Friday, April 15, 2011

அடைப் பாயாசம்

அடைப்பாயாசத்தை இரண்டு விதமாக முயற்சி செய்தேன்,மில்க் மெயிட் வைத்தும்,வெல்லம் சேர்த்தும் செய்து பார்த்தேன்,இரண்டுமே அருமையாக வந்தது. தேவையான பொருட்கள் ; ரெடிமேட் ரைஸ் அடை - 100கிராம் கெட்டியாக காய்ச்சிய பால் - 2கப் மில்க் மெயிட் - 200கிராம் முந்திரி,பாதாம்,கிஸ்மிஸ் - தலா1o, ஏலக்காய் -4 நெய் - 2டீஸ்பூன்

முதலில் அடையை தண்ணீர் விட்டு வேகவைத்து வடித்து எடுக்கவும்.

ரெடி செய்த அடையை காய்ச்சிய பாலுடன் சேர்த்து கொதி வரட்டும்.

ஏலக்காய் தட்டி போடவும்.

மில்க் மெயிட் சேர்க்கவும்.

பாதாம் முந்திரியை பொடியாக கட் செய்து கொள்ளவும்.

நெய்யில் பக்குவமாக வறுத்து எடுக்கவும்.ரெடியான அடைப்பாயசத்தில் சேர்க்கவும்.கலந்து விடவும்.

சுவையான அடைப்பாயாசம் ரெடி. இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றும் பரிமாறலாம்.
அடுத்து வெல்லம்,தேங்காய்ப்பால் சேர்த்து எப்படி அடை பாயாசம் செய்வதுன்னு பார்ப்போம்.


தேவையான பொருட்கள் ;


ரெடிமேட் ரைஸ் அடை - 100கிராம்


வெல்லம் -200கிராம்


தேங்காய்ப்பால் - ஒரு காயில் எடுக்கவும்.


இரண்டு பால் எடுக்கவும்.திக்காக முதலில் எடுத்து விட்டு,இரண்டாம் பால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிழிந்து எடுக்கவும்.


ஏலக்காய் -4


முந்திரி,பாதாம்,கிஸ்மிஸ் - தலா10


நெய் - 2டீஸ்பூன்


அச்சு வெல்லம் அல்லது மண்டவெல்லம் எதுவானாலும் சரி,உபயோகிக்கலாம்,அச்சு வெல்லம் என்பதால் நேரடியாக சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லத்தை பாகு காய்ச்சி எடுத்து கொண்டேன்,மண்டவெல்லம் என்றால் வடிகட்டி கொள்ளவும்.

அதனில் வேகவைத்த அடையை சேர்க்கவும்.ஏலம் தட்டி போடவும்.எடுத்து வைத்த இரண்டாம் பால் விடவும்.நன்கு கலந்து விடவும்,வெல்லம் அடை,பால் சேர்ந்து நன்கு கொதிவரும்.கெட்டியாக வைத்த முதல் பாலை விடவும்,சேர்த்து கலந்து விடவும்,அடுப்பை சிம்மில் வைக்கவும்.அப்படியே நுரை கூடி வரும்.அடுப்பை அணைக்கவும்.

நெய்யில்,முந்திரி,கிஸ்மிஸ் வறுத்து சேர்க்கவும்.

சுவையான வெல்லம் தேங்காய்ப்பால் சேர்த்த அடைப்பாயாசம் ரெடி.இதனை கேரளாவில் அடைப்பிரதமன் என்று சொல்லுவாங்க.இதனை ஈசியாக செய்து காட்டிருக்கிறேன்.அப்படியே டம்ளரில் விட்டு சாப்பிட்டால் சூப்பர்.

ஃப்ரிட்ஜில் வைத்து பால்,மில்க் மெயிட் சேர்த்த அடைப்பாயாசம் பரிமாறினால் சுவையோ சுவை தான்..


நேற்று தமிழ்புத்தாண்டு,விஷு ஏதாவது ஸ்வீட் செய்யலாம்னு செய்த அடைப்பாயாசம் தான் இது,ஆனால் இன்று மதியம் என் கணவரின் கேரள நண்பர் வீட்டில் விஷு சத்யாவிற்கு அழைச்சிருந்தாங்க, அருமையான விருந்து, அப்படியே இலையில் பரிமாறவும் உங்களுக்காக ஒரு கிளிக்.அவங்க கோதுமை,தேங்காய்ப்பால்,வெல்லம் சேர்த்து சூப்பராக ஒரு பாயாசம் செய்திருந்தாங்க.பாயாசத்தில் கூட வெரைட்டி,இன்னமும் அந்த சமையலின் ருசி வாயிலேயே இருக்கு,இனி அவங்க சொல்லி தந்ததை ஒன்றொன்றாக முயற்சி செய்ய வேண்டும் நான் ரெடி.நீங்க ரெடியா? இஞ்சி துவையல் ,வெண்டைக்காய் பச்சடி,ஓலன்,மாம்பழ புளிசேரி,அவியல்,பழபச்சடி,இன்னும் ஏகப்பட்ட அயிட்டம்..

