Sunday, March 6, 2011

வீடியோ சமையல் - ப்ரான் மஞ்சூரியன்

விளக்கம் எல்லாம் வேண்டாம், நாங்க வீடியோவையே பார்த்து தெரிந்து கொள்கிறோம்னு நினைக்கிறவங்க நேரே சமையலை பார்க்க இடுகையின் இறுதிக்கு செல்லவும். இறாலில் மஞ்சூரியன் செய்யலாம்னு இப்படி சுத்தம் செய்து வைத்து கொண்டேன்.
அதன்பின்பு கார்ன்ப்லோர்,மிளகுத்தூள்,முட்டை வெள்ளைக்கரு,உப்பு சேர்த்து கலந்து வைத்தேன்.
வழக்கம் போல் ஸ்டெப் பை ஸ்டெப் போட்டோ எடுத்து போடலாம் எனறு தான் சமையல் ஆரம்பித்தேன்,என் மகள் தீடீரென்று வந்து தன்னோட டிஜிட்டல் கேமராவில் சமையலை எடுத்து பார்ப்போம், நல்லா வந்தா போடலாம்னு சொன்னா, நானும் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் கொஞ்சம் நறுக்கி ரெடி செய்ததை மட்டும் தனித்தனியாக வைத்து விட்டு விளையாட்டாய் சமைக்க ஆரம்பித்தேன்.
கிச்சனில் இரண்டு டியூப் லைட், ஒரு எனர்ஜி சேவரும் இருக்க ஆனாலும் வெளிச்சம் பற்றலை, அதன்பின்பு லைட் பாயாக அவங்க டேடியை கூப்பிட்டாள், அவங்க டேடியும், நீ லைட் கேர்ள் ஆக இரு,நான் எடுக்கிறேன், ஆரம்பித்து இருவரும் எடுக்க ஆரம்பிச்சாங்க, பதினைந்து நிமிடத்தில் சமையல் முடிந்தது, அதனை போட்டு பார்த்தால் நல்லாதான் இருந்தது, ஆனால் கொஞ்சம் எடிட் செய்து குறைத்தால் ஃபைல் அளவு சிறியதாக இருக்கும்னு குறைச்சி அதை என் மகள் ஒரு ஷோ மாதிரி எஃபெக்ட் கொடுத்து முடிச்சி தந்திருக்கா பாருங்க.வீடியோ இறுதியாக அப்லோட் ஆகி இருக்கு.இப்ப தேவையான பொருட்கள், செய்முறை விளக்கம் வழக்கம் போல கொடுத்து விடுகிறேன். ப்ரான் மஞ்சூரியன்:

தேவையான பொருட்கள்;

இறால் - அரைகிலோ

முட்டை வெள்ளைக்கரு - ஒன்று

கார்ன்ஃப்லோர் -2டேபிள்ஸ்பூன்

டொமட்டோ சாஸ் - 2டேபிள்ஸ்பூன்

ஆய்ஸ்டர் சாஸ் - 1டேபிள்ஸ்பூன்

சோயாசாஸ் - 1டேபிள்ஸ்பூன்

வினிகர் - 1டீஸ்பூன்

பெப்பர் பவுடர் - அரைஸ்பூன்

ஸ்பிரிங் ஆனியன் நறுக்கியது- அரை கப்

பெரிய வெங்காயம் நறுக்கியது - ஒன்று

சிவப்பு கொடைமிளகாய் நறுக்கியது- ஒன்று

பச்சை மிள்காய் நறுக்கியது - சிறியது 1

பூண்டு பொடியாக நறுக்கியது - 1டேபிள்ஸ்பூன்

இஞ்சி பொடியாக நறுக்கியது - 1டேபிள்ஸ்பூன்

சிக்கன் சூப் ஸ்டாக் - அரைகப்

கார்ன்ஸ்டார்ச் - கால் கப்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

முதலில் இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து, கருப்பாய் இருக்கும் அழுக்கு கழிவை எடுத்து விடவும். இறாலை வால் பகுதியோடு எடுத்து, பின்பு நன்கு தண்ணீர் வடிகட்டவும்.தண்ணீர் நன்கு வடிந்த பிறகு இறாலோடு முட்டை வெள்ளைக்கரு, தேவைக்கு உப்பு, கால்ஸ்பூன் மிளகுத்தூள். கார்ன்ப்லோர் சேர்த்து கலந்து ஊற வைக்கவும்.

