Wednesday, March 23, 2011

ரசப் பொடி,சிம்பிள் ரசம் ,பருப்பு ரசம் & மேலப்பாளையம் புளிச்சாறு & கட்டிப்பருப்பு

ரசப்பொடி தேவையான பொருட்கள் ; மிளகு -1டேபிள்ஸ்பூன் சீரகம் -1டேபிள்ஸ்பூன் மல்லி - 2டேபிள்ஸ்பூன் கடலைபருப்பு - 2டேபிள்ஸ்பூன் வெந்தயம் - 1டீஸ்பூன் பெருங்காயப்பொடி - 1டீஸ்பூன் மஞ்சள்பொடி - 1டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 8 கருவேப்பிலை - ஒரு கைப்பிடி மஞ்ச்ள் பொடி,பெருங்காயப்பொடி பொடி தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பொறுமையாக லேசாக சிவற வறுத்து எடுக்கவும்.
வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் பொடித்த பின்பு அத்துடன் மஞ்சள் பொடி,பெருங்காயப்பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். ரசப்பொடி ரெடி.
ரெடி செய்த ரசப்பொடியை ஆற வைத்து ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்தால் தேவைக்கு உபயோகிக்கலாம்.

சிம்பிளாக ரசம் வைக்க புளியைக் கரைத்து வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு தட்டிய பச்சை மிளகாய்,பூண்டு போட்டு வதக்கி,ரசப்பொடி சேர்த்து,கரைத்த புளியை விட்டு,உப்பு சேர்த்து,மல்லி இலை நறுக்கி போட்டு,நுரை கூடியதும் அடுப்பை அணைத்தால் சிம்பிள் ரசம் ரெடி,வேண்டுமானால் சிறிய தக்காளி பிணைந்து விடலாம்.


பருப்பு ரசம்

தேவையான பொருட்கள்;

பருப்பு - ஒரு கையளவு

புளி - சிறிய எலுமிச்சை அளவு

பூண்டு - 4பல்

தக்காளி -1

மஞ்சள் பொடி - கால்ஸ்பூன்

ரசப்பொடி - 1டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் -1

மல்லி,கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்

கடுகு - அரைஸ்பூன்

மிள்காய்வற்றல் - 1

உப்பு - தேவைக்கு

ஊறிய பருப்பு, நறுக்கிய தக்காளி, 2பல்பூண்டு, மஞ்சள் பொடி போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கவும்.
மிக்ஸியில் ரசப்பொடி, சிறிது கருவேப்பிலை,மல்லி இலைகாம்பு, 2பல் பூண்டு, பச்சை மிளகாய், விரும்பினால் 2சின்ன வெங்காயம் சேர்த்து பரபரவென்று சுற்றி எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து மிக்ஸியில் சுற்றியதை போட்டு,கொதிக்க விடவும்.
பருப்பு வெந்து இப்படி காணப்படும்.
புளி இப்படி கொதி வரவும், வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.ரசத்தில் நுரை கூடியவுடன் இறக்கவும்.
சுவையான பருப்பு ரசம் ரெடி. 

மேலப்பாளையம் புளிச்சாறு :


தேவையான பொருட்கள்;

புளி - சிறிய எலுமிச்சை அளவு

மிளகு - 1டீஸ்பூன்

சீரகம் - அரைஸ்பூன்

வெந்தயம் - கால்ஸ்பூன்

கடுகு - கால் + அரைடீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரைடீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 1

