Saturday, March 26, 2011

சோயா மிக்ஸ்ட் வெஜிடபிள் பிரியாணி

அசைவம்  சாப்பிடாதவர்களுக்கு இந்த பிரியாணி அந்த சுவையைத் தரும்.செய்து பாருங்க.மிகவும் ஆரோக்கியமும் சத்தானதும் ஆகும்.

தேவையான பொருட்கள்;பிரியாணி அரிசி - 800கிராம்
எண்ணெய் - 100மில்லி
நெய் - 100மில்லி
வெங்காயம் - 200கிராம்
தக்காளி - 300கிராம்
மல்லி,புதினா - தலா அரைகப்
பிரியாணி இலை - 1
பச்சை மிளகாய் - 5
எலுமிச்சை -1
தயிர் - 200மில்லி
இஞ்சிபூண்டு பேஸ்ட் -2-3டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா -1 டீஸ்பூன்(ஏலம்பட்டை கிராம்புதூள்)
சோம்பு தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள்- அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2டீஸ்பூன்
மஞ்சள்,ரெட்கலர் - பின்ச்
உப்பு - தேவைக்கு.
தேவையான காய்கறிகள்,சோயா பால்ஸ் சேர்த்து மொத்தம் அரிசி அளவிற்கு எடுத்து கொள்ளவும். நான் 800கிராம் அரிசிக்கு 800கிராம் காய்கறிகள் எடுத்துள்ளேன்.
நான் எடுத்து கொண்ட காய்கறிகள்
சோயா - 100கிராம்
கேரட் -200கிராம்
காளிப்ளவர் -200கிராம்
பீன்ஸ் -100கிராம்
பச்சைபட்டாணி -100கிராம்
உருளைக்கிழங்கு -100கிராம்
காளான் - 100கிராம்
காய்கறிகளை இப்படி நறுக்கி வைக்கவும்.

சோயா பால்ஸ் கொதிக்கும் நீரில் 10நிமிடம் போட்டு நன்கு தண்ணீர் வடிகட்டி கொள்ளவும்.

காய்கறிகள்,சோயாபால்ஸ்,தயிர்,அரைடீஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் கலந்து ஊற வைக்கவும்.பிரியாணி அரிசியையும் அலசி சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்.


பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு
காய்ந்ததும்,பிரியாணி இலை நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிவற வதங்கியதும்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய மல்லி புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.

நறுக்கிய தக்காளி சேர்க்கவும்,சிறிது உப்பு சேர்த்து மூடி மசிய விடவும்.


தக்காளி சேர்ந்து மசிந்த பின்பு, 1டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

ரெடி செய்த காய்கறிகளை சேர்க்கவும்.

மூடி போட்டு வேக விடவும்.ஓரளவு வெந்த பின்பு உப்பு சரி பார்த்து கொள்ளவும்.ஊறிய அரிசியை ,தாராளமாய் தண்ணீர் கொதிக்க வைத்து, முக்கால் பதத்திற்கு உப்பு தேவைக்கு சேர்த்து வெந்து வடித்து வைக்கவும்.காய் வேகும் நேரத்தில் இதனை செய்தால் அருமையாக வரும். வடித்த உடன் சூட்டோடு தட்ட வேண்டும்.

வடித்த அரிசியை பிரியாணிக்கு ரெடி செய்த காய்கறி கலவையில் போட்டு,எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும் ,பின்பு விரும்பினால் ரெட்,மஞ்சள் கலர் சிறிது தண்ணீரில் கரைத்து தெளிக்கவும்.

மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.அடிபிடிக்காமல் இருக்க பழைய தோசைக்கல்லை பிரியாணி பாத்திரத்தின் அடியில் வைத்து தம் போடலாம்.அடுப்பை அணைத்து பத்து நிமிடம் கழித்து திறந்து பிரட்டவும்.

