Monday, March 28, 2011

கிரில்டு சிக்கன் ப்ரெஸ்ட் /Grilled chicken breast


அகிலாஸ் கிச்சன் இவெண்ட்டிற்கு இந்த ரெசிப்பியை அனுப்புகிறேன்.

தேவையான பொருட்கள்;

சிக்கன் ப்ரெஸ்ட் - 1கிலோ (8துண்டுகள்)

சிக்கன் டிக்கா மசாலா -2டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1டீஸ்பூன்

இஞ்சு பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்

கசூரி மேத்தி பவுடர்- 2டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் -2டீஸ்பூன்

லைம் ஜூஸ் - 2டேபிள்ஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 1டேபிள்ஸ்பூன்

பட்டர் - 1டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு


சிக்கனை கழுவி துண்டு போட்டு தண்ணீர் வடிகட்டி சிக்கன் துண்டுகளை கீறிவிட்டு வைக்கவும்.
சிக்கன்,பட்டர் தவிர குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து வைக்கவும்.

கலந்த மசாலாவை சிக்கனில் தடவி குறைந்தது 4மணி நேரம் ஊற வைக்கவும்.முதல் நாள் கூட ரெடி செய்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
விரும்பினால் ஆரஞ்சு ரெட் கலர் சேர்த்து மசாலா தடவினால் பார்க்க அழகாக இருக்கும்.
குக்கிங் ரேஞ்சில் (கேஸ் ஓவனில்) 250டிகிரி செட் செய்து மேலும் கீழும் ஃப்லேம் ஆன் செய்து 5நிமிடம் முற்சூடு செய்யவும். ரெடி செய்த சிக்கன் துண்டுகளை ட்ரேயில் அலுமினியம் ஃபாயில் போட்டு கிரில் வைத்து,அதன் மீது சிக்கன் துண்டுகளை அடுக்கி அடுப்பில் வைக்கவும்.
வெந்து இப்படி இருக்கும் 10நிமிடம் கழித்து திருப்பி வைக்கவும். இரண்டு புறமும் சிவந்தவுடன் எடுக்கவும். இது கலர் சேர்க்காத சிக்கன் ப்ரெஸ்ட் துண்டுகள்.
கிரில் செய்து வெளியே எடுத்தவுடன் பட்டர் மேலே தடவி சூட்டோடு பரிமாறவும்.அல்லது அலுமினியம் ஃபாயிலில் கவர் செய்து ஹாட்பேக்கில் வைத்தால் பின்பு பரிமாறிக் கொள்ளலாம்.
சுவையான கிரில்டு சிக்கன் ப்ரெஸ்ட் ரெடி. இதனை வெஜ் சாலட்,ரொட்டி, நாண்,ஃப்ரைட் ரைஸ்,கப்ஸா ரைஸ் உடன் சைட் டிஷாக பரிமாறாலாம்.

--ஆசியா உமர்.

17 comments:

அமைதிச்சாரல் said...

நல்ல ரெசிப்பி..

Chitra said...

Super recipe! Best wishes!!!!!

Nandini said...

Neenga enna romba thaan echcha oora vekkaringa...grilled chicken super. Ippa pasi neram, ithu parthu en vairu 'korrr' sattham poduthu.

asiya omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

நந்தினி ஆஹா,இது பசி நேரமா?எப்பவோ சமைத்ததை இப்ப போடுறேன்,வருகைக்கு நன்றி.

mahavijay said...

நிஜமாவே அசத்தலா இருக்கு.....

GEETHA ACHAL said...

எங்க அக்‌ஷ்தா குட்டிக்கு மிகவும் பிடித்தது...க்ரில் செய்த அனைத்துமே அவளுக்கு விருப்பம்...அதனால் எப்பொழுதும் வீட்டில் பெரும்பாலும் சிக்கன்,மீன் எல்லாமே அவனில் தான்...

asiya omar said...

மஹா விஜய் மிக்க நன்றி.

கீதாஆச்சல் கிரில் செய்து சாப்பிட்டு பழகிய பின்பு பிள்ளைங்க அதை தானே கேட்கிறாங்க,ஃப்ரை செய்து கொடுப்பதை விட ஆரோக்கியமானதும் கூட,கருத்திற்கு நன்றி கீதா ஆச்சல்.

சிநேகிதி said...

வாவ் பார்க்கும் பொழுதே நாவீல் நீர் ஊற வைக்கும் சுவை தெரிகிறதே

S.Menaga said...

க்ரில் சிக்கன் மிகவும் அசத்தலா இருக்கு...என் பொண்ணும் இதை விரும்பி சாப்பிடுவாங்க...

FOOD said...

Nice sharing.

asiya omar said...

சிநேகிதி மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

ஃபுட் மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் மகிழ்ச்சி.

Pushpa said...

Chicken is grilled to perfection.Looks delicious.

savitha ramesh said...

Nakkil echil oorugiradhu.romba arumayana recipe.

vanathy said...

super recipe. Nice photos!

Saras said...

Arumai..sure will try & let you know..

Krithi's Kitchen said...

Asiya, grilled chicken sooper ponga... deep fry seydhadhai polavae paakka romba rusiya iruku...

http://krithiskitchen.blogspot.com
Breakfast Club - Pancakes

asiya omar said...

thanks krithi for your first visit and loving comments..