Thursday, March 3, 2011

மட்டன் /பீஃப் விண்டாலு

தேவையான பொருட்கள் ;
போன்லெஸ் மட்டன் / பீஃப் - அரை கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2டீஸ்பூன்
வெங்காயம் - 100கிராம்
எண்ணெய் - 5டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள்- 2டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
ஒயிட் வினிகர் - 3டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

வறுத்து அரைக்க:
முழுசீரகம்- 1டீஸ்பூன்
கடுகு - அரைடீஸ்பூன்
வெந்தயம் - அரைடீஸ்பூன்
மிளகு - அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
ஏலக்காய் - 2

வறுத்து ரெடி செய்ய வேண்டியதை ஓரளவு சிவற வறுத்து ஆற வைக்கவும்.வெங்காயம் நறுக்கி வைக்கவும்.மட்டனை அலசி சுத்தம் செய்து தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
வறுத்ததை மிக்ஸியில் பொடி செய்யவும்.அத்துடன் வினிகர் சேர்க்கவும்.

நறுக்கிய வெங்காயத்தை ஒரு பேனில் 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும்,ரெடி செய்த வெங்காயம்,வறுத்த பொடி சேர்த்து,வினிகருடன் சேர்த்து அரைக்கவும்.


ஆனியன் வதக்கிய பேனில் சுத்தம் செய்து தண்ணீர் வடிகட்டிய மட்டனை போட்டு வதக்க வேண்டும்.

வதக்கும் பொழுது தண்ணீர் ஊறிவரும்.வற்ற விட வேண்டும்.

தண்ணீர் வற்றி இப்படி கறி துண்டுகளை வதக்க வேண்டும்.


ஒரு குக்கரில் 3டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காயவும்,இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

இஞ்சி பூண்டு வதக்கியதும்,மல்லித்தூள்,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

அரைத்த பேஸ்ட்டை சேர்க்கவும்.வதக்கவும்.
ரெடி செய்து வதக்கிய மட்டன் துண்டுகளை சேர்க்கவும்.
பிரட்டி விட்டு தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

மட்டன் மசாலாவும் சேர்த்து பிரட்டி ஒரு கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி முதல் விசில் வரவும் 10நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.பீஃப் என்றால் கால் மணிநேரமாவது நேரம் வைத்து இறக்க வேண்டும்,தண்ணீர் 2கப் விட வேண்டும்.போன்லெஸ் சிக்கன் என்றால் பேனிலேயே சிக்கனுடன் அரைத்த மசாலா போட்டு,சிறிது நேரத்தில் வெந்து எடுத்து விடலாம்.

ஆவியடங்கியதும் குக்கரை திறந்து பிரட்டினால் இப்படி இருக்கும்.
சுவையான மட்டன் விண்டாலு ரெடி.இதனை போன்லெஸ் மட்டன்,சிக்கனில் செய்தால் தான் அருமையாக இருக்கும்.

அதனை யெல்லோ சாஃப்ரன் ரைஸ் உடன் பரிமாறவும்,எல்லாவிதமான ரைஸ் வெரைட்டி ,சப்பாத்தி நாணுடன் பரிமாறலாம்.ஒரே டேஸ்ட்டில் சாப்பிட்டு போரடித்தவர்கள் இப்படி செய்து சாப்பிட்டு பார்க்கலாம்.நான் வெரைட்டியாக முயற்சிப்பது வழக்கம். எல்லா டேஸ்ட்டும் பிடிக்கிறவர்கள் மட்டும் செய்து சாப்பிடவும்.
நான் அபுதாபியில் இருந்த பொழுது என்னுடைய கோவா தோழி மிஸஸ் சைமன் சொல்லி தந்த ரெசிப்பி இது. நான் யாரிடம் பழகினாலும் அவங்க நினைவாய் ஒரு ரெசிப்பி கேட்டு தெரிந்து கொள்வது வழக்கம்.எனக்கு இப்ப ஒரு பிலிப்பினோ ஃப்ரண்ட் கிடைச்சிருக்காங்க, அவங்க கிட்ட கூட ஒரு ரெசிப்பி கேட்டேன், உடனே சொல்லி தந்தாங்க, நிச்சயம் செய்து போட முயற்சிக்கிறேன்.
--ஆசியா உமர்.

