Sunday, March 13, 2011

சிங்கப்பூர் மீ கோரெங் - Singapore Mee Goreng -

தேவையான பொருட்கள் ;
யெல்லோ நூடுல்ஸ் - 400கிராம்
எண்ணெய் - 4டேபிள்ஸ்பூன்
சில்லி பேஸ்ட் - 1டேபிள்ஸ்பூன்
பூண்டு நறுக்கியது- 2பெரிய பல்
உருளைக்கிழங்கு மீடியம் சைஸ் -வேகவைத்து கட் செய்தது
ட்ரைடு பீன் கர்ட்ஸ் -2ஷீட்(நறுக்கி கொள்ளவும்)
அல்லது மஷ்ரூம் - ஒருகப்
பீன்ஸ் ஸ்பரவுட் -அரை கப்
ஸ்பிரிங் ஆனியன் - அரை கப் (நறுக்கியது)
சிவப்பு கொடைமிளகாய் -1(நறுக்கியது)
லெமன் - 1
சோயா சாஸ் - 2டேபிள்ஸ்பூன்
திக் சோயாசாஸ் - 2டேபிள்ஸ்பூன்
டொமட்டோ சாஸ் - 2டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 10(பேஸ்ட் செய்ய)+1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
முட்டை - 2
இறால் அல்லது ஸ்குயிட் - அரை கிலோ.
சீனி - டேஸ்டுக்கு சிறிது
உப்பு - தேவைக்கு
இறாலை சுத்தம் செய்து கால்ஸ்பூன் மஞ்சள் தூள்,1டேபிள்ஸ்பூன் தயிர்,உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.இறால் சாஃப்டாக இருக்க நான் எப்பொழுது சமைக்கும் பொழுது இப்படி ஊற வைப்பது வழக்கம்.ஊற வைக்காமலும் சமைக்கலாம்.நூடுல்ஸை தாராளமாய் தண்ணீர் வைத்து வேக வைத்து வடித்து வைக்கவும்.வடித்தவுடன் சூடான நூடுல்ஸ் மேல் கொஞ்சம் தண்ணீர் விட்டால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

விதை நீக்கிய காய்ந்த சிவப்பு மிளகாயுடன் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

ஊறவைத்த மிளகாயை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த மிள்காய் பேஸ்ட் சேர்த்து வதக்கி கருகாமல் எடுக்கவும்.

கடாயில் 3டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,நறுக்கிய பூண்டு போடவும்,வதக்கவும்,பின்பு சில்லி பேஸ்ட் கரத்திற்கு தகுந்தபடி சேர்க்கவும்.

சுத்தம் செய்து ஊறவைத்த இறால்,நறுக்கிய வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.பீன் கர்ட் ஷீட் கிடைக்கவில்லை என்றால் அதற்கு பதில் மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்,விரும்பினால் நறுக்கிய கொடை மிளகாய் சேர்க்கவும்.


பின்பு நன்கு பிரட்டி சிறிது உப்பு சேர்க்கவும்.
பீன்ஸ் ஸ்பிரவுட் சேர்க்கவும்,கிளரவும், வடித்த நூடுல்ஸ் சேர்க்கவும்

சாஸ் வகைகள் சேர்த்து நூடுல்ஸை பிரட்டி விடவும்.முட்டை இரண்டை சிறிது எண்ணெய் விட்டு ஸ்கிராம்பிள் செய்து சேர்க்கவும்.

நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சேர்க்கவும்.

ஒரு டீஸ்பூன் சீனி விரும்பினால் டேஸ்ட்டுக்கு சேர்க்கவும். லைம் ஜூஸ் பிழியவும், ஒரு கையில் பிழிந்து ஒரு கையில் போட்டோ எடுத்ததால் இப்படி இருக்கு.

