Tuesday, April 12, 2011

தமிழ்த்துளியும் உணர்வுகளின் ஓசையும்.

தமிழ்த்துளி - அமீரக மண்ணின் முதல் குழந்தைகள் சங்கத்திடமிருந்து அழைப்பிதழ் வந்தது, குழந்தைகள் என்றால் போகாமல் இருக்க முடியுமா?

நிகழ்ச்சி என்ன தெரியுமா? தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்பது பற்றி தான்,பல்வேறு தலைப்புக்களில் பேச குழந்தைகள் வயது அடிப்படையில் பிரித்து அழைக்கப்பட்டிருந்தார்கள், சுவாரசியமாக 2வயது தொடங்கி வயதுகளின் அடிப்படையில் குட்டிக் குழந்தைகளுக்கு தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. நான், எனக்கு பிடித்தது, என் தமிழ், என் தாயகம் போன்ற அருமையான தலைப்புக்கள்..குழந்தைகள் மழலையில் பேசியது கேட்டு எல்லோரின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர்.இடையிடையே கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருந்தாங்க, இரண்டு மணி நேரம் தான் என்னால் நிகழ்ச்சியில் க்லந்து கொள்ள முடிந்தது.


தமிழ்த்துளி நிறுவனர் திருமதி ப்ரியா அவர்கள் போன் செய்து அழைத்திருந்தாங்க, என்னையும் மதிப்பீட்டாளராக அழைக்க நினைத்து இருந்தார்களாம், நானே தமிங்லிஷ் பேசிகிட்டு இருக்கேன், ஜட்ஜாக வெல்லாம் போக என் மனம் இடம் கொடுக்கலை, மறுத்து விட்டேன்.


துபாயில் தமிழ் வாழ்கிறதா? வீழ்கிறதா ? என்று பார்த்தால் வாழ்கிறது என்று தான் சொல்ல வேண்டும். துபாயில் அமீரக தமிழ் மன்றம், அபுதாபியில் பாரதி நட்புக்காக, அல் ஐனில், அல் ஐன் தமிழ்க்குடும்பம் என்பன போன்ற நிறைய தமிழ் அமைப்புக்கள் எனக்கு தெரிந்து இருக்கிறது.


தமிழ்த்துளியை நிறுவிய திருமதி ப்ரியா பற்றி நிச்சயம் பகிர வேண்டும். அவருக்கு தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் மீது அவருக்கு இருந்த தீராத பற்றால் தமிழ்த்துளி என்ற அமைப்பை நிறுவி தன் சொந்த செலவில் நடத்தி வருகிறார். தமிழ்பேச்சு எங்கள் மூச்சு 2011என்ற நிகழ்ச்சிக்கு தமிழ்ப்பேராசிரியை.பர்வின் சுல்தானா அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.


இந்திகழ்ச்சியை நடத்த அமீரக ETA நிறுவனத்தினரால் நடத்தப்படும் ETA STAR INTERNATIONAL GROUP OF SCHOOLS - உடன் சார்ந்த அல் துவார் ஸ்டார் இண்டெர்நேஷனல் பள்ளியின் அரங்கத்தை அந்நிறுவனம் இந்நிகழ்ச்சிக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.நான்கு பள்ளிகள் இந்நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இருபது வருடங்களுக்கு மேல் அமீரக CBSE பள்ளிகளில் ப்ரின்சிபாலாக பணியாற்றிய என் உடன் பிறந்த சகோ.டாக்டர். கலந்தர் அவர்கள், Director -Star Education Management System (SEMS) பணியாற்றி வருகிறார்கள். அவர்களும் இருந்ததால் நானும் முயற்சி எடுத்து அல் ஐனில் இருந்து சென்று வந்தேன்..அந்நிகழ்ச்சி மறக்க முடியாத ஒரு அருமையான நிகழ்வு..

