Thursday, March 10, 2011

பெயர்காரணம் தொடர் – விமான நிலையத்தில் அனுபவித்த கஷ்டம்..

இந்த தொடர் நீண்ட காலமாக பதிவுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே என் பெயர்ப்புராணம் பற்றி ஏலேலோ ஐலஷா என்று பதிவிட்டிருக்கிறேன். அதனை இங்கு சென்று பார்க்கவும்.அதிலேயே அனைத்தும் பகிர்ந்து விட்டேன்.

சகோ.R.கோபி தொடர் பதிவிற்கு என்னையும் அழைத்து இருக்கிறார்.மிக்க நன்றி. எனவே இன்னும் மறக்க முடியாத நினைவுகள் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்களே, அந்த புதன் கிழமை தான் கடைக்குட்டி பெண்ணாகப் பிறந்தேன், பேரு தான் கடைக்குட்டி என் மூத்த அண்ணனிற்கும் எனக்கும் 23 வயது வித்தியாசம், அவர்கள் என்னை ஆசியாக்கா என்று தான் அழைப்பாங்க. எஙக அண்ணன் பையன்கள் எல்லாம் என்னை அக்கா என்று அழைத்து வந்ததால் ஒரு காலத்தில் ஆசியாமான்னு கூப்பிட்ட எல்லாரும் என்னை ஆசியாக்கான்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க, என்னோட பட்டமளிப்பு விழாவிற்கு என்னோட பெங்களூர் மூத்த அண்ணனும், திருச்சி அண்ணனும் வந்திருந்தாஙக, நான் எங்க அம்மாவின் அந்தக்கால சேலையை (கிளிப்பச்சையில் மெரூன் பார்டர்) மிக பத்திரமாக பாதுகாத்ததை கட்டியிருந்தேன், அந்த சேலையில் என்னை பார்த்தவுடன் ஆசியாக்கா “நீ உம்மா மாதிரியே இருக்கேன்னு” எங்க பெங்களூர் அண்ணன் சொல்ல, என்னுடன் இருந்த ப்ரண்ட்ஸ், ஜூனியர்ஸ் எல்லாம் உங்க பெயர் ஆசியாக்காவா என்று கேட்டாங்க.எங்க அண்ணன் அசடு வழிந்து, ஆசியாமாவை தான் எல்லாரும் ஆசியாக்கா என்று அழைப்போம் என்று சொன்னாங்க. அக்கா உங்களுக்கு இவ்வளவு பெரிய தம்பீஸ் எல்லாம் இருக்காங்க என்று சொல்லவே இல்லையே என்று சிரிச்சாங்க. எனக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் எப்பவும் என் கணவர் மட்டும் ஆசியாமா என்று தான் கூப்பிடுவார்.


எஙக ஊரில் பெண் பிள்ளைகளுக்கு. பெயர் வைக்கும் பொழுது ஒரு சில ஆலிம்கள், பெண் பிள்ளைகள் பெயருடனும் முஹம்மது,அஹமது, செய்யது, காதர் என்று ஆண்கள் பெயரையும் சேர்த்து வைத்து விடுகிறார்கள், எனக்கு கூட பெயர் வைக்கும் பொழுது எங்க வாப்பாவின் உம்மா பெயரான ஆசியாவை, முஹம்மது ஆசியா எனறு வைத்தார்களாம். என் கல்லூரி தோழி எங்க ஊர் பெயர்களை பார்த்து, என்ன ஆசியா, உங்க ஊரில் ஆண்கள் பெயரையும் சேர்த்து பெண் பிள்ளைகளூக்கு வைக்கிறாங்க, என்று அடிக்கடி கேட்பதுண்டு, என்னால் முடிந்தளவு எங்க குடும்பத்தில் ஆண்கள் பெயர் போல் பெண்களுக்கு வைக்காதீங்கன்னு சொல்வேன்.
இதனால் எனக்கு ஏற்பட்ட பெரிய கஷ்ட அனுபவம் ஒன்றை சொல்கிறேன்.