நன்கு ஊறிய பின்பு கடாயில் எண்ணெய் காய வைத்து எண்ணெய் நன்கு காய்ந்ததும், ரெடி செய்த இறாலை போட்டு பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.

அடுத்து இன்னொரு கடாய் எடுத்து 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் ஒன்றன்பின் ஒன்றாய் போட்டு வதக்கவும்.

வதங்கியவுடன் கட் செய்த வெங்காயம் போட்டு சிறிது வதக்கி, கொடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும், பின்பு சூப் ஸ்டாக் சேர்க்கவும்.சிறிது வதக்கி விட்டு பொரித்த இறாலை சேர்க்கவும், பிரட்டி விடவும், அத்துடன் ஆய்ஸ்டர் சாஸ், சோயாசாஸ், டொமட்டோ சாஸ் சேர்த்து பிரட்டவும், நன்கு பிரட்டியவுடன், சிறிது வினிகர் சேர்க்கவும், அடுத்து நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து வதக்கவும், கொஞ்சம் பிரட்டினது போல் இருக்க கார்ன் ஸ்டார்ச் சேர்த்து நன்கு பிரட்டி விடவும். உப்பு சரிபார்க்கவும். சூப்ஸ்டாக், பொரித்த இறாலில் உப்பு சேர்ந்து இருப்பதால் உப்பு தனியாக சேர்க்க வேண்டியது வராது.

முடிவாக உங்கள் டேஸ்ட்டுக்கு தகுந்தபடி, டொமட்டோ சாஸ், விரும்பினால் கொஞ்சம் சோயா சாஸ் கூட சேர்த்து நன்கு பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

சுவையான ப்ரான் மஞ்சூரியன் ரெடி.

இதனை ஸ்டார்ட்டராகவும், நாண், ஃப்ரைடு ரைஸ், பரோட்டா, சப்பாத்தி, ரைஸ் வகைகளுடன் சாப்பிடலாம்.கிரேவி மாதிரி வேண்டுமானால் கார்ன்ஸ்டார்ச்,சாஸ் வகைகள் சிறிது அதிகம் சேர்த்து ரெடி செய்யவும், கலர் வேண்டுமானால் பின்ச் ரெட் கலர் சேர்க்கலாம்.இதில் அஜினோமோட்டோ சேர்க்கலை, விரும்புபபவர்கள் கால்ஸ்பூன் சேர்க்கலாம்.

வீடியோவை பார்த்து விட்டு கருத்து சொல்லுங்க,இது என் முதல் முயற்சி, விளையாட்டாய் எடுத்தது, இதுவும் ஒரு நல்ல அனுபவம் தான். எனக்கு டிவியில் எல்லாம் சமையல் குறிப்பு கொடுக்கனும் என்று ஒரு காலத்தில் ஆசை இருந்தது, இப்ப இல்லை, எடுத்து பார்த்த பிறகு தானே தெரிகிறது. ஒரு டேக்கில் எடுத்தாச்சு, ஆனால் பதினைந்து நிமிட சமையலை பத்து நிமிடமாக குறைக்கிறேன்னு மகள், அவங்க டேடி இருவரும் சேர்ந்து ஏதோ எடிட் செய்திருக்காங்க, அடுத்த முறை நல்லாவரும்னு நினைக்கிறேன். இனி நேரம் கிடைக்கும் பொழுது மாதம் ஒரு ரெசிப்பியாவது கொடுக்க முயற்சிக்கிறேன். பிடிச்சிருந்தா தமிழ்மணத்திலும் இன்ட்லியிலும் ஓட்டு போடுங்க.



video

நெல்லை மட்டன் பிரியாணி  வீடியோ சமையலுக்கு இங்கே கிளிக்கவும்.


--ஆசியா உமர்.

