Wednesday, April 13, 2011

தமிழ்மண விருதிற்கு பாராட்டு

தமிழ்மணம்2010 பதிவர்களிடையே நடத்திய போட்டியில் பெண்கள் பிரிவில் எனது எம்மா கதைக்கு கிடைத்த முதல் பதக்கப் பரிசினை பாராட்டி என் சகோ.முனைவர் கலந்தர் அவர்கள் எனக்கு பாராட்டு விருது ஒன்றை வழங்கி மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்கள்.நாம் ஒருவருக்கொருவர் விருது வழங்கி சந்தோஷப்பட்டு கொள்வதைப் போல் தான். அதனை உங்கள் அனைவரோடும் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி.

தமிழ்மண விருதும் புத்தகப்பரிசும் பதிவுலகில் பெற்ற முதல் பரிசு,என் அன்பு கலந்த நன்றியினை தமிழ்மண குழுமத்திற்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஏற்கனவே சமையற் தளமொன்றில் புத்தகப் பரிசு அறிவித்து, பரிசு என் கைக்கு கிடைக்காததால் இது தானே முதல் பரிசு. தமிழ்மண பரிசு புத்தகங்களை நியூ புக் லேண்ட்ஸில் வாங்கித்தர தோழி ஸாதிகா அவர்கள் ஒப்புக்கொண்டு சிரமமேற்கொண்டு எனக்கு வாங்கி தந்தமைக்கு அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். புத்தகத்தை தேர்வு செய்ய உதவிய சகோ.R.கோபி(பெங்களூர்) அவர்களுக்கும் இத்தருணத்தில் மிக்க நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
பதிவுலக போட்டியில் வெளிவருவது கஷ்டம், நம்மை பிரபலமாக்க வேண்டாம், பின்னாடி இருந்து குத்தாமல் இருந்தால் போதும். ஒரு சிலர் வக்கிரமான பின்னூட்டம், மெயில் அனுப்புவது, நாம் கஷ்டப்பட்டு பதிவிடும் பொழுது அனுமதியின்று காப்பி செய்து போடுவது என்று நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் அமைதியாக யாருக்கும் பாதகமில்லாமல் எனக்கு தெரிந்ததை என் மனமகிழ்ச்சிக்காக பதிவிட்டு வருகிறேன்.. இணையத்தில் அறிமுகமான உண்மையான நட்புவட்டத்தின் பாராட்டை நான் மிகவும் நேசிக்கிறேன்.ஒரு சிலர் என் பதிவில் காணும் பிழைத்திருத்தத்தை கண்ணியமாக மெயில் செய்து சொல்லும் அவர்களின் அன்பிற்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். தன் பெயர், ஊர்,புகைப்படம் அறிமுகத்தோடு எழுதுபவர்களின் எழுத்து என்னை மிகவும் கவரும். எழுதுபவர்கள் முதலில் யார் என்று தெரிய வேண்டாமா? இந்த புகைப்படத்தில் என்னருகில் என் கணவர், துபாயில் வாழும் என் சகோதரர் குடும்பத்தார்,தமிழ்மண விருதிற்கு பாராட்டு விருது வழங்கிய பொழுது 2011 ஏப்ரல் 8ஆம் தேதி எடுத்தது.

என் உடன் பிறந்த ஆறுசகோதரகள், இரண்டு சகோதரிகள் உட்பட அனைவரும் எம்மா கதையை படித்து விட்டு உம்மாவைப்பற்றி உனக்கு அதிகம் தெரியாதே எப்படி இவ்வளவு அருமையாக எழுதினேன்னு கேட்கும் பொழுது எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. கதை உருவான விதம், உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது, பெயர் சூட்டிய பின்பு என் மனப்போக்கில் கதையை அமைத்தேன், மன ஆழத்தில் புதைந்து கிடந்த எண்ணங்கள் எழுத்தாக வடிவெடுத்தது என்று கொள்ளலாம் தானே! கதைக்கு வந்த பின்னூட்டங்கள் என்னை உற்சாகப்படுத்தி என்னை மீண்டும் எழுத வைத்தது என்பது தான் உண்மை.


