 comments:

அமைதிச்சாரல் said...

நல்ல முடிவுங்க.. நிச்சயமா ஒரு படைப்பை வெவ்வேறு கோணங்களில் கொண்டுசெல்லமுடியும்..

கலாநேசன் said...

நல்லா இருக்குங்க...

சே.குமார் said...

akka...
nalla mudivu...
orey kallil iraundu mango pola orey kathaikku iraandu mudivugal...
muthalavathai vida irandavathu sirappu... niraiya kathai ezhuthungal.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

:-)

எம் அப்துல் காதர் said...

வெல்டன் டீச்சர்!! இப்படி தான் தன்னம்பிக்கை தரணும்!! அழகாய் முருகனை ஆளாக்கி விட்டீர்கள். இன்னமும் இதுபோல் ஆக்கங்களை உங்களிமிருந்து எதிர்பார்க்கும் வாசகனாய் நாங்கள்..!!

எம் அப்துல் காதர் said...

ஒரு கதைக்கு ரெண்டு முடிவென்ன, எத்தனை முடிவு வேணும்னாலும் இருக்கலாம். ஆனா முடிவு இதுபோல் அழகானதாய் இருந்தால் தான் ரசிக்க முடிகிறது என்பது என் எண்ணம்.

சசிகுமார் said...

கதை தானே அக்கா அதுக்கு என்ன நம்ம இஷ்ட்டம் போல முடிவு வைக்க வேண்டியது தான்.

FOOD said...

கதையிலும் உங்கள் கைவண்ணம் ஜொலிக்குதே!

asiya omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

கலா நேசன் மிக்க நன்றி.

குமார் மிக்க நன்றி.

கொச்சு ரவி வருகைக்கு நன்றி.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் கருத்திற்கு நன்றி.
ஒரு சில சினிமா படங்களில் கூட இப்படி இரண்டு முடிவுடன் படம் எடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது,
தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் முடிவு,மலையாள மக்கள் ஏற்று கொள்ளும் முடிவு என்று,அதே போல் ஹிந்தியில் இங்கு தயாரிக்கும் படத்திற்கு அங்கு திரையிடும் பொழுது முடிவு மாறியிருக்கும்.அது போல் இந்தக்கதையின் முடிவும் இரண்டு விதமாக தந்து திருப்தி பட்டு கொண்டேன்.

asiya omar said...

சசிகுமார் கருத்திற்கு நன்றி.கதை தானேன்னு விட முடியாது சகோ,உணர்வுகள் கதையினால் மாறிவிட வாய்ப்பு இருக்கிறது.நல்ல முடிவு வாசிப்பவர்களை நேர்வழிப்படுத்தும்,இது ஒரு மாணவர் சம்பந்தப்பட்ட கதை,எனவே தான் மாற்றி அமைத்தேன்.

asiya omar said...

ஃபுட் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

வெங்கட் நாகராஜ் said...

முதல் முடிவை விட இந்த முடிவு தன்னம்பிக்கை ஊட்டக்கூடியதாக இருக்கிறது சகோ. நல்ல பகிர்வுக்கு நன்றி

S.Menaga said...

இந்த முடிவு தான் சூப்பர்ர் அக்கா!!

vanathy said...

நல்ல கற்பனை தான். ஒரு கதைக்கு பல முடிவுகள் அவரவர் கற்பனைக்கு ஏற்ப.

Akila said...

entha oru kashtathukum tharkolai enbathu mudivaga iruka mudiyathu.... this ending is super....

அந்நியன் 2 said...

கதை படிப்பதற்கு நல்லா இருக்கு.

புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று கதையிலேயே அடைப்புகுறி போடும் உங்களைப் பாராட்டுகிறேன்.

இன்றைய கானொளியில் எத்தனை ஹீரோக்கள் புகைப் பிடித்துக் கொண்டே பாட்டுப் பாடுகிறார்கள் !!!

வாழ்த்துக்கள் !

