தோழி ஸாதிகா அன்புடன் இந்த தொடரை எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றி. பெண் எழுத்து என்றவுடன் எனக்குள் நிறைய சிந்தனை ஓட்டங்கள். பெண்ணின் எழுத்து கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என்ற கருத்திற்கு நானும் உடன்படுகிறேன்.
எழுத்து என்று வரும் பொழுது, ஆண் எழுத்து, பெண் எழுத்து இரண்டும் சமம் தான், பேச்சு சுதந்திரம் போல எழுத்து சுதந்திரமும் முக்கியம். எழுத்து தரமாய் இருந்து விட்டால் எந்த கருத்தையும் இலகுவாய் வெளிப்படுத்தி விடலாம்.
பெண்ணின் எழுத்து காலத்திற்கு தகுந்த படி மெருகேறி வருகிறது. அந்தக்காலத்து பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்து கொண்டு எழுதினார்கள், இந்தக்காலத்தில் பெண்கள் ஊருவிட்டு ஊர்,ஏன் நாடுவிட்டு நாடு தனியாக சென்று வரும் அளவிற்கு சிந்தனைகளும் விரிவடைந்து, துணிச்சல்காரர்களாக இருக்கின்றனர், அதற்கு தகுந்தாற் போல் அவர்களின் எழுத்துக்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. எழுத்து சுதந்திரத்தை மீறாமலும் அதே சமயம் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்,அடக்குமுறை, அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் வண்ணம் பெண் எழுத்துக்கள் இருக்க வேண்டும், எல்லோருக்கும் ஒரு போல் வாழ்க்கை அமைவதில்லை, பெண்களின் அனுபவங்களும், அவர்கள் கண்டது, கேட்டது, பார்த்தது, படித்தது இவற்றைப் பொருத்து அவர்களின் எழுத்து வெளிப்படுகிறது. பெண்ணிற்கு பெண் குணாதிசயமும் வேறுபடுகிறது. அதனை வைத்து எழுத்தும் மாறுபடும். அநேக பெண் எழுத்தாளர்களின் எழுத்தை வாசித்தால் பல்வேறு பரிணாமங்கள் தெரிய வரும்.
ஒவ்வொரு தலைமுறையிலும் பெண்கள் முன்னேறிக்கொண்டு தான் வருகிறோம், பின்னடையவில்லை. அதற்கு காரணம், உணர்வுச் சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் தான், அது போல கண்ணியமான எழுத்து சுதந்திரம் இருந்தால் பெண் முன்னேற்றத்தில் தடை இருக்காது என்பதே திண்ணமான முடிவு. அந்த கண்ணியம் என்பது ஆணிற்கும் பொருந்தும். எழுதும் எழுத்தில் சுதந்திரத்தை நிர்ணயிக்க தெரிய வேண்டும், நினைக்கும் கருத்தை தைரியமாக வெளிப்படுத்த தெரிந்த பெண் எழுத்தாக இருக்க வேண்டும்.
பெண்களே, பெண்களைக் கோழைகளாகக் காட்டும் எழுத்தாக அல்லாமல் உத்வேகம், தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன், பிறரை மதித்தல் போன்ற நல்ல குணங்களை வெளிப்படுத்தும் வண்ணம் பெண் எழுத்துக்கள் இருந்தால் சமுதாயம் நிச்சயம் உயர்நிலையை அடையும். பெண் எழுத்து இல்லறம், இலக்கியம் என்பதோடு நின்றுவிடாமல் நாட்டு நடப்பு, அறிவியல், பொருளாதாரம், அரசியல் போன்ற பல பிரிவுகளிலும் பங்கெடுக்க வேண்டும். வெறும் சொல்லிற்காக எழுதாமல் செயல்படுத்தக் கூடியதாக பெண் எழுத்து இருக்க வேண்டும்.