திறந்து இப்படி ஒரு போல் கலந்து சாதம் உடையாமல் பிரட்டி விடவும்.சிறிது மூடி வைக்கவும்.பின்பு சூடாக பரிமாறவும்.

சுவையான சோயா மிக்ஸ்ட் வெஜிடபிள் பிரியாணி ரெடி. வடித்து தட்டாமல் தண்ணீர் அளந்து வைத்தும் சமைக்கலாம்.ஒரு அளவு அரிசிக்கு ஒன்னரை அளவு தண்ணீர் வைக்கவும்,நான் எப்பவும் வடித்து தட்டி தான் பிரியாணி செய்வது வழக்கம். நான் சீரக சம்பா பச்சை அரிசி உபயோகித்துள்ளேன். அவித்த முட்டையை கட் செய்து கொஞ்சம் சாட் மசாலா தூவி பரிமாறவும்.
வெஜ் பிரியாணி என்றால் தயிர் பச்சடி, பொட்டட்டோ சிப்ஸ் சூப்பர் காம்பினேஷன்.


-ஆசியா உமர்.

35 comments:

சசிகுமார் said...

இந்த வெஜிடபிள் பிரியாணி ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் போல பிரிண்ட் எடுத்தாச்சு.

athira said...

ஆ,,, வட எனக்குத்தான்.... சரி ஆராவது எடுத்திருந்தா அந்த கோழி முட்டை அப்பூடியே எனக்குத்தான்..... பங்கு தரமாட்டேன் ஆருக்கும்.

இவ்வளவு பொருட்கள் சேர்த்து செய்திருக்கிறீங்க பிரியாணி..... சூப்பராத்தானே இருக்கும்... பார்க்கும்போதே வாசம் வருவதுபோல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

asiya omar said...

சசிகுமார் வருகைக்கு நன்றி,பக்குவமாக செய்து பாருங்க அருமையாக இருக்கும்.மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

அதிரா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. பிரியாணிக்கு எப்பவும் சேர்க்கும் பொருள் தான்,உங்களுக்கு தான் முட்டை.வடை ஜஸ்ட் மிஸ்ஸிங்,ஆனால் பிரியாணி நிறைய இருக்கே.

Priya Sreeram said...

looks like a yummy platter !nice recipe

ஹேமா said...

ஆசியா....ஒரு வாரம் விடுமுறைல வீட்ல இருக்கேன்.ஒவ்வொருநாளும் உங்க பதிவிலதான் தேடிச் சமையல் நடக்கபோகுது.அசத்தப்போறேன்.நன்றி உங்களுக்கு !

FOOD said...

இன்று வெஜிடபிள் பிரியாணியா? கலக்குங்க கலக்குங்க!

asiya omar said...

ப்ரியா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஹேமா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.தொடர் வருகைக்கு மிக்க நன்றி.செய்து பாருங்க ஹேமா.

asiya omar said...

ஃபுட் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.எப்பவோ சமைத்து போட்டோ எடுத்து வைத்தது,ரிலீஸ் இன்று.

Aruna Manikandan said...

my daughter loves soya and I also add them in biryani...

looks perfect and delicious dear :)

Kanchana Radhakrishnan said...

சூப்பரா இருக்கு.

savitha ramesh said...

Delicious biriyani.Lookng too good.

asiya omar said...

அருணா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.;)

காஞ்சனா மிக்க மகிழ்ச்சி,நன்றி.

சவிதா உங்களின் தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

♔ம.தி.சுதா♔ said...

அட இப்படியொரு அருமையான சமையலா அருமை அருமை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

Lali said...

ஒவ்வொரு வகை உணவும் அம்மா கை பக்குவத்தையே நினைவுபடுத்துகின்றன..
ஆசியா! அன்பு வாழ்த்துக்கள்! :)

Chitra said...

பிரியாணினா மட்டன் பிரியாணிதான்... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

அமைதிச்சாரல் said...

அசத்தலான பிரியாணி.. பகிர்வுக்கு நன்றி.

இளம் தூயவன் said...