51 comments:

vanathy said...

சூப்பரா இருக்கு ரெசிப்பி. உங்க voice உம் ஸோ ஸ்வீட் அக்கா.

எம் அப்துல் காதர் said...

வீடியோ சமையல் அருமையாவும் அழகாகவும் இருக்கு!! டீச்சர்... பாடம் சொல்லுவது போல் அழகா நிதானமா விளக்கம் சொல்லி இருக்கீங்க! ஆகவே இனிமே இதுவே தொடரும்தானே!

jagadeesh said...

அக்க கலகீடீங்க.. அருமை.. உங்கள பாடக் கூட வைக்கலாம் போல...

S.Menaga said...

வீடியோ சமையல் ரொம்ப அழகாயிருக்கு,ரெசியும் சூப்பர்ர்!!

athira said...

சூப்பராக வந்திருக்கு ஆசியா. என் கருத்து இன்னும் கொஞ்சம் நேரத்தை குறைத்தால் நல்லதென நினைக்கிறேன். நானும் முன்பு “அங்கு” குறிப்புக்கள் அனுப்பும்போது, இப்படி செய்யலாமே என மனதில் ஒரு ஐடியா எழுந்த நேரம் நான் காணாமல் போய் விட்டேன்.

மிக நன்றாக இருக்கு, தொடருங்க. இருப்பினும் வீடியோமான் சரியில்லை ஏன் தெரியுமோ? உங்கட முகத்தை அவர் காட்டவில்லையே:)))).

நீங்களே சமைச்சு நீங்களே சுவை பார்க்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.:)))).

Akila said...

wow video recipe super..... loved your voice as well as explanation.... continue your nice work......

Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila

Gopi Ramamoorthy said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

savitha ramesh said...

miga arumai,aasiya....lovely.u have a sweet voice and narrate it perfectly.Videos are appealing.As athira says,u can decrease the time by few minutes.

ஸாதிகா said...

வாவ்..தோழி,உங்களை எப்படி பாராட்டுவதென்று தெரிய வில்லை.புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.பொறுமையான ,அழகிய உங்கள் குரலால் தெளிவாக விளக்கி இருப்பது சூப்பர்.ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது தோழி.புது முயற்சி இனிமேலும் தொடரவேண்டும் என்பது என் அன்பு கோரிக்கை.கேமரா மேனுக்கும் லைட் வுமனுக்கும்,என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்

angelin said...

வீடியோ ரொம்ப நல்லா வந்திருக்கு ஆசியா,வாழ்த்துக்கள்
இந்த ஐடியாவை கொடுத்த உங்கள் செல்ல குட்டிக்கு Double thanks

asiya omar said...

வானதி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சகோ.அப்துல் காதர் கருத்திற்கு நன்றி.வீடியோ எடுத்து தந்தால் போடலாம் தான்,இந்த ஒன்று போடுவதற்குள் நேரம் பறந்து விட்டது,இனி மற்ற வேலைகளுக்கு ஓவர் டைம் தான்.வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

ஜெகதீஸ் கருத்திற்கும்,வருகைக்கும் நன்றி.

asiya omar said...

மிக்க நன்றி,மகிழ்ச்சி மேனகா.

அதிரா வாங்க வருகைக்கு மகிழ்ச்சி.நீங்கள் இப்ப தான் வந்தாச்சே,அப்படியே அங்கு விசிட் விட்டால் போச்சு.அய்யோ! முகத்தை காட்டினால் கருத்து சொல்லாமல் ஓடிப்போயிருப்பீங்க.இனி அடுத்த வீடியோ நேரம், அளவாய் வரும் படி பார்த்து கொள்கிறேன்.

asiya omar said...

மிக்க நன்றி அகிலா,கருத்திற்கு மகிழ்ச்சி.

மிக்க நன்றி கோபி.வருகைக்கு மகிழ்ச்சி.

சவிதா கருத்திற்கு மிக்க நன்றி,வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

ஸாதிகா உங்கள் பாராட்டு மிக்க மகிழ்வைத் தருது. மிக்க நன்றி.