உலகில் அழிந்து வரும் மொழிகளின் வரிசையில் தமிழ் மொழியும் இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது, எனவே நம் தாய்மார்கள் தாய்ப்பாலோடு சேர்த்து தமிழ் மொழியையும் குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும். வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ் !
தமிழ்த்துளி நிகழ்ச்சிக்கு சென்ற பொழுது பல முக்கியஸ்தர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு காவியத்திலகம் ஜின்னாஹ் ஷர்புதீன்,கவிதாயினி அன்புடன் மலிக்கா அவர்களையும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

மலிக்கா அவர்கள் முகம் மூடி இருந்ததால் என்னால் அடையாளம் காண முடியலை,அவர்கள் என்னருகே வந்து நீங்க ஆசியா அக்கா தானேன்னு விசாரித்து மிக அன்பாக பேசினார்கள்.

தன் மகள், மகன் இருவரையும், மச்சானையும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.ரொம்ப சந்தோஷமாக இருந்தது.


எதிர் பாராத விதமாய் தன்னுடைய முதல் கவிதை தொகுப்பான உணர்வுகளின் ஓசையை எனக்கும் அளித்து, புத்தகம் பற்றி ஒரிரு வார்த்தைகள் எழுதும் படி கேட்டுக்கொண்டார்கள். எனக்கு ஏற்கனவே அப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

அந்த புத்தகத்திலேயே மலிக்காவின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டேன்.அத்துடன் காவியத்திலகம் ஜின்னாஹ் ஷ்ர்புதீன், தமிழ்ப்புயல் பர்வின் சுல்தானா இருவரின் கையெழுத்தும் பெற்றதிலும் மகிழ்ச்சி.


புத்தகம் 108பக்கங்களைக்கொண்டது. 54கவிதைகளின் தொகுப்பு, சிறியதும் பெரியதுமான கருத்தான கவிதைகள் கண்டு மலைத்துப் போனேன்.

ராஜ்ய சபா எம்.பி கனிமொழி, எம்.அப்துற் ரஹ்மான், எம்.பி (வேலூர் தொகுதி), நர்கிஸ் இதழ் கௌரவ ஆசிரியரும் இஸ்லாமிய நாவலாசிரியருமான டாக்டர். ஹிமானா சையத் அவர்களும் வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்கள். அணிந்துரை-கவிஞர் புகாரி கனடா அவர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

காவியத்திலகம் ஜின்னாஹ் ஷர்புதீன் அவர்கள் இறையருளைக் கொண்ட கவி என்று வாழ்த்துப்பாவும், கவிச்சுடர் கவிதைப் பித்தன் கவிக்குயிலே என்று வாழ்த்துக் கவிதையும் எழுதியிருக்கிறார்கள்.


உணர்வுகளின் ஓசை என்று முதல் கவிதை தொடங்கி நீரோடையில் நீந்தும் நினைவலைகள் என்ற கவிதையோடு அருமையாக தன் முதல் கவிதை தொகுப்பை தொகுத்திருக்கிறார் கவிஞர். அச்சிட்டு வெளியிட்டு இருப்பது மணிமேகலைப் பிரசுரம்.


நான் அவரின் கவிதையை விவரித்து எழுதினால் இந்த இடுகை போதாது.

குறிப்பாக கவிதாயினி மலிக்கா குறிப்பிட்ட இந்த வரிகளை உங்களுடன் பகிர்கிறேன்.


நான் கம்பன் வழி வந்தவளில்லை

கண்ணதாசன் பேத்தியில்லை

வாலியின்

வார்த்தைகள் கேட்டதில்லை

வைரமுத்துவின்

வாசக்காற்றும் பட்டதில்லை- ஆனாலும்

கவியெழுதுகிறேன்.


--என்று குறிப்பிட்டு முடித்திருப்பது அவர் இயற்கையாகவே கவியெழுதும் திறன் படைத்தவர் என்பதை வலியுறுத்துகிறது.

தொடர்ந்து நல்ல பல இலக்கியங்கள் படைக்க அன்புடன் மலிக்காவை வாழ்த்துவோம்.