டிஸ்கி// வாழையிலையில் பரிமாறியதை சாப்பிடும் பொழுது செம ருசி..அதற்கு நிகர் எதுவும் இல்லை..

என்னுடைய ரைஸ் அடை பிரதமன் குறிப்பை பார்க்க இங்கு கிளிக்கவும்.


--ஆசியா உமர்.

37 comments:

Chitra said...

டிஸ்கி// வாழையிலையில் பரிமாறியதை சாப்பிடும் பொழுது செம ருசி..அதற்கு நிகர் எதுவும் இல்லை..


...Count me in..... The best!!! :-)

மகி said...

சூப்பர் விருந்து!! :P :P

அடைப்பிரதமனும் நல்லா இருக்கு ஆசியாக்கா!

ஹேமா said...

இனிக்க இனிக்கப் பாயாசம் !

savitha ramesh said...

kaadhula pogai varudhu...nimmadhiya ilai la saaptu evlo naal aachi?
Adai payasam super a irukku.

revathi said...

Rendu vithamaana Payasam superb... ilai virundhu asathal...:))
Reva

FOOD said...

நாவில் இனிப்பும், நினைவில் சுவையும் நிலைத்து நிற்கும்.

எல் கே said...

இதை என் மாமியார் வீட்டில் செய்வார்கள்....

சி.பி.செந்தில்குமார் said...

>>டிஸ்கி// வாழையிலையில் பரிமாறியதை சாப்பிடும் பொழுது செம ருசி..அதற்கு நிகர் எதுவும் இல்லை.

உண்மைதான்.. அதற்கு மருத்துவ குணம் உண்டு.. குட்

சி.பி.செந்தில்குமார் said...

மேடம் இண்ட்லில ஏதோ பிராப்ளம் பாருங்க.. ஓட்டு விழலை

Nandini said...

Wow! The payasam looks very lovely and delicious!

சசிகுமார் said...

இன்னும் கொஞ்சம் சர்க்கரை போடுங்க பாயாசம் அப்ப தான் எனக்கு பிடிக்கும்.

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு அக்கா...அதுவும் விருந்து சூப்பர்ப்...

ஆஹா...விருந்து போடுங்க என்று போன பதிவில் சொன்னேன்...கரக்டாக போட்டுவிட்டிங்க...

அரிசி அடை என்று தனியாக விற்கின்றிங்களா...இது பாஸ்தா மாதிரி இருக்குமா..

அல்லது நாம் உபயோகிக்கும் அரிசி வாடாம் மாதிரியாக...

Gayathri Kumar said...

Both payasams look so delicious...

Kurinji said...

Super and new to me. Thanks for sharing! Bookmarked:)

Event : HRH-Healthy Summer

ஆயிஷா அபுல். said...

பாயாசம் சூப்பர்.

ராமலக்ஷ்மி said...

எனக்குப் பிடித்தமான ஒன்று ஆசியா. எப்போதும் போல ஒவ்வொரு பருவத்தையும் பொறுமையாய் படம் எடுத்துக் காட்டியுள்ளீர்கள். இது பக்குவத்தைப் புரிந்து கொள்ள பெரிதும் உதவும். பாராட்டுக்களும் நன்றியும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும்:)!

ஸாதிகா said...

கேரளா உண்வு வகைகளில் பாலடை பிரதமன் என்று இதனை சொல்லுவார்கள்.வாழை இலை சாப்பாடு பிரமாதம்.எங்கள் வீட்டிலும் அவ்வப்பொழுது இந்த விருந்து உண்டு.

asiya omar said...

சித்ரா மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

ஹேமா மிக்க நன்றி.

சவிதா மிக்க நன்றி.

ரேவதி மிக்க நன்றி.

ஃபுட் மிக்க நன்றி.

எல்.கே. மிக்க நன்றி.

சகோ.சி.பி. மிக்க நன்றி.

asiya omar said...

நந்தினி மிக்க நன்றி.

சகோ.சசிகுமார் ஸ்வீட்டண்ட் கண்டன்ஸ்ட் மில்க் மெயிட் என்பதால் மிகவும் இனிப்பாகத்தான் இருக்கும்,அச்சு வெல்லம் நல்ல இனிப்பாகவே இருக்கும்,சகோ,இந்த அளவு சரியாக இருக்கும்,இல்லாவிட்டால் தொண்டை வரை இனிக்கும்.

asiya omar said...

கீதா ஆச்சல் இங்கு ரெடிமேட் ரைஸ் அடான்னு கேரளா தயாரிப்பு கிடைக்கிறது.அதனை உபயோகித்து உள்ளேன்.மிக்க நன்றி.

காயத்ரி மிக்க நன்றி.

குறிஞ்சி மிக்க நன்றி.

ஆயிஷா மிக்க நன்றி.

ராமலஷ்மி மிக்க நன்றி.

தோழி ஸாதிகா மிக்க நன்றி.

S.Menaga said...