சிறிய தக்காளி - 1

சிறிய பச்சை மிளகாய் -1

பூண்டு - 4பல்

சின்ன வெங்காயம் - 2

மஞ்சள் பொடி - கால்டீஸ்பூன்

எண்ணெய் -3டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு

மிளகு சீரகம் அம்மியில் அரைத்து, அத்துடன், வெங்காயம், தக்காளி, பூண்டு, சிறிது மல்லி கருவேப்பிலை, பச்சை மிளகாய், கால்ஸ்பூன் கடுகு வைத்து தட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், உ.பருப்பு, வற்றல், கருவேப்பிலை தாளித்து, ரசத்திற்கு அரைத்தவற்றை போட்டு,மஞ்சப்பொடியும் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் புளிக்கரைசல் விடவும்.உப்பு சரியாகப் போடவும்.
ரசம் இப்படி நுரை கூடி கொதி வரும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான மேலப்பாளையம் புளிச்சாறு ரெடி.
எங்க ஊரில் வெறுஞ்சோறு, கட்டிப்பருப்பு, புளிச்சாறு,சுருட்டு கறி எல்லார் வீட்டிலும் செய்யக்கூடிய காம்பினேஷன், சூப்பராக இருக்கும்.


எங்க ஊர் கட்டி பருப்பு செய்ய
100கிராம் பருப்புடன்,மிகச்சிறிய தக்காளி,ஒரு சிறிய வெங்காயம்,ஒரு பச்சை மிளகாய்,ஒரு டீஸ்பூன் எங்க ஊர் மசாலா,ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லி இலை சிறிது, மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.வெந்த பின்பு வழக்கம் போல் கடுகு,வற்றல்,கருவேப்பிலை,வெங்காயம் தாளித்து கொட்டவும். ருசி செமையாக இருக்கும்.
--ஆசியா உமர்.

43 comments:

எல் கே said...

பருப்பு ரசம் ஈசி

R.Gopi said...

பருப்பு ரசம்...

மேலப்பாளையம் புளிச்சாறு

ரெண்டும் 2 கப் பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.........

********

மேடம்....

உங்கள் ஈ-மெயில் ஐடி இல்லாததால், இந்த கமெண்ட்டும் இங்கேயே :

”சித்தம்” என்னும் குறும்படத்தை வழங்கிய நம் “ப்ளாசம் கிரியேட்டர்ஸ்” உங்களை மீண்டும் மகிழ்விக்க ”விதை” என்ற புதிய குறும்படம் வாயிலாக வருகிறது...

ஒரு சமுதாய பார்வையுடன், பார்வையாளர்களின் மனதில் விதைக்க... ஒரு வீரிய ”விதை”யுடன் வெளிவருகிறது இந்த “விதை” என்னும் குறும்படம்...

எந்த ஒரு சாமான்ய மனிதனும், தன்னையும், தன் குடும்பத்தையும்.... பொறுப்புடன் பார்த்து ... தனது...!!!! என கொள்கிறான். அதுவே தன் ஊருக்கோ, அல்லது தான் சார்ந்திருக்கும் நாடு என்றோ வரும்போது, அதில் இருந்து அன்னியமாகி, தன் பொறுப்புக்களை விட்டு விலகி விடுகிறான்.

ஒரு தனி மனிதன், தன் ஊரையும் நாட்டையும், தன் குடும்பத்தை போல் பார்க்கும்..... மாற்றம் நிகழுமா... !!! எனும் கேள்விக்கு விடை சொல்கிறான், இந்த ”விதை” குறும்படத்தின் கதாநாயகன்.

வாழ்வின் ரகசியம் அறிய, சமூக அன்பின் அடிநாதத்தை, அறிந்து கொள்ள நகர்கிறது, இக்குறும்படம்.
இக்குறும்படம் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, சீரிய சிந்தனையை விதைக்கும் எனும் நம்பிக்கையுடன், பணிவுடன் சமர்பிக்கிறோம்.

“விதை” குறும்படத்தை இங்கே கண்டுகளியுங்கள் :

http://www.youtube.com/watch?v=AVkN6gtF33U

உங்கள் கருத்துக்களையும், நல்லாதரவையும் என்றும் வேண்டும்

ஆர்.கோபி
www.jokkiri.blogspot.com / www.edakumadaku.blogspot.com

asiya omar said...

எல்.கே வருகைக்கு நன்றி.
புதுசாக சமைப்பவர்களுக்காக எல்.கே.ஈசி தான்.என் மகளுக்காவும் தான் இந்த எளிய ரெசிப்பியை கூட போட்டு வைக்கிறேன்.