என்னுடைய பாஸ்போர்ட்டில் முஹம்மது ஆசியா உமர் என்று இருக்கும். நான் உம்ரா செய்ய மெக்கா சென்ற பொழுது ஜித்தா விமான நிலையத்தில் என்னை தனியாக உட்காரவைத்து விட்டார்கள்.
“ஷூ ஹாதா...!?” என்று சத்தம் போட்டார் இமிக்ரேஷன் கவுண்டரில் இருந்த அரபி, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெயர் எப்படி பெண் பெயரின் முன்னாடி இருக்கும், எப்படி வைக்கலாம்? ஒரு சமயம் ஆண் பாஸ்போர்ட்டில் நான் வந்து விட்டேனோ என்று என் புகைப்படத்தை நோண்டி பார்த்தார். என் கணவர் பதட்டமடைந்து விட்டார், பாஸ்போர்ட்டை டேமேஜ் செய்தால் பெரிய பாடாகி விடுமே என்று நாங்கள் எல்லாம் பயந்து நின்று கொண்டு இருந்தோம், என் தகப்பனார் பெயர் முஹம்மது யூசுப் என்பதால், அந்த முஹம்மது தான் முன்னாடி இனிஷியலாய் உள்ளது என்றோம், அதற்கு அந்த அரபி, அப்படி என்றாலும் தகப்பனார் பெயர் பின்னாடி தானே வரும் என்று வாதம் செய்ய, இந்தியாவில் இனிஷியல் முன்னாடி போடுவதும் உண்டுன்னு என் கணவர் மிகவும் சிரமப்பட்டு விளக்கம் கொடுத்தார். பிறகு என் தகப்பனார் பெயரை சரி பார்த்து எங்களை இரண்டு மணி நேரம் தாமதமாக வெளியே விட்டார்கள்.

அடுத்து வெளிநாடுகளில் பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயர் தான் ஹாஸ்பிட்டல் போகும் பொழுது ஹெல்த் கார்டிலிலும் இருக்கும், அங்கு என்னை கூப்பிடும் பொழுது கூட, ஆண்கள் பக்கம் தான் பார்ப்பார்கள். சங்கடமாக இருக்கும், நான் அவசரமாக ஓடி நான் தான் என்று சொல்வதுண்டு, இது போல் ட்ரைவிங் லைசன்ஸ் எடுக்கும் பொழுது மற்றும் பல பொது இடங்களில் இப்படி பெயரால் கஷ்டப்பட்டதையும் பலர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். அதனால் பெயர் வைக்கும் பொழுது சின்னப் பெயராக எளிதாக எங்கும் அழைக்கும் வகையில் வைப்பது நல்லது.

இந்தக்கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என்று தான் இதனை எழுதுகிறேன், முடிந்தளவு பெண் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது யோசித்து வைக்க வேண்டும் என்று எங்க ஊர் மக்களை (மேலப்பாளையம்) கேட்டு கொள்கிறேன். இந்தப் பிரச்சனை எங்க ஊரில் இன்னும் அதிகம் இருக்கு.

--ஆசியா உமர்.
விரும்புபவர்கள் இந்த தொடரை தொடரலாம்.50 comments:

ஜெய்லானி said...

எப்போ ஊர் போனாலும் ஏர்போர்ட்டில எனக்கும் இதே கஷ்டம்தான். எல்லாம் இந்த இனிஷியல் பிராப்ளம்தான் :-))

கக்கு - மாணிக்கம் said...

எனக்கும் இந்த குழப்பம் இருந்தது உங்கள் பெயரை கவனித்த போது :)))

Chitra said...

பெண் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது யோசித்து வைக்க வேண்டும் என்று எங்க ஊர் மக்களை (மேலப்பாளையம்) கேட்டு கொள்கிறேன். இந்தப் பிரச்சனை எங்க ஊரில் இன்னும் அதிகம் இருக்கு.


