Sunday, April 24, 2011

சுட்ட முழு மீன் / Baked Whole Fishசுட்ட முழு மீன் (பேக்ட் ஃபிஷ்) தயாரான பின்பு இப்படி தான் இருக்கும்.

தேவையான பொருட்கள்;

முழு மீன் - ஒரு கிலோ

மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

ஆலிவ் ஆயில் - 3டேபிள்ஸ்பூன்

உருளைக்கிழங்கு - பெரியது ஒன்று

தக்காளி - பெரியது ஒன்று

வெங்காயம் - பெரியது ஒன்று

மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை+ அரைடீஸ்பூன்

பூண்டு பல் தட்டிக்கொள்ள -6பல்

எலுமிச்சைச்சாறு - ஒரு பழம்

விரும்பினால்

ரோஸ்மேரி - 1டீஸ்பூன்

பேசில் - 1டீஸ்பூன்

ஒரிகானோ - 1டீஸ்பூன்நான் விளைமீன் உபயோகித்திருக்கிறேன், உங்களுக்கு பிடித்த மீனை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். ஒரு கிலோ மீன் தான் என்றில்லை,சிறிய மீனையும் சுட்டு எடுக்கலாம். மசாலா உங்கள் விருப்பம் தான், வெறும் உப்பு,மஞ்சள்,மிளகு,எலுமிச்சை சாறு மட்டும் உபயோகித்தாலும் சூப்பராக இருக்கும்.

முதலில் மீனை செதில் நீக்கி, தலையில் இருக்கும் செவுள் எல்லாம் எடுத்து, வயிற்றுப்பகுதியை சுத்தம் செய்து நன்றாக ஐந்து தண்ணீர் விட்டு அலசி எடுக்கவும். சுத்தம் செய்த மீனை ஆங்காங்கு கீறி விட்டு கொள்ளவும். பின்பு சிறிது மஞ்சள் தூள், உப்பு தடவி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.


மஞ்சள்,உப்பில் ஊறிய மீனை அலசி எடுத்து தண்ணீர் வடிகட்டவும்.

இப்படி தூக்கி பார்த்தால் ஒரு சொட்டு தண்ணீர் வடியக்கூடாது.தண்ணீர் பதமிருந்தால் டிஸ்யூ பேப்பர் வைத்து ஒற்றி எடுக்கவும்.


பேக் செய்ய அலுமினியம் ஃபாயில் பேப்பரில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை தடவி தயார் செய்து கொள்ளவும்.


இனி மீனில் தடவ மசாலா தயார் செய்ய வேண்டும்.ஒரு பவுலில் எண்ணெய்,மஞ்சள்,மிளகு,மிளகாய், உப்பு தூள்கள்,தட்டிய பூண்டு,ரோஸ்மேரி,பேசில்,எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும்.


அவற்றை நன்கு கலந்து வைக்கவும்.எலுமிச்சை சாறு எடுத்து விட்டு பழத்தோலை வைத்து கொள்ளவும்.ரெடி செய்த எண்ணெய் தடவிய அலுமினியம் ஃபாயிலில் சுத்தம் செய்த மீனை வைக்கவும். வயிற்றுப் பகுதியில் எலுமிச்சைத் தோலை வைக்கவும்.

தயார் செய்த மசாலாவை மீன் முழுவதும் தடவி வைக்கவும்.
மசாலா தடவிய மீனை ஃப்ரிட்ஜில் வைத்து குறைந்தது 4மணிநேரம் ஊறட்டும். மசாலா மீனில் நன்கு சார்ந்து விடும்.


ஃப்ரிட்ஜிலிருந்து மீனை எடுத்து நறுக்கிய உருளை அடியில் வைத்து, வெங்காயம் தக்காளி மேல் வைக்கவும்.சிறிது வெங்காயம் தக்காளி மேல் உப்பு,மிளகுத்தூள் தூவவும்.


முற்சூடு செய்த குக்கிங் ரேஞ்ச்சில்( கேஸ் ஓவன்) 250டிகிரி வெப்பம் செட் செய்து 20நிமிடம் மீனை வைத்து எடுக்கவும், மீனை திருப்பி பத்து நிமிடம் வைத்து எடுக்கவும், கரிந்து விடாமல் பார்த்து எடுக்கவும்.


சுவையான ஆரோக்கியமான சுட்ட முழு மீன் ரெடி.

தயாரான சுட்ட மீனை விரும்பியபடி பரிமாறலாம்.என் இனிய கிறிஸ்தவ நட்புள்ளங்களுக்கு அன்பான ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.

--ஆசியா உமர்.

28 comments:

எல் கே said...

saogo enna ellam non vegga varuthu

(just kidding)

athira said...

ஆஹா.. சூப்பராக இருக்கு.

எனக்கும் இப்படிச் செய்யவேணும் என ஆசை, ஆனா வீடெல்லாம் மணக்காதோ ஆசியா? அந்தப்பயத்தில்தான் இன்னும் செய்யாமலே இருக்கிறேன்.