37 comments:

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

"நான் யாரிடம் பழகினாலும் அவங்க நினைவாய் ஒரு ரெசிப்பி கேட்டு தெரிந்து கொள்வது வழக்கம்."

Good!

எல் கே said...

present

ராஜ நடராஜன் said...

உங்களுக்கு ஒரு விடுகதை!விண்டாலு எந்த ஊரின் ரெசிபி:)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ரொம்ப டேஸ்டா இருக்கு இங்கே கொஞ்சம் அனுப்பவும் ஆசியா..

asiya omar said...

கொச்சு ரவி கருத்திற்கு நன்றி.

எல்.கே. வருகைக்கு மகிழ்ச்சி,உங்க ஆத்து ஸ்பெஷல் ஒண்ணு மெயில் அனுப்புங்க.செய்து பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் வருகைக்கு நன்றி.எனக்கு தெரிஞ்சி கோவா ஸ்பெஷல் தான்,என் ஃப்ரெண்ட் டாஃப்னி சைமன் கோவா ஸ்பெஷல் தான் சொன்னாங்க.

asiya omar said...

தேனக்கா உங்களுக்கு பிடிச்சிருக்கா,ப்லேட்டை அப்படியே அனுப்பியாச்சு.வருகைக்கு நன்றி அக்கா.

ராஜ நடராஜன் said...

//ராஜ நடராஜன் வருகைக்கு நன்றி.எனக்கு தெரிஞ்சி கோவா ஸ்பெஷல் தான்,என் ஃப்ரெண்ட் டாஃப்னி சைமன் கோவா ஸ்பெஷல் தான் சொன்னாங்க. //

உங்களுக்கு பாஸ் மார்க் 100%

ஜெய்லானி said...

//நான் யாரிடம் பழகினாலும் அவங்க நினைவாய் ஒரு ரெசிப்பி கேட்டு தெரிந்து கொள்வது வழக்கம். //

என்கிட்ட ஒரு ரெஸிபி இருக்கு .ஆனா உங்ககிட்ட சொல்லமாட்டேன்.. சொன்னா என்னைய கொல கேசில மாட்டி விட்டுடுவீங்க :-))

ஜெய்லானி said...

//எனக்கு இப்ப ஒரு பிலிப்பினோ ஃப்ரண்ட் கிடைச்சிருக்காங்க, அவங்க கிட்ட கூட ஒரு ரெசிப்பி கேட்டேன், உடனே சொல்லி தந்தாங்க, நிச்சயம் செய்து போட முயற்சிக்கிறேன்.//

பாம்பு கறி இல்லைதானே..? ஏன்னா ஷார்ஜா சிட்டில பாம்பு இல்லை அவுட்டர்லதான் தேடனும் :-))))

ஜெய்லானி said...

யாரையோ கொங்கனியில திட்றீங்கன்னு மட்டும் புரியுது :-))

அஹமது இர்ஷாத் said...

Different Recipe..

S.Menaga said...

படத்தை பார்க்கும் போதே நீர் ஊறுது...

angelin said...

"நான் யாரிடம் பழகினாலும் அவங்க நினைவாய் ஒரு ரெசிப்பி கேட்டு தெரிந்து கொள்வது வழக்கம்."
நான் இந்த விளையாட்டுக்கு வரல்ல .

thanks for sharing this yummy recipe asiya .

விண்டாலூ என்பது போர்த்துகீசியர்கள்
மற்றும் ஆங்கிலோ இந்தியர் CUISINE

asiya omar said...

ஜெய்லானி அதெப்படி கரெக்டாக சொல்றீங்க,ஆல்ரவுண்டர் தான் போல.உங்களை ரெசிப்பி கேட்டு தொந்திரவு செய்ய மாட்டேன்.

asiya omar said...

