Tuesday, March 15, 2011

ஈசி பீன்ஸ் பொரியல்

தேவையான பொருட்கள் ;
பீன்ஸ் - கால் கிலோ
சாம்பார் பொடி - 1டீஸ்பூன்
எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கருவேப்பிலை - 2இணுக்கு
தேங்காய் துருவல் - 3டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

பீன்ஸ் அலசிவிட்டு நார் நீக்கி பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீருடன்,சாம்பார் பொடி சேர்த்து மூடி வேக வைக்கவும்.வெந்த பின்பு தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.பிரட்டி விடவும்.உப்பு பார்த்து போடவும்,பீன்ஸில் உப்பு கூடினால் கடுத்து விடும்,ஏனெனில் நாம் தண்ணீர்
வடிகட்டலை.

பின்பு தண்ணீர் வற்றியவுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.

பிரட்டி விட்டு உப்பு சரிபார்க்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உ.பருப்பு போட்டு வெடிக்கவும்,வற்றல்,கருவேப்பிலை போட்டு அடுப்பை அணைக்கவும்.

தாளித்ததை ரெடி செய்த பீன்ஸ் பொரியலில் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு பரிமாறவும்.

சுவையான ஈசி பீன்ஸ் பொரியல் ரெடி.விரும்பினால் தாளிக்கும் பொழுது வெங்காயம் வதக்கியும் சேர்க்கலாம்.இன்னும் ருசி சூப்பராக இருக்கும். பீன்ஸ் வேகும் பொழுது ஒரு கேரட்டும் நறுக்கி சேர்த்தால் கேரட் பீன்ஸ் பொரியல் கிடைக்கும்.பேச்சிலர்ஸ் இந்த முறையில் ஈசியாக செய்து விடலாம்.
-ஆசியா உமர்.

39 comments:

எல் கே said...

உங்களுக்கு பீன்ஸ் ரொம்பப் பிடிக்குமோ

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பீன்ஸ் ல் எனக்கு பிடிச்ச சமையல் இதுதான்

middleclassmadhavi said...

படிக்கும் போதே ஈசியாகவும் சாம்பார் பொடி போடுவதால் வித்யாச சுவையுடனும் தெரிகிறது! நன்றி!

asiya omar said...

எல்.கே வாங்க,சகோ உங்களுக்கு பிடிக்குமா?பீன்ஸ் மிகச் சத்தான காய் என்பதால் வாரம் ஒரு முறை நிச்சயம் உண்டு.ஆனால் பீன்ஸ் மட்டும் வாங்கியவுடன் ஃப்ரெஷாக பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்க,எல்லாருக்கும் பிடிக்கும்.

asiya omar said...

ஆர்.கே.எஸ் வாங்க,மிக்க நன்றி.மகிழ்ச்சி.

மாதவி வாங்க, கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி.

சங்கவி said...

எனக்கு பீன்ஸ் ரொம்ப பிடிக்கும் செஞ்சு பார்க்கிறேன் உங்கள் கை பக்குவத்தை...

Gayathri Kumar said...

Yummy poriyal. I make it often..

சுந்தரா said...

நல்ல குறிப்பு ஆசியா :)

நான் தாளித்து அதிலேயே பீன்ஸை வதக்கி இதுபோலச் செய்வதுண்டு.

yuvana's kitchen said...

we dont add sambar powder to it. so it is new to me. different idea

S.Menaga said...

நானும் தாளித்து பீன்சை வேகவைப்பேன்...நல்லாயிருக்கு அக்கா..

GEETHA ACHAL said...

எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த பொரியல்....இதனை அப்படியே சாதத்துடன் கலந்து சாப்பிட ஆசை...

தமிழ்வாசி - Prakash said...

பீன்ஸ் பொரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும்... உங்கள் பாணியிலும் ஒரு நாள் செய்து பார்க்கலாம்.


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

vanathy said...

எனக்கு பீன்ஸ் மிகவும் பிடிக்கும். செய்து பார்க்கணும்.

ஸாதிகா said...

பீன்ஸ் பொரியலுக்கு சாம்பார்ப்பொடி..வித்தியாசமாகன சுவையில்த்தான் இருக்கும்.

angelin said...

பசிய கிளப்புது உங்க photos.
எனக்கு பீன்ஸ் ரொம்ப பிடிக்கும்.
சாம்பார் போடி சேர்த்து செஞ்சதில்லை .
i'm going to try this .thanks asiya.

