Friday, April 1, 2011

வெண்டைக்காய் மீன் குழம்பு /Ladies Finger Fish Curry

தேவையான பொருட்கள்; மீன் - அரைக்கிலோ, வெண்டைக்காய் - கால்கிலோ, வெங்காயம் - 2, தக்காளி -2 பச்சை மிளகாய் -3 பூண்டு - 6பல் மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன் மீன் மசாலாத்தூள் -2டேபிள்ஸ்பூன் புளி - எலுமிச்சை அளவு தேங்காய் 3டேபிள்ஸ்பூன்(விரும்பினால்) எண்ணெய் -5டேபிள்ஸ்பூன் வெந்தயம் - அரைடீஸ்பூன் உ.பருப்பு -1டீஸ்பூன் கருவேப்பிலை -3இணுக்கு உப்பு -தேவைக்கு மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்,மீன் வெள்ளையாக ஆகும் அளவு குறைந்தது 5தண்ணீர் வைத்து கழுவி எடுக்கவும்,மீனில் மஞ்சள் தூள் ,உப்பு போட்டு கடைசியாக பிரட்டி அலசி எடுக்கவும்.மீன் வாடை சுத்தமாக இருக்காது.மணமாக இருக்கும். வெண்டைக்காய் கழுவி துடைத்து கொஞ்சம் பெரிய துண்டாக போட்டு வைக்கவும்.தேங்காய் அரைத்து வைக்கவும்.நறுக்க வேண்டியவற்றை ரெடி செய்து வைக்கவும்.
ஒரு வாணலியில் 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெண்டைக்காயை வதக்கி எடுக்கவும்.தனியாக எடுத்து வைக்கவும்.


மீன் குழம்பு வைக்க ஒரு வாணலியில் 3டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்தயம்,உ.பருப்பு,கருவேப்பிலை வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,நறுக்கிய பூண்டு சேர்க்கவும்.


வெங்காயம்,பூண்டு வதங்கியதும்,நறுக்கிய தக்காளி,மிளகாய் சேர்க்கவும்.வதக்கி விடவும்.


சிறிது உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைக்கவும்,எல்லாம் சேர்ந்து மசிந்து வரும்.


அத்துடன் மிள்காய்த்தூள்,மீன் மசாலாத்தூள் சேர்க்கவும்.


வதக்கியவற்றுடன் மசாலா சேர்த்து பிரட்டவும்.


கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்க்கவும். நன்கு கொதி வரட்டும்.உப்பு சரி பார்க்கவும்.


பின்பு மீனை சேர்க்கவும்,நான் ஊளி மீன் உபயோகித்து உள்ளேன்,விரைவில் வெந்து உடையும் மீன் என்றால் முதலில் வெண்டைக்காய் சேர்த்து விட்டு,பின்பு மீன் சேர்க்கவும். அடிக்கடி அகப்பை போட வேண்டாம்.


நன்கு கலந்து விடவும்.மீனும் வெண்டைக்காயும் சேர்ந்து கொதித்து மணம் வரும்.தேங்காய் விரும்பாதவர்கள் இப்படியே சாப்பிடலாம்.


விரும்பினால் அரைத்த தேங்காய் விழுது விட்டு கொதிக்க விடவும்,சிம்மில் சிறிது நேரம் அடுப்பை வைக்கவும்.நன்கு தேங்காய் வாடை அடங்கி எண்ணெய் தெளிந்து மேல் வரும்.

சுவையான கமகமக்கும் வெண்டைக்காய் மீன் குழம்பு ரெடி.

இதில் உள்ள வெண்டைக்காய் சாப்பிட மீனை விட ருசியாக இருக்கும்.

இதனை சாதம்,சப்பாத்தி,இட்லி,தோசையுடன் பரிமாறாலாம்.
மீன் அளவு,வெண்டைக்காய் அளவு உங்கள் விருப்பமே. எண்ணெய்,காரம்,தேங்காய் உங்கள் ருசிக்கு தகுந்தபடி சேர்த்து கொள்ளலாம்.