......மேலப்பாளையத்தில் கனரா வங்கியில் Student Trainee ஆக இருந்த இரண்டு மாதங்களில், பாஸ் புக்ஸ் பார்த்து விட்டு , பெயர்களை வைத்து குழம்பி இருக்கிறேன். இப்பொழுது காரணம் புரிகிறது.

vanathy said...

உங்க பெயரால் இம்பூட்டு கஷ்டமா??? பெயர் வைக்கும் போது ஏதோ ஒரு வேகத்தில் வைச்சிடுவாங்க. ஆனால் பிள்ளைகள் தான் கஷ்டப்படுவாங்க.
நல்ல பதிவு, அக்கா.

FOOD said...

அனுபவங்கள் கற்று தந்த பாடம். பகிர்தல் நலம்.

தமிழ்வாசி - Prakash said...

உங்க பெயருக்கு அர்த்தம் தெரிந்தது.... நல்லது தான்....

எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

ஸாதிகா said...

உண்மைதான் ஆசியா.முன்பெல்லாம் பெண்களுக்கு முஹம்மது செய்யது என்ற்
பெயர்களை சேர்த்து வைத்தனர்.இப்பொழுது அது மிகவும் குறைந்து விட்டாலும் தாத்தா பெயர்,பாட்டி பெயர் என்று சேர்த்து இரணடு மூன்று பெயரை சேர்த்தார்ப்போல் வைத்து அது பல கஷடங்களை உருவாக்கி விடுகினற்து.நானும் இதனால சிரமங்களை அனுபவித்து இருக்கின்றேன்.என் மகனுக்கு பர்த் சர்டிபிகேட்டில் பெயரை மாற்றி(சுருக்கி)அலைந்த அலைச்சல்,செலவு எல்லாம் நினைவுக்கு வருகின்றற்து.மொத்தத்தில் இஸ்லாமியர்கள் பழக்கத்தில் இருக்கும் முழ நீளத்திற்கு பெயர்கள் வைப்பதை குறைத்து சிம்பிளாக வைப்பதே நல்லது.

எல் கே said...

அட இந்த மாதிரி பேரால அவஸ்தை பட்டவங்க நெறைய பேரு இருக்காங்க

ஆனந்தி.. said...

ஐயோ...இவளவு கஷ்டபட்டிங்களா ஆசியா??

Kanchana Radhakrishnan said...

நல்ல பதிவு.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

பதிவு நல்லது! Best wishes.

yuvana's diary said...

nice suggestion

அமைதிச்சாரல் said...

சுவாரஸ்யமான சம்பவங்கள்தான்..

asiya omar said...

ஜெய்லானி மிக்க நன்றி.

கக்கு மாணிக்கம் மிக்க நன்றி.

சித்ரா பேங்க்கில் என்று இல்லை,இந்த குழப்பம் நிறைய இடங்களில் இருக்கிறது.

வானதி மிக்க நன்றி.

ஃபுட் வருகைக்கு மிக்க நன்றி.

asiya omar said...

தமிழ்வாசி வருகைக்கு நன்றி.

ஸாதிகா நான் குறைச்சு தான் இங்கு விவரித்து இருக்கிறேன்,அன்று நான் சவூதி அரேபியாவை விட்டு வெளியே வந்ததே பெரிய விஷயம்.கருத்திற்கு மிக்க நன்றி.

எல்.கே. மிக்க நன்றி.

ஆனந்தி மிக்க நன்றி.

காஞ்சனா மிக்க நன்றி.

கொச்சு ரவி மிக்க நன்றி.

யுவனா உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

இளம் தூயவன் said...

சரியா சொன்னிங்க சகோதரி, பெரியவங்க அறியாமல் செய்த தவறினால் இது போன்ற நிலை.

பதிவுலகில் பாபு said...