--ஆசியா உமர்..

39 comments:

செ.சரவணக்குமார் said...

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் சகோதரி. தொடர்ந்து நிறைய கதைகளை எழுதுங்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் மேடம்

சி.பி.செந்தில்குமார் said...

>>>பதிவுலக போட்டியில் வெளிவருவது கஷ்டம், நம்மை பிரபலமாக்க வேண்டாம், பின்னாடி இருந்து குத்தாமல் இருந்தால் போதும். ஒரு சிலர் வக்கிரமான பின்னூட்டம், மெயில் அனுப்புவது, நாம் கஷ்டப்பட்டு பதிவிடும் பொழுது அனுமதியின்று காப்பி செய்து போடுவது

அய்யோ.. இது வேறயா?

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆசியா, அந்த யெம்மா கதை உண்மை கதை என்பதால் அதற்கு உயிரோட்டம் அதிகம், அதை படித்து விட்டு என் கிரான்மா ஞாபகம் தான் வந்தது,

உங்கள் அண்ணன் மற்றும் குடும்பத்தினர் உஙக்ளை மிகவும் ஊக்கபடுத்தி இருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள் இன்னும் பல விருது பாராட்டுகள் வாங்க வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப அழகா இருக்கு ப்ரேம் செய்து வைத்த பாராட்டு..
வாழ்த்துக்கள் ஆசியா:)

ஜோதிஜி said...

உங்கள் வார்த்தைகள் நீங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கும் நெறிமுறைகளை பிரதிபலிக்கின்றது.

வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்!

தொடர்ந்து சிறப்பாக எழுதுங்கள்.

அஸ்மா said...

வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

AMMU MOHAN said...

மனமார்ந்த வாழ்த்துகள்..தொடர்ந்து எழுதுங்கள்..

வெங்கட் நாகராஜ் said...

விருது அழகாய் இருக்கு சகோ. பாராட்டுகள்.

அம்பிகா said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தொடந்து நிறைய எழுதுங்கள்.

Chitra said...

Tears of joy...... Congratulations!!!

தொடர்ந்து பல வெற்றிகளை பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!உங்கள் புகைப்படத்தை முதன் முதலாக பார்த்ததில் சந்தோஷம்.

Anonymous said...

பச்சை புடவையில் இருப்பது நீங்களா?

வாழ்த்துகள்..

தொடர்ந்து கதை எழுதுங்கள்..

அந்நியன் 2 said...

விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள்.

பதிவர்களின் திறனை வெளி கொண்டு வருவதர்க்கு தமிழ் மணம் என்கின்ற இனணயம் பிரிவுகள் மூலம் சிறந்த பதிவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கண்ணியப் படுத்துவதைக் கானும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அமைதிச்சாரல் said...

இன்னும் நிறைய விருதுகளை வெல்ல வாழ்த்துகள் ஆசியா..

Kurinji said...

வாழ்த்துக்கள் ஆசியா!!!

S.Menaga said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா!!

savitha ramesh said...

Vaazhthukkal .Romba sandhosham.

GEETHA ACHAL said...

ரொம்ப சந்தோசம் ஆசியா அக்கா..

சூப்பராக இருக்கின்றது பாராட்டு விழா...

இன்னும் பல விருதுகள் வாங்க வாழ்த்துகள்..

சரி..விருது வாங்கியாச்சு..எங்களுக்கு எப்போ விருந்து...

அன்னு said...

அல்ஹம்துலில்லாஹ் ஆஸியாக்கா,

மிக மிக மிக மிக சந்தோஷம். அல்ஹம்துலில்லாஹ். பரிசு வாங்கினால் பாசிப்பருப்பு பாயாஸம் தரணும்னு கேள்விப்பட்டிருக்கேனே. இல்லியா... ஹெ ஹெ ஹே...

