Saturday, March 19, 2011

கணவாய் மசாலா - Squid Masala

தேவையான பொருட்கள் ;
கணவாய் மீன் - அரை கிலோ
வெங்காயம் - 100கிராம்
தக்காளி -100கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1- 2டீஸ்பூன்
கரம் மசாலா - கால்ஸ்பூன்
சோம்புத்தூள் - கால்ஸ்பூன்
மிளகுத்தூள் - கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை- முக்கால்ஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மல்லித்தூள் - 1டீஸ்பூன்
மல்லி,கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

ஸ்குயிட் மீனை வாங்கி அதன் மேல் இருக்கும் மெல்லிய தோல் எடுத்து விடவும்,செவுள் உடன் சேர்த்து இழுத்தால் இலகுவாக வந்துவிடும்,உள்ளே இருக்கும் கழிவையும் எடுத்து விடவும்.நன்கு அலசி எடுக்கவும்.

பின்பு அதனை வளையம் வளையமாக நற்க்கி கொள்ளவும்.

மஞ்சள் தூள் போட்டு அலசி எடுக்கவும்.வடிகட்டவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்,வதங்கியதும்,இஞ்சி பூண்டு பேஸ்ட். கரம் மசாலா போட்டு வதக்கவும்.

நறுக்கிய தக்காளி,மல்லி இலை சேர்த்து பிரட்டவும்.

மஞ்சள் கால் ஸ்பூன் சேர்த்து பிரட்டவும், மற்ற மசாலா வகைகளை சேர்க்கவும்.

நன்கு பிரட்டி விடவும்.

சுத்தம் செய்த ஸ்குயிட்டை சேர்க்கவும்.


நன்கு பிரட்டி சிறிது உப்பு சேர்த்து, கருவேப்பிலை இரண்டு இணுக்கு சேர்க்கவும்.

குக்கரை மூடி 4விசில் வைக்கவும்.

திறந்தால் இப்படி இருக்கும்.நன்கு மசாலா சேரும் படி பிரட்டி விடவும். உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான கணவாய் மசாலா ரெடி.
கணவாயை பல விதமாக சமைக்கலாம், இது சாதாரணமாக நம்ம மசாலா சேர்த்து செய்யக்கூடிய வகை, ஆனால் மசாலா அளவு தான் வேறுபடும், சரியாக போட்டு செய்தால் ருசியும் அருமையாக இருக்கும்..இது நண்டு,இறாலின் ருசியுடன் இருக்கும்.நீங்கள் விரும்பியவற்றுடன் இணைத்து சாப்பிடலாம்.
டிஸ்கி !
எனக்கு மிகவும் உபயோகமாகும் இந்த இரண்டு லிட்டர் குக்கரையும் படம் பிடித்து போட்டாச்சு.கொஞ்சமாக சமைக்க இது மிகவும் வசதியாக இருக்கும்.
--ஆசியா உமர்.

21 comments:

Geetha6 said...

பார்க்கவே அழகாய் இருக்கு தோழி !

ஸாதிகா said...

நன்கு ஸ்பஸியா செய்து இருக்கீங்க ஆசியா.கணவாயை நறுக்கிய முறையே அழகு.ஸ்குயிட் ரிங்க்ஸ் என்று ரெஸ்டாரெண்டுகளில்தான் இந்த வடிவில் சாப்பிட்டு இருக்கிறேன்.

நாஸியா said...

எனக்கு ரொம்ப நாளாவே கனவாய் சாப்பிடனும்னு ஆசை.. ஸ்கூல் படிக்கும்போது ஒரு கீழக்கரை பொண்ணு கொண்டு வருவா.. நல்ல அழகா எப்படி சுத்தம் பண்ணனும்னுங்கிறதுல இருந்து சொல்லிருக்கீங்க.. நன்றி சகோதரி..

ஒரே ஒரு சந்தேகம்.. இதுவும் இறால், நண்டு போல உடம்புக்கு சூடா?

asiya omar said...

கீதா நலமா? வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஸாதிகா பார்க்க ஸ்பைசியா தெரியலாம்,ஆனால் சாப்பிடும் பொழுது மைல்டாகத்தான் இருந்தது,சில்லி பவுடர் வெறும் முக்கால் ஸ்பூன்.வெங்காய்ம தக்காளி,மற்ற மசாலாவுடன் ஸ்குயிட் சேரும் பொழுது காரமே தெரியலை.

கருத்திற்கு மிக்க நன்றி தோழி.பிள்ளைங்க ஆசைப்பட்டாங்கன்னா தெரிந்து முறையில் செய்து கொடுத்து விடுவதுண்டு .பிள்ளைங்க கமென்ட், இனி இந்த முறையில் ஸ்குயிட்டை சமைங்கன்னு தான்..

asiya omar said...

நாஸியா வாங்க,குட்டி பையன் நலமா?கருத்திற்கு நன்றி.சூடு மாதிரி தெரியலை,நண்டு,இறால் கூட அளவாக சாப்பிட்டால் எதுவும் செய்யாது.

FOOD said...

சூப்பர் சூப்பெருங்கோ!

asiya omar said...

ஃபுட் உங்களின் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

பதிவுலகில் பாபு said...

எப்படி உங்களுக்கு இவ்வளவு ஐட்டம் தெரியுது.. ஆச்சரியமா இருக்கு..

படங்களைப் பார்க்கும் போதே பசியெடுக்குது..

mahavijay said...

unga cooker cute ah eruku

அமைதிச்சாரல் said...

நல்லாருக்குங்க..

ஹேமா said...

வாசனை...ம்...ம் ...!

எல் கே said...

present

asiya omar said...

பாபு மிக்க நன்றி.

மஹா விஜய் மிக்க நன்றி.

ஹேமா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

எல்.கே. மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

S.Menaga said...

உங்க செய்முறை நல்லாயிருக்குக்கா..நான் அப்படியே எல்லாத்தையும் கடாயிலேயே போட்டு வறுப்பேன்...

vanathy said...

சூப்பரா இருக்கு.

asiya omar said...

மேனகா மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

savitha ramesh said...

romba nalla irukku.Once i had it at my friends place.Hmmmm love the taste.

எம் அப்துல் காதர் said...

எனக்கு கணவாய் பிடிக்கும். ஆனா சாப்பிட முடியல!! ஏன்னா சாப்பிட்ட உடன் வயிற்று வலி வருது. ஏனென்றே தெரியல!! ஒருவேளை சூடோ??

asiya omar said...

சவீதா மிக்க நன்றி.

சகோ.அப்துல் காதர்,கருத்திற்கு நன்றி. கனவாவை முறையாக சுத்தம் செய்து சமைத்தால் எந்த பிரச்சனையும் வராதே!

jaisankar said...

very good taste fish cooking.JAISANKAR