முடிந்தளவு பெண் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது யோசித்து வைக்க வேண்டும் என்று எங்க ஊர் மக்களை (மேலப்பாளையம்) கேட்டு கொள்கிறேன்.///

ரொம்ப கரெக்ட்டுங்க.. எல்லாருக்குமே இது பொருந்தும்..

Gopi Ramamoorthy said...

\\எங்க ஊர் மக்களை (மேலப்பாளையம்) கேட்டு கொள்கிறேன். \\

எல்லா ஊர் மக்களையும் கேட்டுக்கோங்க:-)

Anonymous said...

அய்யோ பாவம் நீங்க:-(

அமுதா கிருஷ்ணா said...

கரெக்ட் short ஆக பெயர் வைப்பது நல்லது. இப்பொழுது அது தான் ஃபேஷன்.

நிலவு said...

ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 4 க்கு எதிராக‌ ! - http://powrnamy.blogspot.com/2011/03/4.html

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு ஆசியாமா! பெயரால் ஏற்படும் குழப்பங்கள் பலவிதம். அதை அழகாய் பகிர்ந்து இருக்கீங்க சகோ!

அம்பிகா said...

///முடிந்தளவு பெண் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது யோசித்து வைக்க வேண்டும் என்று எங்க ஊர் மக்களை (மேலப்பாளையம்) கேட்டு கொள்கிறேன்.///
பெயரால ரொம்ப கஷ்டப் பட்டிருக்கீங்க...

எம் அப்துல் காதர் said...

இந்த பிரச்சினை எல்லோருக்குமே இருக்கு சகோ. ரொம்ப விளக்கமா அருமையா எழுதி இருக்கீங்க.

எம் அப்துல் காதர் said...

இந்த பிரச்சினை ஏர்போர்ட்டில் சமயங்களில் இருக்கு சகோ. நீங்கள் சொல்வது மிகவும் சரி. அருமையா எழுதி இருக்கீங்க.

சிநேகிதன் அக்பர் said...

மிக எதார்த்தமான வேண்டுகோள். நல்ல பகிர்வு.

சுந்தரா said...

//முடிந்தளவு பெண் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது யோசித்து வைக்க வேண்டும் என்று எங்க ஊர் மக்களை (மேலப்பாளையம்) கேட்டு கொள்கிறேன். இந்தப் பிரச்சனை எங்க ஊரில் இன்னும் அதிகம் இருக்கு.//

எல்லாருமே இதை கவனத்தில் எடுத்துக்கிட்டா நல்லது. அம்மாவழி அப்பாவழிப் பெயர்கள் எல்லாவற்றையும் சேர்த்துவைப்பதால் நிறையப் பிள்ளைகள் சங்கடப்படுகிறார்கள்.

சுவாரஸ்யமான பதிவு ஆசியா.

asiya omar said...

சகோ.இளம் தூயவண் வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.

பாபு மிக்க நன்றி.

கோபி மிக்க நன்றி.

மஹா விஜய் மிக்க நன்றி.

அமுதா கிருஷ்ணா மிக்க நன்றி.

நிலவு வருகைக்கு நன்றி.

asiya omar said...

வெங்கட் நாகராஜ் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

அம்பிகா வாங்க,மிக்க நன்றி.

சகோ.அப்துல் காதர் மிக்க நன்றி.

சகோ.அக்பர் மிக்க நன்றி.