ஏஞ்சலின் மிக்க நன்றி.மகளிடம் சொல்லி விடுகிறேன்.மிக்க மகிழ்ச்சி.

GEETHA ACHAL said...

உங்க வாய்ஸ் சூப்பராக இருக்கு..

பொறுமையாக ஒவ்வொன்றாக சொல்லி இருக்கின்றிங்க...உங்கள் கணவருக்கும், மகளுக்கும் வாழ்த்துகள்..டைமை இன்னும் கொஞ்சம் குறைத்தால் நல்லா இருக்கும்..

புதிய முயர்ச்சி அருமை...

தொடரட்டும் உங்கள் படைப்புகள்...

Pushpa said...

Prawn manchurian sounds and looks very yummy.

FOOD said...

அடுத்த பரிணாமம். வாழ்த்துக்கள்.

எல் கே said...

சகோ புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். நான் வீடியோ பார்க்கவில்லை:)

Chitra said...

செமையாக இருக்குது... சும்மாவே போட்டோஸ் பார்த்து நாக்குல நீர் ஊறிக்கிட்டு இருக்கும். இப்போ, ஸ்வீட் வாய்ஸ் கூட சேர்ந்து , அந்த plate பக்கத்துல வருது....கண்ணுக்கு எட்டினது - வாய்க்கு எட்டல.... :-( அடுத்த முயற்சி - 3 D effect தான்... பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

Chitra said...

Convey our thanks to your daughter and to your husband. It is very nice of them to encourage you like this. :-)

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துகள்.

ஆயிஷா said...

வீடியோ சமையல் ரொம்ப அருமை.

ரெசிப்பி அருமை.

Jaleela Kamal said...

புதிய முயற்சி
நல்ல வந்து இருக்கு
இரண்டு மாதம் முன்பு தான் நானும் தமிழ் குடுமப்த்தில் இந்த ரெசிபி கொடுத்து இருந்தேன்,
உங்களை போல் எனக்கும் சமையலறையில் உதவுவோர் இருந்தால் இன்னும் அட்டகாசம் பண்ணலாம்

அன்னு போன வாரம் நம்ம இரண்டு பேர் கிட்டேயும் வீடியோ சமையல் போடும் படி சொன்னார்கள் பரவாயில்ல உடனே முயற்சி எடுத்துட்டீங்க,

Jaleela Kamal said...

ருமானாவுக்கு பாராட்டுக்கள் இப்பவே நல்ல டிரெயினிங் போல.
பேசாமா ருமானாவுக்கும் ஒரு பிளாக் ஆரம்பிச்சுடுங்க

asiya omar said...

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

புஷ்பா மிக்க நன்றி.

ஃபுட் மிக்க நன்றி சகோ.

எல்.கே.முடிந்தால் பாருங்க.வருகைக்கு நன்றி சகோ.

சித்ரா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

காஞ்சனா மிக்க நன்றி.

ஆயிஷா மிக்க நன்றி.

asiya omar said...

ஜலீலா வருகைக்கு மகிழ்ச்சி, நன்றி.நீங்க கொடுக்காத குறிப்பா?ஜலி.உங்க குறிப்பை அங்கு சென்று பார்க்கிறேன்.நான் ஃபிஷ்,சிக்கன்,வெஜ் எல்லாவற்றிலும் வீட்டில் வழக்கமாக செய்வதுண்டு.ருமானாவிற்கு உங்க வாழ்த்தை சொல்லி விடுகிறேன்.நன்றி.

அமைதிச்சாரல் said...

புதிய முயற்சியும், ரெசிப்பியும் சூப்பர்..

ஒத்தாசை செஞ்சவங்களுக்கும் பாராட்டுகள் :-))

Gayathri Kumar said...

Video is very nice..