எழுத்துலகம் என்பது பொது திறந்த வெளி அரங்கம், அனைத்தும் அனைவராலும் கவனிக்கப்படுகிறது, எழுத்தை வைத்து தரத்தை எடை போட்டு விடலாம், கருத்தை சொல்ல பெரிய எழுத்தாளர்களாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, எளிய முறையில், எள்ளளவேணும் பிறரை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும், எழுத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும், காலத்தால் அழியாதது எழுத்து, அதில் பெண் எழுத்து எல்லாத்துறையிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது என் முடிவுக்கருத்து..
மொழிக்கு உயிர் எழுத்து
சொல்லிற்கு செயல் சொத்து
ஆண்டிக்கும் அரசனுக்கும் பொது எழுத்து
ஆண் எழுத்து பெண் எழுத்து
எனப் பிரித்தறியா வண்ணமாய்
எண்ணியதை திண்ணமாய்
தீர்க்கமாய் படைத்தல் வேண்டும்..
-இது இத்தருணம் தோன்றிய வரிகள்...
இந்த தொடரை தொடர நான் அன்புடன் அழைப்பது
சிறுமுயற்சி முத்துலெட்சுமி
கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா
என் இனிய தமிழ் மக்களே அன்னு
மனதோடு மட்டும் கௌசல்யா
வானதீஸ் வானதி
நிச்சயம் தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையில்.....
--ஆசியா உமர்..
42 comments:
தொடர் பதிவு என்று பார்த்ததும் நமக்கு அழைப்பு இருக்கும் என்ற ஒரு பயத்தில் வேகமா இறுதியில் வந்து பார்த்தேன் தோழி என் கணிப்பு மிக சரி... :))
பெண் எழுத்து நமக்கான ஒரு நல்ல தொடர் இது. நிச்சயம் உங்களின் இந்த அன்பான அழைப்பை ஏற்று எழுதுகிறேன் தோழி...
//ஆண் எழுத்து பெண் எழுத்து
எனப் பிரித்தறியா வண்ணமாய்
எண்ணியதை திண்ணமாய்
தீர்க்கமாய் படைத்தல்
வேண்டும்..//
தொடர் எழுதுவதற்கான கருவை இந்த வரிகள் எனக்கு கொடுத்துவிட்டது தோழி.
அருமையான வரிகள்.
பெண் எழுத்து இப்படிதான் இருக்கவேண்டும் என்ற உங்களின் கருத்துகள் மனதினுள் இருத்தி கொள்ளகூடியவை.
அழைப்புக்கு நன்றி தோழி.
arumaiyana pathivu....
DNSW: F Roundup
Dish Name Starts with G
Learning-to-cook
Regards,
Akila
நல்ல தொடர். தொடரட்டும் அழைத்த மற்றவர்கள்! பகிர்வுக்கு நன்றி சகோ.
மிக மிக அருமை. ரசித்துப் படித்தே்ன் ஆசியா..
கருத்தை சொல்ல பெரிய எழுத்தாளர்களாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, எளிய முறையில், எள்ளளவேணும் பிறரை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும், எழுத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும், காலத்தால் அழியாதது எழுத்து, அதில் பெண் எழுத்து எல்லாத்துறையிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது என் முடிவுக்கருத்து..
neengal solvadhai pola,nam pengal ippodhu veedu,naadu enum thadaigalai meeri saadhikka thodangi vittanar.
பெண் எழுத்து இல்லறம், இலக்கியம் என்பதோடு நின்றுவிடாமல் நாட்டு நடப்பு, அறிவியல், பொருளாதாரம், அரசியல் போன்ற பல பிரிவுகளிலும் பங்கெடுக்க வேண்டும். //
சரியாக சொன்னீர்கள்
சிறந்த கருத்துக்கள்
அருமையான கருத்துக்களை அழக்காக பதிவுசெய்துள்ளீர்கள் ஆசியாக்கா.
நானும் எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது வந்து பாருக்கள்
//பெண்களே, பெண்களைக் கோழைகளாகக் காட்டும் எழுத்தாக அல்லாமல் உத்வேகம், தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன், பிறரை மதித்தல் போன்ற நல்ல குணங்களை வெளிப்படுத்தும் வண்ணம் பெண் எழுத்துக்கள் இருந்தால் சமுதாயம் நிச்சயம் உயர்நிலையை அடையும்.//
100/100 :-))
//இந்த தொடரை தொடர நான் அன்புடன் அழைப்பது
சிறுமுயற்சி முத்துலெட்சுமி
கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா
என் இனிய தமிழ் மக்களே அன்னு
மனதோடு மட்டும் கௌசல்யா
வானதீஸ் வானதி//
ம், ம் வருவாங்க.
