Saturday, April 9, 2011

அன்னா ஹசாரே


அன்னா ஹசாரேயின் தாரக மந்திரம் இது தான், இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற கனவு நிறைவேற தன்னிறைவு பெற்ற கிராமங்கள் அவசியம், அந்த கிராமங்களை உருவாக்க ஒவ்வொரு பொது மனிதனும் சமூக நல்லெண்ணத்தோடு செயல் பட்டாலே போதும் என்கிறார்.


அன்னா ஹசாரே தற்சமயம் உலகத்தின் மொத்த பார்வையையும் இந்தியாவின் மீது திருப்பிய சமூகவாதியும், காந்தியவாதிமான அவர் மஹாராஸ்ட்ரா மாநிலம் அஹமத் நகரில் ராலேகான் சித்தி என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் மேற்கொண்டுள்ள ஊழலுக்கு எதிரான போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.


விக்கிபீடியாவில் சென்று இவரை பற்றி வாசித்தேன், உன்னால் முடியும் தம்பி கதை தான் நினைவிற்கு வந்தது, சமூகத்தில் பின் தங்கிய கிராமமான ராலேகான் சித்தி என்ற தன் சொந்த கிராமத்தை முன் மாதிரி கிராமமாக மாற்றி சாதனை படைத்தவர்.


1938ஜூன் 15ஆம் தேதி பிறந்த அன்னா ஹசாரே இளம் வயதில் கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னுக்கு வந்து 1960ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ஒரு ட்ரக் டிரைவராக தன் சேவையை ஆரம்பித்தார்.

அவருக்கு கிடைக்கும் நேரங்களில் மஹாத்மா காந்தி, விவேகானந்தா,வினோ பாவே போன்றவர்களின் புத்தகங்களை படித்து தன் சமூக சிந்தனையை வளர்த்து கொண்டார். 1965ஆம் வருடம் இந்திய பாகிஸ்தான் எல்லையில் நடந்த போரில் அதிசயமாக உயிர் தப்பியவர்களில் இவரும் ஒருவர். இவரின் தெய்வ பக்தியும் சிந்திக்கும் திறனும் அவர் மனதை மாற்றியது, வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்து சேவை செய்வது என்று முடிவேடுத்து ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, கிடைத்த சிறிய தொகையோடு ராலேகான் சித்தி என்ற அவர் கிராமத்திற்கு வந்து முதலில் அங்குள்ள கோவிலை புணரமைத்து, சாராயம்,புகையிலைக்கு அடிமைப்பட்டு கிடந்த மக்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். கல்வி,விவசாயம்,வேலை வாய்ப்பு என்று அனைத்து துறைகளிலும் அந்த கிராமம் முன்னேற பாடுபட்டார்.


இப்படி படிப்படியாக ஒவ்வொரு நிலையாக கடந்து இன்று நம் பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்கள் நாட்டில் நடக்கும் ஊழலை கட்டுப்படுத்த தாமதப்படுத்துவதால் பொங்கி எழுந்து, ஏப்ரல் 5ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்து தலைநகர் தில்லியில் இருந்து வருகிறார்.அவரோடு பல நூற்றுகணக்கான மக்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அவரது போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவுக் குரல் கொடுப்போம்.

ஊழலை அடியோடு ஒழிப்போம் என்று உறுதி கொள்வோம்.


அன்னா ஹசாரே பற்றிய எஸ்ராவின் பதிவைக்காண இங்கே கிளிக்கவும்.


அன்னா ஹசாரேவின் வலைதளத்திற்கு செல்ல இங்கே கிளிக்கவும்.
அவர் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு மிஸ்ட் கால் செய்யவும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண் - 00912261550789.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே....! ?
--ஆசியா உமர்.

15 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு.

மக்கள் சக்தியின் துணையுடன் அன்னா ஹசாரே வென்றார். அரசு அவரது பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள காலை பத்து மணிக்கு தன் விரதத்தை முடித்தார்.

நல்லது நடக்கட்டும்.

asiya omar said...

கருத்திற்கு மிக்க நன்றி ராமலஷ்மி.ஒவ்வொரு போராட்டத்திலும் அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்த அன்னா
ஹசாரேவின் இந்த உண்ணா விரத முடிவு மிக்க மகிழ்ச்சியை தந்தது.நான் நேற்றே இதனை போஸ்ட் செய்ய வேண்டியது தாமதமாகி விட்டது.எத்தனை வருடம் தான் பொறுப்பார் இந்த நாட்டிலே,இந்த நாட்டிலே..

GEETHA ACHAL said...

பகிர்வுக்கு நன்றி...

asiya omar said...

கீதாஆச்சல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..சரியான நேரத்தில் சரியான சத்தியாக்கிரக போராட்டம்.நிச்சயம் மாற்றம் வரும் என்று நம்புவோம்.

malathi in sinthanaikal said...

இடுகைக்கு பாராட்டுகள். தேவையான செய்திகள் இடுகையை தொடர்க

middleclassmadhavi said...

சரியான நேரத்தில் தேவையான பதிவு! வாழ்த்துகள்!

vanathy said...

good post. I hope every thing is going to change from now on.

asiya omar said...

மாலதியின் சிந்தனைகள் தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

மிடில் கிளாஸ் மாதவி உங்கள் கருத்திற்கும் நன்றி.மகிழ்ச்சி.

வானதி மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Geetha6 said...

good post!!!

அமைதிச்சாரல் said...

நல்லதே நடக்கட்டும்..

வெங்கட் நாகராஜ் said...

அன்னா ஹசாரே-யின் முயற்சி வெற்றியில் முடிந்துள்ளது. தொடரட்டும் அவரது வழிகாட்டல்கள். நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ.

அந்நியன் 2 said...

நண்பர்களே.

தயவுசெய்து இந்த காவல்துறை அதிகாரி துவங்கி இருக்கும் இந்த தளத்தில் இணைந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

http://cpolicing.blogspot.com/2011/02/blog-post_10.html

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஆசியாக்கா..
ஹசாரே அவர்களின் போராட்டமும்,தங்களின் இந்தப்பதிவும்,அவசியமான ஒன்றே..லஞ்ச லாவன்யங்கள் ஒழிவது எனக்கென்னமோ கனவாகவே இருக்க..எப்படி ஊழல் மட்டும் ஒழிந்துவிடும் என்பது கேள்விக்குறி...

வாழ்த்துக்கள்ஸ்

அன்புடன்
ரஜின்

S.Menaga said...

இவரின் போராட்டம் வெற்றி பெற்றதில் சந்தோஷம்...