அஹமது இர்ஷாத் ,மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

ஏஞ்சலின் நிச்சயமாக உங்க ஹிட் ரெசிப்பி சொல்லியே ஆகனும், உங்க வீட்டு கதவை விரைவில் தட்டுவேன்.வருகைக்கு நன்றி.

mahavijay said...

saffron yellow rice செய்முறையும் போட்டு இருக்கலாம்.

பார்த்தாலே தெரியுது நல்லா இருக்கும்னு

savitha ramesh said...

romba nalla irukku..try panren

Chitra said...

mutton - my all time favorite one...

Thank you for the great recipe... I am going to try it soon. :-)

Cool Lassi(e) said...

Arumai Arumai!

athira said...

இந்த ரெசிப்பிதான் எனக்கு வேணும், முயன்று பார்க்கிறேன், முன்பு செல்வியக்காவின் ரெசிப்பி பார்த்துச் செய்து, எங்கு பிழைவிட்டேனோ தெரியாது ஒரிஜினல் சுவை கிடைக்கவில்லை....

இது கறி கண்ணைப்பறிக்குது அழகு.

athira said...

ஜெய்லானி said...
//என்கிட்ட ஒரு ரெஸிபி இருக்கு .ஆனா உங்ககிட்ட சொல்லமாட்டேன்.. சொன்னா என்னைய கொல கேசில மாட்டி விட்டுடுவீங்க :-))///

கர்ர்ர்ர்ர்ர், இப்ப மட்டும் என்னவாம்... நாங்க ஒரு கூட்டமே தேடிட்டிருக்கிறோம் ஜெய்யை எனச் சொல்லிடுங்க ஆசியா... கொலைக் கேஸுக்காக அல்ல... கொலைக்காக...:) அப்பூடின்னு என் வாயால சொல்லிடுவேனா.... மியாவ் மியாவ்...

asiya omar said...

மஹாவிஜய் மிக்க நன்றி,சஃப்ரான் ரைஸ் செய்யும் பொழுது எல்லோ கலர் அதிகம் போட்டுட்டேன்,அதனால் அந்த ரெசிப்பி கொடுக்கலை.

சவிதா மிக்க நன்றி.

சித்ரா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

கூல் லஸ்ஸீ மிக்க நன்றி.

asiya omar said...

அதிரா கருத்திற்கு மிக்க நன்றி.
இந்த ரெசிப்பியில் தக்காளி சேர்க்க வேண்டாம் என்றவுடன் உங்களை நினைத்தேன்.செய்து பாருங்க,செய்யும் பொழுதே ருசி பார்த்து செய்யுங்க,உங்க டேஸ்டிற்கு வரலைன்னால் அதற்கு தகுந்த படி மசாலா சேர்த்து மாற்றி கொள்ளலாம்.எல்லாம் நம் கையில் தானே இருக்கு.

அமைதிச்சாரல் said...

உள்ளேன் ஆசியா..

vanathy said...

நல்லா இருக்கு மட்டன் வின்டாலு.
ஜெய், உங்க ரெசிப்பியை யாருக்கும் குடுக்க வேண்டாம். இதை வச்சே ஒரு பதிவு தேத்திடலாம். உங்க ப்ளாக்கில் போடுங்க.

"குறட்டை " புலி said...

எப்படியோ! வாரத்தில் ஒரு முறையாவது எச்சில் ஊறவைத்து விட்டு... சாப்பிட வைத்து விடுகிறீர்கள்.

அமுதா கிருஷ்ணா said...

பார்க்கவே அசத்தலாய் இருக்கு..

ஜெய்லானி said...

//கர்ர்ர்ர்ர்ர், இப்ப மட்டும் என்னவாம்... நாங்க ஒரு கூட்டமே தேடிட்டிருக்கிறோம் ஜெய்யை எனச் சொல்லிடுங்க ஆசியா... கொலைக் கேஸுக்காக அல்ல... கொலைக்காக...:) அப்பூடின்னு என் வாயால சொல்லிடுவேனா....//

அதனாலதான் சிலநேரம் மலைஉச்சி பூஸுக்கு மரம் ஏற தெரியும் மலை ஏற தெரியுமா..ஹா..ஹா..

