Wednesday, March 9, 2011

பீஸ் குருமா / PEAS KURMA

பீஸ் குருமா:
தேவையான பொருட்கள்;
பச்சை பட்டாணி (உரித்தது) -100கிராம்
அல்லது ஃப்ரோசன் பட்டாணி
வெங்காயம் - 100கிராம்
தக்காளி - 100கிராம்
பச்சை மிள்காய் -2
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2டீஸ்பூன்
கரம்மசாலா -கால்ஸ்பூன்
மல்லி,புதினா-சிறிது
தேங்காய் துருவல்-3டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு -3
மல்லித்தூள்- 2-3 டீஸ்பூன்
சோம்புத்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரை - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -கால்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1டீஸ்பூன்
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
நெய் -1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

வெங்காயம்,தக்காளி,மல்லி,புதினா நறுக்கி வைக்கவும். தேங்காய் முந்திரி அரைத்து வைக்கவும்.

பட்டாணியை அலசி வைக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் நன்கு வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட் ,கரம்மசாலா போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கியதும்,தக்காளி, பச்சை மிள்காய்,உப்பு சேர்த்து வதக்கவும்.
மல்லி,புதினாவும் சேர்த்து வதக்கவும்.
குறிப்பிட்ட மசாலா வகைகள் சேர்த்து வதக்கி,ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.நன்கு மசாலா வாடை அடங்கி கொதி வரட்டும்.

பச்சை பட்டாணி சேர்க்கவும்.

மூடி போட்டு கால்மணி நேரம் வேக விடவும்.தண்ணீர் தேவைக்கு சேர்க்கலாம். உப்பு சரி பார்க்கவும்.

பட்டாணி வெந்ததும்,அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்க்கவும்.கொதி வரவும் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும்.ரெடியானவுடன் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது பட்டர் விடவும்.

சுவையான பீஸ் குருமா ரெடி.
இதனை ப்ரெட், சப்பாத்தி, பரோட்டா, நாண், இடியப்பம்,ஆப்பம் உடன் பரிமாறலாம். ப்ரெட் டோஸ்ட் பீஸ் குருமா செம காம்பினேஷன், என் கல்லூரி ஹாஸ்டலில் இந்த ரெசிப்பி வாரம் ஒரு நாள் உண்டு, அதனால் நான் இங்கும் அடிக்கடி செய்வது வழக்கம்,4ஸ்லைஸ் சாப்பிடுகிறவர்கள் கூட 4சேர்த்து சாப்பிடுவாங்க. இந்தக்குருமா ஸ்பெஷல் மணம் மல்லித்தூள் தான், கொஞ்சம் அதிகம் சேர்த்தால் கூட அருமையாக இருக்கும்.

--ஆசியா உமர்.



31 comments:

GEETHA ACHAL said...

நாங்களும் இதே மாதிரி தான் பிரடுடன் சன்னா மசாலா சேர்த்து சாப்பிடுவேன்...ரொம்ப பிடிக்கும்...

பீஸ் குருமா சூப்பரகா இருக்கின்றது...

கோவை2தில்லி said...

சூப்பர் ரெசிபி. பிரெட் டோஸ்டுடன் நன்றாக இருக்கும். பச்சை பட்டாணியை சேர்த்து செய்யும் போது வெந்தவுடன் ஒரு வித வாடை வருகிறதே! இதை தவிர்க்க என்ன செய்யலாம்? தெரியப்படுத்துங்களேன்.

asiya omar said...

கீதா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,ப்ரெட் சன்னாவும் அருமையாக இருக்கும்.நானும் செய்வதுண்டு.ப்ரெட் சன்னா ரெசிப்பியும் கொடுத்தும் இருக்கிறேன்,அதனுடன் வெங்காயம் பச்சையாக கட் செய்து பரிமாறினால் சூப்பர்.

vanathy said...

சூப்பர் ரெசிப்பி. எனக்கும் இந்த பீஸ் வாடை பிடிப்பதில்லை. அதனால் சமைப்பது இல்லை.

asiya omar said...