சகோ-
கௌசல்யா வந்திட்டாங்கள்ள!
//ஆண் எழுத்து பெண் எழுத்து
எனப் பிரித்தறியா வண்ணமாய்
எண்ணியதை திண்ணமாய்
தீர்க்கமாய் படைத்தல்
வேண்டும்..//
சூப்பர்ர் வரிகள்..அருமையான பகிர்வு!!
தலையை பிய்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டு சமைத்து அசத்துவது போல் அழகான கருத்துக்களை கட்டுரையாக இட்டுள்ளீர்கள் தோழி.இதில் இருந்து ஆல் இன் ஆல் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றீர்கள்.
//ஒவ்வொரு தலைமுறையிலும் பெண்கள் முன்னேறிக்கொண்டு தான் வருகிறோம், பின்னடையவில்லை. அதற்கு காரணம், உணர்வுச் சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் தான், அது போல கண்ணியமான எழுத்து சுதந்திரம் இருந்தால் பெண் முன்னேற்றத்தில் தடை இருக்காது என்பதே திண்ணமான முடிவு. அந்த கண்ணியம் என்பது ஆணிற்கும் பொருந்தும்.// அருமையான வரிகள் தோழி.
நல்ல கருத்தாழமிக்க பதிவுங்க. நம்மைப் போன்ற பெண்களுக்கு ஏற்ற பதிவும் கூட.பகிர்வுக்கு நன்றி
//எளிய முறையில், எள்ளளவேணும் பிறரை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும், எழுத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்//
வாள்முனையைவிட பேனாமுனை கூர்மையானதுன்னு ஒரு சொல் இருக்கே..
அருமையான இடுகை.
சலாம் ஆசியா அக்கா...,அருமையான வரிகளால் அசத்தலாக எழுதிவிட்டீர்கள் அக்கா... முடிவு வரிகள் மிகவும் நன்றாக இருந்தது.
அதற்க்கேற்றார் போல் கவிதை வரியும் நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள் அக்கா....
ஸாதிகா அக்கா சொன்னது போல் நீங்கள் ஆல் இன் ஆல் தான்.
அன்புடன்,
அப்சரா.
அக்கா, எல்லாத்தையும் நீங்களே எழுதிட்டு என்னைக் கூப்பிட்டா!!! நான் என்ன செய்வதாம். அவ்வ்வ்வ்வ்...
நல்ல பதிவு.
கொஞ்சம் டைம் தாங்கோ. எழுதுறேன்.
//பெண் எழுத்து நமக்கான ஒரு நல்ல தொடர் இது. நிச்சயம் உங்களின் இந்த அன்பான அழைப்பை ஏற்று எழுதுகிறேன் தோழி...//
மிக்க நன்றி கௌசல்யா.
மிக்க நன்றி அகிலா.
//நல்ல தொடர். தொடரட்டும் அழைத்த மற்றவர்கள்!//
மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்.
//மிக மிக அருமை. ரசித்துப் படித்தே்ன் ஆசியா..//
மிக்க நன்றி தேனக்கா.
சவிதா மிக்க நன்றி.
ஆர்.கே.சதீஷ்குமார் மிக்க நன்றி.
மலிக்கா மிக்க நன்றி.
ஜெய்லானி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.
ஃபுட் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.
மேனகா மிக்க நன்றி.
ஸாதிகா கருத்திற்கு நன்றி.தோழி நான் அந்தளவுக்கு எல்லாம் இல்லை,ஏதோ மனசில் வருவதை எழுதுவது தான்.மிக்க மகிழ்ச்சி.
ஜிஜி வாங்க மிக்க நன்றி.