சிலநேரம் தண்ணீக்கடியில பூஸுக்கு நீந்ததெரியுமா...க்கி..க்கி....

//ஜெய், உங்க ரெசிப்பியை யாருக்கும் குடுக்க வேண்டாம். இதை வச்சே ஒரு பதிவு தேத்திடலாம். உங்க ப்ளாக்கில் போடுங்க.//

வான்ஸ்...ஏற்கனவே மக்கள் குற்றுயிர் கொல உயிரா இருக்காங்க ...இதை போட்டா தாங்குமா? ஹா..ஹா..

சசிகுமார் said...

சூப்பர் டிப்ஸ் அக்கா

reena said...

பிரமாதமா இருக்குங்க ரெசிப்பி.. ஒரு டவுட்டு. எங்க வீட்டில் எல்லாம் மட்டனை 8 விசில் வரை குக்கரில் வேக வைப்போம். இதில் அப்படி ஏதும் குறிப்பிட வில்லையே. அவ்ளோ வேக வைக்க தேவை இல்லையா? அல்ல்து போன்லெஸ் என்பதால் இப்படியா?

http://kanavugalinmugavarii.blogspot.com/2011/03/blog-post.html

asiya omar said...

அமைதிச்சாரல் வருகைக்கு நன்றி.


வானதி கருத்திற்கு நன்றி.

குறட்டை புலி மிக்க நன்றி.

அமுதா கிருஷ்ணா மிக்க நன்றி.

சசி குமார் மிக்க நன்றி.

asiya omar said...

ரீனா வருகைக்கு நன்றி.நாம கறியை பேனில் வெங்காயம் வதக்கிய எண்ணெயில் வதக்கும் பொழுது தண்ணீர் ஊறி வற்றும் வரை பிரட்டி எடுப்பதில் பாதி வேக்காடு ஆகிவிடும்.நாம் வாங்கும் கறி இலசாக இருந்தால் விரைவில் ஆகும்,முரடாக இருந்தால் அதிக நேரம் குக்கரில் கூட எடுக்கும்.வாங்கும் கறியை பொருத்து.
கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா...,பார்க்கும் போதே மட்டன் விண்டாலு சூப்பராக இருக்கு.செய்முறையும் வித்தியாசமாகவே இருக்கு.
முடிந்த போது செய்துட வேண்டியதுதான்.
வாழ்த்துக்கள் அக்கா.

அன்புடன்,
அப்சரா.

GEETHA ACHAL said...

My long time waiting to-do-list this recipe...sure do try this...Thanks for sharing...

R.Gopi said...

மட்டன் விண்டாலு

//விண்டாலூ என்பது போர்த்துகீசியர்கள்
மற்றும் ஆங்கிலோ இந்தியர் CUISINE//

இது என்ன ஆந்திரா ஸ்பெஷலான்னு கேட்க இருந்தேன்...

Geetha6 said...

waav!super mam!

உம்ம் ஒமர் said...

அஸ் ஸலாமு அலைக்கும் ஆசியாக்கா....,

இன்னிக்கு சாம்பார் சாதத்துக்கு இந்த ரெசிபி செய்தேன். கூடவே ஒரு பெயருக்காவது எதாவது காய்கறி சேத்துவோம்ன்னு, பச்சை-கொடமிளகாய் சேர்த்தினேன். இஞ்சிபூண்டு வதங்கியதும், அதைச் சேர்த்தேன். மத்த எல்லா ஸ்டெப்புமே நீங்க சொன்னது போல்தான்.... எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு..... என் அண்ணியும் ரொம்ப நல்லா இருக்குன்னு உங்களுக்கு தேன்க்ஸ் சொல்லச் சொன்னாங்க..... ஜஸாக்குமுல்லாஹு க்ஹைர்க்கா :))