சூப்பர்.....

vanathy said...

நல்ல ரிச் பிரியாணி. பார்க்கவே சூப்பரோ சூப்பர்.

asiya omar said...

மதி-சுதா தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

லலி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

asiya omar said...

இளம் தூயவன் மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

middleclassmadhavi said...

பிரியாணி சூப்பரா இருக்கு பார்க்க! சோயா வாங்கினவுடன் செய்ய வேண்டியது தான்!

சே.குமார் said...

அசத்தலான பிரியாணி பகிர்வுக்கு நன்றி.

Lakshmi said...

முதல் படம்பார்த்ததும் இது”முட்டை” நமக்கான குறிப்பு இல்லியோன்னு தோனிச்சு. விளக்கக்குறிப்பு பாத்ததும்
தான்பின்னூட்டம் கொடுக்கரேன். நல்லாஇருக்கு, படங்களும் செய்முறை விளக்கங்களும்.

ஸாதிகா said...

சோயா சங்ஸ் சேர்த்து செய்தால்த்தான் வெஜ் பிரியாணியே வீட்டில் சாப்பிடுவார்கள்.நல்ல சத்தும் கூட.

asiya omar said...

மாதவி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி.

சே.குமார் மிக்க மகிழ்ச்சி.

லஷ்மிமா வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி,நாங்க சோயா சேர்க்காமல் தான் வெஜ் பிரியாணி எங்க ஊர் பக்கம் செய்வோம்,ஹோட்டலில் சாப்பிடும் பொழுது சோயா சேர்த்திருப்பதை பார்த்து நானும் சேர்த்து செய்ய பழகிக்கொண்டேன்.மிக்க நன்றி.

S.Menaga said...

பிரியாணி அசத்தலா இருக்கு.

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா...,ஆஹா... வெஜ் பிரியாணி செய்வதுண்டு... சோயா பிரியாணியும் செய்ததுண்டு...
ஆனால் "சோயா மிக்ஸ்ட் வெஜிடபிள் பிரியாணி" என்ற அசத்தலான பிரியாணியை இப்பதான் நா ஊற பார்த்து கொண்டிருக்கின்றேன் அக்கா...
மிகவும் அருமையாக செய்திருக்கீங்க...
அதுவும் எல்லாவற்றையும் சிக்கன்,மட்டன் போன்று தயிர் சேர்த்து பிரட்டி வைத்திருப்பது எனக்கு புதுமை..
நிச்சயம் செய்துட்டு சொல்றேன் அக்கா...
வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வுக்கு நன்றி.

அன்புடன்,
அப்சரா.

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்த சோயா பிரியாணி...ரொம்ப நல்லா இருக்கு...

அப்பாவி தங்கமணி said...

சோயா ஏனோ எப்பவும் பிடிக்கறதில்ல... ஆனா ரெம்ப நல்லது சாப்பிடறதுன்னு சொல்றாங்க... இந்த முறையில் முயற்சித்து பார்க்கிறேன்... நன்றிங்க ஆசியா பகிர்ந்து கொண்டதற்கு...:)

RAKS KITCHEN said...

ஆஹா அருமை , நானும் இதே போல செஞ்சு பாக்கணும் :)

Kalpana Sareesh said...

ah aha super ah irukku ...

vanathy said...

அக்கா, உங்கள் பிரியாணி நேற்று செய்தேன். சூப்பர் சுவை. என் ஆ.காரர், மகன் இருவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி.

சுடர்விழி said...

உங்கள் blog பார்த்து ரொம்ப நாளாக செய்து பார்க்கணும்னு நினைச்சுட்டே இருந்தேன்...முதல்முறையாக உங்கள் சமையல் முறையில் பிரியாணி செய்து பார்த்தேன்....பிரமாதம்....இனி ஒவ்வொன்றாக எல்லாம் செய்து பார்த்துவிட வேண்டியதுதான்...நன்றி மற்றும் வாழ்த்துக்கள் !!!