Yuvana's Favourites said...

Thanks for comfort recipes like this

அமைதிச்சாரல் said...

பசியை கெளப்புறீங்க :-)))

தமிழ்வாசி - Prakash said...

பருப்பு ரசம்.. ரொம்ப டேஸ்டு...கமகம மனம் தூக்குது...


எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

Kalpana Sareesh said...

ahh super rasam .. nalla rasa podi demo..

Kurinji said...

vaasam enge varai varuthu..
Kurinjikathambam
Event : HRH-Puffed Rice

asiya omar said...

ஜோக்கிரி வருகைக்கு நன்றி.உங்கள் குரூப்பின் விதை வீடியோ பார்த்தேன்.அருமை.

asiya omar said...

யுவனா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சாரல் வாங்க மிக்க நன்றி.அய்யோ பசியை கிளப்பிட்டேனா?உடனே ரசம் வைத்து சாதம் வடித்து சாப்பிட்டால் ஆச்சு.

asiya omar said...

தமிழ்வாசி வருகைக்கு மிக்க நன்றி.

கல்பனா வாங்க மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி.

middleclassmadhavi said...

ரசத்தில் வெங்காயம் எனக்கு புதுசு! செய்து பார்க்கிறேன்! தாங்க்ஸ்!

S.Menaga said...

அசத்தலான 2 ரெசிபிகள்...

கோவை2தில்லி said...

ரசப்பொடி வாசனை இங்கே அடிக்குது!

Kanchana Radhakrishnan said...

Tasty paruppu rasam.

அமைதிச்சாரல் said...

இன்னிக்கு எங்கூட்லயும் ரசம்தான்.. பசங்ககூட சேர்ந்து சாப்பிட வெயிட்டிக்கிட்டிருந்த நேரத்துலதான் உங்க இடுகை கெளப்பிடுச்சு, :-))

angelin said...

என் மகளுக்கு ரொம்ப பிடிச்ச ரசம் .
பாக்கும்போதே பசிக்குது .
thanks for sharing.

asiya omar said...

குறிஞ்சி மிக்க நன்றி.

மாதவி மிக்க நன்றி.

காஞ்சனா மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

கோவை2தில்லி மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க மகிழ்ச்சி.

ஏஞ்சலின் மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

Jay said...

mmmmm.........toooooo tempting n flavorful
Tasty Appetite

jagadeesh said...

சூப்பரா இருக்கு கா. அருமை.

Gopi Ramamoorthy said...

எனக்கு ரசம் ரொம்பப் பிடிக்கும். அப்படியே சாப்பிடுவேன்:-)

Kousalya said...

படங்களுடன், சமையல் அசத்தல் தோழி. இது செய்ய எளிது என்றாலும், ஒவ்வொருத்தரின் பக்குவமும் கொஞ்சம் வித்தியாசப்படும்...

இது இரண்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

:))

Lakshmi said...

எனக்கும் சாப்பாட்டு ஐட்டத்திலேயே பிடித்தது ரசம்தான். அதுவும் அப்படியே சூப் மாதிரி குடிக்கப்பிடிக்கும். உங்க ரசம் குறிப்பு சூப்பர்.

mahavijay said...

ரசப்பொடி செய்முறையும் கொடுத்ததுக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் சமையல் பகிர்வுகளில் உள்ள புகைப்படங்களைப் [சைவம் மட்டும்!! :)] பார்த்தவுடனே சாப்பிடத் தோன்றுவது தான் ஸ்பெஷாலிட்டி!

FOOD said...

ஆமா, இன்னைக்குதான் நீங்க வெஜ் சமையல் பக்கம் வந்திருக்கீங்க.

asiya omar said...

jay வருகைக்கு மிக்க நன்றி.

ஜெகதீஸ் மிக்க நன்றி.

கோபி மிக்க நன்றி.

கௌசல்யா மிக்க நன்றி.

லஷ்மிமா மிக்க நன்றி.