தமிழ்த்துளி பற்றிய அவர் பகிர்வைக் காண இங்கு கிளிக்கவும்.


அனைவருக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


--ஆசியா உமர்.

24 comments:

அன்னு said...

ஐ.. நான் உங்களை மலிக்காக்க வூட்டு ஃபோட்டோவுல பாத்தேனே... ஹெ ஹெ :))

நீங்களெல்லாம் இப்படி கூப்பிடு தூரத்தில் வாழ்வது பார்க்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு!! எங்க ஊர்ல இருக்கற மூனே மூனு தமிழ் பேசற முஸ்லிம் குடும்பத்துல நான் மட்டும்தான் பிளாகில்!! ஹ்ம்ம்... அவங்களையும் இணைச்சுரனும். அப்பத்தான் நானும் இப்படி பதிவு போட முடியும்.... ஹி ஹி ஹி

S.Menaga said...

பகிர்வுக்கு நன்றி அக்கா!! வாழ்க தமிழ்!!..மலிக்காவுக்கு வாழ்த்துக்கள்!!

AMMU MOHAN said...

அருமையான விஷயம் தமிழ் வாழ்வது அதுவும் அந்நிய நாட்டில்.. அருமையான கருத்து பகிர்வுக்கு நன்றி..

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் மலிக்கா!!

middleclassmadhavi said...

திருமதி ப்ரியாவுக்கு ஒரு ஓ போடலாம்!

நட்பின் பாசப் பகிர்வு அருமை!

asiya omar said...

அன்னு அவங்க வீட்டிலா?நான் எங்கே போனேன்! ஹே! ஹே ! :)
வருகைக்கும் முதல் கருத்திற்கும் மிக்க நன்றி.

Chitra said...

தமிழ்த்துளியை நிறுவிய திருமதி ப்ரியா பற்றி நிச்சயம் பகிர வேண்டும். அவருக்கு தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் மீது அவருக்கு இருந்த தீராத பற்றால் தமிழ்த்துளி என்ற அமைப்பை நிறுவி தன் சொந்த செலவில் நடத்தி வருகிறார்.


.....அவர்களின் தமிழ் ஆர்வத்துக்கும் சேவைக்கும் பாராட்டுக்கள்!

நல்ல விதமாக நிகழ்ச்சி குறித்து நிறைய தகவல்கள் தொகுத்து தந்து இருக்கீங்க. அருமை.

asiya omar said...

மேனகா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

அம்மு மோகன் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ராமலஷ்மி மிக்க நன்றி,மகிழ்ச்சி.

மாதவி மிக்க மகிழ்ச்சி, நன்றி.

அந்நியன் 2 said...

வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி said...

மலிக்காவுக்கு வாழ்த்துக்கள்... thanks for sharing the information...:)

athira said...

நிறையத் தகவல்கள் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் ஆசியா.

angelin said...

பகிர்வுக்கு நன்றி ஆசியா .

vanathy said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள் மலிக்கா & ப்ரியா.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயம் சகோ. தமிழ் வாழ்கிறது என்பதைத் தெரிந்து மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

அன்று நான் உஙக்ளை எல்லாம் மிஸ் பண்ணிட்டேன்.
புக் நான் தான் கொண்டு வந்தேன், ஏற்கன்வே புத்தக வெளீயீடு போய் வந்து பதிவு போட்டு பகிர்ந்துள்ளேன், நீங்கள் படித்து பார்த்து பகிர்ந்துள்ளீர்கள்,

மிக்க சந்தோஷம், தமிழ் துளி பிரியாவிற்கும் அதுவும் தெலுங்கு என்கீறீர்கள் தமிழ் இவ்வள்வு ஆர்வத்துடன் இதை நடத்தி இருக்காஙக் ந்னா எவ்வளவு பற்று அவர்களுக்கு. பிரியாவுக்கு என் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துடுங்க ஆசியா.
உங்கள் அண்ணனால் உஙக்ளுக்கும் எல்லா இடத்திலும் சிறப்பு, வாழ்த்துக்கள்,

asiya omar said...

