Sunday, March 20, 2011

மரவள்ளிக்கிழங்கு வறைஅறுசுவைத்தோழி அதிராவின் இலங்கைக்குறிப்பான மரவள்ளிக்கிழங்கு வறை செய்து பார்த்தேன், அருமையாக இருந்தது.
தேவையான பொருட்கள்;
மரவள்ளிக்கிழங்கு - அரைக் கிலோ
தேங்காய்த்துருவல் -3டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - 1பெரியது
எண்ணெய் -2டேபிள்ஸ்பூன்
கடுகு -அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
கருவேப்பிலை - 2இணுக்கு
உப்பு - தேவைக்கு.

மரவள்ளிக்கிழங்கை நன்கு மண் போக அலசி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு எடுக்கவும்.

இப்படி துண்டு போட்டு கொள்ளவும்,தண்ணீரில் போட்டு எடுத்தால் ஈசியாக கட் செய்யலாம்.சீக்கிரம் வெந்தும் விடும்.

துண்டு போட்ட கிழங்கை ஸ்டீமரில் அல்லது குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் 20-30நிமிடங்கள் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

அவித்த கிழங்கை தோல் உரித்து கொள்ளவும். அவித்த கிழங்கை உப்பு கூட சேர்க்காமல் அப்படியேயும் சாப்பிடலாம்.

கிழங்கு ஆறியவுடன் இப்படி துருவிக்கொள்ளவும்.

துருவிய கிழங்கில் தேங்காய் துருவல்,மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, மிளகாய்வற்றல்,
கருவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.


துருவி ரெடி செய்த கிழங்கை சேர்த்து பிரட்டவும்.

இப்படி சேர்ந்து அருமையாக உதிரியாக வரும்.ருசி பார்க்கவும்.

சுவையான மரவள்ளிக்கிழங்கு வறை ரெடி.இதனை மாலை நேர டிஃபனாக சாப்பிடலாம், சாதம், கருவாட்டு குழம்புடனும் பரிமாறலாம்.

35 comments:

S.Menaga said...

எங்கம்மாவும் இப்படிதான் செய்வாங்க்,அவித்து பெரிய துண்டாக போட்டு செய்வாங்க..துருவமாட்டாங்க.ஏனோ எனக்கு இப்படி செய்வதை விட இனிப்பில் செய்வதுதான் ரொம்ப பிடிக்கும்..எங்க அக்காதான் இதை அடிக்கடி வாங்கி வந்து சமைப்பாங்க..

Mahi said...

நன்றாக இருக்கு ஆசியாக்கா! நான் மரவள்ளிகிழங்கு சாப்பிட்டுப் பலவருஷங்களாகிவிட்டது.இவருடன் போனால் கிழங்கை வாங்கவேணாம் என்று சொல்லிடுவார்,நான் தனியா போய் வாங்கிட்டுவந்துரப்போறேன்.;)

asiya omar said...

மேனகா வருகைக்கு நன்றி.இனிப்பிலும் சாப்பிடலாம்,நான் சிறு குழந்தையாக இருந்த பொழுது தமிழ் நாட்டில் உணவுப் பஞ்சம் வந்ததாம்,அப்ப இந்த மரவள்ளிக்கிழங்கு தான் வசதி இல்லாதவர்களுக்கு முழு நேர உணவாக இருந்ததாக என் தந்தை சொல்வதுண்டு,பள்ளிக்கூடத்தில் உப்பு,மிளகாய்த்தூள் தடவிய கிழங்கு துண்டு வாங்கி சாப்பிட்ட நினைவும் வந்தது.

asiya omar said...

மகி வாங்க,கொஞ்சமாக வாங்கி செய்து சாப்பிட்டு பாருங்க,இங்கு ஃப்ரெஷாக குவித்து போட்டிருந்தாங்க,மலையாளிகள் போட்டி போட்டு வாங்கினாங்க,நானும் வாங்கி நம்ம அதிரா குறிப்பை செய்து பார்த்தேன்.மிக்க மகிழ்ச்சி.

தமிழ்வாசி - பிரகாஷ் said...

செஞ்சு சாப்பிட்டு சொல்றேன்...


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

அமைதிச்சாரல் said...

எங்க வீட்டிலும் செய்வதுண்டு. துருவாம கொஞ்சம் சின்னத்துண்டுகளா வெட்டி செய்வோம்.. காலைல டிபனா சாப்பிடலாம் சூப்பரா இருக்கும்.

savitha ramesh said...

Romba different a na dish.try pannitu solren.

எல் கே said...

இப்படி செஞ்சது இல்லை. வேகவைத்து சாப்பிட்டு இருக்கேன்

asiya omar said...

தமிழ்வாசி வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

சவிதா செய்து பாருங்க,கருத்திற்கு மகிழ்ச்சி.

எல்.கே.வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

vanathy said...

அதிரா அக்கா ரெசிப்பியா???!!! செய்து பார்க்க வேண்டும். சூப்பரா இருக்கு.

middleclassmadhavi said...

செய்து பார்க்கிறேன், நன்றி பகிர்வுக்கு!

Kurinji said...

enga veetilaym cinna thundugalaga pottu than seivom. But ithu vithiyasama irukku. seithu paarkanum.
Kurinjikathambam
Event : HRH-Puffed Rice

Kalpana Sareesh said...

hv not tried doing this will sure try it looks perfect..