சுந்தரா மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு சகோதரி. பொதுவாகவே சவுதிக்கு புதிதாக வருபவர்களிடம் ஏர்போர்ட் அதிகாரிகள் கொஞ்சம் கடுமையாகவே நடந்துகொள்வார்கள். அதிலும் இந்தப் பெயர்க்குழப்பம் வேறு எனில் கேட்கவே வேண்டாம். நல்லவேளை இரண்டு மணி நேரம் காத்திருக்கவைத்தாவது அனுப்பினார்கள். எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவரின் குடும்பத்தாரை இதுபோன்ற பாஸ்போர்ட் பெயர்க் குழப்பத்தில் ஒரு நாள் முழுவதும் ஏர்போர்ட்டின் பயணிகள் காத்திருக்கும் அறையிலேயே காத்திருக்கவைத்தனர். நண்பர் கம்பெனியின் சவுதி பி.ஆர்.ஓ வை அழைத்துச்சென்று அவர்களுக்குப் புரியவைத்து மீட்டு வந்தார்.

கலாநேசன் said...

பெயர்க்குழப்பம் பெரிய பிரச்சனைதாங்க...

GEETHA ACHAL said...

உங்க பெயருக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கின்றதா...

எனக்கும் ஒரு முறை பிரச்சனை வந்தது...இங்கே USயில் passportயில் இருக்கும் பெயரே அனைத்து இடத்திலும் பதிவு செய்துவிடுவாங்க...டாக்டரினை பார்க்க போகும் பொழுது கூட அதே பெயரில் தான் இருக்கும்...நான் திருமணத்திற்கு முன்பே பாஸ்போர்ட் வாங்கியதால் கடைசி பெயராக என்னுடைய அப்பாவின் பெயரினையே வைத்து உள்ளேன்..இன்னுமும் கீதா ஞானமூர்த்தி தான்...(பதிவுலகில் மட்டுமே கீதா ஆச்சலாக...)..இதனால் நிறைய இடங்களில் குழப்பம்...இதனை தீர்பதற்குள் அப்படா என்று ஆகிவிடும்...

asiya omar said...

வாங்க சரவணக்குமார்,கருத்திற்கு மிக்க நன்றி.

வாங்க கலாநேசன்,மிக்க நன்றி.

asiya omar said...

கீதா ஆச்சல்,ரொம்ப யோசித்து செயல்பட வேண்டியது இந்த பெயர் விஷயம்..எனக்கும் திருமணம் முன்பே அண்ணன் பாஸ்போர்ட் எடுக்க சொன்னதால் 1990 -லேயே என் பெயர் தகப்பனார் பெயருடன் தான் இருந்தது,பின்பு ரெனுவல் செய்யும் பொழுது என் கணவர் பெயரை சேர்த்து எடுத்தாச்சு,அதற்கு திருச்சிக்கு நான் நேரில் போனேன்.நாம் என்னதான் உஷாராக இருந்தாலும் யப்பா,இந்த பெயர் குழப்பம் பெரிய தொடர் கதை தான் கீதா...

middleclassmadhavi said...

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

என் மகனுக்கு அப்பா பெயரைப் பின்னால் வைத்து பெயர் பதிவு செய்திருந்தோம் - ஸ்கூலில் உனக்கு இனிஷியல் என்ன என்று பிரச்னை வந்து இப்போது இனிஷியலுடன் பெயரை மாற்றி விட்டோம்!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அருமை ஆசியா.. :)0 பெயர்க்காரணம் விட அதை சொன்ன விதம் அருமை..:)

asiya omar said...

மிடில்கிளாஸ் மாதவி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

தேனக்கா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.நீங்க ரொம்ப பிஸியாக இருந்தாலும் அப்ப அப்ப ஒரு விசிட் வரும் பொழுது மிக்க மகிழ்ச்சி அக்கா.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அப்பா பெயர்,வாபிச்சா பெயர், மாவுமா பெயர் என்று வைத்து விடுகிறார்கள். நம்ம பிரச்சனை
அவங்களுக்கு தெரியாது.இப்ப அந்த மாதிரி வைப்பதில்லை. தோழிக்கு பெயரில் ரெம்பவே
வருத்தம் இருக்கு என் நினைக்கிறேன்.பெயரை
பற்றி 2 பதிவு எழுதி விட்டீர்கள்.

ஹேமா said...