புவனா(ஆதி) வாங்க.உங்க பெயர் இப்ப தெரிஞ்சாச்சே.
பச்சை பட்டாணி வாடையை மடக்க தான் மல்லித்தூள் சேர்ப்பது,வெடு வெடுன்னு இருந்தாலும் நன்கு கொதிக்க விட்டால் அருமையாக இருக்கும்,நான் முடித்து இறக்கும் பொழுது 1டீஸ்பூன் நெய் அல்லது பட்டர் சேர்க்க சொல்லியிருப்பது அதற்கு தான்.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Chitra said...

இது கூட கொத்துகறி சேர்த்து செய்தால் இன்னும் மணமாக இருக்குமே.

asiya omar said...

வானதி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

பீஸ் குருமா சூப்பர்.பார்த்தௌம் உடனே சமைத்து விடவேண்டும் போல் உள்ளத்

mahavijay said...

ஈசியா இருக்கு இந்த குருமா செய்துபார்க்கனும்.

asiya omar said...

ஆமாம் சித்ரா அந்த டேஸ்ட் சூப்பராக இருக்கும்.கருத்திற்கு மிக்க நன்றி.நீங்க மட்டன் பிரியை ஆச்சே.

S.Menaga said...

ஆஹா ப்ரெட் டோஸ்ட்டுடன் செம சூப்பரா இருக்குமே...அசத்தல் குறிப்பு!!

asiya omar said...

ஸாதிகா வாங்க,செய்து பாருங்க,உங்களுக்கு பிடிக்கும்.கருத்திற்கு மகிழ்ச்சி.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

பீஸ் குருமா சூப்பர்.

அமைதிச்சாரல் said...

வாசனையான குருமா..

asiya omar said...

மஹா விஜய் மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

ஆயிஷாஅபுல் மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

savitha ramesh said...

romba nalla irukku.bread ,naan ellathukkum nalla pogum.

சிநேகிதன் அக்பர் said...

மிக விரைவில் செய்துட வேண்டியதுதான் :)

ராமலக்ஷ்மி said...

மல்லித்தூள் மணம் தனிதான். நல்ல குறிப்பு ஆசியா.

சே.குமார் said...

அசத்தல் குறிப்பு... மிக விரைவில் செய்திட வேண்டியதுதான்.

மகி said...

சூப்பரா இருக்கு ஆசியாக்கா! பட்டாணியை தனியா குருமா செய்ததே இல்ல.சீக்கிரம் செய்துபார்க்கிறேன்.

asiya omar said...

சவீதா மிக்க நன்றி.

அக்பர் மிக்க நன்றி.

ராமலஷ்மி மிக்க நன்றி.

சே.குமார் மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

I don't know how to make... Better I won't learn... But I know how to eat... :-)))

சசிகுமார் said...

பீஸ் குருமா சூப்பர்

சாருஸ்ரீராஜ் said...

எனக்கு ரொம்ப பிடித்த குருமா , நான் சப்பாத்தி கூட செய்வதுண்டு பிரெட் ரோஸ்ட்டுடன் டிரை பண்ணுகிறேன்.

Lakshmi said...

பீஸ்குருமா செய்துபாத்துட்டுத்தான் பின்னூட்டம் கொடுக்கனும்னு இருந்தேன். இன்று பண்ணியாச்சு.சூப்பரா
வந்தது.

asiya omar said...

கொச்சு ரவி மிக்க நன்றி.

சசிகுமார் மிக்க நன்றி.

சாருஸ்ரீ மிக்க நன்றி.

asiya omar said...

லஷ்மிமா வாங்க,நீங்க செய்து பின்னூட்டமும் தந்ததில் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.

goma said...

பட்டாணி குருமா பார்த்தாலே பசி தீரும் போல் இருக்கிறதே...

Geetha6 said...

படங்கள் அருமை,விளக்கம் சூப்பர் !!

R.Gopi said...

ப்ரெட் டோஸ்ட் வித் பீஸ் குருமா..

சூப்பர் அசத்தல் காம்பினேஷன்...

Vijisveg Kitchen said...

சூப்பர் ரெசிப்பி. நானும் அடிக்கடி செய்வதுண்டு.