பின்பு நன்கு கிளறி விடவும். அடுப்பை அணைக்கவும். சுவையான சிங்கப்பூர் மீ கோரங் ரெடி.
இது ஒரு வித்தியாசமான சுவையில் அருமையாக இருக்கும். எங்க வீட்டில் அனைவருக்கும் பிடித்தது, ஆனால் கொஞ்சம் ஸ்பைசியாக இருந்தது,நீங்க பார்த்து காரம் சேர்க்கவும். வெஜிடேரியன்ஸ் இறால் சேர்க்கமால் பிடித்த காய்கறிகள் சேர்த்து செய்யலாம்.
இந்த ரெசிப்பி தான் என்னுடைய பிலிப்பினோ ஃப்ரண்ட் ஹேசல் மே சொல்லி தந்தது.
-- ஆசியா உமர்.

35 comments:

ஜெய்லானி said...

சாரிங்க ஆசியாக்கா ...!! நா கொரங்கு சாப்பிடரதில்லை :-))

ஜெய்லானி said...

அதுவும் சிங்கப்பூரு குரங்காஆஆஆ... ஐயோ....ஆளை விடுங்க ....:-))

எல் கே said...

குரங்கா ???? அவ்வ்வ்

asiya omar said...

அடக்கடவுளே! இதற்கு யாரு பேர் வைச்சான்னு தெரியலையே,இப்படி கூட்டமாக அப்படியே படையடுக்கிறாங்களே !

மிக்க நன்றி சகோ.ஜெய்லானி.

மிக்க நன்றி சகோ.எல்.கே.

பாச மலர் / Paasa Malar said...

விளக்கமான படங்களுக்கு....ஒரு ஜே! வித விதமாய்ச் சமைப்பதற்கு ஒரு ஜே!

எல் கே said...

//இப்படி கூட்டமாக அப்படியே படையடுக்கிறாங்களே !
///

உங்க சகோவாச்சே

FOOD said...

கலக்கறீங்களே சகோ.

உணவு உலகத்தில், "இன்று திருநெல்வேலி எழுச்சி நாள்."http://unavuulagam.blogspot.com/2011/03/blog-post_13.html

ஸாதிகா said...

ஆசியா,மீங்கொரேங் நான் ரெஸ்டாரெண்டில் தான் சுவைத்திருக்கிறேன்.எனக்கு மிகவும் பிடித்தமான ஐட்டம்.இப்பொழுது அழகாக செய்தே காட்டி விட்டீர்கள்.ஆசியா எல்லாவித சமையலையும் இப்படி பிங்கர் டிப்சில் வைத்திருப்பதை எண்ணினால் எனக்கு வியப்பாக உள்ளது.

S.Menaga said...

நல்லாயிருக்கு ஆசியாக்கா,இதில் இறால் சேர்த்திருப்பதால் ரெஸ்ட்ராண்ட் போனாலும் சாப்பிடுவதில்லை..

ராவணன் said...

//ஒரு பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த மிள்காய் பேஸ்ட் சேர்த்து வதக்கி கருகாமல் எடுக்கவும்.//

என்ன பேன்?

டேபிள் பேனே, சீலிங் பேனா? அது சுத்தனுமா? சுத்தக்கூடாதா?

என்னது...........? தலையில் உள்ள பேனா? அய்யோ......... எஸ்கேப்பு....!

Pushpa said...

Spicy and irresistible Singapore noodles.

asiya omar said...

பாசமலர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

எல்.கே.மீண்டுமா? நன்றி..

ஃபுட் வாங்க மிக்க நன்றி.

asiya omar said...

ஸாதிகா நீங்க வேறு தோழி,ஹேசல் ரெசிப்பி அனுப்பினாங்க,நான் செய்து போட்டேன்,அவ்வளவே! மிக்க நன்றி.


மேனகா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ராவணன் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
ஆமாம் ஆங்கிலத்தில் சொல்வது போலவே எழுதி விட்டேன்,இதோ திருத்தி விடுகிறேன்..மிக்க நன்றி.

asiya omar said...

புஷ்பா வாங்க வருகைக்கு மகிழ்ச்சி,கருத்திற்கு நன்றி.காரம் குறைவாக போட்டு செய்யலாம்..

Anonymous said...

உங்க தோழியிடம் கேட்டு சிங்கப்பூர் சிக்கன் ரைஸ் செய்து காட்ட முடியுமா?