சே.குமார் said...

நன்றாக இருக்கு ஆசியாக்கா! இப்படி செஞ்சது இல்லை.

கோவை2தில்லி said...

மரவள்ளிக்கிழங்கு எனக்கு மிகவும் பிடித்தது. துருவாமல் செய்திருக்கிறேன். படங்களுடன் நல்ல பகிர்வு.

சிநேகிதன் அக்பர் said...

இங்கு வரைக்கும் மணக்கிறது :)

asiya omar said...

வானதி மிக்க நன்றி.

மாதவி மிக்க நன்றி.

குறிஞ்சி மிக்க நன்றி.

கல்பனா மிக்க நன்றி.

குமார் மிக்க நன்றி.

கோவை2தில்லி மிக்க நன்றி.

அக்பர் மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

வித்தியாசமான வரைதான்.செய்து பார்த்திடலாம்.

Gopi Ramamoorthy said...

ரொம்ப ஈஸியா இருக்கும் போல செய்ய.செஞ்சு பாத்துட வேண்டியதுதான்

Vijisveg Kitchen said...

ஆசியா என்ன எங்க ஊர் அயிட்டமாச்சே. ஒடோடி வந்தேன். அதுவும் அதிராவின் ரெசிப்பியா. வாவ் கலக்கிட்டிங்க.
நான் 2 நாள் முன் செய்தேன் படம் எடுத்திருக்கேன், போடனும்,சரி நான் கொஞ்சம் மெள்ள போடுறேன். எனக்கு ரொம்ப பிடித்த அயிட்டம்.

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு....

//இவருடன் போனால் கிழங்கை வாங்கவேணாம் என்று சொல்லிடுவார்,நான் தனியா போய் வாங்கிட்டுவந்துரப்போறேன்.;)//இங்கேயும் இதே கதை தான்..

ஜெய்லானி said...

வேக வச்சதும் அது மீதி இருந்தா தானே அடுத்த ஸ்டெப்புக்கு போறது .அப்படியே சீனியுடன் மிக்ஸ் செய்து சாப்பிட்டுடுவேன் :-))

இதையும் ஒரு நாள் டிரை பண்ணிடுவோம்

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

நன்றி பகிர்வுக்கு!

asiya omar said...

ஸாதிகா மிக்க நன்றி.

கோபி மிக்க நன்றி.

விஜி மிக்க நன்றி.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

ஜெய்லானி மிக்க நன்றி.

கொச்சு ரவி மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

athira said...

என் குறிப்பைச் செய்திருக்கிறீங்க ஆசியா, மிக்க மிக்க நன்றி. நீண்ட காலத்தின் பின்பு ரீவைன்ட் பண்ணியதுபோல என் குறிப்பையும் ~அங்கு~ போய் பார்த்தேன்... மிக்க மிக்க நன்றி.

சந்தோசமாக இருக்கு. கிழங்கை சுலபாக உரிப்பதற்கு ஒரு புது முறையையும் காட்டியிருக்கிறீங்க.

எனக்கு இம்முறை நேரமே இல்லை பார்க்க, மெயிலில் தகவல் வந்தது:) அதுதான் ஓடிவந்து பதிவு.

மிக்க நன்றி.

இளம் தூயவன் said...

செய்முறை மற்றும் படங்கள் அருமை.

asiya omar said...

அதிரா வாங்க, வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
ஆஹா! மெயிலில் தகவல் தெரிவித்த அந்த நல்ல உள்ளத்திற்கும் மிக்க நன்றி.இந்த குறிப்பை நீங்கள் செய்து காட்டியது மிக அழகு.

asiya omar said...

இளம் தூயவன் வாங்க,வருகைக்கு மிக்க மகிழ்ச்சி,கருத்திற்கு நன்றி.

ஹேமா said...

மரவள்ளிக்கிழங்கில் புதிய சமையல்முறை.செய்து பார்க்கிறேன்.நன்றி ஆசியா !

Geetha6 said...

அருமையாக உள்ளது.
விளக்கம் சூப்பர்!
படங்கள் தத்ரூபமாக இருக்கு.

R.Gopi said...

துண்டு துண்டா இருக்கற மரவள்ளி கிழங்கு பக்கத்துல இருக்கற கத்தி படு டெர்ரரால்ல இருக்கு....

R.Gopi said...

நான் அதிகம் மரவள்ளி சாப்பிட்டதில்லை... சாப்பிடுவதில்லை..

எப்போதாவது சாப்பிடுவேன்.. எனக்கு டேஸ்ட் பிடிக்கும்...

asiya omar said...

ஹேமா மிக்க நன்றி.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.


ஆர்.கோபி வருகைக்கு நன்றி,இந்த மரவளிக்கிழங்கை சின்ன கத்தி வைத்து வெட்ட முடியாது,அவ்வளவு திக்காக இருக்கும்,இந்த கத்தி வைத்து கரும்பு வெட்டுவது போல் ஒரு போடு போட்டால் தான் கட் ஆகும்.
கருத்திற்கு மகிழ்ச்சி.

Now Serving said...

Nejamavey romba asathal - Rasam, rasam podi ellamay super surberb :)