’’வாள்முனையைவிட பேனாமுனை கூர்மையானதுன்னு ஒரு சொல் இருக்கே.. //
நல்லது சாரல்.மிக்க நன்றி.
அப்சரா வாங்க,நீங்களுமா?.ஏதோ கொஞ்சம் எழுதி நேரத்தை ஓட்டிகிறேன்,அவ்வளவு தான்.மிக்க நன்றி.
//நல்ல பதிவு.
கொஞ்சம் டைம் தாங்கோ. எழுதுறேன்.//
நிச்சயம் எழுதுங்க..வானதி.மிக்க நன்றி.
Really very nice post Asia.
பதிவு அருமை..!
பெண் எழுத்து பற்றிய உங்கள் எழுத்துக்கள் அருமை ஆசியாக்கா! :)
மிக நல்ல கருத்துகள்.
பதிவு அருமை சகோ.
ம்ம்.. கருத்துக்கள் நல்லாயிருக்கு.. நல்ல பகிர்வு..
பெண்னீன் எழுத்து அருமை....தொடர் அருமை...
நல்ல பகிர்வு...
நல்ல கருத்துக்களைக் கூறியுள்ளீர்கள்.
ஆரோக்கியமாய் தீர்க்கமாய் எழுத்து . நல்ல கருத்து ஆசியா...
அழைப்புக்கு நன்றிப்பா.நிச்சயமா எழுதறேன் கொஞ்சம் நேரம் எடுத்துக்கிறேன் ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க.. குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் ..
குறிஞ்சி மிக்க நன்றி.
கொச்சு ரவி மிக்க நன்றி.
அஸ்மா மிக்க நன்றி.
அக்பர் மிக்க நன்றி.
பாபு மிக்க நன்றி.
கீதா ஆச்சல் மிக்க நன்றி.
அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
மாதேவி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.
முத்து லெட்சுமி வாங்க,மெதுவாக எழுதுங்க,ஆனால் நிச்சயம் எழுதனும்பா,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.
பெண்ணின் மனநிலையில் ஆழமான எழுத்து.அநேகமாக எல்லாமே சொல்லி முடித்திருக்கிறீர்கள்போலவே இருக்கு !
பெண்ணின் எழுத்து. நல்ல பகிர்வு. நல்ல தொடர்.
ஹேமா மிக்க நன்றி.இன்னும் மன ஆழத்தில் உள்ள அத்தனையும் எழுத முடியலை,கட்டுரை நீண்டு விடக்கூடாதே!
கோவை2தில்லி(ஆதி) மிக்க நன்றி,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.
ஸாதிகா கூறியது போல் நீங்கள் “ஆல் இன் ஆல்” தான்.
உங்கள் எழுத்தும் கருத்தும் அருமை,ஆசியா ஒமர்,. சொல்ல வந்ததை செயலில் காண்பியுங்கள். எழுதுவதற்கு ஆயிரம் விஷயங்கள் உள்ளன. சமைத்து அசத்துவதோடு, எழுதியும் அசத்துங்கள். வாழ்த்துக்கள்.
பெண்களுக்கு நல்ல ஊக்கம் தரும் தொடர். அருமையான பகிர்வு
அருமையான தொடர்... இதில் நிறைய கருத்துக்கள் நிறைய பரிமாணங்களில் வேறுபடும்... என்னை பொறுத்த வரை ஆண் என்றாலும் பெண் என்றாலும் தங்கள் எழுத்து மற்றவரை பாதிக்காத வண்ணம் இருத்தல் முதல் முக்கியம்... உங்கள் எழுத்து அந்த வகையில் எப்பவும் போல் அழகு தான் ஆசியா...:)
ஆண் எழுத்து பெண் எழுத்து
எனப் பிரித்தறியா வண்ணமாய்
எண்ணியதை திண்ணமாய்
தீர்க்கமாய் படைத்தல்
வேண்டும்..//
ஆம். ஆண், பெண் எனக் குழந்தைகளிடம் வேறுபாடு காட்டக்கூடாது. எழுத்திலும் கண்ணியம் காட்ட வேண்டும்.
Post a Comment