ஆஹா இது கேரளாவின் புகழ்பெற்ற பாலாடை பிரதமன் ஆச்சே..சூப்பர்!! ம்ம் கடைசியா வாழை இலை சாப்பாடு படத்தை போட்டு ஏங்க வச்சுட்டீங்களே...

asiya omar said...

மேனகா என்னுடைய கேரள தோழி பாலாடை பிரதமன் ரொம்ப வித்தியாசமாக செய்முறை சொன்னாங்க,நான் அதனை ஈசியாக மாற்றி கொடுத்ததால் அடைப்பாயாசம்னு பேர் வச்சிட்டேன்...அந்த முறை கிட்ட தட்ட மணிக்கணக்கில் அடுப்பிலேயே சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டுமாம்...That is really delicious menaga..

மாதேவி said...

விருந்து அருமை.

இங்கு ரைஸ்அடை கிடைக்காதே.

angelin said...

அட்டகாசமான விருந்து + சுவையான ரெசிபி .நன்றி ஆசியா
விருந்தில் நேந்திரங்கா பொரிச்சு ,பஜ்ஜி இருந்ததா ,!!!!
வாழை இலை சாப்பாட்டுக்கு ஈடு இணை ஏது .பகிர்வுக்கு நன்றி !!!!

Kalpana Sareesh said...

romba pasikuthuuuu super o super rendu payasamum...

vanathy said...

super virunthu & super payasam!!! yummy.

asiya omar said...

மாதேவி வருகைக்கு மிக்க நன்றி.ரெடிமேட் அடை ethenic food section -னில் இருக்கும்.

ஏஞ்சலின் நேந்திரன் சிப்ஸ்,இன்னொரு ஸ்வீட் சிப்ஸ் இருந்தது,பழபஜ்ஜி காலை டிபன் பதார்த்தம் அல்லவா?மிக்க மகிழ்ச்சி.

கல்பனா கேரள சமையல் தனி ருசி தான்,good for health.

வானதி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

middleclassmadhavi said...

சுவையான பாயசத்தோடு விருந்து! நன்றி

நாடோடி said...

பாயாச‌ விருந்து சூப்ப‌ரா இருக்கு.. :)

AMMU MOHAN said...

நண்பர் வீட்டு விருந்து அருமை.. உங்க வீட்டு அடை பாயசம் சூப்பர்..

mahavijay said...

பிரதமன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அந்த குண்டு அரிசிதான் புடிகல..

S.Menaga said...

pls collect ur awad from my blog
http://sashiga.blogspot.com/2011/04/dry-beltribbon-fish-varuval.html

அமைதிச்சாரல் said...

ரொம்ப பிடிச்ச அருமையான அடைப்பிரதமன்..

Jaleela Kamal said...

வாழையிலை பார்த்ததும் ஆசையா இருக்கு

ஓ இது தான் அடை பிரதமனா/

இது ரைஸ் அடையா? ஆசியா/கேட்டு சொல்லுஙக் ரைஸில் செய்துள்ள அடையா? (அ) மைதாவான்னு.?
நாங்க கோடான்ன்னு சொல்வோம்.

வீட்டில் அடிகக்டி வாரம் ஒரு முறை காலை நாஷ்டாவுக்கு வந்துடும்,
பாயசம் போலும் செய்து இருக்கேன்.
சுவை அபாரமாக இருக்கும் எனக்கு காரத்தில் கறி போட்டு , இறால் போட்டு செய்தா ரொம்ப பிடிக்கும்.

asiya omar said...

மாதவி மிக்க நன்றி.

ஸ்டீபன் மிக்க நன்றி.

அம்மு மோகன் மிக்க நன்றி.

மஹா விஜய் மிக்க நன்றி.அவங்க ட்ரடிஷனல் சமையலுக்கு இந்த மோட்டா ரைஸ் ரொம்ப சூட் ஆகும்.

மேனகா விருதிற்கு மிக்க மகிழ்ச்சி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

asiya omar said...

ஜலீலா வருகைக்கு மகிழ்ச்சி,நீங்க சொல்ற கோடா நானும் டேஸ்ட் செய்திருக்கேன்,தக்கடி மாதிரி அதனை கறி போட்டு நாங்க செய்வோம்..
அடைப்பிரதமன் அரிசி அடையில் தான் செய்வாங்க,கேரளா ஸ்டோர்ஸ்களிலும்,லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் எத்னிக் ஃபுட் செக்‌ஷனில் கிடைக்கிறது,ரெடி மேட் பேக்காக கிடைக்கும்,விஷுக்காக இங்கே தனி ஸ்டாலே போட்டிருந்தாங்க,அப்பொழுது வாங்கியது தான்...
கருத்திற்கு மிக்க நன்றி.

கோவை2தில்லி said...

அடைப்பிரதமன் எனக்கு மிகவும் பிடித்தது. இங்கு கேரளக்கடைகளில் அடைபிரதமன் மிக்ஸ் கிடைக்கிறது. அதை வைத்து செய்வதுண்டு. அதிலேயே சர்க்கரை, முந்திரி, திராட்சை எல்லாம் இருக்கும். வெறும் பாலில் 25 நிமிடங்கள் வேக வைத்தால் போதும்.