ஆசியா அக்கா நானும் வந்திட்டேன்.பெயரால நீங்க படுற பாடு ரொம்பவே சந்தோஷம் எங்களுக்கு !

asiya omar said...

ஆயிஷா வ அலைக்கும் ஸலாம்.
சொல்ல்ப்போனால் என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்,எல்லாரும் அதனை படுத்திய பாட்டை தான் எழுதியிருக்கிறேன்,ஆசியா எனபது எவ்வளவு ஈசியாக உச்சரிக்கக்கூடிய பெயர்,ஏன் இத்தனை கஷ்டம்னு தான் தெரியலை.இப்ப யாரும் பெயர் கேட்டால் a s i y a ஆசியான்னு சோல்லிவிடுகிறேன்,ஆசியான்னு சொன்னால் ஆங்கிலத்தில் ஏசியான்னு எழுதுவாங்க,அதனை தடுக்க தான் சின்னபிள்ளை மாதிரி எழுத்து கூட்டி சொல்வது.இன்னும் கொஞ்சம் பேர் ஆயிஷான்னு கூட என்னை எழுத்து கூட்டியிருக்காங்க..அட விட்டுத்தள்ளூங்க,இப்ப அதெல்லாம் ரொம்ப இண்ட்ரெஸ்டாக தெரியப்போய் தான் அழகாக கட்டுரை எழுத முடிந்தது...

asiya omar said...

ஹே ஹே ஹேமா,இந்த கமென்ட் ரொம்ப பிடிச்சிருக்கு..வருகைக்கு மகிழ்ச்சி..நன்றி...

சே.குமார் said...

Akka... Nalla vilakkam....

கோவை2தில்லி said...

பெயர்க்குழப்பத்தால் வந்த பிரச்சனையை அழகா சொல்லியிருக்கீங்க. அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது.

athira said...

ஆசியா, ராத்திரி இங்கு வந்து படிச்சேன்... ஆனால் கடசிப்பெட்டிக்கு வந்திட்டுதே, இனிக் கொமெண்ட் போட்டா... கொஞ்ச நேரம்கூட ஷோ கேசில:) இருக்காதே, நீங்க எப்படியும் புதுத்தலைப்பு போட்டிடுவீங்க என நினைத்து போடாமல் போயிட்டேன்..

இப்ப பார்த்தால் இன்னும் இருக்கு சோ எழுதிடலாம் என வந்தேன்.

நான் எப்பவுமே என் மனதில் இருப்பதைத்தான் எழுதுவேனே ஒழிய நெகடிவ்வாக அல்லது பொஷிடிவ்வாக கொமெண்ட் போடவேணும்(தாக்கி எழுதவேணும்) என நினைத்து எப்பவும் பதில் எங்கேயும் எழுதுவதே கிடையாது, ஆனா சிலருக்கு பொஷிடிவ்வாக கொமெண்ட் போட்டால் மட்டுமே பிடிக்குது. அது என்னால முடியாமலிருக்கு... மனதில் தோன்றுவதை எழுதாமல் , நடித்து நல்லபிள்ளையாக எழுதுவது எனக்கு கடினம்....

சரி என் புலம்பல் போகட்டும் உங்கள் புலம்பலுக்கு வருவோம். முதலில் உங்க பெயர் உங்களுக்கு பிடிப்பதில்லை என்பதை நிறுத்துங்க. என்னைப்பொறுத்து உங்கட பெயர், மொழி சார்ந்ததாகவோ மதம் சார்ந்ததாகவோ இல்லாமல் எல்லா இடத்திலும் பொதுவான பெயராகவே எனக்கு தெரியுது. எந்த நாட்டுக்குப் போனாலும் ஈசியாக கூப்பிடக்கூடிய ஒரு பெயர். சில பெயரைப் பார்த்தால் என்ன மதம், மொழி எனச் சொல்லிடலாம்... ஆனால் உங்கள் பெயர் கண்டுபிடிக்கமுடியாது(ஆசியா).