மஹா விஜய் மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஃபுட்(சங்கர் சார்) வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.வெஜ் குறிப்பு சைடில் பாருங்க கிட்ட தட்ட 60 கொடுத்து இருக்கிறேன்.

savitha ramesh said...

enga amma vum rasa podi ,ippadi dhan seivaanga.romba nalla vaasanaya irukku.

GEETHA ACHAL said...

நானும் ரசப்பொடி நிறைய செய்து வைத்து கொள்வேன்..

தினமும் ரசம் சாப்பிடவில்லை என்றால் சாப்பிட மாதிரியே இருக்காது...இவருக்கு தினமும் புதுசாக தான் இருக்க வேண்டும்..

இப்படி எல்லாம் சமைத்து ஆசையினை காட்ட கூடாது...

ஆஹா..படங்களை பார்க்கும் பொழுதே சாப்பிட ஆசை வந்துவிட்டது..

உங்க பரோட்டா செய்தேன்...ரொம்ப நல்லா இருந்தது...2வது தடவை என்பதால் ஒழுங்காக சேப் வரவில்லை...படம் எடுத்து இருக்கிறேன்..கூடிய சீக்கிரத்தில் பதிவு போடுகிறேன்...

Saras said...

Clear description & thanks for sharing..

Geetha6 said...

எங்க அம்மா இந்த பக்குவம் சொல்லி இருக்காங்க! இப்ப உங்க ப்ளோகில பார்த்து தெரிஞ்சுகிட்டேன் .நன்றி தோழி.

எம் அப்துல் காதர் said...

ஆஹா பருப்பு ரசம் அருமை மேடம். இது எனக்கு ரொம்ப பிடிக்கும்!!

ஸாதிகா said...

அருமையான பருப்பு ரசம் புளிச்சாறு.இந்த முறையில் செய்து பார்க்கவேண்டும்.

Mahi said...

சூப்பரா இருக்கு ஆசியாக்கா! பருப்பு-ரசம்-புளிச்சாறு எல்லாமே அருமையா இருக்கிறது.

ரசப்பொடி ரெசிப்பி செய்து பார்க்கிறேன்.ஊரிலிருந்து கொண்டுவந்தது தீரப்போகிறது. ;)

asiya omar said...

சவிதா மிக்க நன்றி.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

சரஸ் மிக்க நன்றி.

கீதா6 மிக்க நன்றி.

சகோ.அப்துல் காதர் மிக்க நன்றி.

ஸாதிகா மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

ஹேமா said...

ஆசியா...நேத்தே இந்தப் பதிவு பாத்தேன்.இண்னைக்கு பருப்பு ரசம் செய்து சாப்பிட்டேன்.கொஞ்சம் புளி கூடிப்போச்சு.ஆனாலும் வாசனைதான் பிரமாதம்.சுவைத்த சுவையோட பின்னூட்டம் இன்னும் சுவைதானே !

அதென்ன சுருட்டுக் கறி !

vanathy said...

super recipe, akka. Nice photos.

Malar Gandhi said...

You always amaze me with your culinary skills, its so traditional...reminds me my home. This is soul food.

சசிகுமார் said...

எப்பவும் போல சுலபமா சொல்லி கொடுத்துடீங்க

அந்நியன் 2 said...

அருமையாக சொல்லி தந்து இருக்கின்றிகள் செய்து பார்ப்போம்.

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா...,ரசம்,புளிச்சாறு எல்லாம் பார்க்கும் போதே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... நா ஊறுகின்றது.ரசத்திற்க்கு ஈடு ஏது?சொல்லுங்க..?
மிகவும் சூப்பரான ரசப்பொடியும் கொடுத்திருக்கீங்க...இதுவரை நான் ரசப்பொடி செய்து வைத்துக் கொண்டது கிடையாது.எனது அக்கா தான் செய்வார் இதே முறையில்.அதை நான் வாங்கி வைத்து ரசம் செய்திருக்கின்றேன்.
உங்கள் செய்முறையை பார்க்கவும் செய்திடணும்னு ஆசை வந்துடுச்சு...

அன்புடன்,
அப்சரா.

Ashok said...

Migavum Nanri..