Gopi Ramamoorthy said...

இது ஏதோ புதுசா இருக்கே

அமைதிச்சாரல் said...

நல்ல ரெசிப்பி ஆசியா..

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா...,பார்க்கும் போதே நா ஊறுது.நானும் இறால்,ஸ்ப்ரவ்ட் போட்டு செய்து இருகின்றேன்.இந்த மாதிரி சில்லி பேஸ்ட் எனது அத்தா தான் குழம்பு இவைகளுக்கெல்லாம் சேர்க்க சொல்லுவாங்க... அது ஒரு வித டேஸ்ட் கொடுக்கும் இல்ல...
ஆனால் நல்லா காரம் காட்டும்.
ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க...
வாழ்த்துக்கள் ஆசியா அக்கா..

அன்புடன்,
அப்சரா.

asiya omar said...

மஹாவிஜய் வருகைக்கு நன்றி.முயற்சி செய்கிறேன்.

கோபி வருகைக்கு மிக்க நன்றி..

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

அப்சரா மிக்க நன்றி.

muzu said...

assalamu alaikum asiya akka unga recipes la romba nalla irukku

சசிகுமார் said...

வித விதமா சமையல் செய்தே உங்கள் கணவர் சம்பாதிப்பதில் பாதி செலவாகும் என நினைக்கிறேன்.

asiya omar said...

muzu முதல் வருகைக்கு நன்றி.நீங்க யாருன்னு தெரியலையே,அக்கான்னு வேற அழைத்து இருக்கீங்க..

asiya omar said...

சசிகுமார் வாங்க,நாங்க அதிகம் வெளியில் போய் சாப்பிடுறதில்லை,வீகென்ட்டில் ஏதாவது புதுசாக முயற்சி செய்தால் அதனை படம் பிடித்து போடுவதுண்டு,எங்க வீட்டில் வெறும் ரசம் அப்பளமும் உண்டு,தயிர் சாதம் ஊறுகாயும் உண்டு.
வளர்கிற பிள்ளைகளுக்கு கேட்பதை விதம் விதமாய் செய்து கொடுக்க வேண்டாமா? என்ன சகோ நீங்க?!:)...

சே.குமார் said...

akka viththiyasama irukkum pola...

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்
எல்லாமே அருமையாக செய்து
அசத்துறீங்க.தொடருங்கள்.வாழ்த்துக்கள்

மஹாராஜா க. said...

This is One of my favorite food.!

Mee Goreng , Maggi Goreng , Mee Goreng Ayam(Chicken) , Mee Goreng Udang(Prawn).._

Any way thanks 4 that...

asiya omar said...

தம்பி குமார் வருகைக்கு நன்றி.

ஆயிஷா வஅலைக்கும் ஸலாம்.மிக்க நன்றி.


மஹாராஜா உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..பெயர் எல்லாம் புதுசாக சொல்லியிருக்கீங்க.இது என் ஃப்ரெண்ட் முறைப்படி செய்திருக்கேன்..

Krishnaveni said...

another great international recipe from you, looks so good

ஹேமா said...

ஆசியா...இது எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஞாபகப்படுத்திட்டீங்க.
நாளைக்கே செய்யப்போறேன்.

R.Gopi said...

உங்கள் பதிவிற்கு வழக்கம் போல் வந்து எட்டி பார்த்தேன்...

ரெசிப்பி எனக்கானது அல்ல... ஸோ, ஒரு அட்டெண்டன்ஸ் + ஓட்டு போட்டு விட்டு எஸ்கேப் ஆகிறேன்...

எம் அப்துல் காதர் said...

இது எனக்கு ரொம்ப பிடிக்குமே!!

எம் அப்துல் காதர் said...

இதுக்கு பேரு "மீங்கோரி" (குரங்கு அல்ல:-)))

எம் அப்துல் காதர் said...

இது எங்க ஊர்ல ரொம்ப famous...mom!!

இமா said...

ம்.. இறால் வெஜிடேரியன் என்றுதான் இவ்வளவு நாள் நினைத்திருந்தேன் ஆசியா. ;)))