நான் இந்த குழம்பில் எங்க ஊர் மசாலாத்தூள் உபயோகித்துள்ளேன்.அதனைக் காண இங்கு கிளிக்கவும்.


--ஆசியா உமர்.


40 comments:

savitha ramesh said...

Vendaikkai in meen kuzhambu is very different combo.I havent tried.super

அன்னு said...

//இதில் உள்ள வெண்டைக்காய் சாப்பிட மீனை விட ருசியாக இருக்கும். //

இப்படியெல்லாம் சொன்னால் ஒத்துக்க மாட்டோம். அனுப்பி வைங்க சாப்பிட்டு சொல்றேன் (ஹி ஹி.. எப்படியெல்லாம் ஆசைப்பட வேண்டியிருக்கு!!!)

Jay said...

Mmmmmmmmmmmmmmmm.....delicious with great flavors...:P
Tasty Appetite

எல் கே said...

present

vanathy said...

பார்க்கவே சூப்பரா இருக்கே. இந்த காம்பினேஷன் சாப்பிட்டதில்லை. செய்து பார்க்க வேண்டும்.

மகி said...

புதுப் புது காம்பினேஷனா போட்டு தாக்கறீங்க. நான் வெண்டைக்கா குழம்புதான் இன்னிக்கு செய்திருக்கேன். :)

revathi said...

vendaiyum meenum.... combination puthusaa asathalaa irukku akka ... inaikae seithu parthuvidugirein ...
Reva

Chitra said...

மீன் குழம்பில் வெண்டைக்காயா? முதன் முறை கேள்விப்படுகிறேன். :-)

asiya omar said...

சவிதா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க ம்கிழ்ச்சி.

அன்னு அவர் கூட எல்லாம் பில்டப் தான்,என்று என்னை கிண்டல் அடிப்பது உண்டு.

asiya omar said...

ஜெய் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சகோ.எல்.கே.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

வானதி வெண்டைக்காய் பக்குவமாக வேக வேண்டும்,லேசாக கீறி விட்டு கொள்ளலாம்.அப்ப தான் சாஃப்டாக வெந்து ருசியாக இருக்கும்.எந்த காயாவது தினமும் சேர்க்க வேண்டும் என்பதால் அநேகமாக காய் சேர்த்து தான் நான்வெஜ் செய்வது வழக்கம்.

asiya omar said...

மகி உங்க சமையல் ரொம்ப சூப்பர்,வெஜ் ரெசிப்பியாக போட்டு தாக்கறீங்க,கூடவே அட்டகாசமான பேக்கிங் வேறு.

asiya omar said...

ரேவதி வாங்க,நிச்சயம் செய்து பாருங்க,அருமையாக இருக்கும்.

சித்ரா வாங்க,இப்படி குழம்பில் காய் போட்டால் காய் காலியாவதே தெரியாது.கருத்திற்கு நன்றி.

சசிகுமார் said...

மீன் குழம்புல வெண்டைக்காயா புதுசா இருக்கே

asiya omar said...

சசிகுமார் வாங்க,சமையல் எல்லாம் என்னோட அண்ணிகளிடம் இருந்து கற்றுகொண்டது,எல்லாரோட ஐடியாவும் கலந்து கட்டி தான் இந்த சமைத்து அசத்தலாம்.கருத்திற்கு மிக்க நன்றி.

Feroz said...

ஆசியாக்கா. தாங்கள் கொடுத்து இருக்கும் மசலாவை இறைச்சி மற்றும் மீனுக்கு பாவிக்கலாமா?? இறைச்சி மசலா எப்படி செய்வது என்று விளக்கவும். அமீரகத்தில் கடைகளில் வாங்கினால் காரமாக இருக்கிறது. அன்புடன்

எம் அப்துல் காதர் said...

படத்தில் உள்ள இது என்னா மீன்?

Gopi Ramamoorthy said...

புதுசா இருக்கு

FOOD said...

நல்லாஇருக்கு.

asiya omar said...