நிறைய எழுதுங்க. எனக்கும் அந்த கதை மிக பிடிச்சிருந்தது.
/பெத்தாப்பா, ”எனக்கு முழு ரொட்டி,எனக்கு முழு ரொட்டி என்ற பிள்ளைகளிடம் ஆளுக்கு பாதி,சாப்பிடுங்க,அப்புறம் இரண்டாவது தருவேன்,”என்றார்...//

இந்த வரிகளை படிக்கும் யாருக்கும் அவங்கவங்க தாத்தா / பாட்டி / அம்மா / அப்பா ஞாபகம் வாராம இருக்காது. அப்படி ஒரு வரி, நம்ம பக்கத்திலேயே இருந்து கூப்பிடற மாதிரி. இந்த கதைக்கு கிடைக்காம இருந்திருந்தாதேன் யோசிக்கணும். சுப்ஹானல்லாஹ். இன்னும் அதிகமா, அழகா, நம் மண்ணின் வாசனையிலேயே எழுதுங்கக்கா.

எனக்கு இன்னமும், நான் பரிசு பெற்ற மாதிரியே படபடப்பா இருக்கு. ஹி ஹி ஹி... வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். :))))))

சிநேகிதி said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.... தொடர்ந்து பல வெற்றிகளை பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,,!

அன்னு said...

மாஷா அல்லாஹ், இப்படி ஒரு குடும்பம் அமைய...!!


நானும் ஒமர் 30வது ஜூஸை மனனம் செய்ததும் குடும்பத்தார் அனைவரும் கையெழுத்திட்ட ஒரு பாராட்டு பத்திரத்தை தரவேண்டும் என்று எண்ணியுள்ளேன், இன்ஷா அல்லாஹ் ... :))

athira said...

வாழ்த்துக்கள் ஆசியா வாழ்த்துக்கள்...இன்னும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள்.

//ஒரு சிலர் வக்கிரமான பின்னூட்டம், மெயில் அனுப்புவது, நாம் கஷ்டப்பட்டு பதிவிடும் பொழுது அனுமதியின்று காப்பி செய்து போடுவது /// இன்ரநெட் உலகில எத்தனை சிங்கம் புலி எல்லாம் இருக்கு அதனோடு யாரும் எதிர்ப்புக்குப் போகமாட்டினம், சிறிய பூச்சி புழுக்களைத்தான் நசுக்கிக்கொண்டிருப்பார்கள்.

ஊ.கு:
அடுத்த வீடியோ சமையல் எங்கே?

மகி said...

வாழ்த்துக்கள் ஆசியாக்கா! இன்னும் பல்வேறு விருதுகளை வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

angelin said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஆசியா .
நீங்கள் இது போல நிறைய விருது பெற வேண்டும் .

Nandini said...

Congrats dear! I want to read your story...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Very happy to know about this. My wishes. Do well, Keep rocking....!

மாலதி said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் மேடம்

Gopi Ramamoorthy said...

வாழ்த்துகள் சிஸ்டர்.

இந்த வருஷமும் நிறைய விருது பெற வாழ்த்துகள்.

Malar Gandhi said...

Congratulations:)

சாருஸ்ரீராஜ் said...

congrats akka

FOOD said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன், விருதிற்கான வாழ்த்துக்களும்.

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் தோழி.மிகவும் சந்தோஷமாக உள்ளது படிப்பதற்கு.இன்னும் பற்பல விருதுகள் வாங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழி !

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துக்கள் ஆசியா.

vanathy said...

congrats, akka.

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் ச‌கோ...

அந்த‌ க‌தை என‌க்கும் ரெம்ப‌ பிடித்திருந்த‌து...

உங்க‌ளின் பாதையில் தொட‌ர்ந்து ப‌ய‌ணியுங்க‌ள்.. :)

asiya omar said...

அனைவரின் அனபான வருகைக்கும், வாழ்த்திற்கும்,கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,மிக்க நன்றி.

கோவை2தில்லி said...

இது போன்ற பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற வாழ்த்துக்கள்.