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா...,கலக்கிட்டீங்க போங்க...
முதல் முயற்ச்சியே அசத்தலாக இருக்கு.அழகா பேசி விளக்கி சொல்லியிருப்பது சிறப்பாக இருந்தது.
இன்னும் இது போன்று நிறைய வீடீயோ சமையலை எதிர்ப்பார்க்கின்றோம்.
டேஸ்ட் பண்ணும்போதாவது உங்கள் முகம் தெரியும்னு ஆசையா பார்த்தேன்... ஆனால் ஏமாற்றம்....
சரி ஆசியா அக்கா அடுத்தடுத்து முகம் காட்டி சமைப்பாங்கன்னு நினைக்கிறேன்.
உங்கள் மகளுக்கு எனது ஸ்பெஷலான பாராட்டுக்களை சொல்லிடுங்க அக்கா...
உங்களுக்கு எனது வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

அன்புடன்,
அப்சரா.

பித்தனின் வாக்கு said...

super. well try and good.

ஜெய்லானி said...

//எனக்கு டிவியில் எல்லாம் சமையல் குறிப்பு கொடுக்கனும் என்று ஒரு காலத்தில் ஆசை இருந்தது,//

வடைப்போச்சே...!!

நீங்க உண்மையாதான் சமையல் செய்யுறீங்கன்னு வீடியோவை பார்க்கும் போது தெரியுது... :-)))


எடிட்டருக்கும் , கேமரா மேனும் எதிர் காலத்தில் நல்ல சான்ஸ் இருக்கு வாழ்த்துக்கள்...!! ((( நீங்க மிரட்டி அவங்களை எடுக்க வைக்கலதானே )) :-)))))))))))))

mahavijay said...

உங்க புதிய முயற்சிக்கு என் வாழ்த்துகள்.

உங்க குரல் ரொம்ப இளமையா இருக்கு.

உங்களை பார்க்க ஆசையா இருக்கு அடுத்தமுறை முகத்தை காட்டுங்க.

உங்க மகளுக்கும் என் வாழ்த்துகளை தெரிவிக்கவும்.

Krishnaveni said...

wow, very good try madam, thanks to your husband and little angel

asiya omar said...

அமைதிச்சாரல் வாங்க,மிக்க நன்றி.

காயத்ரி குமார் மிக்க நன்றி.

அப்சரா மிக்க நன்றி.முகம் காட்டணும் பார்ப்போம்.வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

பித்தன் சார் வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.

சகோ.ஜெய்லானி பாயிண்ட்டை பிடிச்சிட்டீங்க,நான் எங்கே மிரட்டுறது?
அவங்க எல்லாம் என்னை மிரட்டாமல் இருந்தால் சரி தான்.எப்படி வீட்டில் உள்ளவர்களை மிரட்டி வைப்பதுன்னு ஒரு பதிவு போடுங்க,எனக்கு உபயோகமாக இருக்கும்.

asiya omar said...

மஹா விஜய்,மிக்க நன்றி.. எதையும் கண்ணால் பார்க்காமல் ஆசை படக்கூடாதுமா.இவ்வளவு தானான்னு ஆயிடும்.

கிருஷ்ணவேணி மிக்க நன்றி,மகிழ்ச்சி.

அந்நியன் 2 said...

நான் இதுவரைக்கும் யார் பதிவையும் சுட்டது இல்லை.

முதல் முறையா உங்கள் வானொலியை....சாரி..சாரி..காணொளியை சுடபோறேன்.

சொல்லிட்டுத்தான் சுடறேன் அதுக்காக மகளிர் மன்றத்திலேலாம் புகார் கொடுக்ககூடாது.

இப்படி ஈசியா சொல்லி தந்தீர்கள் என்றால் நாங்கள் வீட்டுக் காரவுககிட்ட அதை செஞ்சு தா,இதை செஞ்சு தா என்று கேக்கமாட்டோம்லே.

ஏதோ ஒரு டிவி சானலைப் பார்த்த திருப்தி வாழ்த்துக்கள் சகோ.

Mahi said...

வீடியோ ரெசிப்பிக்கு பாராட்டுக்கள் ஆசியாக்கா! அழகா பேசறீங்க! :)
தொடருங்கள்! வீடியோ எடுக்க எடுக்க நீளத்தை எப்படிக்குறைக்கலாம்னு உங்களுக்கே தெரிந்துடும்.
கீப் ராக்கிங்! :) :)

afrine said...