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப ஈசியா இருக்கே.

Kurinji said...

Easy and healthy poriyal...

Kurinjikathambam
Event : HRH-Puffed Rice

ஸாதிகா said...

தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.உங்களின் கருத்தினை பகிருங்கள்.

Gopi Ramamoorthy said...

நாங்களும் இப்படித்தான் செய்வோம்:-)

Kanchana Radhakrishnan said...

நல்ல குறிப்பு .

asiya omar said...

சங்கவி மிக்க நன்றி.

காயத்ரி மிக்க நன்றி.

சுந்தரா மிக்க நன்றி.

யுவனா மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

தமிழ்வாசி வருகைக்கு மிக்க நன்றி.

வானதி செய்து பாருங்க,மிக்க நன்றி.

ஸாதிகா கருத்திற்கு நன்றி,செய்து பாருங்க.

ஏஞ்சலின் மிக்க நன்றி.செய்து பாருங்க.

அக்பர் மிக்க நன்றி.

குறிஞ்சி மிக்க நன்றி.

கோபி மிக்க நன்றி.

காஞ்சனா மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

தோழி ஸாதிகா தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி..விரைவில் எழுதுகிறேன்.

FOOD said...

குறிப்புகள் மிக அருமை.

Pushpa said...

Healthy and vitamin rich yummy beans poriya.

savitha ramesh said...

naanum ipadi dhan sei ven.superb poriyal for curd rice.

ஹேமா said...

ம்ம்...சாம்பார் சாதத்தோட இந்த பீன்ஸ் வறுவல் நல்லாயிருக்குமே !

மனோ சாமிநாதன் said...

பீன்ஸ் பொரியல் சுலபமாகச் செய்யும் வித‌த்தில் இருக்கிறது ஆசியா! புகைப்படம்தான் வழக்கம்போல பளீரென இல்லை!

R.Gopi said...

பச்சை காய்கறிகளில் மிக முக்கியமான ஒரு காய் பீன்ஸ்... முதன்மையானது அவரைக்காய்...

சரி... அதென்ன ஒரு அடைமொழி - “ஈசி”... பண்றது ஈசியோ!!??

சசிகுமார் said...

அருமையான பொறியல் நன்றி.

சே.குமார் said...

எனக்கு பீன்ஸ் ரொம்ப பிடிக்கும் செஞ்சு பார்க்கிறேன்.

Kousalya said...

தோழி நலமா ?

பீன்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும், இப்ப நீங்க சொல்லி இருக்கிற விதம் கொஞ்சம் வித்தியாசமா இருக்குபா...செய்து பார்கிறேன். :))

எம் அப்துல் காதர் said...

பீன்ஸ் அருமையா இருக்கும். எனக்கும் இது மிகவும் பிடித்த "துணைக்கறி"

Anonymous said...

easy method...

asiya omar said...

ஃபுட் மிக்க நன்றி

சவீதா மிக்க நன்றி.

புஷ்பா மிக்க நன்றி.

ஹேமா மிக்க நன்றி.

மனோ அக்கா மிக்க நன்றி.மொபைலில் படங்கள் ஒரு சில நேரம் தெளிவாக இருப்பதில்லை.

R. கோபி மிக்க நன்றி.

சசி குமார் மிக்க நன்றி.

சே.குமார் மிக்க நன்றி.

கௌசல்யா மிக்க நன்றி.

சகோ.அப்துல் காதர் மிக்க நன்றி.

மஹா விஜய் மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

பதிவுக்கு நன்றி!

Lakshmi said...

ஆஸியா மேடம் நானும் பீன்ஸ்வாங்கினா ஃப்ரெஷ்ஷா இருக்கும்போதே உசிலியோ ப்ளைன் பாஜியோ செய்துடுவேன். என்னோட குறையொன்றுமில்லை பக்கம் அடிக்கடி வந்து கருத்து சொல்ரீங்க. தமிழ் விரும்பின்னு தலைப்புலயும் பதிவு எழுதரேன் அங்கயும் வந்து பாத்து கருத்து கூறுங்க.

Padhu said...

Love this simple stir fry with rice.

கோவை2தில்லி said...

நானும் தாளித்து பின்பு வேகவிடுவேன். சாம்பார் பொடி சேர்ப்பது வித்தியாசமாய் இருக்கிறது.