Chitra said...

ஒரு படைப்பாளி நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்,எதையும் எப்படியும் மாற்றமுடியும் என்பதே பெரிய மகிழ்ச்சி தானே!

.... Good creativity! Super!

எல் கே said...

இந்த முடிவுதான் எனக்கும் பிடித்து இருக்கிறது,

Gopi Ramamoorthy said...

நேர்மறை முடிவு. எனக்குப் பிடித்த முடிவு:-)

அப்பாவி தங்கமணி said...

Wow...innoru 12Byaa? super kalakkunga Asiya...:)

அன்னு said...

அந்த முடிவு, எதன் தாக்கத்தினால் இப்படி ஒரு கதையை எழுதினீர்களோ அதற்கேத்த மாதிரி இருந்தது.

இந்த முடிவும் அழகு. தன்னம்பிக்கையை வளர்க்க வைக்கும் முடிவு.

//ஒரு படைப்பாளி நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்,எதையும் எப்படியும் மாற்றமுடியும் என்பதே பெரிய மகிழ்ச்சி தானே!
//

உண்மைதான் ஆஸியாக்கா, அருமையாக இரண்டு விதங்களிலும் முடித்துள்ளீர்கள்.

:)

asiya omar said...

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

வானதி,கருத்திற்கு நன்றி.இது ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து முதல் முடிவை தெரிவித்து இருந்தேன்,ஆனால் அது நிறைய பேரின் மனதை பாதித்ததால் இந்த மாற்றப்பட்ட முடிவு.

asiya omar said...

அகிலா மிக்க நன்றி.

சகோ.அந்நியன் உங்கள் சமுதாய நோக்கான பார்வை பாராட்டதக்கது.

சித்ரா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

எல்.கே மிக்க நன்றி.

கோபி மிக்க நன்றி.

asiya omar said...

அப்பாவி,என்ன சொல்றீங்க இன்னொரு 12பியா என்றால் புரியலை.என்னோட கதைகள் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்படுபவை.வருகைக்கு நன்றி.

asiya omar said...

அன்னு உன் கருத்து எனக்கு மிக்க மகிழ்வைத் தருகிறது.உண்மைதான் அன்னு,இரண்டு முடிவுமே சாத்தியம் தான்.நன்றி அன்னு,அடிக்கடி வருகை தாருங்கள்.

ஆனால் எல்லோரும் முடிவை மட்டுமே கருத்தில் கொண்டு கதையை பார்த்து இருக்கிறார்கள்,மாணவர்களிடையே உள்ள நட்பின் ஆழம் தான் நான் ரசித்து எழுதியது.ஆனால் மாணவிகள் எனக்கு தெரிந்து இப்படி நெருக்கமாக இருப்பதில்லை,எனவே மாணவர்களிடையே உள்ள அந்த அந்நியோன்யத்தை நினைத்து நான் பலதடவை ஆச்சரியப்படுவதுண்டு.

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா..,
எப்படி அக்கா உங்களால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகின்றது.முடிவில் திருப்தி இல்லை என்று சிலர் தெரிவிக்கவும்,இன்னும் கதையில் மெருகேற்றி சூப்பரான முடிவோடு கலக்கிட்டீங்க போங்க...
உங்களை போன்றவர்களிடம் இந்த கத்து குட்டி நிறைய கற்று கொள்ள வேண்டியிருக்கு....
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

இளம் தூயவன் said...

ஆமா சகோதரி, இந்த குழப்பத்திற்கு எல்லாம் யார் காரணம்?, பக்கத்தில எதோ சத்தம் கேட்குது பார்த்துட்டு வரேன்.

athira said...

கதை கலக்கல் ஆசியா, இப்போதான் பொறுமையாகப் படிக்க நேரம் கிடைத்தது. முருகனின் முடிவு நல்ல முடிவே.

ஸாதிகா said...