ஆஹா என்ன அருமை! வெல்டன் ஆசியாக்கா, இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. பார்த்தவுடன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஸ்டார் ஹோட்டல் செஃப் போல சும்ம சூப்பரா பண்ணீட்டீங்க. விளக்கமும் புதிதாக சொல்பவர் போல இல்லை. கலக்கீட்டீங்க. உங்க ஹப்பிக்கும், ருமானாவிற்கு என்னுடைய பாராட்டுக்கள், உங்களை இந்த அளவிற்கு ஊக்குவிப்பது மகிழ்ச்சியா இருக்கு. உங்கள் பங்களிப்பு தொடரட்டும்.

அன்புடன்

தங்கை தனிஷா

Geetha6 said...

வாழ்த்துக்கள் தோழி!

போளூர் தயாநிதி said...

வீடியோ சமையல் ரொம்ப அழகாயிருக்கு,ரெசியும் சூப்பர்ர்!!

சே.குமார் said...

வீடியோ சமையல் அருமையாவும் அழகாகவும் இருக்கு....

asiya omar said...

அந்நியன் மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

தனிஷா மிக்க நன்றி.

கீதா6 மிக்க நன்றி.

போளூர் தயாநிதி மிக்க நன்றி.

சே.குமார் மிக்க நன்றி.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியாக்கா! கஜினி மாதிரி பல தடவை இந்தப் பக்கத்துக்கு படையெடுத்து இப்போதான் கமெண்ட் கொடுக்க முடிஞ்சுது :)

உங்க வீடியோ ரெசிபியைவிடை சொல்லித்தந்த விதம் ரொம்ப டேஸ்ட் ;)) மாஷா அல்லாஹ்! உண்மையாவே அதிக நேரம் பார்த்த மாதிரி ஃபீலிங்கே இல்லாம ரொம்ப இன்ட்ரஸ்ட்டா பார்த்தேன் :) அடுத்த முறை ஃபர்தா போட்டு ஃபுல்லா ஆஜர் ஆகிடுங்க ப்ளீஸ்! இதற்கு தூண்டுதலா இருந்த லைட் வுமன் :)ருமானாவுக்கும், ஹெல்ப் பண்ணிய உங்க கேமரா மேனுக்கும் :) வாழ்த்துக்கள்!

asiya omar said...

வ அலைக்கும் ஸலாம் அஸ்மா.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி .

shadiq said...

jaffer...k.s.a.said


really super. pls continue ur video samayal..thanks

அன்னு said...

akkaa...

ithu ungalukke paavamaa theriyalaiya? kadasi varaikkum kannula kaattittu kadasila neengale saappittuttu 'semaiya irukku, wow'ngureenga. down! down !!

he he he.. paavam video eduththavaraikkooda vaanga taste pannalaamnu koopidaliye? :))


nadaththunga. biriyani video eppa?

unga tamil modern college ponnunga tamil maathirye irukku. konjum thamizh. :))

asiya omar said...

சாதிக் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி.

asiya omar said...

அன்னு வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.சாரி அன்னு, என் பிள்ளைங்களோட பேசிப்பேசி என் பேச்சு இப்படி ஆயிட்டுதோ! :) நான் எப்பவும் இப்படி தான் பேசுகிறேன்,இனி நிச்சயம் கவனமாக முழுவதும் தமிழில் இருப்பது போல் பார்த்து கொள்கிறேன்.நிச்சயம் பிரியாணி ரெசிப்பி போடுகிறேன்.இன்ஷா அல்லாஹ்!

Mumtaj Parveen said...

pls tell how to make gram masala power &ginger garlic paste ratio

Asiya Omar said...

Mumtaj Parveen, Ginger Garlic paste 1:1 ratio thaan.
Normal garam masala that is elam,pattai,kiraambu mix,elam 15 gm,pattai -15 gm and kirambu -10 gm -mix and grind it to p0wder,
Mughalgaram masala - elam,pattai, black pepper- each 15 gm and kirambu - 10 gm ,mix and grind..
I will post it seperately all the garam masala types. Thanks for visiting..