Sunday, April 10, 2011

கேரட் முட்டை பொரியல்

தேவையான பொருட்கள்;

கேரட் மீடியம்சைஸ் -4

முட்டை - 1

வெங்காயம் பெரியது -1 பச்சை மிளகாய் -2

மல்லி,கருவேப்பிலை - சிறிது

தேங்காய் துருவல் -3டேபிள்ஸ்பூன்

எண்ணெய் -2டேபிள்ஸ்பூன்

கடுகு,உளுத்தம்பருப்பு -தலா 1டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 2

மஞ்சள்,சீரகம் தூள் - தலா கால்டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு

வாணலியில் எண்ணெய் வீட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு,வற்றல், கருவேப்பிலை போட்டு வெடிக்கவும், நறுக்கிய வெங்காயம் போடவும், சிறிது வதக்கவும்,நறுக்கிய கேரட், பச்சை மிளகாய் போடவும்,நன்கு பிரட்டி விடவும்.மஞ்சள்,சீரகம் தூள்,உப்பு சிறிது சேர்க்கவும், பிரட்டி மூடி விடவும்.
இப்படி நன்கு வதங்கி காணப்படும்.
ஒரு முட்டையை நன்கு அடித்து வெந்த கேரட் பொரியலில் விடவும்,சிறிது மூடி நன்கு பிரட்டி விடவும்.உப்பு சரி பார்க்கவும்.
முட்டை வெந்து பூந்துருவலாக காணப்படும்.
தேங்காய் துருவல்,நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
எல்லாம் சேர்த்து பிரட்டி இறக்கவும்.

சுவையான சத்தான கேரட் முட்டை பொரியல் ரெடி.

சாதம்,சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.விரும்பினால் முட்டை கூட ஒன்று சேர்த்து கொள்ளலாம்.



--ஆசியா உமர்.

24 comments:

GEETHA ACHAL said...

கேரட்டும் முட்டை சேர்த்து செய்தது இல்லை...நல்லா இருக்கு...

அன்னு said...

ஆஹா... எனக்கு தயிர் சாதமும் வெறும் கேரட் பொரியலும் இருந்தாலே பொதும், தயிர் சாதத்தில் பிசைஞ்சு சாப்பிட்டா அமிர்தம்!! முட்டை போடுவதை முதல் தடவையா பாக்கறேன் அக்கா. :)

Mahi said...

நான் பொரியல்களில் முட்டை சேர்த்தா தேங்காய் சேர்க்கமாட்டேன்,அருமையா இருக்கு ஆசியாக்கா!

எல் கே said...

ரைட்டு

asiya omar said...

கீதா ஆச்சல் மிக்க நன்றி,செய்து பாருங்க,அருமையாக இருக்கும்.

asiya omar said...

எனக்கும் தயிர் சாதம் மிகவும் பிடிக்கும்,சும்மாவே சாப்பிடுவேன்,அன்னு.கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

மகி முட்டை சேர்த்தாலே போதும்,சூப்பராக இருக்கும்,தேங்காயும் சேர்த்தால் இன்னும் ருசி.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

சகோ.எல்.கே வருகைக்கு மகிழ்ச்சி.கேரட் என்றால் சும்மாவே சாப்பிடலாமே!

athira said...

இதுவும் வித்தியாசமான குறிப்பாகவே இருக்கு ஆசியா. செய்து பார்க்கிறேன்.

Nandini said...

Love the addition of carrots! Very nutritious side dish for lunch!

சிநேகிதி said...

கேரட்டும் முட்டையும் புதிய காமினேஷனில் நல்லா இருக்கு

Chitra said...

முட்டைகோசு முட்டை பொரியல் இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். இப்பொழுது, காரட் கூடவும்..... கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

vanathy said...

super recipe! I will try this very soon.

S.Menaga said...

கேரட் பொரியலை அப்படியே சாப்பிட பிடிக்கும்...முட்டை போட்டு செய்ததில்லை.நல்லாயிருக்கு அக்கா!!

asiya omar said...

அதிரா மிக்க நன்றி.

நந்தினி மிக்க நன்றி.

சிநேகிதி மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

பார்க்கவே கலர்ஃபுல்லா இருக்கு ஆசியா..:)

Kalpana Sareesh said...

wow superrr... carrot pidikadhvangalukku perfect..

ஹேமா said...

நானும் இப்படி வறுவல் செய்வதுண்டு ஆசியா.

இந்த வார விடுமுறையில் நீங்கள் சொல்லித்தந்த மீன் பிரியாணியும்,மீன் தலையில் மிளகுக் குழம்பும் சமைத்தேன்.அருமையாக வந்தது.நன்றி ஆசியா !

அமைதிச்சாரல் said...

வித்தியாசமா இருக்கு..

Geetha6 said...

very colourful.

சசிகுமார் said...

இரண்டு முறை ட்ரை பண்ணிவிட்டேன் தமிழ் மணத்தில் ஓட்டு விழவில்லை.

asiya omar said...

தேனக்கா மிக்க நன்றி.

கல்பனா மிக்க நன்றி.

ஹேமா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

கீதா6 மிக்க நன்றி.

சசிகுமார் மிக்க நன்றி.உங்கள் வருகையே போதும் சகோ.

எம் அப்துல் காதர் said...

முட்டையில் கேரட் போட்டா டேஸ்ட் இனிப்பா இருக்காதா..??

நாடோடி said...

இந்த‌ டிஷ் நான் ப‌ண்ணி சாப்பிட்டிருக்கிறேன் ச‌கோ.. இத‌னுட‌ன் பீன்ஸ் சேர்த்தா ரெம்ப‌ ந‌ல்லா இருக்கும்..