இன்னுமொன்று.. இது விளைமீன் என்றுதானே சொல்வது? அல்லது விலைமீன் எனவும் இருக்கோ? ஏனெனில் இன்னொரு புளொக்கிலும் பார்த்தேன் விலைமீன் என எழுதியிருந்தார்கள், அதுதான் டவுட் வந்துவிட்டது.

asiya omar said...

எல்.கே வருகைக்கு நன்றி,வெஜ் ரெசிப்பீஸ் ரெடியாக இருக்கு.மாற்றி மாற்றி கொடுப்பது வழக்கம்..அடுத்து போட வேண்டியது தான்...

asiya omar said...

அதிரா வாங்க,எனக்கும் சந்தேகம் வந்து விளைமீன் என்று மாற்றிவிட்டேன்,வீடெல்லாம் வாடை எதுவும் இருக்காது,நாம் சுத்தம் செய்து கழிவை உடனே அப்புறப்படுத்தி விட்டால் சமைக்கும் பொழுது மணக்கத்தான் செய்யும்,நீங்க கடையிலேயே சுத்தம் செய்தும் வாங்கி வரலாம்...மகன் விடுமுறையில் இருப்பதால் பேக்கிங்,கிரில் என்று வீடே களைகட்டி இருக்கு...சமைப்பது தான் என் வேலை,பரிமாறுவது மகன் வேலை...

Cool Lassi(e) said...

Super Dish Asiya! I am drooling here!

FOOD said...

அப்டியே சாப்பிடலாம்.

athira said...

சரிதான் ஆசியா “விளை மீன்” என்பதுதான் சரியாக இருக்கும்.

ஓ மகன் வந்து நிற்கிறாரோ..enjoy!!!.

இல்ல ஆசியா, நாம் மீன் சமைப்பதுண்டு, ஆனால் இந்த அவணில, கிரில்ல வைத்ததில்லை. .. அதிலிருந்து மணம் வெளியே வந்து, வீட்டினுள் பரவிடுமோ என்ற பயத்தில். இங்கு எப்பவும் ஜன்னல் கதவு மூடியேதானே இருக்கும், மணம் புகுந்திட்டால் வெளியே கலைப்பது கஸ்டம்.

எம் அப்துல் காதர் said...

மகன் விடுமுறையிலா?? பிறகென்ன?? இனி வண்ண வண்ணமா போட்டு அசத்துங்க!! அருமையான பதிவு.

S.Menaga said...

சூப்பர்ர் ஆசியாக்கா!! இன்னிக்கு நானும் க்ரில் மீன் தான் ப்ரெஞ்சுக்கார பாட்டி வீட்டில் ஈஸ்டர் ஸ்பெஷால சாப்பிட்டேன். ஏன் மீனின் வயிற்றுப்பகுதியில் எலுமிச்சம் பழம் வைத்திருக்கீங்க??

என் வீட்டில் இன்று ஈஸ்டர் ஸ்பெஷலா உங்க பரங்கிப்பேட்டை பிரியாணிதான் செய்தேன்.பொண்ணுக்கு ரொம்ப பிடித்திருந்தது.நல்ல மணமாக இருந்டஹ்து.விரைவில் பதிவிடுகிறேன்.நன்றி ஆசியாக்கா!!

asiya omar said...

கூல் லஸ்ஸி வருகைக்கு மிக்க நன்றி.

ஃபுட் மிக்க நன்றி.

அதிரா எந்த வாடையும் தெரியாது அடைத்து வைத்திருந்தாலும் கிட்சனில் எக்ஸாஸ்ட் இருக்கும் தானே!எங்கள் வீடும் அடைத்து தான் இருக்கும்.செய்து பாருங்க..

சகோ.அப்துல் காதர் மிக்க நன்றி.

asiya omar said...

மேனகா மிக்க நன்றி.எலுமிச்சம் பழத்தோலை வேஸ்டாக தூக்கி போடுவதை மீனில் வைத்தால் ஒரு மணமாக இருக்குமே என்று தான்.

சிநேகிதி said...

அக்கா அசத்திதிங்க... ஆரோக்கியமான சுட்ட மீன் சூப்பராக இருக்கு..

பார்த்தவுடன் செய்யனும் போல் இருக்கு. என்னிடம் மைக்ரோ ஓவன் தான் இருக்கு எப்படி டைம் செட் செய்யனும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். எந்த எந்த மீனில் இதனை செய்தால் நல்லா இருக்கும் என்று கொஞ்சம் சொல்லுங்க.. ப்ளீஸ்

மீன் வயிற்றில் ஏன் எலுமிச்சை தேல் வைக்கிறிங்க>

GEETHA ACHAL said...

ஆஹா...ரொம்ப ரொம்ப சூபர்ப்...தெளிவான படங்கள்...எனக்கு ரொம்ப பிடித்த பேக்ட் பிஷ்...

Nandini said...

Arumaiyaana sutta meen! Mouthwatering! Slurp!!

மனோ சாமிநாதன் said...

சுட்ட மீன் தயாரிப்பு விளக்கம் அருமை ஆசியா! வழக்கம்போல மிகத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

அசைவ குறிப்புகள் தான் அதிகம் வருது..???