ஃபெரோஸ் இஞ்சி பூண்டு தயிர் மஞ்சள் தூள் உப்பு போட்டு இறைச்சியை ஊற வைத்து வெறும் வெங்காயம்,இஞ்சி பூண்டு,கரம்மசாலா,தக்காளி ,மல்லி,புதினா,மிள்காய் தாளிக்கும் பொழுது சேர்த்து செய்தால் கூட இறைச்சி சூப்பராக இருக்கும்,எங்க வீட்டு மசாலா காரம் அவ்வளவாக இருக்காது.ஊரில் இருந்து மசாலா திரித்து எடுத்து வந்து விட்டால் வசதியாக இருக்கும்.இல்லாவிடில் சில்லி, மல்லி,சீரக,சோம்பு தூள்களை தனியாக வாங்கி வைத்து தேவைக்கு சேர்த்தும் செய்யலாம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் baracoda fish,ஊளி மீன்.வருகைக்கு நன்றி.

asiya omar said...

கோபி வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.

ஃபுட் மிக்க நன்றி.

meandmythinkingcap said...

never heard of this combination.Prtty interesting , let me try this week

சி.பி.செந்தில்குமார் said...

சைவம் + அசைவம் = ?

Nandini said...

Mouthwatering Kuzhambu!

AMMU MOHAN said...

உங்க ப்ளாக் ரொம்ப அழகா இருக்கு..எனக்கு அதிகம் பிடிச்சது நம்ம மொழியில இருக்கிற குறிப்புகள்..gald to follow your blog..

asiya omar said...

me and my thinking cap, thanks for your first visit and comments..

asiya omar said...

சி.பி,செந்தில்குமார் said,
சைவம் + அசைவம் = சைவசைவம்.

மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

நந்தினி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

அம்மு மோகன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

S.Menaga said...

மீன் குழம்பில் கத்திரி,மாங்காய் தவிர எதுவும் போட்டு செய்ததில்லை..வெண்டைக்காய் போடுவது புதுசா இருக்கு அக்கா..

செ.சரவணக்குமார் said...

ஆஹா.. சூப்பரா இருக்கே. நோட் பண்ணிக்கிறேன். நன்றிங்க.

ஜெய்லானி said...

//S.Menaga said...

மீன் குழம்பில் கத்திரி,மாங்காய் தவிர எதுவும் போட்டு செய்ததில்லை..வெண்டைக்காய் போடுவது புதுசா இருக்கு அக்கா.//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்.

ஹேமா said...

மீன்குழம்புக்குள் கத்தரிக்காய்,வெண்டிக்காய்,முருங்கைக்காய் இன்னும் சுவை கூட்டும்.நீங்கள் சொல்லியிருக்கிறதும் அப்படித்தான் ஆசியா !

Geetha6 said...

super...

GEETHA ACHAL said...

புதுசு கண்ணா புதுசு..

எனக்கும் இது புதுசு தான்...பார்க்கவே அருமையாக இருக்கு...

அன்னு said...

//அன்னு அவர் கூட எல்லாம் பில்டப் தான்,என்று என்னை கிண்டல் அடிப்பது உண்டு...//


aahaa...ithu verayaa... he he he.., naan antha arthathula sollalai taste seyyavaavathu anuppi vaingannu sollathaan. he he he...

intha fish per - ring fish, inga adikkadi freshaaga kidaikkum akka. nalla tateaaa??? sollunga, innoru thadavai pogarappa vaangikkaren. :)

அமைதிச்சாரல் said...

இது புதுசு..

asiya omar said...

மேனகா
சரவணக்குமார்
ஜெய்லானி
ஹேமா
கீதா6
கீதாஆச்சல்
அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

அன்னு இந்த மீன் சுவையில் ஒன்றும் குறைவிருக்காது,நல்லாதான் இருந்துச்சு,இது கொஞ்சம் இங்கி விலையும் மலிவு.அதனால் எப்பவாவது வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
கருத்திற்கு மகிழ்ச்சி.

அமைதிச்சாரல் வருகைக்கு நன்றி.

Jaleela Kamal said...

ஹனீஃப் டாடிக்கு வெண்டைக்காயுடன் கூடிய என்ன சமையலும் ரொம்ப பிடிக்கும்.