முதல் முடிவில் திருப்தி படாத உங்கள் மனம் இந்த முடிவில் திருப்திஉற்றது போல் எங்கள் மனக்களும்...அருமையான முடிவு ஆசியா,

Mahi said...

/இன்னொரு 12பியா என்றால் புரியலை./ஆசியாக்கா,12B படத்தில் 2 முடிவுகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று ரெண்டு ட்ராக்-கில் படத்தை எடுத்திருப்பாங்க,தங்கமணி சொல்வது அதைத்தான் என்று நினைக்கிறேன்.

நல்ல முடிவு.பள்ளியில் படிக்கும்போது நல்ல கதைக்கான இலக்கணம் என்றால்,கதையின் முடிவு படிப்பவர்களுக்கு தன்னம்பிக்கை தரும்படி இருக்கவேண்டும் என்று படித்த ஞாபகம் வருது.:)

asiya omar said...

அப்சரா வருகைக்கு மிக்க நன்றி,நானே இப்ப தான் தட்டித்தடுமாறி நடக்க ஆரம்பித்து இருக்கிறேன்.ப்ளாக்கிற்கு இப்ப தானே ஒரு வயசு ,நானும் கத்துக்குட்டி தான்.

asiya omar said...

சகோ.இளம் தூயவன்,உங்க பக்கத்து சீட்காரரை ஏன் இழுக்கறீங்க,இங்கே விட்டிலேயே ஸ்டோரி டிஸ்கஷன் பெரிய அளவில நடக்குது.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

ஸாதிகா,ஆமாம் தோழி இப்ப தான் எனக்கு நிம்மதி,அநியாயமாக ஒரு மாணவனின் முடிவு நம்ம கையில் இருந்தும் இப்படி முடித்து விட்டோமேன்னு இருந்தது.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

மகி கருத்திற்கு மகிழ்ச்சி.விளக்கத்திற்கு மிக்க நன்றி.கரண்டி பிடிக்கிற கை கதை எழுதுது,முயற்சி நல்ல்தாக அமையட்டும்.

Kanchana Radhakrishnan said...

நல்ல முடிவு.

Anonymous said...

இந்த முடிவுதான் எனக்கு புடிச்சிருக்கு.

SUMAZLA/சுமஜ்லா said...

அட! எப்போலேர்ந்து கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிங்க? இவ்ளோ சூப்பரா எழுதி இருக்கீங்களே?

கோமதி அரசு said...

ஒரு படைப்பாளி நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்,எதையும் எப்படியும் மாற்றமுடியும் என்பதே பெரிய மகிழ்ச்சி தானே!

உண்மை ,படைப்பாளி நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.

கதைக்கு இந்த மாதிரி முடிவுதான் நல்லது. வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிகவும் அவசியம், வேறு முடிவு எடுக்காமல் நல்ல முடிவு எடுத்த முருகனுக்கு வாழ்த்துக்கள்.

R.Gopi said...

ம்ம்ம்....

படைப்பாளி ஆச்சே... அதான், ஈசியா முடிவு மாத்திட்டீங்க....

நானும் இதே போல் ஒரு கதைக்கு செய்திருக்கிறேன்... வாழ்வில் தோற்பது போன்ற ஒரு முடிவு எழுதி, பின் அதை மாற்றி வெற்றி பெறுவது போல் முடித்திருந்தேன். இங்கே பாருங்களேன் :

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் (பகுதி-1)
http://edakumadaku.blogspot.com/2011/01/1.html

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் - இறுதி பகுதி
http://edakumadaku.blogspot.com/2011/01/2.html

asiya omar said...

காஞ்சனா மிக்க நன்றி.

மஹாவிஜய் மிக்க நன்றி.

asiya omar said...

சுமஜ்லா முதலில் வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.கதை எழுத ஆரம்பித்து ரொம்ப நாள் ஆகுது,இது ஒன்பதாவது கதை.

asiya omar said...

கோமதிஅரசு வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கோபி மிக்க நன்றி.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.