Kurinji said...

parkave supera irukku Asiya.Kurinjikathambam, Event : HRH-Healthy Summer

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஆசியாக்கா...

என்னோட மெனு’ல இன்னமும் மிஸ் ஆகுரது இந்த சுட்ட மீன் மட்டும்தான்..ஒவ்வொருதடவை அரபி ஹோட்டலுக்கு போகும் போதெல்லாம்,ஏதோ காரணத்தால மிஸ் ஆயிட்டே இருக்கு...

யாரும் செய்வின வச்சிருப்பாங்களோ...(kidding)

ம்ம்ஹும்..இன்ஷா அல்லாஹ் இந்த வாரம் சாப்பிட்டே ஆகனும்..இங்க வேர பாத்தாச்சா..வேர வழியே இல்ல,,,..

ஹ்ம்..எந்த மீனு சிக்கப்போகுதோ...

அப்ர சகோ அதிரா பயப்புடுர மாதிரில்லா பயந்தா வேலைக்காகுமா...

அவங்களுக்கு ஒரு டிப்ஸ்..
சமைச்ச வாசம் வீட்ல தங்குனா..
அழகா ஊத்(சாம்பிரானி) பத்தவச்சி..வீட்ட கமகமக்க வச்சிரவேண்டிதானெ...

அன்புடன்
ரஜின்

நாடோடி said...

சூப்ப‌ரா இருக்கு ச‌கோ... நாங்க‌ உச்ச‌ரிக்கும் வார்த்தையில் இந்த‌ மீனை விள‌மீன் என்று சொல்வோம்.... :)

சசிகுமார் said...

இது போல படங்கள போட்டு நல்லா வாயை கிளறி விடுறீங்க அருமை படங்கள் நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது.

athira said...

RAZIN ABDUL RAHMAN said...

அப்ர சகோ அதிரா பயப்புடுர மாதிரில்லா பயந்தா வேலைக்காகுமா...

அவங்களுக்கு ஒரு டிப்ஸ்..
சமைச்ச வாசம் வீட்ல தங்குனா..
அழகா ஊத்(சாம்பிரானி) பத்தவச்சி..வீட்ட கமகமக்க வச்சிரவேண்டிதானெ...///

தகவலுக்கு மிக்க நன்றி. இங்கு நிறைய விதம்விதமான வாசனைபொருட்கள் பாவிக்கிறோம்தான்... சுவரில ஒட்டிவிடுவது, பிளக் பண்ணிவிடுவது, அதைவிட பலவிதமான வாசனைமிக்க மெழுகுவர்த்திகள் கொழுத்தி அங்காங்கு வைப்பதுண்டு, ஆனா இந்த மீன் வாசம் உடுப்புகளில் ஒட்டிவிடும், அது நம்மவர்களோடு போகும்போது புரிவதில்லை, வெள்ளைகளுக்கு பட்டென மணத்துவிடும்.

ஒருமுறை என் கணவருக்கு கார்லிக் போட்ட கறி ஏதோ கொடுத்தேன், வழமையாக அவர் வேலைக்குப் போகும்போது எம் உணவு சாப்பிடமாட்டார், அன்று சாப்பிட்டு விட்டார்... நன்கு சுவிங்கம் எல்லாம் சாப்பிட்டுவிட்டுத்தான் போனார்... அப்படியிருக்க ஒரு பேஷண்ட் கேட்டாராம்.. என்ன டொக்டர் கார்லிக் சாப்பிட்டனீங்களோ என...

அதுதான் பயம்... சிலர் முகம் சுழிப்பார்கள்..

angelin said...

SUPERB RECIPE ASIYA
எனக்கு மிகவும் பிடித்த உணவு .ஆரோக்கியமானதும் கூட .
வாழ்த்துக்களுக்கு நன்றி ஆசியா .
சம்மருக்கு செய்து பார்கிறேன் .

சிநேகிதன் அக்பர் said...

அருமையான குறிப்பு.தீயில் வாட்டியெடுக்கும் கோழித்துண்டின் மேல் என்ன மசாலா தடவுகிறார்கள். சில நேரம் அதே போன்ற பொடியைத்தான் மீன்கள் மீதும் தூவுகிறார்கள் அதுதான் கேட்டேன்.

ஹேமா said...

ம்ம்...வாசனையா இருக்கும்.மீன் என்றால் அது எப்படியிருந்தாலும் ஓகேதான் !

vanathy said...

நல்லா இருக்கு ரெசிப்பி. பலவருடங்கள் முன்பு இந்தியன் கடையில் சாப்பிட்டது. வீட்டில் செய்ய தயக்கமா இருக்கு.

Jaleela Kamal said...

சுட்டமீன் ரொம்ப நல்ல இருக்கு என் பெரிய பையனுக்கு தான் இதெல்லாம் பிடிக்கும் , முன்பு அடிகக்டி செய்வேன், அவன் ஊருக்கு போனதில் இருந்து இதுபோல அயிட்டம் செய்ய முடியல ,

Jaleela Kamal said...

இடையில் எலுமிச்சை வைத்த்து நல்ல மசாலா உள்ளே ஏறூம் இல்லையா?

asiya omar said...

கருத்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.