எனக்கு இப்பெயர் மிகவும் பிடித்திருக்கு. இதை ஏன் பிடிக்கவில்லை எனப் புலம்புறீங்க. இன்னுமொன்று, எம் தலை எழுத்தை நிர்ணயிப்பதில் பெயரும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறதாம், ஒருவரின் பெயரும் அவரின் உயர்வுக்கும், நல்வாழ்க்கைக்கும் வழிவகுக்குமாமே... அந்த வகையில் நீங்க நல்லாத்தானே இருக்கிறீங்க, அதுக்கும் உங்க பெயர்தான் காரணம். இப்படி மாத்தி யோசியுங்க.

எந்த ஆபீஷர்தான் எங்கேயாவது உண்மையான கள்ளரைப் பிடிச்சிருக்கிறாங்க? அது எல்லோருக்கும் பெரும்பாலும் நடப்பதுதான், கள்ளப்பாஸ்போட்டுவருபவர்களை சல்யூட் அடித்து அனுப்பிடுவாங்க, இப்படி ஆராவது அப்பாவிகளைத்தான் போட்டு வாங்குவாங்க. அதனால் அதைவிடுங்க. உங்கள் பெயர் அழகானதே இனிமேல் உங்களுக்கு பெயர் வைத்தவர்களை நினைத்து பெருமைப்படுங்க.

“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”.

asiya omar said...

இனி அடுத்த ரெசிப்பி போடலாம்னு போஸ்ட் செய்து விட்டு வந்து பார்த்தால் அதிராவின் அழகான கமென்ட் ,மிக்க நன்றி.எனக்கும் என் பெயர் பிடிக்கும்,சந்தித்த இன்னல்கள்,சங்கடங்களை தெரிவித்திருந்தேன்,..
நீங்கள் அறுசுவையில் எடுத்து நடத்திய வெற்றிகரமான சமைத்து அசத்தலாமை தான் என் ப்ளாக்கிற்கே தலைப்பாக வைத்திருக்கிறேன்..மிக்க நன்றி அதிரா.மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சே.குமார் மிக்க நன்றி..

கோவை2தில்லி மிக்க நன்றி..

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

மோகன் குமார் said...

யப்பா அந்த விமான நிலைய சம்பவம் பயமுறுத்துகிறது. பெரிய பிரச்சனை தான் பெயரோடு!!

asiya omar said...

மோகன் குமார் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

R.Gopi said...

ஓஹோ....

இதுல இப்படி எல்லாம் கூட இருக்குதா?

அப்படின்னா....மேலப்பாளையம் பக்கம் வந்து அப்துல் காதர்னு சொன்னா, 5-6 பெண்கள் திரும்பி பார்ப்பாங்கன்னு சொல்லுங்க (சும்மா தமாஷுக்கு சொன்னேன்..)

உண்மை தான்... பெயர் சில சமயம் சில இடங்களில் சங்கடம் தந்து விடுகிறது...

ரமணி என்று முன்பு ஆண், பெண் இரு சாரார்க்கும் பெயர் வைத்து விடுவார்கள்...

உங்கள் பெயர் குழப்பத்தால் ஜித்தா விமான நிலையத்தில் நீங்கள் அடைந்த அந்த சில திக்திக் நிமிடங்கள் நினைத்தாலே ஒதறுது....

asiya omar said...

R.Gopi வருகைக்கு மிக்க நன்றி.
நீங்கள் நான் எழுதியதை எப்படி புரிந்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை,
பெண் பெயருக்கு முன்னால் பெண் பெயருடன் உதாரணமாக் முஹம்மது,செய்யது,அஹமது,காதர் என்று சேர்த்து வைப்பதையே குறிப்பிட்டிருந்தேன்,ஆண் பெயரையே பெண்பிள்ளைகளுக்கு வைப்பதாக சொல்லலை.