அந்நியன்2
அப்பாவி தங்கமணி
அதிரா
வானதி
ஏஞ்சலின்
வெங்கட் நாகராஜ்

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..

asiya omar said...

ஜலீலா வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.
மலிக்கா சொன்னாங்க,நீங்க தான் புத்தகம் ஊரில் இருந்து கொண்டு வந்ததாய்,மிக்க மகிழ்ச்சி.

//உங்கள் அண்ணனால் உஙக்ளுக்கும் எல்லா இடத்திலும் சிறப்பு, வாழ்த்துக்கள்,//

மிக உண்மையான வார்த்தை ஜலீலா.

அமைதிச்சாரல் said...

தமிழ்நாட்டைவிட்டு ரொம்ப தூரத்தில் இருக்கும் நம்மையெல்லாம் இணைப்பதுவும் தமிழ்தானே..

அன்புடன் மலிக்கா said...

ஆசியாக்கா. நான் உங்களை அங்கே சந்திபேனென்று எதிர்பார்கவில்லை. பார்த்ததும் சந்தோஷம். என்புத்தகம் கேட்டு மெயில் செய்திருபதாக சொன்னீர்கள் நான் அதை பார்க்கவில்லை இருந்தபோதும் எதார்த்தமாக பேக்கில் இரண்டு புத்தகம் எடுத்துவந்திருந்தேன் அதைதந்தபோது மிகுந்த சந்தோஷமடைந்ததோடு.அதிலேயே இருவரிடம் கைழுத்து
வாங்கிகொண்டிரீகள் அதுவும் மகிழ்ச்சியாக இருந்தது.

மறுநாள்போன்செய்து புத்தகத்தை படித்துவிட்டதாகவும் நன்றாக எழுதியிருப்பதாகவும் கூறி இதைபற்றி எழுதவா என்றபோது மனம் மிகுந்த சந்தோஷமடைந்து எழுதுங்கள் மகிழ்ச்சிதானென்றேன்.அதேபோல் எழுதியுள்ளீர்கள் ரொம்ப மகிழ்ச்சிக்கா

ஒரு படைப்பளிக்கு தன் படைப்பை பற்றி மற்றவர்கள்.அதன் குறை நிறைகளை சுட்டிக்காடும்போது மிகுந்த எதிர்பார்ப்பையும் மனமகிழ்வையும் கொடுக்கும். அதேபோல்தான் எனக்கு இன்றும்.

எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஆசியாக்கா..

asiya omar said...

அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,தமிழும்,பதிவுலகமும் நம்மை எல்லாம் இணைத்தது என்றால் மிகையாது.

மலிக்கா கருத்திற்கும் விளக்கத்திற்கும் மகிழ்ச்சி.

Vijis Kitchenan and Creations said...

asia, நல்ல பதிவு. நிறய்ய விஷ்யங்களை தெரிந்து கொண்டேன். ஆமாம் மல்லிகாவின் கவிதைகளை விவரிக்க வார்த்தைக்கள் இல்லை. கடவுள் கொடுத்த வரம். நானும் மல்லிகாவின் புக்கை பெற வேண்டும்.
ப்ரியாவின் தொண்டு பாராட்டவேண்டியது.
வாழ்க தமிழ்.வளர்க தமிழ்.

mahavijay said...

ப்ரியாவுக்கு என் முதல் பாராட்டுகள்..

எனக்கும் அந்த கவிதை தொகுப்பை படிக்க ஆசையா இருக்கிறது..

எல் கே said...

வாழ்த்துக்கள். எனக்குத் தெரிந்து அழியும் மொழிகள் பட்டியலில் தமிழ் இல்லை. தவறானத் தகவல் என்று எண்ணுகிறேன். சுட்டி இருந்தால் பகிரவும்

கோவை2தில்லி said...

மலிக்காவுக்கு வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றிங்க.